கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)

This entry is part 19 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இறைவன் திருநாம உச்சரிப்பு

(சென்ற வாரத் தொடர்ச்சி)

வழிப் பயணிகள் பின்னே
நடந்து செல்
விளக்கேற்றிய சில விளக்குகள்
அணைந்து விட்டன
விரைவாக !
விடிவு வரை நீடிக்கும் சில.
ஆவி அடங்கும் சில.
தீவிர மாய் எரியும் சில !
எண்ணெய் ஊட்டப் பட்டவை
எல்லா விளக்கும் !

வீடு ஒன்றில்
விளக்கு அணைந்தால்
பக்கத்து வீட்டில் பாதிப் பில்லை !
அதுவே விலங்கி னத்தின்
ஆழ்ந்த கதை
தெய்வ ஆன்மீக மில்லை !
வெளிச்சம் தருவது சூரியன்
ஒவ்வொரு வீட்டுக்கும் !
அத்தனை யும் இருண்டு விடும்
அத்த மிக்கும் போது !

ஒளியே உனது ஆசானின்
ஒப்புமைத் தோற்றம் !
உன் பகைவர்கள் விழைவது
இருட்டு வெளியே !
எரியும் விளக்கின் மீதே
சிலந்தி ஒன்று
வலை பின்னி வரும்,
ஆசான் உடலில் நூலெடுத்து
வேசத் திரை இடும் !

காட்டுக் குதிரையைப் பிடிக்க
காலைப் பற்றாதே !
கழுத்தைப் பிடி !
கடிவா ளத்தைப் பிடி !
மதியோடு
குதிரைச் சவாரி செய் !
சுயநலத் தவிர்ப்பு
உனக்குத் தேவைப் படுவது.
பணிவு நடை முறை மேல்
வெறுப் படை யாதே
உதவி செய்யும் அவை.

(முற்றும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 7, 2011)

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *