ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(Major Barbara)
மூவங்க நாடகம்
(மூன்றாம் அங்கம்)
அங்கம் -3 பாகம் – 16
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
உன் சல்வேசன் அணியில் வேலை கிடைக்காமல் ஆத்மா நோகும் ஒருவனைக் கொண்டுவா ! நான் அவனுக்கு ஊழியம் அளித்து வாரத்துக்கு 40 ஷில்லிங் ஊதியம் தருகிறேன். சுத்தமான ஒரு வீதியில் புது வீடும் கொடுக்கிறேன். அவனுக்கு உன்னைப் போல் நான் கனவை விற்க வில்லை ! வேலை தந்து கூலி கொடுத்து நான் அவன் ஆத்மாவைக் காப்பாற்று கிறேன். ஆத்மாவைக் காப்பது வெறும் வாக்குறுதி மட்டுமில்லை. என் தொழிற்சாலை ஊழியர் பசியைப் போக்குது. அவரது குடும்ப வறுமையைப் போக்குது. என்றும் ஊழியர் கையில் பணமிருக்கும் உறுதியைக் கொடுக்குது. சல்வேசன் அணியில் அந்த உத்திரவாதம் உன்னால் கொடுக்க முடியுமா ?
.
பெர்னாட் ஷா (ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட்)
மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :
இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.
வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ! ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ! போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை ! அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக் குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.
மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணக் குணப் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.
சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
**********************
நாடக உறுப்பினர்:
1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.
2. ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.
3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)
4. ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.
5. மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.
6. அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்
7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.
8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45
9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.
மற்றும் பலர்.
************************
ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)
(மூன்றாம் அங்கம்)
அங்கம் – 3 பாகம் – 16
இடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். மேடம் பிரிட்டினியின் மாளிகை.
நிகழும் ஆண்டு : ஜனவரி 1906
நேரம் : அடுத்த நாள் பகற்பொழுது.
அரங்க அமைப்பு : ஆன்ரு அண்டர்ஷா·ப்டின் பீரங்கித் தொழிற்சாலை நகருக்கு வெளியே மிடிலெக்ஸ் குன்றுகளுக்கு இடையில் மறைவாக உள்ளது. தொழிற்சாலை மிகப் பெரியது; அதைச் சுற்றிலும் முட்கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளது. இரண்டு புகை போக்கிகளிலிருந்து கரும்புகை மூட்டம் மேலே கிளம்புகிறது. தொழிற்சாலைச் சக்கரங்கள் போடும் சத்தம் செவியை அடைக்கிறது. வெடி மருந்து நாற்றம் வாசல் முன்னேயும் வந்து மூக்கைத் துளைக்கிறது. தொழிற்சாலை முன்பாக உள்ள விரிவான பசுமை முற்றத்தில் பெரிய பீரங்கி வாகனம் ஒன்றில் வானைக் குறிவைத்து நிறுத்தப் பட்டிருக்கிறது. பார்பரா உயர்ந்த பீடத்தின் மீது நின்று தூரத்தில் உள்ள நகரை நோக்குகிறாள். பின்புறம் தொழிற்சாலை உறுமிக் கொண்டிருக்கிறது. ஸ்டீ·பனும், அடால்பசும் தொழிற்சாலையிலிருந்து வருகிறார். அடுத்து ஸாராவும் சார்லசும் வருகிறார்., பீரங்கித் தொழிற்சாலை யாருக்கு வாரிசுச் சொத்தாக வேண்டும் என்பதில் தர்க்கம் நிகழ்கிறது.
(சென்றவாரத் தொடர்ச்சி)
ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட்: (அழுத்தமாக) பார்பரா ! நாமெல்லாம் ஏழ்மைக்கும், இல்லாமைக்கும் அஞ்சி நடுங்குகிறோம். உன் சல்வேசன் அணியில் வேலை கிடைக்காமல் ஆத்மா நோகும் ஒருவனைக் கொண்டுவா ! நான் அவனுக்கு ஊழியம் அளித்து வாரத்துக்கு 40 ஷில்லிங் ஊதியம் தருகிறேன். சுத்தமான ஒரு வீதியில் புது வீடும் கொடுக்கிறேன். அவனுக்கு உன்னைப் போல் நான் கனவை விற்க வில்லை ! வேலை தந்து கூலி கொடுத்து நான் அவன் ஆத்மாவைக் காப்பாற்று கிறேன். ஆத்மாவைக் காப்பது வெறும் வாக்குறுதி மட்டுமில்லை. என் தொழிற்சாலை ஊழியர் பசியைப் போக்குது. அவரது குடும்ப வறுமையைப் போக்குது. என்றும் ஊழியர் கையில் பணமிருக்கும் உறுதியைக் கொடுக்குது. சல்வேசன் அணியில் அந்த உத்திரவாதம் உன்னால் கொடுக்க முடியுமா ? நாட்டில் பஞ்சம் வராமல் தடுக்க எனது தொழிற்சாலை போல் பத்துத் துறைகள் மக்களுக்கு உணவும், உயிரும் தந்து உறுதி கொடுக்க வேண்டும். நான் ஆடவருக்குத் தரும் வேலைகள் நிரந்தர வேலைகள் ! இன்றைக்கு ஒன்றும் இல்லாதான் என்னிடம் வேலை செய்து மூன்று வாரத்தில் ஓர் ஆடம்பரக் கோட்டும் சூட்டும் வாங்குவான். மூன்று மாதங்களில் ஒரு மோட்டர் சைக்கிள் ஓட்டுவான். மூன்று வருடங்களில் ஒரு கார் வாங்குவான். இந்த யந்திர உலகில் தேவையான இவற்றை எல்லாம் வாங்கிப் பயன்படுத்துவது சாத்திய மாகுது. அப்புறம் அவரெல்லாம் கன்சர்வேடிவ் கட்சியில் உறுப்பினர் ஆகச் சேர்கிறார்.
பார்பரா: உலோகாயுத யுகத்தில் பணம் சாம்பாதித்தால் மட்டும் போதுமா ? வயிற்றுக்கு உணவு அளித்தால் மட்டும் போதுமா ? வீதியில் போக்குவரத்துக்கு ஆடம்பரக் கார் வாகனம் வேண்டுமா ?
ஆன்ரூ: பார்பரா ! நாமெல்லாம் குதிரை இழுக்கும் கோச் வண்டியில் போய்க் கொண்டிருந்தோம் ஒரு காலத்தில் ! இப்போது நமக்கு வேகமாகப் போக கார் வாகனம் வந்து விட்டது ! தண்டவாளத்தில் போக வேக வண்டித் தொடர் உள்ளது. கடலில் போக கப்பல் உள்ளது ! ஆகாயத்தில் பறக்க விமானம் வந்து விட்டது. இவற்றை உண்டாக்கியது எங்கள் தொழிற்புரட்சி. உங்கள் சல்வேசன் அணி இவற்றைப் படைக்க வில்லை தெரியுமா !
பார்பரா: ஒருவரை ஒருவர் கொல்ல வெடிமருந்தும் பீரங்கியும் செய்து வறுமையும் ஏழ்மையும் வாக்கையில் இல்லாமல் செய்து விடுவீரா ?
ஆன்ரூ: நிச்சயம் முடியும் பார்பரா ? உனது சல்வேசன் அணி சம்பாதிக்காது ! யாசகம் செய்து அடுத்தவர் தரும் பணத்துக்கு ஏங்கி நிற்கிறது. பீரங்கித் தொழிற்சாலை பேரளவில் பணம் சம்பாதிக்குது. நாட்டில் ஏழ்மை வறுமை இல்லாமல் செய்ய முடியும் என்னால் ! அதற்கு உறுதி கொடுக்க முடியும் என்னால் ! வஞ்சகியாய் இருக்காதே பார்பரா ! என் தொழிற் சாலையால் பலருக்கு வயிறு நிறைய உணவு, பை நிறையப் பணம், வசிக்க நல்லதோர் வீடு, உடுக்க நல்ல உடை, படுக்க மெத்தைக் கட்டில். மனைவி கைச் செலவுக்குப் பணம். அவனுக்குப் பிறக்கும் பிள்ளைகள் பருமனாக குண்டாகப் பிறக்கும். அவனுக்கு ஓர் ஒளிமயமான வாழ்வைத் தரும். அதே சமயத்தில் நீ என்ன அளிக்கிறாய் ? ஒரு வேளை முழு உணவு உன்னால் தர முடியுதா ? மற்ற நேரத்தில் பாதி வயிறு உணவு. காலையில் காய்ந்த ரொட்டி ! ஓட்ஸ் கஞ்சி ! மரம் வெட்டிப் பிழைப்பு ! படுக்கப் பாய் ! இதற்கிடையில் அவன் மண்டியிட்டுத் தொழ வேண்டும் கடவுளை அடுத்தடுத்துக் கிடைத்த உணவுக்கு ! அதை நீ ‘மண்டித் தொழுகை’ என்று சொல்லிக் கொள்கிறாய் ! அவன் வாயில் ரொட்டியை ஊட்டி அவன் கையில் பைபிளைக் கொடுக்கிறாய் ! அரை வயிறாய்க் காயும் போது அவன் கையிலிருந்து பைபிள் நழுவி விழுகிறது ! பார்பரா ! நீ என் தொழிற்சாலைக்கு வந்து உன் கை வலுவைக் காட்டு ! அநேகரது ஆத்மா பசியால் வாடுது வயிறு நிரம்பிப் போய் !
பார்பரா: ஒப்புக் கொள்கிறேன் அப்பா ! பட்டினி வயிறோன் பைபிளைத் தொடான் ! மெய்யாக நீங்கள் நிரந்தரப் பசியைத் தீர்த்து வைக்கிறீர் ! ஆனால் அவனைப் பைபிள் படிக்க வைப்பது சல்வேசன் அணி ! ஆத்மாவுக்கு விருந்தளிப்பது சல்வேசன் அணி ! நாமிருவரும் கைகோர்த்து மனிதப் பசியைப் போக்க முடியும் ! மனித ஆத்மாவை உய்விக்க இயலும் ! ஆம் சல்வேசன் அணி தலை உயர்த்தி நடக்க உமது தொழிற்சாலை இயங்க வேண்டும் ! ஒப்புக் கொள்கிறேன் அப்பா !
ஆன்ரூ: நான் கிழக்குத் திசையிலிருந்து வந்தவன் ! ஒரு காலத்தில் நான் பைபிள் நெறிப்படி ஒழுகிப் பட்டினி கிடந்தவன் ! பசியில் வாடி ஒருநாள் நானொரு சபதம் எடுத்தேன் ! இனிமேல் எப்படியாவது கடுமையாக உழைத்து நிரந்தரமாய் வறுமையை ஒழிப்பேன் ! எனது வயிற்றை நிரப்புவேன் ! இது உறுதி ! எதுவும் என்னை நிறுத்த முடியாது ஒரு துப்பாக்கி ரவையைத் தவிர ! எந்தக் காரணமும் என்னைத் தடுக்க முடியாது ! எந்த விதி நெறியும் என்னைத் தடை செய்ய இயலாது ! எவருடைய வாழ்க்கையும் என்னை நிறுத்த முடியாது. அப்படித் தீர்மானித்த பிறகு எனக்கு விடுதலை கிடைத்தது வறுமையிலிருந்து ! உன்னத உணர்ச்சி பொங்கி எழுந்தது ! நானோர் கொடூர மனிதனாய் இருந்தேன் அதுவரை ! இப்போது மாறி நானொரு மிதவாதி ! நல்லது செய்பவன். மக்கள் நலனைக் கருதுபவன். கருணை உள்ளவன். சுய முயற்சியில் வந்த கோடீஸ்வரர் எல்லாம் இப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும். ஒவ்வோர் ஆங்கிலேயனின் இத்தகைய வரலாறுதான், வாழத் தகுந்த இங்கிலாந்தை உருவாக்கியுள்ளது !
மேடம் பிரிட்னி: நிறுத்து உன் மேடைப் பேச்சை ! இது பேச்சு மேடை அல்ல ஆன்ரூ !
ஆன்ரூ: கண்மணி ! போதனை கூற இம்முறை தவிர வேறு எம்முறையும் தெரியாது எனக்கு !
மேடம் பிரிட்னி: அறிவின்றிப் புலம்புகிறாய் ஆன்ரூ ! உமது வறுமை பற்றி எமக்கு எந்தக் கவலையும் இல்லை. உன்னைப் பார்த்தால் பட்டினி கிடந்தவன் போல் தெரியவில்லை எனக்கு. உன் பேராசையால் பீரங்கித் தொழிற்சாலை பெருகி வேரூன்றியது.
(தொடரும்)
***********************
தகவல் :
Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)
(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 25, 2012)
http://jayabarathan.wordpress.
- ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை
- வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்
- சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி
- இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு
- சங்க கால சோழநாட்டு ஊர்கள்
- முள்வெளி- அத்தியாயம் -1
- என் சுவாசத்தில் என்னை வரைந்து
- ‘பெற்ற’ மனங்கள்…..
- பழமொழிகளில் அளவுகள்
- ஜீன்கள்
- நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை
- இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ
- தில்லையில் கள்ள உள்ளம்…
- சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)
- வெறும் தோற்ற மயக்கங்களோ?
- பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?
- குளவி கொட்டிய புழு
- அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்
- காரைக்குடியில் கம்பன் விழா
- சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16
- ஆணவம்
- தேவனும் சாத்தானும்
- சொல்லாமல் போனது
- காந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்
- கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…
- உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
- நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்
- ஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘
- ரஸ்கோல்நிக்கோவ்
- இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்
- பேனா பேசிடும்…
- என்னவென்று அழைப்பது ?
- ”கீரை வாங்கலியோ…கீராய்…!”
- கலாசாரத் தொட்டில்
- “ஊசியிலைக்காடுகள்”
- முன்னணியின் பின்னணிகள் – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5