தொங்கும் கைகள்

This entry is part 9 of 43 in the series 17 ஜூன் 2012

தலையை உடைத்து கொண்டிருந்த பிரச்சனை, தலை மேல் ஆடிக் கொண்டிருந்த கத்தி. கிருஸ்ணன் போல தேரை அழுத்தி தலையையும், தலைப்பாகையும் சேர்த்தே காப்பாற்றினாள் மிஸ். எலிசா கில்பெர்ட்.

அப்போது எலிசாவை அப்படியே பின்புறமாய் சென்று முத்தமிட்டு அழுத்தி ` என்ன சூப்பர் சொல்யூசன், கிளாசிக் ப்ரெசெண்டேசன் ` என்று சொல்லியவாறே அழுத்தி கட்டி கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

எலிசா – எங்கள் நிறுவனம் அவுட் சோர்ச் செய்திருந்த நிறுவனத்தின் ஒரு பார்ட்னர். தேவைக்கு அதிகமாக பேசுபவள். தன் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தடவிப் பார்த்தபின்பு தான் மூன்று கால் என்று சொல்பவள். அதை வெறும் ஒரு வரியில் சொல்லாமல் முயலின் சரித்திரம், தன் சரித்திரம், தன் தடவல் சரித்திரம் என்று சேர்த்து கட்டி முக்கால் மணி நேரம் சொல்வது எங்கள் நிறுவனத்தில் ஒரு வேடிக்கை பொருள்.

எலிசாவிற்கு வயது நாற்பது பக்கமிருக்கலாம். முழு இளமை கடந்து, ஒரு முதிர் இளமை எட்டிப் பார்க்கும் பருவம். ஆரவாரமில்லாத ஓப்பனைகள். நல்ல உயரம். உயரத்திற்கேற்ப உடல்வாகு. மார்பிலிருந்து இடுப்பு வரைக்கும் அதிகமாய் நீண்டு கிடப்பதான உடல்வாகு. கொஞ்சம் பூசிய உடம்பு. லேசாய் தளர்ச்சி காட்டும் மார்புகள். பெருத்த பின்புறங்கள். உட்காரும்போது இரண்டு மூன்று டயர் வாங்கும் வயிற்றுப் பகுதி என நிற்கும் எலிசாவை அழுத்தி, அணைத்து முத்தமிட்டு முடிந்தால் அவளிடம் புணர கேட்க வேண்டும் என தோன்றியது.

டின்னரின் போது கை கொடுத்து கொடுக்கிற மெல்லிய கார்பெரேட் அணைப்பிற்கு பிறகு கேட்கலாம், அவள் உடலாலோ, பாலிஸ் பூசிய வார்த்தையாலோ. மறுக்கலாம். செல்லமாய் திட்டலாம். உடன் படவும் செய்யலாம். போனால் போகிறது என பாதி கொடுக்கலாம். கோபித்து கொஞ்சம் கெட்ட வார்த்தையும் கொடுக்கலாம். அதற்கு மேல் எதுவும் செய்ய மாட்டாள்.

.` உனது பேச்சினால் நீ காப்பாற்றியது எங்களின் பெரிய விதையை ` என்று சொல்ல மேலும் புரிந்து கொள்ளலாம். எனது மகிழ்ச்சியின் உடல் வெளிப்பாடு என்று சொன்னால் இன்னும் புரிந்து கொள்ளலாம். நான் கேட்பது வெறும் உடல் சார்ந்ததல்ல என்று புரிந்து கொள்வாள்.
எவ்வளவு சந்தோசமாய் இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்வாள்.

அந்த முக்கியமான  வாடிக்கையாளருக்கு மென் பொருள் தயாரித்து கொடுக்க வேண்டிய ஒரு அபாயகரமான புள்ளியில் தேங்கியிருந்த்து. இன்று நிறுவனத்தின் முதன்மை இயக்குநரிடம் சந்திப்பு. எங்களது புராஜக்ட் நடு முச்சந்தியில் நின்று கொண்டிருந்த்து. பின்னாலும், முன்னாலும் போக முடியாமல். எங்கு போக வேண்டும் எனத் தெரியாமலும் நின்று கொண்டிருந்த்து. நாங்கள் போகும் திசையிலேயே புராஜக்ட் போக வேண்டும் என்று பேசி அந்த நிறுவனத்தின் உயர் மட்ட குழுவிடம் சம்மதம் வாங்க வேண்டிய தருணம்.

அந்த நிறுவனத்தில் எங்களோடு வேலை செய்துகொண்டிருந்த அந்த நிறுவனத்து தொழில்நுட்ப பூசாரிகள் நாங்கள் சொல்லியதை மறுத்துக் கொண்டிருக்க, அவர்களை மீறி அந்த இயக்குநரிடமே அநுமதி வாங்கி வேண்டும். அந்த வேளையில் எலிசா பூனைக்கு மணி கட்டினாள்.

எதற்கெடுத்தாலும்  நீண்ட விளக்கம், கூறியதை திருப்பக் கூறல், அதற்கு நீண்ட விளக்கம், அதே சொற்றொடர்களை கொண்ட வார்த்தை பிரயோகம் என நீளும் அவளின் உரையாடல் மறுபடி கேட்பவரை ஓடச் செய்யும். காரியத்தில் கெட்டி என்பதால் அவளின் பிரசங்கத்தை காதுள்ளவர்கள் கேட்க கடவது என்பது போல நாங்கள் எல்லோரும் கேட்க வேண்டியதாயிருந்தது.

ஆனால் முதல் முறை கேட்பவர்களுக்கு அந்த பேச்சின் ஆணித்தரம் அசைய வைக்கும். அன்று அப்படித்தான் ஆகிற்று. கொடுத்த எல்லா தீர்வுகளிலும் நொள்ளும், நொட்டையும் கண்டுபிடித்து கொண்டிருந்த அந்த எம்டிக்கு எலிசாவின் நீண்ட விளக்கம், ஆணித்தரம், பயமின்றி பேசும் அடித்து சொல்லும் பாங்கு எல்லாம் கேட்டு இளகியிருக்க வேண்டும்.

அப்படியே செய்க ! என்று சொல்லியபடி எழுந்து போன போதுதான் எங்களுக்கு பெரும் மூச்சு வந்தது. தலை தலையாட்டிவிட்டது. இனிமேல், வாலை நாமெல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று எங்களது குழுவிற்கு கொஞ்சம் மூச்சு வந்தது. இது தாண்ட வேண்டிய பாலம். தாண்டியாகி விட்டது. நாங்கள் நினைத்தது போலவே, எங்கள் நிறுவன வசதிக்கு உட்பட்டது போலவே தாண்டியாகி விட்டது.

எலிசா மட்டும் அப்படி பேசியிருக்கவில்லையெனில் நாங்கள் திரிசங்காய் நின்று கொண்டிருந்திருப்போம். புராஜக்ட் பாதி வழியிலே மங்களம் பாடியிருக்கும். இதுவரை செய்த செலவுக்கும், வந்த வரவுக்கும் இடைப்பட்ட தூரம் ரொம்ப பெரிசு. எங்கள் குழுவில் சிலருக்கு வேலை போகலாம்.

என் வேலை போகாதெனினும் ஒரு கருப்பு புள்ளியாய் மாறிவிடும். மேலும் இது பெரிய நிறுவனத்தின் சின்ன நுழைவாயில் வாய்ப்பு. இந்த துருப்பு சீட்டை பயன்படுத்தி மற்ற பெருந் தலை நிறுவனங்களின் அடியில் நெருப்பு வைக்க வேண்டும்.

இந்த பயமே எங்களை அதிகம் பேச விடாமல் ஆமாம் ஐயா, சரி ஐயா என்று தலையாட்ட வைத்திருக்கலாம். எலிசாவிற்கு அதெல்லாம் அதிகம் தெரியாது. அவளுக்கு தெரிந்தது கணிப்பொறி கோடும், அவளின் வேலைக்குட்பட்ட விவரங்களும், தனது பக்க சார்பு சிரித்தபடியே சொல்லும் மிக நீண்ட விவாதமும் தான்.

எப்படியோ தலை சுத்தி, வால் சுத்தி, பேசிப்பேசி எங்களை பாலம் தாண்ட வைத்துவிட்டாள். அநுமார் காரியமது. ராமனுக்கு அநுமனை கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதோ என்னவோ, எனக்கு தோன்றியது.

அவளை பின்னால் போய் அழுத்தி கட்டிக்கொண்டு, முத்தம் கொடுத்து, மகிழ்ச்சி பகிர்ந்து, நன்றி சொல்லி முயக்கத்திற்கு அவளுக்கு விருப்பமிருந்தால் விண்ணப்பிக்க வேண்டும்.

*
அந்த காலை எப்போதும் போல காலையாகத்தான் இருந்தது. இரவு முடியுமின் அது அப்படியில்லை.

லேப் டாப் பேக்கை எடுத்துக் கொண்டு போர்வலியில் வண்டியில் ஏறுவதற்குள் உயிர் போகிவிடுகிறது. என்னமா கணக்கிறது,  பொணக் கணம்.
எலிசாவின் தோள் பட்டைகள் வலித்தன. ஓவ்வொரு ஸ்டேசன் வரும் போதும் அதை தோள் மாற்றிக் கொள்வது அவளுக்கு பிடித்தமான விளையாட்டு. அப்படியான விளையாட்டின் போது வலி குறைகிறது. ஓவ்வொரு முறையும் லேப் டாப் தடவிக் கொடுத்து கொள்வதில் ஒருவிதமான சுகம் உண்டு.

சில விசயங்களை தடவிக் கொண்டு தீவிரமான யோசிப்பிலே அல்லது யோசிப்பற்ற தளத்திற்கு போவதோ ரொம்பவே பிடித்தமான விசயம்.

தனது வீடியோ கோச்சை சுற்றிப் பார்த்தாள். பெரும்பாலும் அதே சக பயணிகள். மாலினி – சின்ன பெண்- துறுதுறுப்பானவள். இரண்டு மாதங்களில் கல்யாணமாகி அமெரிக்கா போகப் போகிறாள். அதற்கு வாகாய் ஜீம் சென்று உடற் பயிற்சி செய்து கொண்டிருக்கிறாள். சில வாரங்களில் அவளது மேல் மார்பு எடுப்பாய் இருப்பது போல தோன்றியது. கல்யாண அழகும் கூட இன்னும் அழகாவாள் என்று எலிசா நினைத்துக் கொண்டாள். புது புதுசான அண்டர் கார்மெண்டுகள் எங்கு வாங்குவது என்ன செளகரியம் என்று அவளிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. தன்னை விட பதினைந்து வயது சின்னவளிடம் ஒரு தோழி போல பேசுவதில் தன் வயதும் குறைவதாக உணர்வாள். பெரும்பாலும் பேச்சு காலை நேர பயணத்தின் போது மட்டுமே இருக்கும். மாலை பாட்டு அல்லது நாவலில் முழ்கி விடுவாள் மாலு. இன்று சின்னதான ரெட் கலர் டீசர்ட், கீழ் பக்கம் இறுகிப் போன டைட் ஜீன்ஸ். அவள் எலிசைவை பார்த்த போது வாக் மேனில் பாட்டுக் கேட்டபடி சத்தம் எழுப்பாது ஹாய் சொன்னாள்.

பிந்தி ஸா தூங்கி கொண்டே வந்தாள். ரயிலில் ஏறியவுடன் எங்கிருந்து தான் அவளுக்கு அந்த தூக்கம் வருமோ ? சனிக்கிழமை பாதி நாளில் அலுவலகம் விட்டு வரும்போது மட்டுமே அவள் தூங்காது வருவது இயல்பானது. மற்ற நாட்களில் காலையும், மாலையும் ஏறியவுடன் தூக்கம், ஒரு ஸ்டேசனுக்கு முன்பு விழிப்பு, எங்காவது சிக்னலில் நின்றால் விழித்து பார்த்து மறுபடி தூக்கம் என்று பிந்தி ஸாவின் தூக்க ஓழுங்கு அந்த சக பயணிகளின் சிரிப்பு பொருள். பிந்திக்கு அதெல்லாம் கவலையில்லை. முழித்திருந்தால் தானே கவலைப்படுவதற்கு ?  முழித்து கிடக்கிற அந்த சனிக்கிழமையில் மற்ற பயணிகள் `மிஸ்டர் ஸா நேற்று என்ன செய்தார் உன்னை ` என்று கேட்டு துளைப்பார்கள்.
`காலை தூக்கம் சரி, ஏன் மாலை வேளையும் தூங்குகிறாள் ~ என்று கேட்பாள் அநுராதா ஐயர். அந்த கேள்விக்கு கம்பார்ட்மெண்டே சிரிக்கும்.
` என்ன ப்ரெண்ட், ஆபிசிலும் ஏதாவது டபிள் டியூட்டி உண்டா.. ~ என்று சிரித்தபடியே ப்ரியா மேத்தா கண்ணடித்தபடியே சிரிப்பாள்.
இதே பொருள். இதே கேலி. வேறுவேறு வார்த்தைகளில் சலிப்பதேயில்லை.

மின்சார ரயில் வெளிக்குளிரை உள்ளே தெளித்தபடி போய்க்கொண்டேயிருந்தது. எலிசா லேப்டாப்பை தோள் மாற்றிக்கொண்டாள். கூட்டம் சரியானபின், கதவுக்கு பக்கத்திலிருக்கிற சாய்மானத்தில், காலுக்கு கீழே வைத்துக்கொண்டாள். அடுத்த நிலையம் அவள் இருக்கும்  பக்கத்தில் வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகலாம். மெல்லியதாய் கண்ணை மூடிக்கொண்டாள். தொங்கும் வளையங்களை பிடித்த கைகளை இறுக்கியபடியே தூங்கப் பிரயத்தனப்பட்டாள்.

