கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)

This entry is part 21 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++
சுதந்திர மனிதன்
+++++++++++++

செல்வம் சேமித்துக் கணக்குக் கூட்டாத –
செல்வந்த னாய்க் கொழுத்துத் தோன்றாத –
செல்வத்தை இழக்க நெஞ்சம் அஞ்சாத –
சிறிதும் தன் மேனி ஒப்பனை செய்யாத
எவனோ ஒருவனை எடுத்துக் கொள் !
அவனே சுதந்திரம் அடைந்தவன் !

+++++++++++
என் சந்திப்பு
+++++++++++

தப்புத் தவறான செயல் களுக்கும்
அப்பால் ஒருவர் சிந்தனைக்கும்,
செம்மை யான வினைகளுக்கும்
வெளியே தொலைவில்
அரங்க மொன்று உள்ளது !
அங்கே உன்னைச் சந்திப்பேன் !

அந்தப் புல்தரை மீதிலே
ஆத்மா படுத்துள்ள போதிலே
நிரம்பி யுள்ளது உலகம்
உரையாட முடியாத வாறு !
கருத்துகள், மொழிகள், வார்த்தைகள்
ஒருவருக் கொருவர்
பரிமாறிக் கொள்ளினும் ஏதும்
புரிய வில்லை அவர்க்கு !

+++++++++++++++++++
காதலின் விலை மதிப்பு
+++++++++++++++++++

முத்தமிட விழைவேன் உனக்கு
விட்டுப் போகும் உயிரே
விலை அதற்கு !
இப்போது
எனது காதல்
அலறிக் கூக்குர லிட்டு
என்னுயிர் நோக்கிப்
பாயுது !
என்னே உன்னத ஆதாயம் ?
விலைக்கு வாங்குவோம்
இனிக் காதலை !

++++++++++++++++++
உயிரோடு உள்ளோம்
++++++++++++++++++

இப்படித்தான் பேசி வருகிறோம்
இனி வேறாகவும் பேசலாம்
வேண்டு வதற்கும்
அஞ்சி மிரள்வ தற்கும்
இடையே
மற்ற வருடன் வாழ்ந்து நாம்
உயிர்த் துள்ளோம்
குன்று வடிவில் தோன்றிய
கண்ணாடிக் கற்களாக !

**************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Open Secret – Versions of Rumi By John Moyne, & Coleman Barks (1984)

4. Life of Rumi in Wikipedia

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 26பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    jayashree shankar says:

    திருவாளர்.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு,
    வணக்கம்….!
    இணைய உலகில் ஒரு சின்ன கிராமத்தில் வழி கடக்கும் போது….திண்ணையில் இளைப்பாறி அமர்ந்த எனக்கு….
    உங்கள் எழுத்து மாளிகையை எட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் தந்தது…..திண்ணை..! படைப்புகள் உங்கள் பெயரை
    சொல்லி… சொல்லி…அழைத்துக் கொண்டிருந்தமையால்….ஆர்வம் மேலிட படிக்க ஆரம்பித்தேன்.
    விஞ்ஞானம்…அறிவியல்…கூடங்குளம்…அணுமின்சக்தி…அண்டவெளி..கதைகள்….கவிதைகள்…நாடகங்கள்….கட்டுரைகள்…
    என உலகின் மறு கோடியில் இருந்து கொண்டு தமிழில் எழுத்து சாம்ராஜ்யத்தில் கோலாட்சி நடத்திக் கொண்டிருப்பது கண்டு வியந்தேன்.அத்தனை படைப்புகளும்…தனித் தன்மை பொருந்தி…நட்சத்திரமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது விந்தை…தங்களின்…
    நெஞ்சின் அலைகள்….உங்களைப் பற்றிய அழகான அறிமுகம்…அதில் நீங்கள் புத்தைத்து வைத்திருக்கும் புதையல்கள்…
    இன்னும் ஏராளமான விழிகளுக்கும் மனங்களுக்கும் சென்று சேரவில்லை….என்னும் குறை பிறந்தது….! என்னதான்
    தினமும் ஆயிரக் கணக்கானோர் தங்களில் வலைப்பூவை பார்வை இட்டாலும்….! இன்னும் கண்டெடுக்காமல் மீதம் உள்ளவர்களுக்காக எண்ணியது…!உங்கள் திறமை..அதைத் தாங்கள் வெளிக் கொணர்நத.. விதம்…தமிழுக்கும்…எழுத்துக்கும்…நீங்கள் சரணடைந்த விதம் கண்டு…வியந்து….உங்களது கர்மயோக எண்ணத்தின் உயர்ந்த சேவை மென்மேலும் சிறந்து பலருக்கும் பயன்பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு….வியப்பு மாறாமல்..திண்ணையை விட்டு எழுகிறேன்…! உணர்வின் உந்துதலால்…உண்மையை உணர்ந்து எழுதுகிறேன்….அன்றி….உயர்த்தி எழுதவில்லை.!
    இவண்….
    ஜெயஸ்ரீ ஷங்கர்..
    சிதம்பரம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *