ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்

This entry is part 18 of 30 in the series 15 ஜனவரி 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலஙள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்றமும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத்தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்துகிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Snnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(திருத்தியது)

உனக்குப் பகை நீதான் !

(ஈரேழ் வரிப்பா – 1)

நளினப் பிறவிகள் மூலம் நாம்

விழைவது எழில் இனப் பெருக்கம் !

அழகு ரோஜா ஒருபோதும் அழியாது

காலப் போக்கில் பெறுபவர் மரிப்பினும் !

வாலிபச் சந்ததி விருத்தி செய்து

நிலைத்திடும் நினைவுகள் பற்பல ஜென்மம் !

நீ அதைக் கட்டுப்பாடு செய்; ஆயினும்

நின் தீபத் தீயிக்கு எண்ணை

நீயே சுயமாய் நிரப்புவது !

நேர்ந்திடும் பஞ்சம் அதனால் சந்ததிக்கு

பேரளவு செழிப்புள்ள போதும் !

உனக்கு நீ பகைவனாய் உள்ளாய் !

இனிய சுயநலம் மிகவும் கொடியது !

ஒளிமிகும் புது உலக ஆபரணம் நீ !

ஒற்றைத் தூதுவன் ! உன்

வசந்த வனப்பு மங்கிப் போவது !

உனது மொட்டுக்குள் புதையும்

உன் சுய திருப்தி எல்லாம் !

சேமிப்பை வீணாக் காமல்

இன விருத்தியைத் தொடர் !

பரிவு கொள் இந்தப் புவி மீது

பெருந்தீனி மானிடன் இன்றேல்

உண்பான் புதை குழிபோல்

உலகுக் குரிய வற்றை !

++++++++++++++

(Shakespeare’s Sonnets : 1)

From fairest creatures we desire increase,

That thereby beauty’s rose might never die,

But as the riper should by time decease,

His tender heir might bear his memory:

But thou, contracted to thine own bright eyes,

Feed’st thy light’st flame with self-substantial fuel,

Making a famine where abundance lies,

Thyself thy foe, to thy sweet self too cruel.

Thou that art now the world’s fresh ornament

And only herald to the gaudy spring,

Within thine own bud buriest thy content

And, tender churl, makest waste in niggarding.

Pity the world, or else this glutton be,

To eat the world’s due, by the grave and thee.

+++++++++++

காலத்தை வீணாக்காதே !

(ஈரேழு வரிப்பா – 2)

நாற்ப தாண்டு குளிர்காலத் தடங்கள் உன்

புருவத்தைச் சூழும் போது அகண்ட கீறல்கள்

அழகு மேனியில் தோண்டப் படும் !

இளமைப் பீடு உடை இன்று மினுப்பது

கிழிந்த அணியாய்ச் சிறு மதிப் படையும் !

ஒப்பனை உனக்கு ஒளிந்துள தெங்கே ?

காமக்களி நாட்களின் சேமிப்பு எங்கே ?

குழிந்த உன் விழிகளுக்குள் தெரியும்.

அவமானம் விழுங்கும் நேர்மை உணர்வை

புகழ்ச்சி அளிக்காது எந்த ஊதியமும் !

இதற்கு மேல் எத்தகைத் தகுதி பெறும்

எழில் மேனியின் பயன் பாடு ?

இந்த மகவு எனக் குரியதா வென்னும்

வினாவுக்கு விடை தர முடிந்தால்

எடை போடு எனது வாழ்வை !

எத்தனை மாதர்கள் எனக்கெனக் கணக்கிடு

முதியவன் என்று நியாயம் அளித்திடு

அழகுக்குச் சோதனை ! எழிலுக்கு வாரிசு !

புதிதாய் இவை படைப் பானவை !

உன்னுருவில் உதித்த மதலை உனக்கு

முதிய வயதுச் சின்னம் ! கணப்பு

உதிரம் மீண்டும் ஓடும் குளிர்காலம் !

++++++++++++++

(Shakespeare’s Sonnets : 2)

When forty winters shall beseige thy brow,

And dig deep trenches in thy beauty’s field,

Thy youth’s proud livery, so gazed on now,

Will be a tatter’d weed, of small worth held:

Then being ask’d where all thy beauty lies,

Where all the treasure of thy lusty days,

To say, within thine own deep-sunken eyes,

Were an all-eating shame and thriftless praise.

How much more praise deserved thy beauty’s use,

If thou couldst answer ‘This fair child of mine

Shall sum my count and make my old excuse,’

Proving his beauty by succession thine!

This were to be new made when thou art old,

And see thy blood warm when thou feel’st it cold.

+++++++++++

தகவல் :

1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)

2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)

3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)

4. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/ (Sonnets Study Guide)

5. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)

+++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 10, 2012 (R-1)

Series Navigationபழமொழிகளில் சூழலியல் சிந்தனைகள்தமிழகக் கல்வி நிலை பற்றி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

4 Comments

  1. Avatar
    Kavya says:

    The introduction to Shakespeare’s sonnets by this writer creates a negative impression about the poet-cum-dramatist in the minds of Tamil readers. The translation, although ok as a rendering in Tamil line for line, yet is deeply dissatisfying to one who has enjoyed reading the sonnets.

    I am very very sorry for the poor Tamil readers. The sonnets are too difficult to translate in Tamil. They are not poems known for meaning only. (The translator attempts to think so!) They have rich poetic beauty which is appreciated only by those who have deep understanding of English plus interest in poetry. English literary world considers each sonnet as a gem in English lit.

    Please just skip the introduction he has written here. for if you read it you will get the feel that Shakespeare is not a worthy writer or overrated. Instead, go to read Kannadasan or Vairamuthu or Subramania Bharati: your time will have better spent.

    The story the sonnet sequence purports to unfold is rejected or taken just for a voyeuristic interest by English readers. The value of the sonnets lies not there; but in the poems themselves – either read sequentially or one at one time for poetic beauty and universal truths they adumbrate.

    But we can’t discourage the Thinnai translators. Something is better than nothing. At best they help Tamil readers know that there exists something called poetry written as a sequence in English and Shakespeare is one of the well known artists of that genre.

  2. Avatar
    ஜெயபாரதன் says:

    http://www.cliffsnotes.com/study_guide/literature/Shakespeare-s-Sonnets-About-Shakespeare-s-Sonnets.id-169.html

    ++++++++++++++++

    Overview of Shakespeare’s Sonnets

    Although Shakespeare’s sonnets can be divided into different sections numerous ways, the most apparent division involves Sonnets 1–126, in which the poet strikes up a relationship with a young man, and Sonnets 127–154, which are concerned with the poet’s relationship with a woman, variously referred to as the Dark Lady, or as his mistress.

    In the first large division, Sonnets 1–126, the poet addresses an alluring young man with whom he has struck up a relationship. In Sonnets 1–17, he tries to convince the handsome young man to marry and beget children so that the youth’s incredible beauty will not die when the youth dies. Starting in Sonnet 18, when the youth appears to reject this argument for procreation, the poet glories in the young man’s beauty and takes consolation in the fact that his sonnets will preserve the youth’s beauty, much like the youth’s children would.

    By Sonnet 26, perhaps becoming more attached to the young man than he originally intended, the poet feels isolated and alone when the youth is absent. He cannot sleep. Emotionally exhausted, he becomes frustrated by what he sees as the youth’s inadequate response to his affection. The estrangement between the poet and the young man continues at least through Sonnet 58 and is marked by the poet’s fluctuating emotions for the youth: One moment he is completely dependent on the youth’s affections, the next moment he angrily lashes out because his love for the young man is unrequited.

    Despondent over the youth’s treatment of him, desperately the poet views with pain and sorrow the ultimate corrosion of time, especially in relation to the young man’s beauty. He seeks answers to the question of how time can be defeated and youth and beauty preserved. Philosophizing about time preoccupies the poet, who tells the young man that time and immortality cannot be conquered; however, the youth ignores the poet and seeks other friendships, including one with the poet’s mistress (Sonnets 40–42) and another with a rival poet (Sonnets 79–87). Expectedly, the relationship between the youth and this new poet greatly upsets the sonnets’ poet, who lashes out at the young man and then retreats into despondency, in part because he feels his poetry is lackluster and cannot compete with the new forms of poetry being written about the youth. Again, the poet fluctuates between confidence in his poetic abilities and resignation about losing the youth’s friendship.

    Philosophically examining what love for another person entails, the poet urges his friend not to postpone his desertion of the poet — if that is what the youth is ultimately planning. Break off the relationship now, begs the poet, who is prepared to accept whatever fate holds. Ironically, the more the youth rejects the poet, the greater is the poet’s affection for and devotion to him. No matter how vicious the young man is to the poet, the poet does not — emotionally can not — sever the relationship. He masochistically accepts the youth’s physical and emotional absence.

    Finally, after enduring what he feels is much emotional abuse by the youth, the poet stops begging for his friend’s affection. But then, almost unbelievably, the poet begins to think that his newfound silence toward the youth is the reason for the youth’s treating him as poorly as he does. The poet blames himself for any wrong the young man has done him and apologizes for his own treatment of his friend.

    ++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *