ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா

This entry is part 12 of 41 in the series 8 ஏப்ரல் 2012

கடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில் ஏறத்தாழப் பத்து நாட்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இலக்கம் 6, பழனியப்பா நகரில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்தில் அரிய புத்தகங்கள், பழம் பெரும் இதழ்களுடன் உறவாடி மகிழ்ந்து மிகுந்த பயன் அடைந்தேன். அங்கிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து வந்தேன்.
ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய அரிய நூல்கள், இதழ்கள் தொடங்கிச் சமீபகால அனைத்து சிற்றிதழ்களும் முக்கிய நூல்களும் ஒருங்கே ஒரே கூரையின் கீழ் படிக்கக் கிடைப்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு. ஆய்வாளர்களுக்கென்றே அமைந்த இந்நூலகத்தில் உள்ள எண்பத்தைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், தொகுப்புகளைப் பராமரிக்கவும் உதவியாளர்களை நியமித்து ஆய்வாளர்களுக்குத் துணை புரியவும் ஆண்டொன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் கூடுதலாகவே செலவு ஆகிறது என்பதைக் கேட்டு அறிந்தேன்.
புத்தகங்களையும் இதழ்களையும் நேசிக்கும் பா. கிருஷ்ண மூர்த்தி, டோரதி கிருஷ்ண மூர்த்தி தம்பதியர் தங்களின் பணிக்காலக் கொடைகள் மாதாந்திர ஓய்வூதியங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியை ஞானாலயா நூலகப் பராமரிப்பிற்குச் செலவிட்டு வருகிறார்கள். அப்படியும் இந்த அரிய நூலகத்தின் பராமரிப்பிற்கு அது போதுமானதாக இல்லை. மிகுந்த சிரமத்துடன் தம்பதியர் விடாப்பிடியாக நூலகத்தைப் பராமரித்து வருவது கண்டு மனம் நெகிழ்ந்தேன்.
இங்குள்ள நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய நூல்கள், இதழ் தொகுப்புகள் ஆகியவை கையாளும் நிலையில் இல்லை. இவற்றை உடனடியாக மின் புத்தகங்களாக மாற்றாவிடில் அவற்றை நாம் இழக்க வேண்டிவரும். இதற்கும் பெருமளவில் நிதி உதவி தேவைப்படுகிறது.
நூலகப் பராமரிப்பிற்கும் நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு அரிய நூல்களையும் இதழ் தொகுப்புகளையும் நிலைத்திருக்கச் செய்யவும் ஞானாலயா உதவிக் கரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நற்பணிகளுக்கு உதவத் தயங்காத நண்பர்கள் ஞானாலயாவுக்கும் தங்களால் இயன்ற நிதி அளிக்க முன்வந்தால் மனம் மகிழ்வேன்.
அரசின் சக்கரங்கள் மிக மெதுவாகவே சுழலும் என்பதை அறிவீர்கள். உதவி கோரி அரசை அணுகுவதைவிட வாளாவிருந்துவிடலாம் எனச் சலிப்பு தோன்றிவிடுவதே நமது அனுபவமாக இருந்து வருகிறது. இந்திலையில் யூனெஸ்கோ போன்றவற்றின் உதவியை முறைப்படி அணுக என்ன வழி என்பதை அறிந்தோர் ஞானாலயாவுக்கு அந்தச் சரியான வழியைக் காட்டி உதவ வேண்டுகிறேன். மத்திய அரசின் கலாசாரத் துறையிடம் உதவி கோர எப்படி அணுக வேண்டும் என்ற விவரங்களை அறிந்தோர் அவற்றையும் தெரிவிக்கலாம்.
இவை உடனடியான தேவைகளை நிறைவு செய்யப் போதா. ஆகவே தனிப்பட்ட முறையில் நண்பர்கள் தம்மாலியன்ற நிதி உதவி செய்வதும் அவசியமாகிறது.
ஞானாலயாவின் முழு முகவரியினையும் வங்கி விவரங்களையும் கீழே கொடுத்துள்ளேன்.
அன்னை பராசக்தி தமிழ் அன்பர்களைத் தூண்டிவிட்டு ஞானாலயா வின் மீது கடைக்கண் காட்டி அருள்வாள் என்பதை அறிவேன்.
உதவிக் கரம் நீட்ட விரும்புவோர் தொடர்பு கொள்ள:
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140
வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
Branch Code: 000112.

Series Navigationவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
author

மலர்மன்னன்

Similar Posts

39 Comments

 1. Avatar
  govind says:

  ம.ம உங்கள் எண்ணம் நன்றே. இதற்கு உறுதுணையாக அந்த தம்பதியர், தங்களது நூலகம், படைப்பு காத்தல் பணிகள், அங்குள்ள சஞ்சிகைகள் பற்றி ஒரு ஆவணப்படம், – இருக்கும் கேமிராவை வைத்தே – எடுத்து யூ டியூப் மூலம் போட்டு பின் அனைத்து முக்கிய இணைய சஞ்சிகைகள் மூலம் மக்களை தொடர்பு கொள்ளலாம். பணம் பெறும் முன், திட்ட வடிவு விவரங்கள் என்ற விவரங்களையும் வைத்தல் நலம். புதுக்கோட்டை என்பதால், சுவாமிநாதன் அவரக்ளையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்…

 2. Avatar
  மலர்மன்னன் says:

  நல்ல யோசனை. அவஃர்களுக்குத் தெரிவிக்கிறேன். நன்றி.
  மலர்மன்னன்

 3. Avatar
  மலர்மன்னன் says:

  நன்றி, ஸ்ரீ மதுரகவி. இன்று உலகம் முழுவதும் தமது மொழி, பண்பாடு, கலைகள் முதலானவை மீது அக்கரையுள்ள தமிழர்கள் விரவியிருக்கிறார்கள். அவற்றின் பாதுகாப்புக்குத் தங்களால் இயன்ற கடமையை ஆற்ற வேண்டும் என்கிற துடிப்பும் அவர்களுக்கு இருக்கிறது. ஞானாலயா அவையனைத்துக்கும் ஒரு சரணாலயம் போல இருப்பதால் அதன் மீது எங்கும் உள்ள தமிழர்களின் பரிவான பார்வை பட வேண்டும் என விரும்பினேன். ஞானாலயா கிருஷ்ண மூர்த்தியின் அனுமதி பெற்ற பிறகே இந்த வேண்டுகோள் குறிப்பை சர்வ தேச அரங்கான திண்ணை டாட் காமில் எழுதினேன். வெளியிட்ட திண்ணைக்கு மிக்க நன்றி.
  ஞானாலயாவில் நான் இருக்கையில் அதனைத் தொடர்ந்து நடத்துவதில் தம்பதியருக்கு உள்ள சிரமங்களை நேரில் கண்டேன். எனினும் அவர்கள் சலிப்பின்றி முகம் மலர வரும் ஆய்வாளர்களுக்கெல்லாம் தேவையான நூல்கள், இதழ்கள் குறித்தும் ஆய்வாளர் தேடும் விவரங்கள் எங்கு இருக்கும் என்றும் தகவல் தெரிவித்து உதவுவது கண்டு மனம் நெகிழ்ந்தேன்.
  ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி, டோரதி கிருஷ்ணமூர்த்தி, இருவருக்கும் வயது முதிர்ந்து வருகிறது. நமக்குப் பிறகும் இது நல்லபடியாகப் பராமரிக்கப்பட வேண்டுமே என்கிற கவலை அவர்களுக்கு வந்துவிட்டது. பொது அமைப்புகளின் பொறுப்பில் விட்டுச் சென்றால் இப்போதுபோல் அதன் செயல்பாடு சரியாக இருக்குமா என்பதில் எனக்கே சந்தேகம் உண்டு.

  அங்கு வைத்திருக்கும் விசிட்டர் புக்கை என்னிடம் காண்பித்தார்கள். பெரிய பெரிய மனிதர்கள், வசதி படைத்த, அதிகார பலம் உள்ள, சீமான் சீமாட்டிகள் எல்லாம் வந்து பலவாறான பாராட்டுகளைச் சொரிந்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். ஆனால் வெறும் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இலவே!
  ஞானாலயாவின் பராமரிப்பு குறித்தும் அதன் சேவை தொடர்ந்து கிடைத்து வரவேண்டும் என்றும் எவரும் தமது வருகைக் குறிப்பில் கவலை தெரிவித்து ஏதும் எழுதியிருப்பது எனது மூப்படைந்த கண்களுக்குத் தென்படவில்லை!
  அன்புடன்,
  மலர்மன்னன்.

 4. Avatar
  மலர்மன்னன் says:

  ஞானாலயாவை ஒரு e-research library- யாக மாற்றிப் பத்துப் பதினைந்து கணினிகளையும் அங்கு வைத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படும் விதமாகச் செய்துவிட வேண்டும் என்பதே எனது யோசனை. ஞானாலயா தம்பதியரும் இந்த யோசனையை வரவேற்கின்றனர். தொழில் நுட்ப விவரம் உள்ளவர்களும் நிதி ஆதார நிபுணர்களும் எஸ்டிமேட் போட்டுக் கொடுக்கலாம். மாதாந்திர நிர்வாகச் செலவையும் உத்தேசமாகக் குறிப்பிடலாம். மொத்தம் 90 ஆயிரம் புத்தகத் தொகுப்புகள் உள்ளன. e-library-யாகச் செய்துவிட்டால் நிறைய இடம் மிச்சமாகும். 10-15 கணினிகள் போட்டுக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் ஒரு புராஜெக்ட் ரிப்போர்ட் தயார் செய்து கொடுத்தால் இலக்கு நிர்ணயித்து நிதி திரட்டிவிடலாம். ஞானாலயா தம்பதியருக்குக் கடமைப் பட்டிருக்கிறோம் என ஒவ்வொரு தமிழனும் நினத்தாலே போதும்.
  நான் வெறும் உதவாக்கரை ஆண்டி. முதுமையும் முற்றுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் என்றால் கூடத் தெருவில் இறங்கிக் கையேந்த ஆரம்பித்திருப்பேன். ஆகையால் பொறுப்பை மற்றவர்கள் ஏற்க வேண்டும், ஏற்பார்கள்.

 5. Avatar
  punai peyaril says:

  இந்த இணைய உலகில் எல்லோரும் தனித் தனியாக செயல்பட தேவையில்லை.. இ லைப்ரேரி என்று முடிவு செய்து விட்டால் 10 / 15 கணணிகள் தேவையில்லை.. பத்ரி சேஷாத்ரி போன்ற பதிவாளர்களை நீங்கள் தொடர்பு கொண்டு வழி கண்டுபிடிக்கலாம். அவர்களின் நோக்கம் சேவையென்றால், அந்த புத்தக பத்திரிக்கைகளை டிஜிடைஸ் செய்யும் முறை கண்டு பின் ஒரு இணைய தளம் மூலம் வெளி வரச் செய்யலாம். செய்திகள் விரல் நுனி தேடிச் செல்லும் காலம் இது….. பாதங்கள் தேடியலைந்த காலம் போயாச்சு…. பத்ரிசேஷாத்ரிக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள்…

 6. Avatar
  மலர்மன்னன் says:

  //இ லைப்ரேரி என்று முடிவு செய்து விட்டால் 10 / 15 கணணிகள் தேவையில்லை..punai peyaril //
  இன்று அருகில் உள்ள ஆய்வாளர்கள் பலர் ஞானாலயாவுக்கும் வந்து நீண்ட பொழுது தங்கி பல்வேறு நூல்களையும் இதழ்களையும் ஆராய விரும்புவதால்தான் அங்கு10/15 கணினிகள் வைக்கலாம் என்று சொன்னேன். அது ஒரு ரம்மியமான சூழல். சோர்வே தட்டாத சூழல். அதன் பயனை ஆய்வாளர்கள் பெற வேண்டும். மேலும் தகவல் களஞ்சியமாக விளங்கும் தம்பதியரின் ஆலோசனைகளூம் பெறலாம். ஞானாலயா தனது இப்போதுள்ள இருப்பிலேயே நீடித்து இ-லைப்ரரியாக விளங்குவது ஆயாவாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். தற்சமயம் நான் உடல் நலம் குன்றி வாய் பேசவும் இயலாத நிலையில் உள்ளேன். ஸ்ரீ பத்ரி கேட்டுக் கொண்டபடி வருகிற ஜூன் மாதம் ஒரு நூல் எழுதிக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டுள்ளேன். உங்கள் யோசனையை சிறிது உடல் நிலை தேறியதும் அவரிடம் தெரிவிக்கிறேன்.
  என்னுடன் எவ்வித அறிமுகம் இல்லாத போதும் என் கருத்துக்கு மதிப்பளித்து யோசனை அளிக்கின்றமைக்கு எனது
  நன்றி.
  அன்புடன்,

 7. Avatar
  Kavya says:

  இஃதொரு பொதுநலத்தொண்டென நினைக்கிறேன். அதிலும், தமிழ் மொழி வழிவரும் தொண்டு. தமிழர் அனைவருக்கும் போய்ச்சேரவேண்டிய கோரிக்கையை இப்படி “அன்னை பராசக்தி தமிழ் அன்பர்களைத் தூண்டிவிட்டு ஞானாலயா வின் மீது கடைக்கண் காட்டி அருள்வாள் என்பதை அறிவேன்” என்றெழுதி கேட்டால் தமிழ்க்கிருத்துவர், தமிழ இசுலாமியர்கள், எப்படி முன் வருவார்கள்? அவர்களும் தமிழர்கள்தானே ? எதை எங்கு எப்படிச்சொல்ல வேண்டுமோ அதை அங்கு சொன்னால் போதும்.

 8. Avatar
  ஆர். சத்தியபாமா says:

  ”எதை எங்கு எப்படிச்சொல்ல வேண்டுமோ அதை அங்கு சொன்னால் போதும்.” ?????

  யார், எதை எப்படிச் சொல்லவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிற இவரின் சட்டாம்பிள்ளைத் தனத்தைப் பார்க்கிறபோது இவர்களின் எண்ணிக்கை மட்டும் சிறிது கூடிவிட்டால் எப்படியெல்லாம் ஆட்டம் போடுவார்களோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது. கேரளத்தில் இதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? கட்டுரையை எழுதியவர் தனது இஷ்ட தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு விட்டதாலேயே தமிழ்க் கிறிஸ்தவர், தமிழ் முகமதியரின் தமிழ் உணர்வு மறைந்துவிடும் என்றால் அவர்களின் தமிழ் உணர்வு எவ்வளவு பலவீனமானது, எவ்வளவு சத்தியமானது, அவர்களின் சகிப்புத் தன்மையும் எத்தகையது என்று சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
  -ஆர். சத்தியபமா

 9. Avatar
  virutcham says:

  //தற்சமயம் நான் உடல் நலம் குன்றி வாய் பேசவும் இயலாத நிலையில் உள்ளேன்.//

  உங்கள் உடல் நலன் கூடிய விரைவில் முன்னேறவும், உங்கள் பணிகள் முன் போல் தொடரவும் என் பிரார்த்தனைகள்.

 10. Avatar
  Kavya says:

  தமிழ், தமிழ் மொழியின் தொல் இலக்கியம், இவைகளுக்குச் சொந்தக்காரர்கள் தமிழ் இந்துக்கள் மட்டுமல்ல. ஒவ்வொரும் தமிழ் இசுலாமியன் ஒவ்வொரு தமிழ்க்கிருத்துவன் இவர்களின் முன்னோர்களும் ஒவ்வொரு தமிழ் இந்துவின் முன்னோர்களும் வெவ்வேறானவர்கள் அல்ல. சங்கப்புலவர்கள் காலத்தில் இவ்விரு மதங்களிமில்லை. ச‌ங்க‌ப்புல‌வ‌ர்க‌ளின் குருதி தொட‌ர்புடையோர் இவ்விரும‌த‌த்தின‌ரிட‌ம் க‌ண்டிப்பாக‌ இருப்பார்க‌ள்.

  ஒரு நூலகம் இங்கே பழன்சுவடிகளையும் நூலகளையும் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. அது பாழ்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அவ்வேண்டுகோள் அனைத்துத்தமிழர்களையும் நோக்கி விடப்படவேண்டும்.

  இஷட தெய்வத்தை இழுத்து வருவது பண்பட்ட எழுத்தாளருக்கு அழகன்று.. ஏனெனில் அஃது இந்துக்களல்லாத் தமிழர்களை விலக்கி வைத்துவிடும். நீங்கள் கோயிலில் பூஜை செய்து கொண்டு அங்கேயே இருந்து கொண்டு நன்கொடையை இங்கு வந்து தாரீர் என்பதற்குச் ச்மமாகும். த‌மிழ்மீது ப‌ற்றிருன்தால் கோயிலில் உள்ளே வா என்ப‌து அடாவ‌டித்த‌ன‌மான‌ பேச்சாகும். ம‌க்க‌ளின் உண‌ர்வுக‌ள் ம‌திக்க‌ப்ப‌ட‌வேண்டும்.

  எதை எங்கு எப்ப‌டிச் சொல்ல‌வேண்டுமென‌ப்த‌ன் பொருள் இங்கு செகுல‌ர் ம‌ன‌ப்பாங்கு வெளிக்காட்ட்ப‌ட‌வேண்டுமென்ப‌தே. எவ‌ருக்கு எப்ப‌டி எழுத‌வேண்டுமென்ப‌த‌ற்கான‌ அறிவுரை அன்று.

 11. Avatar
  punai peyaril says:

  மலர்மன்னன் தான் வணங்கும் கடவுள் பெயரை மென்மையாக சொல்லி, மேன்மையான விஷயத்திற்குத் தானே உதவி கேட்கிறார். அவர் ஒன்றும் கடவுள் பெயரை காட்டுக் கத்தல் கத்தி, விமானங்களை மக்களுடன் மோதவில்லையே… ஏன், நம்ம தைரியசாலி காவ்யா, அது மாதிரி மனிதர்களிடம் கடவுள் பெயர் சொல்லி கொடுஞ்செயல் புரியாதீர்கள் என்று சொல்லலாமே…? செகுலர் மனப்பாங்கு என்பது தற்போது இந்தியாவில் காணப்படும் ஒரு போலித்தன மனபிறழ் நோய்க்கான வார்த்தை….

  1. Avatar
   Kavya says:

   மென்மையாக மனத்தில் சொல்லிக்கொள்ளலாம்.
   இடிந்தகரை அமலோற்ப மாதாவின் தேவாலயத்து வளாகத்தில் ஏன் போராட்டம்? அப்போராட்டத்தில் தூத்துக்குடி பாதிரியா ஐயான் அம்புரோஸ் ஏன்? ஏன் கத்தோலிக்க பாதிர்கள் அங்கே?

   என்ற கேள்விகளோடு நிற்காமல் அம்புரோஸைக் கைது செய்? என்ற் கோரிக்கையை போலிசு ஏற்றுப்ப்பாதிரிகளைச் செயிலில் போட்டது. BJP and Hindu Munnai demanded that. மலர்மன்னன் ஆஸ்தான எழுத்தாளராக இருக்கும் தமிழ்ஹிந்து காம் கட்டுரை மேல் கட்டுரையாகப்போட்டு , கிருத்துவ மதப்பரப்புரைக்காக‌ இப்போராட்டத்தை ஒரு கருவியாகப்பயனபடுத்துகிறார்கள். ஒரு பொதுத்தொண்டு என்றால் அங்கே மதம் எதற்கு? என்ற கேள்வியை முன்வைத்தது. அக்கட்டுரைகளைக்காரசாரமாக ஆதரித்து பின்னூட்டமிட்டவர்கள் திண்ணையில் கன ஜோராக எழுதிவருகிறார்கள். அவரகளுள் மலர்மன்னனும் ஒருவர்.

   எனவே அவர்கள் கூற்றுப்படி, அல்லது மலர்மன்னன் ஆதரவின்படி, ஒரு பொதுத்தொண்டில் மதச்சார்பு இருக்ககூடாது. இருப்பின் அம்மதப்பரப்புரையே பொதுத்தொண்டன்று.

   எல்லாருக்கும் கடவுள் பக்தி உண்டு. அவரவர் மனத்தில் எவருக்கும் தெரியாமல் இறைவனை வேண்டலாம். அனைத்து மதத்தினர் கூடிய இடத்தில் அப்படித்தான் செய்ய வேண்டும்.

   இஷ்ட தெய்வத்தை மெனமையாகச் சொல்லவில்லை இவர். எழுத்தில் வடித்து, அனைவர் மேலேயும் அம்மனின் அருள் வந்து தூண்டப்பட்டு, அதன் பின்னர் அத்தூண்டல் உதவியாக மாறட்டும் எனப்பொருளிலேயே அவர் இறைவணக்க‌ம் வெளிப்படுகிறது.

   1. Avatar
    punai peyaril says:

    காவ்யா , உங்களை விட பல்லாயிரம் கோடி தரம் அதிகமுள்ள கணித மேதை ஹார்டி, ராமானுஜர் அம்பாள் எனக்கு தந்த கொடையே கணித விடை என்ற போது, லூசுத்தனமாக பேசவில்லை. ஆழ்மனத்தின் அமானுஷ்ய சக்தி இந்த புவியோடு பிண்ணி பிணைந்தது. பெட்ரோல் இல்லாவிட்டாலும் பணம் இல்லாவிட்டாலும் இந்த பூமி சிறந்து விளங்கும் ஆன்மீக பூமி. இங்கு ஹாலிடே போல் வந்து சென்றவர்கள் பலர். ஜீஸஸாக அவதாரம் கொண்டவரும் உண்டு. பணம் காக்க, கடவுளே இல்லை என்று சொல்லி விட்டு ஊர் முழுக்க குடும்ப கட் அவுட் வைக்கும் மன்னர்கள் இல்லா பூமி இது. இறைவனுக்கே உருவமில்லையெனும் போது மன்னர்கள் மட்டும் தங்கள் உருவத்தை கட் அவுட் வைப்பது ஏன்…?

 12. Avatar
  punai peyaril says:

  மலர்மன்னன் ஓய்வெடுங்கள்… உங்களின் உன்னத உண்மையான கருத்துக்கள் கருவாய் பலரின் மனதில் இருக்கிறது… அது உருவாகி, உத்வேக உணர்ச்சியுடன் உயர் சிந்தனையுடன் இந்த புவி காக்கும்… நாமார்க்கும் குடியல்லோம் என்பது ஏற்று , வந்தேறிகளின் எதேச்சிகார எண்ணங்களை களையெடுக்கும். நீங்கள் வீரிய விதைகளை ஊன்றியுள்ளீர்கள்… நலம் பெற வேண்டும் நீ என்றே நாளும் எங்கள் நெஞ்சில் நினைவுண்டு… அன்னை சரஸ்வதி காப்பாள்…

 13. Avatar
  paandiyan says:

  ஹிந்துக்கள் அல்லாதவர்கள் வந்து உங்களிடம் புலம்பினார்கள என்ன ?? உங்களுக்கு எதற்கு இந்த கீழ்த்தரமான மலிவான இழிவான புத்தி காவ்யா . தனிப்பட்ட முறையில் உங்கள் தாக்குதல் அணைத்து மலர்மன்னன் கட்டுரையிலும் தொடர்கின்றது . முஸ்லிம் நண்பர்களும் கிறிஸ்துவர்களும் உங்களை பார்த்து ஸ்ரிபார்கள ஒழிய வேறு கண்ணோட்டத்தில் எடுத்து கொள்ளமாட்டார்கள் . இந்த மதமோதல்க்கு அவர்களை அவர்களில் ஒரு சிலரை விடுங்கள் உங்களை போல புல்லுருவி கூட்டம் போதும் பற்றவைக்க . உங்கள் படுகேவலமான என்னத்தை மாற்றமுடியாது ச்சீ.. என்ன ஒரு கேவலமான சிந்தனை

  1. Avatar
   Kavya says:

   தமிழ்க்கிருத்துவர்களையும் தமிழிசுலாமியர்களையும் சேர்க்காமல் எந்தவொரு பொது விடயமுமில்லையென்பது கேவலமான சிந்தனையா ? Your value system is topsy turvy.

   1. Avatar
    paandiyan says:

    அதை அவர்களில் ஒருவர் சொல்லட்டும் பராசக்தி என்று இருப்பதால் நாங்கள் உதவி பண்ண மாட்டோம் என்று.

    1. Avatar
     Kavya says:

     அவர்கள் சொல்லவேண்டிய தேவையில்லை. பொது நலத்தில் அக்கறையுள்ளவர் எவர் சொன்னாலும் போதும். இப்போது ஒரு முசுலீம் முன் வந்துள்ளார். என் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை.

     1. Avatar
      ஆர். சத்தியபாமா says:

      //இப்போது ஒரு முசுலீம் முன் வந்துள்ளார். என் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை//???
      மலர்மன்னன் அவர்கள் பராசக்தி என்று குறிப்பிட்டுவிட்டதாலேயே கிருத்தவரையும் இஸ்லாமியரையும் விலக்கிவைப்பதாகிவிடும் என்று முன்பு சகிப்புத்தன்மை சிறிதுமின்றி எழுதி அவர்களை மறைமுகமாக ஒதுக்கிவிட முயன்ற இதே நபர்தான் இப்போது இப்படி தான் எதிர்பார்த்தது பொய்யாகவில்லை என்று பல்டி அடிக்கிறார்! சபையில் ஒரு விதூஷகன் இருக்க வேண்டியது அவசியம்தான். அவ்வப் போது கொஞ்சம் ரிலீஃப் கிடைக்கப் பயன்படும். ஆனால் இந்த விதூஷகர் துவேஷம் என்கிற விஷ விதையை இங்கே தூவிக் கொண்டு அல்லவா நடமாடுகிறார். விவேகமும் விசால மனமும் உள்ள நல்லவர்கள் எந்த மதத்தினராயினும் நல்ல காரியம் என்றால் துணை நிற்கத் தயங்க மாட்டார்களேயன்றி எழுதியவர் ஹிந்து சமய இறையுணர்வை வெளிப்படுத்தி விட்டார் என்பதற்காக ஒதுங்கிப் போய்விட மாட்டார்கள் என்பதைத்தான் இந்தச் சம்பவம் நிரூபணம் செய்கிறது. ஆனால் வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் துவேஷம் பரப்பிப் பிரித்து வைக்கப் பார்க்கும் இந்த நபர் இப்போது இப்படி எழுதுகிறார்! இவர் உண்மையிலேயே சரியான மனநிலையில் இருக்கிறாரா என்று சந்தேகம் வருகிறது. முன்னுக்குப்பின் முரணாக எழுதும் ஒரு நபர் ஆரோக்கியமான மனநிலையில் இருக்க முடியாது.

     2. Avatar
      punai peyaril says:

      காவ்யா வழிய வேண்டாம், சக்தியின் பெயரால் விடுக்கப்பட்ட மமவின் வேண்டுகோளில் சத்தியம் இருக்கிறதா என்று தான் அப்துல்லா பார்த்தார். ஏனென்றால் அவர் மனிதம் நிறைந்தவர். நீங்கள் அவர் ரகம் இல்லை… இதிலே உங்கள் எதிர்பார்ப்பு, பிற மதத்தினர் உதவ மாட்டார்கள் என்பதே… அது இப்போது தகர்க்கப்பட்டுள்ளது… ஒரு வேளை மீசை இல்லாததால் மண் ஒட்டியது உங்களுக்கு தெரியவில்லையோ… கட் அட் பேஸ்ட் காவ்யா எப்போதும் விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததேயில்லை.. ஒரே பீட்டிங் அரவண்ட் த புஸ்_வாணம் தான் காவ்யா… ஐயோ பாவம்….

     3. Avatar
      paandiyan says:

      ஆமாம் அவர் உங்களை போல கேவலமனான இழிவான மலிவான புத்தி உள்ளாவர் இல்லை ஆகையால் தான் பராசக்தி என்று இருகின்றத என்று எல்லாம் உதவி புரிகின்றார். ஹிந்துகளில் ஆள்காட்டி யாரு என்று அவர்களுக்கு மிக நன்றாக தெரியும்

     4. Avatar
      Kavya says:

      இழிவு, கேவலம் என்று எத்தனை அவச்சொற்களை அள்ளிவீசினாலும், பொதுநலத்தொண்டில் மதத்திற்கிடமில்லை என்ற கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

      செகுலரிசம் 100க்கு 100 கடைபிடிக்கப்படவேண்டுமென இந்துத்தவாவினர்தான் எழுதியும் பேசியும் போராடியும் வருகின்றனர்.

      போனவாரம் தினமலரின் வந்த செய்தி: திருச்சி மண்டல இரயில்வே துணை மேலாளர் ஒருவர் இசுலாமியர். அவர் திருச்சி ஜங்ஷனில் உள்ள தர்காவின் விழாவிற்கு வந்தார். அவருக்கு எதிராக இந்துத்வாவினர் அணிவகுத்து கோஷமெழுப்பினர் அப்படி பொது இடத்தை அவர் மதத்தினருக்குக் கொடுக்கக் கூடாதென்று. திருச்சி ஜங்கஷனின் ரயில்வே நிலத்தில் முன்னால் மறைந்த இசுலாமியபெரியாரொருவருக்கு ஒரு சமாதியெழுப்பினர் ரயில்வே ஊழியர்கள். அது இன்று பிரபலமடைய, மிகவும் பிரபலமாகிவிடுமோவென நினைத்து அப்போராட்டம் நடைபெற்றது.

      இதே இந்துத்வாவினர், தமிழ் நாட்டில் பலவிடங்களில் பொதுச்சொத்தில் எழுப்பப்பட்டு பிரப‌லமான பிள்ளையார், அம்மன் கோயில்களை எதிர்த்து எந்த போராட்டமும் நடாத்தவில்லை. மதுரை ரயில்வே ஜங்ஷன் முகப்பில் இருக்கும் இரு கோயில்களை ரயில்வே போர்டர்கள் கட்டியிருக்கிறார்கள். ஆண்டுவிழாக்களும் நடைபெறுகின்றன. அதற்கு இரயில்வே அதிகாரிகளும் வருகிறார்கள். எந்த இசுலாமிய அமைப்போ, கிருத்துவ அமைப்போ எதிர்க்கவில்லை. அவ‌ர்க‌ளில் பெருன்த‌ன்மையைத்தான் காட்டுகிற‌து. நாகர்கோயில் மின்வாரிய அலுவலகத்தினுள்ளேயே பிரமாண்டமான பிள்ளையார் கோயில் கட்டப்பட்டிருப்பதை எதிர்த்து ஒரு இந்து வக்கீல்தான் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்போட்டிருக்கிறார். எந்த இசுலாமியரும் கிருத்துவருமில்லை.

      அவர்கள் வாளாவிருக்கிறார்கள் எனப்தை பயனபடுத்தி எங்கும் பொதுச்சொத்தில் கோயில்கள் கட்டுவதை பிறராவது எதிர்க்கத்தான் செய்யவேண்டும். அவர்களே ஒன்றும் செய்யவில்லை. நீயேன் செய்கிறாய் எனபதுதான் கேவலமான இழிவான சிந்தனையாகும்.

      ம‌ல‌ர்மன்ன‌ன் ஒரு இன்துத்வாவின‌ர். இசுலாமிய‌ருக்கும் கிருத்துவ‌ருக்கும் எதிரான‌ க‌ட்டுரைக‌ளை த‌மிழ்ஹின்து காமில் எழுதிவ‌ருப‌வ‌ர். ம‌ண்டைக்காட்டுக்க‌ல‌வ‌ரத்தின் போது போலீசாரால் கும‌ரி மாவ‌ட்டத்துக்குள் நுழையாம‌ல் த‌டுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்றெல்லாம‌ தெரின்தும் அவ‌ரால் எழுப்ப‌ப்ப‌டும் பொதுக்கோரிக்கைக்கு இசுலாமிய‌ர் உத‌விக்கு வ‌ருகிறாரென்றால் அஃது அவ‌ரின் பெருன்த‌ன‌மையைத்தான் காட்டுகிற‌து. இப்படிப்பட்ட கட்டுரைகளில் ஒருவர் தன் கடவுளைப்பற்றி எழுதுவது பக்தியென்று சொல்லமுடியாது. அது ஒரு சுய விளம்பரமே.
      நானும் இப்பின்னூட்டத்தைத் தாராளமாக நா
      ன் வணங்கும் தெய்வத்தைச் சொல்லி முடிக்கலாமே இப்படி: திருமலை வாசா சரணம் என்று? செய்ய மாட்டேன். ஏன் அந்த வாசனுக்கே பிடிக்காது.

 14. Avatar
  sathyanandhan says:

  On 22.4.12 I could visit Ganalaya. I would call Mrs. Torathi and Mr.Krishnamurthy are the model couple for many reasons.They have collected books for over 4 decades and the library has almost all collections for research in tamil literature. besides they have harry potter to jeyamohan or jeyankanthan. they are in their 70s. Inter religious marriage in their time itself proves their clear and forward thinking. Both of them are model for rising above caste and religion. Besides for any retired person they are the best example to do social work. the library is really very big. they have constructed this in the same compound using all their pension benefits. Any lover of literature, books and writer by profession must go to Gnanayala. I donated a very small amount. Still if a number of us join them it will give them moral support and a small amount. They have spent their money, time, property and devoted their life itself. I solute them. I thank Mr. Malarmannan. Sathyanandhan

 15. Avatar
  மலர்மன்னன் says:

  It is very kind of you, Sri Sthaynandan. Let your tribe multiply, is my prayer.
  Thank you.
  MALARMANNAN

 16. Avatar
  krishnamoorthy says:

  உங்களுடைய கட்டுரை வெளிவருவதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் புதுக்கோட்டை திரு எம் எம் அப்துல்லா அவர்களிடம் ஞானலையா பற்றி, அதில் உள்ள சேகரங்களை மின்னாக்கம் செய்வதற்கு அவருடைய உதவியை வேண்டித் தொலைபேசியில் தகவல் தெரிவித்திருந்தேன். திரு.அப்துல்லா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முன்னாள் மாணவர் எனவும் பேசும்போது தெரிய வந்தது.இரண்டு வாரங்களுக்கு முன் திரு அப்துல்லா, தான் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த ஒரு இடத்தில் ஞானாலயா குறித்து மறுபடி நினைவு படுத்தி இருந்தேன்.திரு.அப்துல்லா திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார். ஒருவலைப்பதிவராகவும், தன்னால் முடிந்த உதவிகளை செய்கிற பண்புடனும் நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்பட்டிருப்பதால் அவரிடம் கிட்டத்தட்ட, இந்தக்கட்டுரையில் உள்ள விஷயங்களைப் பேசியிருந்தேன்.
  Krishna Moorthy S Apr 12, 2012
  வாழ்த்துக்கள் அப்துல்லா! ஞானாலயா குறித்து நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

  புதுகை அப்துல்லாApr 12, 2012
  ki.mu.ayya – avasiyam seikiren.

  https://plus.google.com/u/0/114506267296836375841/posts/D7w1zNsVRDT

  இதுதவிர, தமிழ் மரபு அறக்கட்டளையின் முனைவர் திரு நா.கண்ணனிடமும், திரு அப்துல்லாவிடமும் உங்கள் கட்டுரைக்கு சுட்டி கொடுத்து, மின்னாக்கப்பணியில் உதவ முடியுமா எனக்கேட்டு நேற்று மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளை/மின்தமிழ் கூகிள் வலைக்குழுமத்தில் ஏற்கெனெவே இந்த மின்னாக்கப் பணியை செய்து வருபவர்கள், சமீப காலத்தில் தஞ்சைப் பல்கலைக் கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டு, தாழ்மிழ்நாடு முழுவதும் சுற்றியலைந்து ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டெடுத்து ஒப்படைத்த அனுபவமும் இந்தக் குழுமத்துக்கு இருக்கிறது.

  இந்தப்பணிக்கு நிதியை விட, வேலைகளை ஆர்வத்துடன் தாமே முன்வந்து செய்து கொடுக்கும் ஆர்வலர்கள் பங்கு தான் முக்கியம்.

  சில ஸ்கேனர்கள், சில கணினிகள் இவை ஆரம்ப நிலையில் போதுமானவை. புத்தகங்கள், சஞ்சிகைகளை ஒவ்வொரு பக்கமாக மின்வருடி, கணினியில் ஜேபிஜி வடிவில் சேமித்துக் கொண்டு பின் அதைப் புத்தகமாகத் தொகுப்பதற்கு, சில ஆர்வலர்கள் தொடர்ந்து தங்கள் நேரத்தை ஒதுக்க ஏற்பாடு செய்தால், சில மாதங்களில் இந்தப்பணியை முடித்து விடலாம். அப்படி மின்னாக்கம் செயப்பட்ட பக்கங்களை, காப்புரிமை நடப்பில் உள்ளவை எவை, காப்புரிமை காலத்தைக் கடந்தவை/நாட்டுடமையாக்கப்பட்டவை எவை என்று பிரித்து, ஒரு வலைத்தளம் உருவாக்கி அதில் வலையேற்றம் செய்து வைத்தால், எங்கிருந்து வேண்டுமானாலும் பயானாளர்கள் பார்த்துப் படித்துப் பயன் பெற முடியும். இதே கோப்புக்களை, ஒரு செர்வர், சில நோடுகள் வித்துகள் கொண்டு,ஞானாலயா தம்பதியினர் இப்போதுள்ள இடத்திலேயே, பயன் படுத்துகிறவர்களுக்குக் கணினியில் அதைப் படிக்கக் கொடுக்க முடியும். பராமரிப்புச் செலவும் குறைவு, அதையும் பயன்படுத்துகிறவர்களிடமிருந்தே கூட பெறவும் முடியும். .

  நிதி அவசியம் தான்! அதைவிடப் புத்தகங்களின் அருமையை உணர்ந்து அதைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் புயன்படுகிற மாதிரி, மின்னாக்கப்பணியில் ஈடுபடத தயாராக இருக்கும் தன்னார்வத் தொண்டர்கள் குறிப்பாகப் புதுக்கோட்டையில் வேண்டும். அதற்காகத் தான் திரு அப்துல்லா மாதிரி, உள்ளூர் பிரமுகர்களிடம் உதவியை வேண்டியது. மின்தமிழ் நா. கண்ணன் போன்றவர்கள் மின்னாக்கம் எப்படி செய்வது என்பதை, தன்னார்வத் தொண்டர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகள் நடத்திச் சொல்லித் தர முடியும்.

  இருவரிடமிருந்தும் எனக்கு பதில் கிடைத்ததும்,மறுபடியும் தொடர்பு கொள்கிறேன்.

 17. Avatar
  மலர்மன்னன் says:

  மிக்க நன்றி ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அவர்களே. கட்டுரையில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் முகவரி, தொலைபேசி எண்கள் எல்லாம் கொடுத்திருக்கிறேன். தாங்கள் அன்பு கூர்ந்து இத்தகவல்களை தொலைபேசியிலோ முடிந்தால் நேரிலோ தெரிவித்தால் ஞானாலயா தம்பதியர் புத்துணர்வும் புதிய உத்வேகமும் அடைவார்கள். தகவல் தொழில் நுட்பம், கணினி பயன்பாடு ஆகியவை குறித்து அவர்கள் அதிகம் அறிய மாட்டார்கள். உதவியாளர் மூலமாகத்தான் கணினியைப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் தயவு செய்து இவ்விவரங்களை அவர்களுக்குச் சிறிது விவரமாக விளக்கிச் சொன்னால் மிகவும் உபகாரமாக இருக்கும்.
  அன்புடன்,
  மலர்மன்னன்

 18. Avatar
  krishnamoorthy says:

  அன்புள்ள திரு மலர் மன்னன்!

  நேற்றுக் காலையில் ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமும், மாலையில் திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தியுடனும் கொஞ்சம் விரிவாகவே பேசிக்கொண்டிருந்தேன். தமிழ்மரபு அறக்கட்டளை/மின்தமிழ் கூகிள் வலைக் குழுமங்களை நடத்தி வரும் முனைவர் திரு.நா.கண்ணன், மின்னாக்கப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தித் தரவும், தொழில்நுட்ப ஆலோசனைகளைத் தரவும் இசைந்து பதில் அனுப்பியிருக்கிறார்.

  புதுக்கோட்டை திரு.எம் எம் அப்துல்லா தொழில் நுட்ப விஷயங்களில் தனக்கு அதிகப் பரிச்சயமில்லை, ஆனால் நிதி திரட்டுவதில் தன்னுடைய முழுமையான பங்களிப்பை செய்வதாகத் தெரிவித்திருக்கிறார். திமுகவின் பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் இந்த இளைஞருக்கு, கட்சியைத் தாண்டியும் ஒரு வலைப்பதிவராகவும், நல்ல மனிதராகவும் நிறைய நண்பர்கள் வட்டம் இருக்கிறது.இந்த வாரக்கடைசியில் புதுக்கோட்டை செல்லவிருப்பதாகவும் ஞானாலயா தம்பதியினரை நேரில் சந்தித்து, அடுத்து செய்ய வேண்டியதென்ன என்பதைக் குறித்துப் பேசுவதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்.

  எப்படித் துவங்கலாம் என்பதில் திரு நா.கண்ணனும், நானும் சில யோசனைகளை திரு அப்துல்லாவிடமும், ஞானாலயா தம்பதியினரிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

  திருவருள் கைகூட்டுக.

 19. Avatar
  punai peyaril says:

  கண்ணனுக்கு, கிருஷ்ணனும், அப்துல்லாவிற்கு அல்லாவும் அருள் புரியட்டும்… நன்றி கிருஷ்ணா…

 20. Avatar
  மலர்மன்னன் says:

  மிக்க நன்றி. இன்றைய அவசர உலகில் இவ்வாறான பொது நலப் பணிகளில் மிகுந்த அக்கரை எடுத்து ஊக்கத்துடன் செயல்படும் தங்களுக்கு என் வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
  கனிமொழியை எனக்குத் தெரியும். அவர் ஞானாலாயாவுக்கு வந்து பாராட்டிச் சென்றதும் உண்டு. அவரை அணுக இயலுமாவென்று அப்துல்லா அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கனிமொழிக்கு இம்மாதிரியான விஷயங்களில் ஆர்வம் உண்டு. ஆனால் நான் தலையிடுவதால் பயன் விளையுமா என்று சந்தேகமாக உள்ளது.
  அன்புடன்,
  மலர்மன்னன்

 21. Avatar
  punai peyaril says:

  மலர்மன்னன் உங்களின் இந்த பணி அருமையானது. முடியும் என்று +வாக நினைத்தால் நடக்கும் என்று இந்த வயதிலும் நிரூபித்த உங்களுக்கும் , துணை நின்ற பிறருக்கும் என் தலை வணங்கிய வணக்கங்கள்.

 22. Avatar
  krishnamoorthy says:

  மலர்மன்னன் ஐயா!

  தமிழக அரசியல்வாதிகள் மீது கொஞ்சம் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறதே! :-) திரு அப்துல்லாவிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கிறேன்.

  கனிமொழி அல்லது வேறெந்த அரசியல்வாதியும் இந்த விஷயத்தில் முழு அக்கறை எடுத்துச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை,மயக்கம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை! கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு விரிவான செய்திக்கதையாக ஒளிபரப்பியதே ஆகப் பெரிய விஷயம்!ஞானலயாவின் பணிகளைக் குறித்து வேறு சில தொலைகாட்சி செய்திகளும், ஊடகங்களில் அவ்வப்போது அவரைக்குறித்த சில செய்திகளும் வெளியானதுண்டு. ஆனாலும், அதன் தாக்கம் சிறிது கூட, பார்த்தவர்களிடம் இருந்ததாகச் சொல்ல முடியுமா?

  இவர்களை விட, புத்தகங்களை நேசிக்கிற, அதைப்பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் தான், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இந்த விஷயத்தில் இன்னும் அதிகமாகக் களம் இறங்க முடியும். பழைய அரிய செய்திகளை, நம்முடைய கடந்தகாலம் எப்படி இருந்தது என்று நமக்குச் சொல்கிற புத்தகங்களைப் பாதுகாப்பதற்கு மின்னாக்கம் செய்வது ஒன்று தான் சரியான வழி. அப்படிச் செய்து முடித்து விட்டால் மூல நூல்களைப் பத்திரமாக, பூச்சி பொட்டுகள் அரிப்பதை விட, நம்முடைய அலட்சியம் கவனக்குறைவினால் அழிந்து விடாமல் பாதுகாப்பதும் சாத்தியம்.முதலில் இப்படி ஒரு பொக்கிஷம் இருப்பதையும், அதைப்பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் பரவலாக நண்பர்களிடம் எடுத்துச் செல்வதை திரு அப்துல்லா உள்ளிட்டு நானும் சில நண்பர்களும் செய்து கொண்டிருக்கிறோம்.

  https://plus.google.com/u/0/114506267296836375841/posts/1SFk8jNZpFj
  இந்த வேலையை எப்படி படிப்படியாக, ஒவ்வொரு கட்டமாக முன்னகர்த்திச் செல்வது என்பது குறித்த சில யோசனைகளை, மின்தமிழ் முனைவர் நா.கண்ணன், புதுக்கோட்டை திரு எம் எம் அப்துல்லா, ஞானாலயா தம்பதியினரிடம் தெரிவித்திருக்கிறேன். எத்தனை பெரிய கட்டடமாக இருந்தாலும் கூட ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்துத்தான் கட்டப்படுகிறது என்பது அனுபவம் இல்லையா! முதற் செங்கல் எடுத்து வைத்தாகிவிட்டது.

 23. Avatar
  மலர்மன்னன் says:

  //தமிழக அரசியல்வாதிகள் மீது கொஞ்சம் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறதே! :-) .
  -krishnamoorthy//
  நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.
  அதீதமா, இன்றைய அரசியல்வாதிகளிடம் எனக்குச் சிறிதளவும் நம்பிக்கை இல்லைதான். ஆனாலும் கனிமொழி அரசியல்வாதி ஆகும்வரை சிறிது வித்தியாசமானவராக இருந்ததால் சபலம் தட்டியது. இலக்கியம் தொடர்பானவற்றில் அவருக்கு ஆர்வம் நீடிக்கும் என்றே கருதியதால் அவ்வாறு எழுதினேன். தாங்கள் அப்துல்லா அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதால் எனக்குக் கனிமொழியின் நினைவு வந்தது. நிச்சயமாகத் தங்களுடைய சீரிய முயற்சியால் முதல் செங்கல் எடுத்து வைத்தாகி விட்டது. மேலும் தங்களது தொடர் முயற்சிகளால் மாளிகை மளமளவென எழும்பிவிடும் என்பதையும் உணர்ந்துள்ளேன். நேற்று இரவு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியும் இன்று காலை டோரதி கிருஷ்ணமூர்த்தியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். உங்களை வெகுவாகப் பாராட்டினார்கள். நீங்கள் காட்டிவரும் ஈடுபாடு அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை யும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. மிக்க நன்றி.
  அன்புடன்,
  மலர்மன்னன்

 24. Avatar
  krishnamoorthy says:

  திரு.அப்துல்லா உட்பட சுமார் பதினைந்து நபர்கள், கூகிள் ப்ளஸ்சில் ஞானாலயாவுக்கு உதவி கோரும் செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பகிர்ந்து கொண்டவர்களுக்கே முதலில், ஞானலயாவைப் பற்றி முழுவிவரங்களும் தெரிந்திருக்காது.இவர்களுக்கு முதலில் சில அடிப்படை விவரங்களை, அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லியாக வேண்டும். அது ஒருபுறம் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் நடந்து கொண்டிருக்கிறது.

  பல்வேறு குழுக்களில், வலைப்பதிவர் வட்டாரங்களில் நன்கு பரிச்சயம் உள்ள திரு ஐயப்பன் கிருஷ்ணன், மூன்று வலைக் குழுமங்கள், அப்புறம் சில இணைய இதழ்களில் ஞானாலயாவுக்கு உதவி கோரி ஒரு வேண்டுகோளை ஒரு செய்தி கட்டுரையாகவும் எழுதி வெளியிட இசைந்திருக்கிறார்.

  ஆக, இப்படி ஒரு அமைப்பு, அதன் பணி, அதைப் பாதுகாக்கவேண்டிய அவசியம் என்று ஒரு தகவல் பரவலாகக் கொண்டுபோய் சேர்க்கப் பட்டிருக்கிறது.

  உங்களுடைய கட்டுரை ஆரம்பித்து வைத்த ஒரு கோரிக்கை இப்போது சுமார் பத்தாயிரம் இணைய நண்பர்களை அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் சென்றடைந்திருக்கிறது. இதில், உடனடியாக இந்த வேண்டுகோளை ஏற்று எத்தனை பேர் நிதி உதவி அனுப்பி வைத்திருப்பார்கள் என்பதை ஊகிப்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை. அநேகமாக ஒன்று அல்லது இரண்டைக் கூடத் தொட்டிருக்காது!

  புதுக்கோட்டையில் மின்னாக்கப் பணிகளில் எடுபட சில தன்னார்வலர்களைக் கண்டறிந்தாக வேண்டிய வேலை இன்னமும் அப்படியே இருக்கிறது.

  1959 முதல் தொடர்ந்து ஒரு புத்தக சேகரம் என்னென்ன பரிமாணங்களில் இன்றைக்கு உருவெடுத்திருக்கிறது, அதன் முக்கியத்துவம் என்ன, அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை இன்னமும் விரிவாகப் பேசிப் புரிய வைக்க வேண்டிய வேலை பாக்கியிருக்கிறது.புரிந்து கொள்கிறவர்களிடம் இருந்து நிச்சயமாக உதவிக்கரங்கள் நீளும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

  இந்தப் புத்தக சேகரத்தின் அரிய தன்மை என்ன என்பதைக் கொஞ்சம் நீங்களும் எழுதி வாருங்கள் ஐயா!

 25. Avatar
  மலர்மன்னன் says:

  நன்றி, ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அவர்களே. தற்சமயம் உடல்நிலை சரியில்லை. முக்கியமாக மூன்று புத்தகங்கள் எழுத ஒப்புக் கொண்டு எல்லாம் அரைகுறையாக நிற்கிறது. இதற்கிடையில் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிடத் திட்டமிட்டுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தர் (சென்னையில் முதல் முதலில் மடத்தை ஸ்தாபித்து நிர்வகித்தவர், சுவாமி விவேகானந்தரின் சகா, பரமஹம்ஸரின் நேரடி சீடர்) பற்றிய நூலில் சுமார் 32 பக்கங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து நான் எழுதியாக வேண்டும் என்று சொல்கிறார்கள். வருகிற திங்கட் கிழமை நேரில் சென்று தவணை கேட்கலாம் என்றிருக்கிறேன். முன் சொன்ன மூன்று புத்தகங்களுக்குமே கெடு வருகிற ஜூன் மாதம்! முதலில் ஒப்புக்கொண்ட கிழக்குப் பதிப்பகத்திற்காவது கொடுத்த வாக்கை நிறைவேற்ற விரும்புகிறேன். எல்லாம் நிறையப் படித்தும் குறிப்புகள் எடுத்தும் எழுத வேண்டிய சமாசாரம். தங்களின் மின்னல் வேகப் பணியைக் கண்டு பிரமிப்பாக இருக்கிறது. தங்களின் எழுத்தாற்றலும் விவரங்களை எடுத்துக் கூறும் திறனும் மிகச் சிறப்பாகத் தொழில் நுட்ப விவரங்களையும் சேர்த்து விளக்கும் தன்மையும் அற்புதமாக உள்ளன. இந்த விஷயத்தில் என்னைக் காட்டிலும் பன் மடங்கு மேலாகப் புரியும் விதமாகவும் எவரும் ஏற்கும் விதமாகவும் விஷயத்தைச் சொல்லக் கூடியவராகத் தாங்கள் இருக்கிறீர்கள். ஆகவே அன்பு கூர்ந்து தாங்களே விரிவாக எழுதுங்கள். நானும் எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன். தற்போது தாங்கள் தெரிவித்துள்ள விவரங்களை ஞானாலயாவுக்கும் தயவுசெய்து தெரிவியுங்கள். அவர்களுக்கு நாம்தான் திண்ணையில் பின்னூட்டங்களைப் பாருங்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களின் நேரடியான கணினி உபயோகமும் இண்டர் நெட்டில் தளங்களைப் பார்வையிடுவதும் மிகவும் அரிதாகவே உள்ளது.
  அன்புடன்,
  மலர்மன்னன்

 26. Avatar
  punai peyaril says:

  மம விற்கு இந்த சமயத்தில் நாம் நன்றி காட்டியாக வேண்டும். “கட் அண்ட் பேஸ்ட் காவ்யா” மாதிரி வெறும் இன துவேஷம், பெரியோரை கேவலமாக பேசுவது, வயதுற்றோரை துன்புறுத்துவது ( பாவம் காவ்யாவின் பெற்றோர், என்ன பாடு படுத்தப் போகிறாரோ ), தவறான பிதற்றல் செய்வது ( மாணவர்கள் பரிதாபம் ) என்றில்லாமல் இந்த சமூகத்திற்கு ஒரு பெரிய அறிவுக் கொடை கிடைக்க, மம விருட்சக விதையொன்றை அடையாளம் காட்டியுள்ளார். மம உங்கள் உடல் நலத்திற்கு உதவி தேவையா என்று சொன்னால் உதவி செய்ய ஆசை. மேலும், உங்களின் படைப்புகள் , பிரயோஜனமான வடிவு கண்டது மகிழ்ச்சியே. யாதுமாகி நிற்கும் காளி , தன் கரத்தால் உங்களை அணைத்து அன்னையாய் காப்பாள்…

 27. Avatar
  krishnamoorthy says:

  திரு மலர் மன்னன் ஐயா!

  இந்தக்கட்டுரையில், வங்கி விவரத்தில் ஒரு முக்கியமான விடுபட்ட பகுதியை சேர்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

  IFS CODE: UCBA0000112

  இது உங்கள் கட்டுரையின் கடைசி வரியான Branch Code : 000112 என்றிருக்கும் இடத்தில் வரவேண்டும். இது இருந்தால், இணையத்தின் வழியாகவே நன்கொடைகளை வெறும் ஆறே ரூபாய் செலவில் NEFT இல் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் அனுப்பி வைக்க முடியும்.அனுப்பிவிட்டு, gnanalayapdk@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் சொன்னால் போதும்.

 28. Avatar
  மலர்மன்னன் says:

  // இந்தக்கட்டுரையில், வங்கி விவரத்தில் ஒரு முக்கியமான விடுபட்ட பகுதியை சேர்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
  IFS CODE: UCBA0000112 //
  தகவலுக்கு நன்றி. ஆனால் இது இனி என் கையில் இல்லை. திண்னை ஆசிரியர் குழு அன்பு கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன். அல்லது அறிவிப்பு பகுதியில் தனியாக ஒரு சிறு தகவலாய் எழுதுகிறேன்.
  அன்புடன்,
  மலர்மன்னன்

 29. Avatar
  மலர்மன்னன் says:

  //மம உங்கள் உடல் நலத்திற்கு உதவி தேவையா என்று சொன்னால் உதவி செய்ய ஆசை – punai peyaril//
  ஏதோ ஒரு மனநிலையில் எனது உடல் நலம் பற்றி பகிரங்கப் படுத்திவிட்டேன். அப்படித் தெரிவித்திருக்கக் கூடாதுதான். தங்களுடைய பிரதிபலன் எதிர்பாராத நல்லெண்ணமும் அன்புமே எனக்குப் பேருதவிதான். அதற்கு ஈடிணை எதுவுமில்லை. யாதுமாகி நிற்கும் காளி அன்னையாய் என்னை அரவணைத்துக் காப்பாள் என்றுதான் கூறிவிட்டீர்களே, அப்புறம் என்ன? மிக்க நன்றி.
  அன்புடன்,
  மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *