இதுவேறு நந்தன் கதா..

This entry is part 14 of 41 in the series 10 ஜூன் 2012

தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas))) திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்த போது அந்த புருனோவாக நடித்தப் பையனின் முகமும் அந்த யூதர் பையனின் முகமும் இப்போதும் மனசில் நிற்கிறது.

அந்தக் கதையை அத்துடன் விட்டுவிட முடியவில்லை. கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் அறிந்த பாடத்திட்டங்களில் இடம் பெறாத எத்தனையோவரலாற்று நிகழ்வுகளை அறிந்துக் கொள்ளும் ஒரு தேடலில் ஹோலோகொஸ்ட் என்ற சொல்லை அந்தச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும்

பயங்கரமான அதிர்ச்சி தரும் உண்மைகளை மனித இன வரலாற்றில் நடந்த மிக மோசமான வன்முறையை அறிந்து கொண்டேன்.

நான் பார்த்திருந்த மேற்கண்ட திரைப்படத்தில் புருனோ ஒரு இராணுவ அதிகாரியின் மகன். யூதர்களை அடைத்து வைக்கும் ஒரு கேம்ப்

அந்த இடத்திற்கு பணிமாற்றலாகி வரும் குடும்பம். புருனோவுக்கு வந்த இடத்தில் விளையாட அவனை ஒத்த நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

தனியாக விளையாடும் அவன் ஒரு நாள் யூதர்களின் முகாம் எல்லைவரை

வந்துவிடுவான். அவன் விளையாடும் பந்து அந்த எல்லையிம் முள்வேலியைத்

தாண்டி விழும். முகாமில் இருக்கும் அவனைப் போல இன்னொரு யூதர் சிறுவன் அந்தப் பந்தை எடுத்துக் கொடுப்பான். சிநேகம் வளர்க்கும் புன்னகையைப் பரிமாறிக் கொள்வார்கள். நட்பு வளரும். யூதர்களின் முகாமில்

நடக்கும் எந்த ஒரு செயலும் புருனோவுக்குத் தெரியாது. நண்பன் சொல்ல சொல்ல ஆச்சரியத்தில் விரியும் அவன் விழிகள். அதைப் பார்க்கும் ஆர்வத்தில்

ஒரு நாள் முள்வேலி தாண்டி அந்த நண்பனின் அகதிகள் பைஜாமாவை அணிந்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் ஹோலோகொஸ்ட் ஆர்டர் வரும்.

முகாமில் இருக்கும் அனைவரும் வரிசையாக நடப்பார்கள். ஒரிடத்தில் அடைக்கப்படுவார்கள். அப்போதுதான் வீட்டில் ப்ருனோவைக் காணவில்லை என்று அவன் தாய் தேடுவாள். தன் கணவன் , இராணுவ அதிகாரியுடன் சேர்ந்து தேடும்போது முள்வெளி தாண்டி அவன் சென்றிருக்கும் அடையாளம் தெரியவரும். முகாமிலோ ஹோலோகொஸ்ட் ஆர்டர் … அதிகாரி ஓடிப் போவதற்குள் எல்லாம் முடிந்திருக்கும். ஆம் கூட்டமாக அனைவரும் ஓரிடத்தில் அடைக்கப்பட்டு விஷவாயு செலுத்தி பஸ்பமாக்கப்பட்டிருப்பார்கள்.

இதுதான் அந்தக் கதை. மனித உயிர்களை இப்படி கொன்று குவித்த நிகழ்வுக்குப் பெயர்தான் ஹோலொகொஸ்ட்.

இந்த ஹோலோகொஸ்ட் கொடூரத்தைக் கண்டு பிடித்த சர்வாதிகாரி இட்லர்.

யூதர்களை இப்படித்தான் அவன் கூட்டம் கூட்டமாக, பெண்கள், குழந்தைகள் என்று எல்லோருமாக சேர்த்து கொன்று குவித்தான்.

1933 முத. 1945 வரை நாசிகளின் ஆட்சியில் நடந்த மனித இன வரலாற்றின் கொடூரம் இது. சற்றொப்ப 11 மில்லியன் மக்களை இப்படிக் கொன்றிருப்பதாக

வரலாரு பதிவு செய்திருக்கிறது. இதில் 6 மில்லியன் யூதர்கள். 1.1 மில்லியன்

குழந்தைகள்.

ஹோலோகொஸ்ட் என்பது கிரேக்கச் சொல். அதன் பொருள் தீயில் பலியிடல், sacrifice by fire.

நாசிப்படை ஆட்சியில் 01 ஏப்ரல் 1933ல் யூதர்களின் வியாபாரத் தளங்களைப் புறக்கணிக்கும் திட்டத்தில்தான் முதலில் ஆரம்பித்தது.

1935ல் யூதர்களுக்கு அரசு உத்தியோகத்தில் இடமில்லை என்றார்கள்.

அதன் பின் பொதுப்பணித்துறையில் இருந்த யூதர்களை பணி நீக்கம்

செய்தார்கள். யூத மருத்துவர்கள் யூதர் இனத்து நோயாளிகளுக்கு மட்டுமே

வைத்தியம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்கள்.

யூதர்களின் கடைகளை அடித்து உடை என்று அரசாணைப் பிறப்பித்தார்கள்.

1939ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த உடன், டேவிட் மஞ்சள் நிற நட்சத்திர அடையாளத்தை தங்கள் ஆடைகளில் வெளியில் தெரியும் படி

அணிந்திருக்க வேண்டும் என்று ஆணையிட்டார்கள்.

போரில் சிறைப்பிடித்த அரசியல் கைதிகளையும் யூதர்களையும் அடைத்து வைக்க விதம் விதமான முகாம்கள் அமைத்தார்கள். கடினமான வேலைகளைச் செய்வதற்கும் சிறைப்படிக்கப்பட்ட மருத்துவர்களும் விஞ்ஞானிகளும்

முகாமிலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளையே தங்கள் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் எலிகளாக்கினார்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். மனிதக்கொல்லி மருந்துகளை இந்த முகாம்களில்

கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

கூட்டம் கூட்டமாக சிறைப்பிடித்தவர்களை புகைவண்டியில் ஏற்றி பல்வேறு முகாம்களுக்கு கொண்டு சென்று தங்கள் வேலைகளைச் செய்ய வைத்தார்கள்.

இந்த முகாம்களில் கதவுகளே இல்லாத கழிவறையும் குளியலறையும். அதைவிடக் கொடுமை தணணீரே இல்லாத கழிவறை.

ஆடைகளைக் களையச் சொல்லி வரிசையாக நிறுத்தி வைக்கும் கொடுமை.

நிர்வாணமாகவே அடைத்து வைக்கும் கொட்டிலாக இருந்த முகாம்கள்.

குளிப்பதற்காக நிர்வாணமான கூட்டத்தில் தண்ணீருக்குப் பதில் விஷவாயுவைத் திறந்துவிட்டு மூச்சுத்திணற வைத்துக் கொன்ற பரிதாபம்.

ஹோலோகொஸ்ட்க்கு என்றே அமைக்கப்பட்ட கைதிகளின் முகாம்கள்.

ஜெர்மனியில் தோழி தேவா ஹெராள்டுடன் 2006, அக்டோபரில் ஒரு கருக்கல் பொழுதில் நடந்து கொண்டிருந்தேன். தோழி தேவா கேட்டார்… உங்களுக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை உண்டா, பயமா? என்று. ” பயமா, எனக்கா…

ந்நோ… ” என்று சொல்லிக்கொண்டே அந்த நீண்ட பாதையைக் கடக்கும்போது

சொன்னார்,… இந்த இடத்தில் தான் ஆயிரக்கணக்கான யூதர்களை உலகப்போரின் போது கொன்றார்கள் என்று. அந்தக் குளிரில் கை நடுங்கியது

கோட் பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு நடப்பது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது என்று விளக்கெண்ணெய்த்தனமாக ஒரு ஜோக் அடித்துக் கொண்டே நடந்த நினைவு. அப்போதும் சரி, இப்போதும் சரி…

அது பயமா, இல்லை குளிரில் வந்த நடுக்கமா… புரியவில்லை.

ஹோலோகொஸ்ட் பற்றிய உண்மைக்கதைகள் பல்லாயிரம். புதினங்கள் நிறைய உண்டு. புகழ்பெற்ற திரைப்படங்கள் 100க்கு மேலானவை ஹோலோகொஸ்ட் பற்றி வெளிவந்திருக்கின்றன. இந்த முகாமிலிருந்து

உலகப்போர் முடிந்தவுடன், இட்லரின் முடிவுக்குப் பின் விடுவிக்கப்பட்டவர்கள்,

அவர்களின் மன உளைச்சல், வீட்டுக்குத் திரும்பியப்பின் யாருமே உயிர்ப்பிழைத்திருக்கவில்லை என்பதை உணரும் தருணம், அதையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தவர்கள் சிலர். தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர். அதிர்ச்சியில் மாண்டவர்கள் பலர்.

வரலாற்றில் இது வேறு நந்தன்களின் கதை.

Series Navigationதிருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வைபாரதி
author

புதிய மாதவி

Similar Posts

3 Comments

  1. Avatar
    Ramesh says:

    ஒரு கம்பேரசனுக்கு ஒரு கமான் சென்ஸ் வேண்டாம்.

    ரஸ்ய புரட்சியிலும் இதுபோல நிறைய நடந்திருக்கு. என்ன ஹிட்லர் கொஞ்சம் மாஸ் ஆளு.. கொஞ்சம் கிரியேட்டிவும் கூட.. தேசம், தேசபிமானம பற்றி பேசின எல்லா தலைகளும் இதுமாதிரி முன்ன பின்ன செய்யறது வழக்கம் தானே..

    ஏராளமான பிராமணர்களை வெட்டி வீழ்த்தி குருகுலத்தையே அழிக்க நினைத்த மொகல் அரச பரம்பரையும் தோண்டினா இதுமாதிரி வரலாறு உண்டு.

    அம்புட்டு ஏன், இலங்கைல கூட சகோதர யுத்தம் என்கிற பேரிலும், நாட்டை காப்பத்தினேங்கிற பேரிலும் இரண்டு டீமு நாட்டு சாதாரண மக்கள் மேல அடிச்ச லூட்டி மனிதாபிமானமா அப்படின்ன என்னன்னு கேட்குற மாதிரி பண்ணிட்டாங்க.. இதையும் யாராவது கொஞ்ச நாள்ள படமா எடுப்பாங்க

    தலைப்புக்கும், கட்டுரைக்கும் சம்பந்தமில்லாமல் ஓன்று. ஏதாவது ஒன்றை எழுதிட்டு, கடைசில நந்தன், சமூக நீதின்னு எழுதிர வேண்டியது. நிறைய மஞ்சப் பத்திரிக்கை கதைகள்ள நடுல ஏதேதோ எழுதிட்டு கடைசி பக்கத்துல அவங்க லாரில அடிபட்டு சாவங்ககிற மாதிரி, கடைசி சீனில போலிஸ் மாதிரி, என்னதான் சாப்பாட்டாலும் ஒரு தயிர் சாதம் சாப்பிட்டாதான் சாப்பிட்ட மாதிரி இருக்குன்னு சொல்ற மாதிரி..எந்த தேசம் போனாலும் தயிர் சாதம் தேடற மாதிரி

    சிலபேருக்கு கறுப்பு மட்டும் தான் கண்ணுல படும் போலயிருக்கும். கண்றாவி!!

  2. Avatar
    paandiyan says:

    நந்தன் கதையின் அடிப்படை ஒரு வரலாற்றுச் செய்தி. செவிவழியாகப் பரவியது. இத இணையத்தளத்தில் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்
    – என்று ஒரு கட்டுரை உள்ளது . சம்பந்தம் இல்லாமல் ஒரு மெசேஜ் — கட்டுரை முதலில் அல்லது முடிவில் போட்டால் ஒரு பெரிய இலக்கிய ஜம்பாவன் என்று ஒரு எண்ணம வந்துவிடும் போல !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *