பம்பரம்…

This entry is part 17 of 38 in the series 20 நவம்பர் 2011

படைவீடு அமுல்ராஜ் .

கென்னிப்பன் வூட்டு
ஐயப்பன மிஞ்சரதுக்கு
ஒருத்தனும் இருந்ததில்ல ஊருல …

அவங் செதுக்கித்தர
பொம்பரத்துக்கு
ஒரு கூட்டம்
எப்பயும் அவங்கூட சுத்தும் …

பொம்பரத்துக்கினே
காட்டுக்குப் போவாங் …
பொர்சிமரம்தான்
பொம்பரத்துக்கு எத்ததுன்னுவாங் …

சிலநேரத்துல
அவுஞ்ச,
கொடுகாலி,
துரிஞ்ச மரங்கள தேடுவாங் …

பொம்பரம் செதிக்கித்தரகேட்டா
ஆணி உனதா, என்தான்னு கேப்பாங்
ஆணிய நாங்குத்தா ஒன்னார்ருவான்னுவாங்
ஆணிய அவனே அடிச்சி செதுக்கித்தந்தா
ரெண்ருவான்னுவாங் …

தெருமுழுக்க
அவங் செதுக்கன பொம்பரந்தாங் வெளையாடும் ..

அவங் வெச்சிருந்த
சட்டித்தல பொம்பரத்த
ஒருத்தனும் ஒடச்சதில்ல தெருவுல
தரையில வுடாமலே
கையில ஏந்தி அழகுகாட்டுவாங் …

இப்பயெல்லா
ஒரு பொம்பரத்தையும் தெருவுல பாக்கமுடியல
ஐயப்பங் மட்டும்
காட்டுக்கு போறத நிறுத்தல…

இன்னமும்
அவங் கொடுவா சத்தம்
அந்த காட்டுமரங்கள்ள
கேட்டபடிதாங் கெடக்குது …

ராவெல்லாம்
எரியும் சாராய அடுப்புக்கு
அவங் வெட்டியார்ர வெருவுதாங்
நின்னு எரியுதாம் .

Series Navigationஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?கவிதைகள்: பயணக்குறிப்புகள்
author

படைவீடு அமுல்ராஜ்

Similar Posts

Comments

  1. Avatar
    சபீர் says:

    சுத்திச்சுத்தி காலம் மாறிப்போச்சு, அமுல்ராஜ்

    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *