கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -1)

This entry is part 19 of 38 in the series 20 நவம்பர் 2011


ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

புதைந்திருக்கும் பொக்கிசம் நான்,
எல்லோரின்
நினைவில் வர விரும்புவேன் !
தகர்த்திடு
இந்தப் பழைய வீட்டை !
ஓராயிரம்
புது வீடுகள் கட்டலாம்
புதைந்துள்ள —
ஒளி ஊடுருவிச் செல்லும் —
விலை மதிப்பில்லா
பளிங்குக் கல் பூமிமேல் !
அதைச் செய்ய
சிதைக்க வேண்டும் பழைய
வீடுகளை !

தோண்ட வேண்டும் ஆழமாய்
அடித்தளம் இடுவதற்கு.
விலை மதிப்புள்ள கற்களை
விற்றுத் தான்
புது மாளிகை கட்டுவேன் !
இல்லா விட்டாலும்
இந்த வீடுகள்
விழத்தான் போகின்றன !
விலை மதிப்பில்லா கற்கள்
வெளிவரப் போகுது
விற்பனைக்கு !
உன்னைச் சேராது
அப்போது !
வீட்டை இடிப்பதற்குக் கூலி
புதையல் உனக்கு !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 17, 2011)

Series Navigationகவிதைகள்: பயணக்குறிப்புகள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -5)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *