கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு

This entry is part 33 of 38 in the series 20 நவம்பர் 2011

காலப்போக்கில்
களிமண் திரண்டு
கரையை நிறைத்ததால்
கடல் வணிகம் குன்றிப்போக
காலாவதியாகிப்போன
கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும்

காரைக்குடி சென்னை
கம்பன் எக்ஸ்பிரஸ்
கைவிடப்பட்டதால்
காற்று வாங்கும் ரயிலடிக்கும்
இடையே

பல ஆண்டுகளாக
பசுமை மாறாமல்
பரந்து நிற்கின்ற
பாதாம் மரத்தடியில்
பள்ளிப் பருவத்தில்
பரீட்ச்சைக்குப் படிக்கச்
செல்வதுண்டு

குட்டிக்ககுரா பவுடரும்
கொலுசுச் சப்தமுமாக
உலவும்
மோகினிப் பிசாசுக்குப்
பயந்து
கட்டிடத்துள்
செல்வதில்லை எனினும்

இயற்கையின்
ஓர் உபாதைக்கு
கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள்
ஒதுங்குகயில்
ஆர்வம் எட்டிப்பார்க்க

தூசு படிந்த தரையில்
சற்றே சுத்தமான மூலையில்
சப்பையான காலிக் குப்பியும்
காளிமார்க் சோடா போத்தலும்
நீர்த்துப்போன பீடித்துண்டுகளும்

கசங்கிய காகிதப் பொட்டலத்துள்
நசுங்கிய காய்ந்த தாமரை இலையும்

உதிரியாய்
பல பூவிதழ்களும்
சணலில் தொடுத்த காம்புகளும்
தரையில்
பிடரியளவு
ஒட்டிய எண்ணெய்ப் பிசுக்கும்
ஒரு சரிகை இழையும்
சில ஜிகுனா துகள்களும்
கண்டு

மோகினிப் பிசாசுவின்
பழக்க வழக்கங்கள் குறித்து
தெளிவில்லாமலிருந்தது

சமீபத்தில் ஊர்சென்றிருந்தபோது
கஸ்டம்ஸ் கட்டிடம்
இடிக்கப்பட்டுவிட்டதால்
அதே
பழக்க வழக்கங்களுடைய
மோகினிப் பிசாசு
இருப்பதற்கான அடையாளங்களை
உப்பளக் கொட்டகையின்
பம்ப் செட்டுக்கருகில்
காண முடிந்தது.

-sabeer.abushahruk@gmail.com

Series Navigationந‌டுநிசிகோடங்கிபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா
author

சபீர்

Similar Posts

5 Comments

 1. Avatar
  ஒ.நூருல் அமீன் says:

  கவிதை நன்றாயிருக்கு. ஆனால் மோகினி இருக்குமிடத்தின் அருகேயே ஒதுங்க வேண்டிய அவசியம் என்ன? நீ ஆளும் ஸ்டைலாக இருப்பதனால் மோகினி பிடிச்சுக்க போவது எச்சரிக்கை.

 2. Avatar
  ramani says:

  வாழ்க்கையில் தவிர்க்கவியலாத பலவற்றில் மோகினிப் பிசாசு தலையாயது. மோகினிப் பிசாசைத் தவிர்த்திருந்தால் சபீரின் இந்தக் கவிதையேது?

  ramani

 3. Avatar
  hameed says:

  மோகினி பிசாசு என்று யாரை சொல்றீங்க நம்ம சாரி எங்க L , T,C,யையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *