மகா சந்திப்பொன்றில்

This entry is part 31 of 38 in the series 20 நவம்பர் 2011

மகா சந்திப்பொன்றில்
சுய பகிர்வு உள்ளடக்கிய
வாரத்தைகளை
தேடி கொண்டிருக்கையில்
ஊடுருவும் பார்வை
விடுவித்து கொள்ளும்
மவுனம்
கடந்து கொண்டிருக்கிறது .

உன் வெட்க
நிற பிரிகையில்
வண்ணங்களை
தூவி கொண்டிருக்கிறாய்
பொழிவின் ஒளி
பிரபஞ்சத்தை
மறைப்பதாக இருக்கிறது .
போதும் விட்டு விடு
உன் ஒவ்வொரு செய்கை
நம் நிறைவின்
தொடக்கமாகிறது .

நொடிகளை
இச்சமயம்
பழித்து கொண்டிருக்கிறது
நம் எண்ணங்கள் .
முடிவிலி காலம்
உண்டெனில்
அது இதுவாக
இருக்க கடவது .
அதில்
இப்பொழுது உன்
கற்பனைகளை
வைத்து ஒன்றும்
செய்ய இயலாது
என்னைத்தவிர .
அவ்வாறே நானும்
ஆக்கப்பட்டேன்
மகா சந்திப்பொன்றில் .
-வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரைந‌டுநிசிகோடங்கி
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *