ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++
பிறர் பின்னால் சென்று
+++++++++++++++++++
கூக்குரல் மெதுவாய் நிற்கிறது
ஓநாய் வருகுது
ஓடுகிறோம் வெவ்வேறு
திசைகளில்
கிடைத்துள்ள ஆதாயங் களை
நினைத்துக் கொண்டு !
ஆனால் எதுவும்
நீடித்து மிதப்ப தில்லை.
மௌனம் படியுது வாயிலும்
காதிலும் !
சிரம் ஒவ்வொன்றும் அப்பால்
தணிகிறது !
பிறரைப் பல்லாண்டு
பின்பற்றி
என்னைத் தெரிந்திட
முயன்றேன் !
உள்ளிருந்து கொண்டு
செய்வ தென்ன வென்று
தீர்மா னிக்க முடிய வில்லை
பார்க்கும் திறமின்றி என்
பேர் அழைக்கப் பட்டது !
ஆனால்
போனேன் விலகி நான்
புறத்தளத் திற்கு !
+++++++++++++
வழிபடும் முறை
+++++++++++++
என்றைக்கும் போல் இன்றும்
எழுந்தோம்
வெறும் கையோடு
பயம் மிகுந்து ! எனது
படிப்பறைக்
கதவைத் திறந்து வைத்துப்
படிக்காதே !
இசைக் கருவி ஒன்றை
இறக்கிக் கொண்டுவா
நாம் மோகிக்கும் நளினம்
நிலவட்டும்
நாம் செய்யும் பணிகள்
அனைத்திலும் !
நூற்றுக் கணக்கில்
வழி முறைகள் உள்ளன
மண்டி யிட்டு
மண்ணை முத்தமிட !
++++++++++++++++++++++++
உறங்கச் செல்லாதே மீண்டும்
++++++++++++++++++++++++
காலைப் பொழுது வீசும்
தென்றலில் உள்ளன
உனக்குச் சொல்லும் மர்மங்கள் !
உறங்கச் செல்லாதே
மீண்டும் !
நிச்சயமாய் வேண்டுவதை
நீ கேட்டுப் பெறு !
உறங்கச் செல்லாதே
மீண்டும் !
வாசல் வழியாக மாந்தர் பலர்
வந்து போய் இருக்கிறார்
ஈருலகும்
சேரும் இடத்தில்
திறந்து கிடக்குது
வட்ட வடிவான கதவு !
உறங்கச் செல்லாதே
மீண்டும் !
**************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Open Secret – Versions of Rumi By John Moyne, & Coleman Barks (1984)
4. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 2, 2012)
- பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்
- ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்
- ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 2
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)
- குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை
- சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘
- வளவ.துரையனின் நேர்காணல்
- சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 30
- பழமொழிகளில் நிலையாமை
- சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை
- சுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்
- நினைவுகளின் சுவட்டில் – (84)
- வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…
- கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1
- நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…
- இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு
- முன்னணியின் பின்னணிகள் – 25
- சுப்ரமணிய சுவாமியும் – சுப்ரீம் கோர்ட்டும்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9
- காமம்
- கவிதை கொண்டு வரும் நண்பன்
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்
- உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்
- பேஸ்புக் பயன்பாடுகள் – 1
- தற்கொலை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 8
- மும்பை தமிழ் அமைப்புகள் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா