கூடங்குளம்

This entry is part 31 of 44 in the series 30 அக்டோபர் 2011

வெளி நாட்டான் சமாச்சாரம்
அநாச்சார‌ம் என்று
உள் நாட்டு
மாட்டு வண்டியையும்
வில் அம்பு ஈட்டியையும்
ந‌ம்பிக்கிட‌ந்தோம்.

மின்சார‌ம் என்றால்
பேய் பிசாசு என்று
ஓடி ஒளிந்து கிட‌ந்தோம்.

த‌ண்ணீரை
குட‌ம் குட‌மாய் கொட்டி
குட‌முழுக்கு செய்து
புரியாத‌ இரைச்ச‌ல்க‌ளில்
புல்ல‌ரித்துக்கிட‌ந்தோம்.
அதே த‌ண்ணீரில்
புட்டு அவித்து தின்னும்போது கூட‌
ந‌ம‌க்குதெரிய‌வில்லை
ஆயிர‌ம் ஆயிர‌ம் ட‌ன்க‌ளை
இழுத்துச்செல்லும்
நீராவிக்குதிரை அதில்
இருக்கிறது என்று.
அத‌ற்கும் ஒரு ஜேம்ஸ்வாட் தான்
ந‌ம‌க்குத்தேவை.

க‌ல்லுக்க‌ட‌வுளுக்கு
கால‌ம் கால‌மாய்
பொங்க‌ல் புளியோத‌ரை வைத்து
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோமே த‌விர‌
க‌ண்ணுக்குத்தெரியாத‌
மின்காந்த‌க்குழ‌ம்பு ப‌ற்றி
நாம் ஏதேனும் அறிந்தோமா?
குவார்க்குக‌ள் எனும்
நுண்ணிய‌த‌ற்கும் நுண்ணிதாக‌ உள்ள‌
ஆற்றல் ப‌ற்றி அறிந்தோமா?

மேலை நாட்டின‌ர் ந‌ம்
க‌ண்ணைத்திற‌ந்த‌தில்
கொஞ்ச‌மே
ந‌ம‌க்கு வெளிச்சம் வ‌ந்த‌து.

மின்சார‌ப்ப‌ஞ்ச‌ம் வ‌ந்து விட்டால்
மில்லியன் மில்லிய‌ன் ம‌னித‌ர்க‌ள்
குப்பைக்காடாய் வீழ்ந்திடுவார்.

தீ உயிரை அழிக்கும் என்று
அஞ்சிய‌ ம‌னித‌ன்
ப‌சித்தீ பொறுக்காம‌ல்
தீ உலையைத்தானே
அன்று மூட்டினான்.

உலக‌ம் அழிய‌
ம‌னித‌னின் பேராசையே போதும்.
ந‌ம் நாட்டு ம‌த‌ங்க‌ளும் சாதிக‌ளும்
ம‌னித‌னையே ம‌னித‌ன் தின்னும்
வெறித்தீ வ‌ள‌ர்க்கும்
கொல் உலைக்கூட‌ங்க‌ளாய்
இருப்ப‌து அறியாம‌ல்
அணு ச‌க்தியோடு கோப‌ம் கொள்வ‌து
வ‌டிக‌ட்டிய‌
அறியாமையே த‌விர‌ வேறில்லை.

இந்தியாவின் ம‌ற்ற‌ அணு உலைக‌ள்
இய‌ங்கிக்கொண்டிருக்கும்போது
த‌மிழ் நாட்டின்
நாடி ந‌ர‌ம்புக‌ளை ம‌ட்டும்
அறுத்துவிட்டு வேடிக்கை பார்ப்ப‌தில்
என்ன‌ நியாயம்?
யாரோ சொல்ல‌
யாரொ இங்கே
படுத்துக்கிட‌க்கிறார்க‌ள் …
என்ப‌து போல்
ந‌ட‌ப்ப‌தின் ம‌ர்ம‌ம் தான் என்ன‌?

ச‌மீப‌த்தில் நிக‌ழ்ந்த‌ சுனாமியினால்
க‌திர் வீச்சு அபாய‌ம் ப‌ற்றி
க‌வ‌லை கொள்வ‌து நியாய‌ம்.
பாதுகாப்பு செய்வ‌தும் அதை விட‌ நியாய‌ம்.
ப‌டுத்துக்கிட‌ந்து முர‌ண்டு செய்வ‌தில்
க‌வ‌லையும் தெரிய‌வில்லை..உட்
க‌ருத்தும் தெரிய‌வில்லை.

மீண்டும் ஒரு ராப‌ர்ட்கிளைவிட‌ம்
துப்பாக்கியின்றி தோற்கும்
ச‌ரித்திர‌ம் திரும்ப‌வேண்டும்..என்று
நினைப்ப‌வ‌ர்க‌ளே
இந்த‌ க‌ந்த‌ல் லுங்கிக‌ளில்
க‌ன‌வுக‌ளோடு ப‌டுத்துக்கிட‌க்கும்
ம‌க்களிடம்
பைய‌ பைய‌ ஒரு ப‌ய‌த்தை
குடிக்க‌வைத்திருக்கிறார்க‌ள்.

விஞ்ஞான‌ம் ஒரு போதும்
அழிவு ச‌க்தி ஆன‌தில்லை.
ஊழி அழிவிலிருந்து காத்துக்கொள்ள‌
அணு விஞ்ஞான‌ம் ஒன்றே ந‌ல்
ஆக்க‌ம் த‌ரும் விஞ்ஞான‌ம்.

பிர‌ப‌ஞ்ச‌ம் ஒரு வெடியில் தான்
பிற‌ந்த‌து.
அத‌ன் அதிர்விழை எனும்
ஸ்ட்ரிங் கோட்பாட்டில்
பிரபஞ்சத்துடிப்பின்
இதயநாளங்கள்
புதிய நம்பிக்கை கீதங்களின்
கிடார் வாத்தியத்தை
மீட்டிக்கொண்டிருக்கின்றன.

அதுவே 3 டிகிரி கே யில் உள்ள
பிரபஞ்ச பின்னணி இசை யெனும்
காஸ்மிக் மைக்ரோவேவ் பேக் கிரௌண்டு.
படைப்பின் ரகசியத்தை
நம் காதுகளில் கிசு கிசுத்து
சொல்கிறது அது.
“மனிதா! இந்த பந்தாட்டத்தில்
பிரபஞ்சங்களே உன் பந்துகள்”
ஆம் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லும்
“மல்டி யுனிவெர்சஸ் தியரி” அது.

மிள‌காய் வ‌த்த‌லையும்
ப‌ட்டுப்புட‌வைக‌ளையும்
வேள்வித்தீயில் பொசுக்க‌ச்சொல்லும்
ம‌ந்திர‌ மாய‌ வித்தைக‌ள் அல்ல‌ இது.

ஒளியின் வேக‌மே இந்த‌
பிர‌ப‌ஞ்ச‌த்தை
க‌ட்டி வைத்திருக்கும் க‌யிறு.
இதையும் மீறிய‌ வேக‌ம் உண்டு
என்று
சி இ ஆர் என் அணு உலைக்கூட‌த்தில்
க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்
விஞ்ஞானிக‌ள்.

“அணுவைப்பிள‌ந்து ஏழ் க‌ட‌லைப்புக‌ட்டிய‌”
வானுய‌ர்ந்த‌ வ‌ள்ளுவ‌ன் சிலை
இன்று
கூனிக்குறுகிப்போக‌லாமா?
பூனைக‌ளே
உங்க‌ள் க‌ண்க‌ள் மூடியிருந்த‌து
போதும்.
இருள் அக‌ல‌ட்டும்.
ம‌ருள் வில‌க‌ட்டும்.

கூடங்குளம் வெறும்
சிறிய குளம் அல்ல‌
ம‌னித‌னின் சாத‌னைக்க‌ட‌ல் அது.

விபத்துகள் என்றாலும் கூட
அவை வெற்றியின் ப‌டிக்க‌ட்டுக‌ள்.
அவ‌ற்றை த‌விர்த்து
ப‌ய‌ண‌த்தை தொட‌ர்வ‌தே
இருப‌த்திஒன்றான் நூற்றாண்டின்
இணைய‌ற்ற‌ க‌ட‌மை.
ப‌ழைய‌ நூற்றாண்டுக‌ளில்
பாய் விரித்து ப‌டுத்து கிட‌க்க‌வா
ம‌னித‌ர்க‌ள் பிற‌ந்து வ‌ந்தார்க‌ள்?

ம‌னித‌ர்க‌ளுள் மாமேதை
புது யுக‌ விஞ்ஞான‌ சிற்பி
மாட்சிமை மிக்க‌
அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ளின்
க‌ன‌வு உல‌க‌ம்
வெறும் த‌லைய‌ணை மெத்தைக‌ளால்
ஆன‌து அல்ல‌.
ம‌னித‌னும் பிர‌ப‌ஞ்ச‌மும்
தோழ‌மை கொண்டு
கை கோர்த்து செல்லும்
அறிவார்ந்த‌ ப‌ய‌ண‌ம் அது.

அன்று ஒரு விப‌த்தில்
ர‌யில் பெட்டிக‌ள் கூழாகின‌.
உயிர்ச்சித்திர‌ங்க‌ள் சிதைந்து போயின‌.
இருப்பினும்
ஒரு “தீபாவ‌ளிப்”பிர‌காச‌த்தை நோக்கி
ப‌ய‌ணிக்கும் ம‌க்க‌ளில்
ந‌ம்பிக்கை ம‌த்தாப்புக‌ள்
ஒளி வெள்ள‌மாய்
“கோச்சுக‌ள்”தோறும்
பிதுங்கி வ‌ழிகின்ற‌ன‌.

ப‌ய‌ம் அங்கே
தோற்றுப்போன‌து.
க‌திரிய‌க்கம்
சில உட‌ல்க‌ளை அழிக்கலாம்.
ஆனால்
ப‌ய‌ம் வேர்பிடித்த‌
ம‌தி ம‌ய‌க்கம்
இந்த‌ உல‌க‌த்தின் ஆன்மாவையே
அழித்துவிடும்.

=======ருத்ரா

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *