பிரியாவிடை

This entry is part 15 of 42 in the series 29 ஜனவரி 2012

வீட்டில் சகுனங்களில் நம்பிக்கை இருந்திருக்கலாம்
குறுக்கே போன கருப்புப் பூனை சாக்கில்
ஐந்து நிமிடங்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்..

பொம்மைக்கூட்டத்திலிருந்து பிரித்து கொணரப்பட்ட
குழந்தையொன்றைக் கைப்பிடித்து நடத்திவருவதைப்
போலிருக்கிறது நான் இழுத்துவரும் ட்ராலி,
என் நடையின் நேர்கோட்டுக்குப் பின்னால் உருண்டுவந்தபடி..

“செல்போன் சார்ஜர் எடுத்து வச்சியா?”
“பனியா இருக்கு, ஸ்வெட்டர் போட்டு போ”
அக்கறைக்குரல்கள் துரத்தல்களாய்க் கேட்க
பிரியாவிடைபெற்று நடக்கிறேன்,
விடிந்தால் விரியும் மீண்டுமொரு விடுதி நாள்..

Series Navigationமகள்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)

2 Comments

  1. Avatar ganesan

    good.y dont u finish with “AAVALODU KAATHIRUPEN ADUTHA VIDUMURAIKKU”…

  2. Avatar jayashree shankar

    அழகான கவிதை….நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *