தடயம்

This entry is part 4 of 28 in the series 3 ஜூன் 2012

 

 

மழை ஈரத்தில்

பூமி பதிந்துகொண்ட

பாத அடையாளங்கள் போல

எல்லா நினைவுகளும்

காலத்தில் தேங்கி நிற்கவில்லை.

 

ஜெட் உமிழ்ந்துவிட்டுச் சென்ற

உறைந்த வெள்ளைப் புகை

உருவாக்கின ஒற்றையடிப்பாதையை

சூரியன் உருகிக்

கரைத்துவிடுவதுபோல

 

என் வாழ்க்கை வனாந்தரத்தின்

ப்ரத்யேக ஸ்வரங்களைத்

தொடுத்து விடுமுன்னர்

கலைத்துவிடுகிறது காலம்.

 

கர்ப்ப வாசம் தேடி

இப்போது அலையும் மனமும்

விட்டுச் செல்லவில்லை

எந்தச் சுவட்டையும்.

 

 

—  ரமணி

Series Navigationதங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..

3 Comments

  1. Avatar ganesan

    After a long gap Ramani shoot up a kavithai “தடயம்” விட்டுச் செல்லவில்லை

    எந்தச் சுவட்டையும்
    விட்டுச் சென்றது..
    உமது கதைகள் கவிதைகள்
    உமது காலத்தின் தடயம்…
    hats off!

    கவிதைகள்

  2. Avatar R Krishnan

    Sprinkled with a tinge of sadness; exposes the ever longing innate tendency of sub-conscious mind! Makes a lasing impact. Keep jotting down.

  3. Avatar Mano

    time leaves nothing to remain for ever in this Universe except a few. So thadayam is also likely to be erased in course of time.

    However, the undercurrent of emotions embedded can be there in the subconscious mind as indicated by Mr.Krishnan.

    Keep moving Ramani.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *