அதோ ஒரு புயல் மையம்

This entry is part 18 of 40 in the series 12 பிப்ரவரி 2012

அதோ ஒரு புயல் மையம்
கருக்கொண்டு விட்டது.
தினசரி காலண்டர் தாள்க‌ளின்
இந்த‌ இலையுதிர் கால‌த்தின் ந‌டுவே
பெப்ர‌வ‌ரி ப‌தினாலாம் தேதி…..

பொன் வ‌ச‌ந்த‌ம்.
ம‌ல‌ர் ம‌ழை.
தேன் மின்னல்.
குமுழிக்கோட்ட‌ம்.
நுரைவ‌ன‌ங்க‌ள்.
ப‌னிச்சொற்க‌ள்.

வ‌ண்ணாத்திப்பூச்சி சிற‌குக‌ளுக்குள்
வாழ்க்கைப்பாட‌ங்க‌ள்.

முள் மீது க‌ழுவேறும்
ரோஜாக்க‌ள்.

இத‌ய‌த்தை
இன்னொரு இத‌ய‌ம்
க‌த்தியாகி
க‌சாப்பு செய்த‌ல்.

ஜிகினா த‌ட‌விக்கொண்டு
பொன் எழுத்துக்க‌ளை கூரிய‌ ப‌ற்க‌ளாக்கி
உயிரை உறிஞ்சும்
வேல‌ன்டைன் அட்டைக‌ள்.

அந்த பெப்ரவரி
இனிமேல் கொலவெரி.
மாதங்களை திருத்துங்கள்.

கிடார் நரம்புகளுக்குள்
டைரன்னாசரஸ் ரெக்ஸின்
ஆவித்துடிப்புகள்.

ட்ரம்ஸில்
உலக்கை இடிகள்.
உள்ளங்கள் தூள்.

எல்லாமொழியையும்
மிக்ஸியில் போட்டுக்கொள்.
அவள் இதயம் ஐஸ் கியூபுகள்.
“ஸ்ட்ரா” மட்டும் தமிழ்.
குடி..குடி..குடி..

அவள்
“பாவா” என்று கொஞ்சினால்..நீ
“லாவா” ஆகு.

பேண்ட்
ஆகாசத்தில் கிழிகிறது.

சுடிதார் “ஸ்ம்கின்”
சூரியப்பிழம்பு
சுட்டெரித்த பொட்டுகள்

எரியட்டும் எரியட்டும்..
கொழுந்து விட்டு எரியட்டும்.
சாம்பலுக்குள்
இன்னும் ஒரு பிரபஞ்சம்
காதலைப் பாட
காய்த்துக்கிட‌க்கிற‌து.

அதே நள்ளிரவு.
அதே மவுண்ட் பாட்டன்
தேதி மட்டும் பெப்ரவரி பதினாலு.
இந்த”பதினாலு”களின்
ஆகஸ்டு பதினைஞ்சே
பெப்ரவரி பதினாலு தான்.

யார் சொன்னது?
“நள்ளிரவில் வாங்கினோம்
விடியவில்லை என்று”
இந்த “சுதந்திர” இடிகள்..இனி
எப்போதுமே நம் விடியல்.
புதிய விடைகள்
விடைக்கும் வரை
இந்த வெடிகள் வெடிக்கட்டும்.

கொஞ்ச‌ம் மாத்தி தான் யோசி.

“குவிபூத் தாமரை முகையுள் சுரும்பு
அரும்விழ விழையா நெஞ்சொடு
வெங்கதிர் வெறுக்கும்..க‌ண்ணொடு கிள‌ர்க்கும்.
அவ‌ன் தீங்குர‌ல் தீக்குள் குளீஇ புக்க‌
வெய்ய‌ப் பைநீர் க‌னாத்திற‌ம் உண்டு
க‌ளித்து யானும் துஞ்சுவ‌ன் கொல்லோ!”

ச‌ங்க‌ ந‌டையில்
இஃதோர் “வேல‌ன்டைன்”
க‌ருப்பொருளின் க‌ருப்பை கிழித்து
அவ‌ச‌ர‌மாய் அர்த்த‌ம் கேட்டால்…

இதுதான் இதுதான் இதுவேதான்.

அடியேய்ய்ய்..என்னை எழுப்பாதே.
க‌ன‌வின் வ‌ண்ண‌ப்புழுக்கூடு நான்.
வ‌ண்ண‌ப்பிர‌ள‌ய‌ம் வானம் கிழிக்கும் வ‌ரை
அவ‌ன் பூஞ்சொல் உண்டு
அவ‌ன் உள்ள‌ம் குடித்து
கிட‌ப்பேன் நான்.

அய்யோ அய்யோ
“ந‌ரை”த்த‌மிழ் வேண்டாம்.
துரைத்த‌மில் உண்டு.
இங்கிலீஷோடு வார்னீஷ் க‌ல‌ந்து
ப‌ட்டையாய் காய்ச்சி
கானா பாடிடும்
வான‌ம்பாடிக‌ள்
நாங்க‌ள் நாங்க‌ள்…
ஒத்து ஒத்து பெரிசு
அங்க‌ கூப்பிடுது
கொலுசு! கொலுசு! கொலுசு!

Series Navigationமெஹந்திமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 13
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *