மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“கடவுள் உனக்குக் கொடையாக அளித்துள்ளார் ஆன்மீக இறக்கைகளை ! அவற்றின் மூலம் நீ காதல் விரி வான்வெளிக் கோட்டையில் விடுதலையாகப் பறக்கலாம். நீ உன் கையாலே உன் இறக்கைகளை வெட்டி, உன் ஆத்மாவை நசுக்கி மண்ணில் நெளியும் புழுவாய் நகர்வது வருந்தத் தக்க நிகழ்ச்சி இல்லையா ?”
கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)
+++++++++++
அறிவும். பகுத்தாய்வு நெறியும்
அறிவுக் கல்வி இல்லாது
வெறுமை யாய்ப்
பகுத்தாய்வு மட்டும்
பெறுவது
உழாத நிலத்தை
ஓத்தது !
சத்துண விழந்த
சடலம் போன்றது !
பகுத்தாய்வு சந்தையில்
விலைக்கு
விற்கப் படும் ஒரு
கடைப் பொருளன்று !
மென்மேலும்
மிகுத்துக் குவியும் சரக்குகள்
தகுதித்தனம் இழக்கும் !
கறைப் படும்
பெருக்க நிலையில் !
கடையில் விற்கப் படின்
ஞானிகள் மட்டும்
மெய்யான
மேன்மை அறிவார் !
மூடன் மடமை தவிர வேறு
தேடு வதில்லை !
பித்தனை ஈர்ப்பவை
பித்து நடப்புகள் !
“நம்மோ டிருப்பவர்
எத்தனை பித்த ரென்று
எண்ணிச் சொல்
என்றேன்”
நானோர் மூடனிடம் !
நகைத்துக் கொண்டு சொல்வான்
“கடினம் அது ! எண்ணிடக்
காலம் பிடிக்கும் !
அதை விட்டு
மேதைகளை எண்ணுவது
ஞான மல்லவா ?”
(தொடரும்)
+++++++++++++
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 7, 2011)
- புதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்
- கோழியும் கழுகும்…
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 22
- விஷ்ணுபுரம் விருது 2011 – பெறுபவர் : எழுத்தாளர் பூமணி
- பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை
- மணியக்கா
- கெடுவான் கேடு நினைப்பான்
- எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’
- வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
- வெண்மேகம்
- மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை
- வெளிச்சம்
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4
- நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்
- ஒஸ்தி
- மழையின் முகம்
- பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து
- முன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)
- எவரும் அறியாமல் விடியும் உலகம்
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- புரிந்தால் சொல்வீர்களா?
- மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக நிகழவுள்ள பெண் இலக்கியவாதிகளின் ஆய்வரங்கம்
- கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 33 அறிஞர்களுக்கு விருதளித்து பாராட்டிச் சிறப்பிக்கும் ஐம்பெரும் விழா வரும் 18 ஆம்தேதி
- இரவின் முடிவில்.
- காந்தி சிலை
- அகஸ்தியர்-எனது பதிவுகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 1
- தரணியின் ‘ ஒஸ்தி ‘
- நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்.
- வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
- ஆனந்தக் கூத்து
- விருப்பங்கள்
- அழிவும் உருவாக்கமும்
- பார்வையின் மறுபக்கம்….!
- மழையும்..மனிதனும்..
- பிரம்மக்குயவனின் கலயங்கள்
- சொல்லவந்த ஏகாதசி
- அரவம்
- அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்
- குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்
- அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1
- ’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1 Che Guevara – A Revolutionary Life , by Jon Lee Anderson
- புத்தகம் பேசுது
- மணல்வீடு இதழும் களரி தொல்கலைகள்&கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நடத்தும் மக்கள் கலையிலக்கிய விழா
- அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்