*
மெல்லிய வெளி அரங்கம். அங்கிருந்து பார்க்க கடல் தெரிந்த்து. அதிலிருந்து வந்து போகிற் அலை சத்தம் மெல்லியதாகவும், காற்றின் குளிர் பலமானதாகவும் இருந்த்து. ஏதோ ஒரு லோக்கல் பார்ட்டி சின்னதாய் இசை நிரப்பிக்கொண்டிருந்த்து.
நான் எலிசாவிற்கு பக்கத்தில் கோப்பையோடு உட்கார்ந்தேன். அவளிடமும் கோப்பை இருந்த்து. சின்னதான மேற்கித்திய இசை கீற்றை அவள் கூர்ந்து கவனித்து ரசித்துக்கொண்டிருந்தாள்.
சின்னதாய் எனது கோப்பையோடு சியர்ஸ் முத்தமிட்டு மறுபடி இசைக்குள் புகுந்து கொண்டாள். காற்று தாண்டி மெல்லியதாய் எனக்குள் சூடு.
வெள்ளை சட்டை. தளர்த்தி விடப்பட்ட அல்லது ஏறத்தாழ முழுவதும் கழற்றப்பட்ட கோட். அது அசல்ட்டாக இருந்த்து. கருப்பு பேண்ட். ஹீல்ஸ் அவிழ்ந்த கால்கள் ஓன்றின் மீது ஓன்று மெல்ல தடவிக்கொண்டபடி இசைக்கேற்றபடி அசைந்து கொடுத்துக்கொண்டிருந்தன.
ஒரு பாட்டு முடிந்த்து போல. என்னை நோக்கி முழுவதுமாய் திரும்பினாள். இசை நிரம்பிய மனதால் சந்தோசமான கண்கள். மெல்லியதாய் என்னை நோக்கி குனிந்தபடியே ;ஹோய்’ சொன்னாள்.
காலையில் செய்ய நினைத்த்தை மறுபடி செய்ய மனசு நினைத்த்து. மனதை கலைக்க ஒரு மிடறு விழுங்கினேன். அதற்குள் யூனிபார்மோடு அந்த சர்வர் கொறிக்க ஏதோ சுமந்து வர, குச்சியால் எடுத்து ஒரு விழுங்கல். கொஞ்சம் நிதானித்த்து மனது.  ’பேசு.. பேசு.. ‘
“ யு லுக் பிரட்டி குட்.. “
“ இஸ் இட்.. ஹோப் இட்ஸ் நாட் யூவர் லாஸ்ட் ரவுண்டு.. “  மெல்லிதாய் குலுங்கிய சிரிப்பு. மார்பு குலுங்கியது என் பிரமையில்லை. ‘ அங்கே கண் போக வேண்டாம்.. கண் பார்.. ‘
“ நோ.. இட் இஸ் நாட் பார்மாலிட்டி.. இன்பாக்ட்.. ஐ எம் இன் குட் மூட் டூடே.. ‘
“ எனிதிங் ஸ்பெசல்.. “
“ ஹம்.. யூ நோ த மெஸ் இன் ப்ராஜக்ட்.. யுவர் மார்னிங் டாக் வாஸ் ஸோ குட்.. வீ பாஸ்ட் த இம்பார்ட்டண்ட் பிரிட்ஜ்.. “
“ ஜஸ்ட்.. ஐ டாக்ட் மை ஹார்ட்.. ஹோப் ஐ ஹாவ் நாட் கிராஸ்ட் மை லிமிட்.. “
“ தட் இஸ் த பாயிண்ட்.. .யூ கிராஸ்ட் லிமிட்.. அண்ட் மேட் அதர் சாப்.. இன் டு ஹிஸ்.. லிமிட்.. யெஸ்.. தட் இஸ் குருசியல் டு அஸ்.. “
“ யா.. “
“ அதர் வைஸ்.. வீ வொட்டு ஹாவ் லாஸ்ட்.. கிரேட்.. ஐ காண்ட் இவன் இமேஜின் இட்.. “
கொஞ்சம் அமைதி. இருவரும் பார்த்துக்கொண்டோம். மெல்ல விசயம் தனிப்பட்ட விசயங்களும், குடும்ப விசய்ஙகளுக்கும் தாவியது.  எலிசாவின் பெண் சமஸ்கிருதம் படிக்கிறாள். வீணை ஏற்கனவே அரங்கேற்றம் நடந்தாகிவிட்ட்து. அடுத்த வருடம் ஸ்பானிஸ் படிக்க இருக்கிறாள். அவளின் பேஸ்புக் நடவடிக்கை பயமுறுத்துவதாக சொன்னாள்.
இரண்டாம் முறை எனக்கு அவளே கோப்பை நிரப்பிக்கொண்டு வந்தாள். எனது குழு ஏற்கனவே அவர்களுக்கான பேச்சு துணைகளோடு செட்டிலாகியிருந்தனர். அந்த திரவம் ஒரு மெல்லிய நெருக்கத்தை கொண்டு வ்ந்திருந்த்து மனதளவில். இளகுவான மனது பேசுவதற்கும் கேட்பதற்கும் தயாராய் இருந்த்து. இந்த முறை கொஞ்சம் நெருக்கமாகவே உட்கார்ந்து கொள்ள முடிந்த்து.
நான் தான் வேகமாய் குடிக்கிறேன் என்று பட்ட்து. இன்னும் அவள் ஒரே கோப்பையிலே தான் இருந்தாள். எனது நடுக்கமான தொடக்கத்தை திரவம் கொஞ்சம் தள்ளிவிட்ட்து என்று தான் சொல்ல வேண்டும்.
ஏதோ ஒரு நல்ல விசயம் சொல்லிய போது கை அழுத்தினேன்.
இன்னொரு முக்கியமான விசயத்தில் அவள் தோள் அழுத்தி சொல்ல முடிந்த்து.
ஒரு ஜோக் மாதிரி ஏதோ சொல்லியபோது அவளே என் தொடையில் அடித்து, கிள்ளினாள்.
கொஞ்சம் சோகமான விசயம் நான் சொன்னபோது என் கன்னம் தட்டி ஆறுதல் படுத்த முடிந்தது.
தனது அலுவலக பார்டனரோடு சரியாகத டெர்மஸை பற்றிய உரையாடலின் போது நீளமாய் அவள் கைகளை பற்றிக் கொள்ள முடிந்தது. அந்த உரையாடலின் போக்கிற்கேற்ப மெல்லிய அழுத்தம், ஆறுதலாய் மயில் தடவல், இறுக்கி பிடித்தல், தளர்தல், மறுபடியும் மெல்லிய இறுக்கம் என்று நீளமாய் உடல் மொழியோடு அந்த உரையாடல் போயிற்று.
எல்லா கனமும் கொட்டிய எலிசாவிற்கு மனது இலகுவாய் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவள் கரங்களை மெல்ல உதடுகளால் அழுத்தியபடி சொன்னேன்.
“ ஹை.. வுமன்.. யூ மேட்.. வெண்டர் இன் மார்னிங்.. ஐ லவ் தட் சேஸன்.. இட் இஸ் அன்பர்கெட்டபிள்.. “
இன்னும் கொஞ்சம் நீளமாய் அவளது கரங்களுக்கு முத்தம் கொடுத்திருப்பேன் என்று எதிர்ப்பார்த்திருக்கலாம் போல. ஒரு மெல்லிய இன்ப சூடு அவளில் பரவுவது தெரிந்த்து. திரவம் முடிந்த அவளது கோப்பையை விடுத்து எனது கோப்பையிலிருந்து கொஞ்சம் நிறையவே மிடறு விழுங்கினாள்.
“ ஹம்.. செவன் இயர்ஸ்.. பார்ட்டனர்ஸீப்.. நாட் இவன் ஒன் டைம்.. திஸ்.. பார்ட்னர்.. டோல்ட் மீ ஒன்ஸ்.. த வே யூ ஹேவ் எக்ஸ்பிரஸ்டு.. “
நான் மெல்ல எழுந்து அவளை கார்ப்பரேட் தனமான நாசுக்கோடு மெல்ல அணைத்துக் கொண்டேன்.
“ ஐ திங்.. ஹீ இஸ்.. ஸ்லீப்பிங் பார்ட்ட்னர்.. “
இரண்டு பேரும் வெடித்து சிரித்தோம். எனக்கும் இலகுவாய் உண்ரமுடிந்த்து.
மெல்ல மெல்ல அந்த செய்தி அந்த பார்ட்டி ஹாலில் பரவ ஆரம்பித்த்து. நொறுக்குத் தீனி கொண்டு வந்த அந்த சர்வர் தான் அதை சொன்னான். மெல்ல மெல்ல செய்தி அலையாய பரவி, அறை முழுவதும் பதட்டம் தொற்றிக்கொண்ட்து. கூடவே குழப்பமும்.
” எத்தன இட்த்தில.. “
“ இப்போது வரைக்கும் மூணாம்.. “
“ இல்ல கடைசியா கேட்டப்ப ஐந்துன்னு சொன்னாங்களே. “
“ இரண்டு இட்த்தில பெயிலர் ஆகியிடுச்சு.. “
”  ஆஸ் ஹோல்ஸ்.. ஷிட்.. “
“ எங்கள்ளாமாம்.. “
“ ரயில்வே ஸ்டேசன்ல இல்லையே.. “
“ தெரியலை.. “
“ இல்ல எல்லாம் ஒரு ஒன் அவர் இல்லை இரண்டு அவர்க்குள்ள வெடிச்சுடும்.. அது தானே லாஸ்ட் டைம் பேட்டன்.. “
” சேர்மன் வரப்போறதில்லையாம்.. நாம சாப்பாட்டு ட்ரிங் முடிச்சுட்டு அப்படி கிளம்பி போகச் சொல்லி மெஜேஜ் வந்திருக்கு.. “
“ இப்ப வெளிய போகாம இருக்கிறதுதான் சேப்.. வெ:ளிய ஓரே ட்ராபிக்.. போலிஸ் செக்கப்பிருக்கும்.. “
“ இங்கயே சில லான்ல நாம தங்கிக்கலாம்னு எம்டி சொல்லியிருக்கார்.. ஸோ, நோ ரிஸ்க்.. “

தங்களது அலைபேசியில் எல்லோரையும் அழைக்க  முயற்சித்தார்கள். பெரும்பாலனவை தொடர்பு எல்லையில்லை. சில அலைபேசிகளில் தொடர்புக்கான குச்சி கொஞ்சம் கூட இல்லாமலிருந்த்து. சிலவற்றில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன.
இந்தியா எல்லாம் கை முட்டிக்குள் என்று பெருமை அடித்துகொண்ட அந்த நிறுவனத்தின் அலைபேசி வரிசை தூங்கி வழிந்த்து. அவ்வளவாய் விருப்படாத அரசாங்க அலைவரிசை தொடர்பு சரியாக இருந்த்து. அந்த அறையில் வெகுசிலரிடம் பழைய அலைபேசியில் அது இருந்த்து.
தனது மனைவி, வெளியே போன குழந்தைகள் எல்லோரையும் பற்றி நல விசாரிப்புகள் விறுவிறுப்பாக நடந்தன. தொடர்பு கொள்ளமுடியாத அலைபேசிக்கார்ர்கள் திட்டிக்கொண்டார்கள். முணகிக்கொண்டார்கள். எவரிடம் தொலைபேசி இருந்த்தோ அவர்களிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்துகொண்டே நின்றார்கள். வெகுசிலர் பக்கத்தில் ஏதாவது லேண்ட் லைன் இருக்குமா என்று தேடிப் போனார்கள்.
எனக்கு மூன்று குறுஞ்செய்தி. எல்லோருக்கும் நான் நலமே என்று பதில் அனுப்பி விட்டு எலிசாவை பார்க்க, இறுகிய முகத்தோடு பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள். பக்கத்தில் போய் பார்க்க மெல்லியதான தூக்கல் மற்றும் நடுக்கமாய் இருந்த்து.
“ ஆர் யூ நாட் ஓகே ? “
” ஆமாம்.. இந்த ஹோட்டலில் ஏதாவது ரூமிற்கு என்னை கூட்டிக்கொண்டு போய்விடுவாயா. “
*

பிந்தி ஸாவும், மாலுவும் கைத்தாங்கலாய் எலிசாவை அவளது வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.

“ அங்கிள் எலிசா அந்த இட்த்திலிருந்து வரும் வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.. “

டிசோசாவின் முகம் இருட்டடித்திருந்தது. என்ன பேசுவதென்றே அவருக்குத் தெரியவில்லை. எலிசா வாய் திறந்தால் மூடாத பிறவி. வேலை விட்டு வந்த பின்பு தனது பேக்கை தூக்கி எறிவாள். எவ்வளவு முறை அவளது பெண்ணும், கணவனும் சொன்ன பிறகும் அந்த பை எறியும் ஸ்கூல் பழக்கம் மாறவேயில்லை.

இன்று உடம்பு மெலிதாய் நடுங்குகிறது. பல் ரொம்பவே கிட்டித்து போயிருக்கிறது. மூஞ்சியை தூக்கி பார்த்தாலும் அந்த விழிகள் எதையோ பார்க்கின்றன. ஆனால் முழு சுயநினைவுடன் தான் இருக்கிறாள்.

“என்னவாயிற்று.. “ டிசோசா அவளை படுக்கவைத்துவிட்டு ஹாலில் வந்து பிந்தியிடம் கேட்டார். பிந்தியும் பயந்து போயிருந்தாள். மாலுதான் சொன்னாள்.

“ அங்கிள், நீங்கள் பயப்பட வேண்டாம். ஆண்டிக்கு ஓன்றும் ஆகவில்லை. எங்கள் வண்டி முன்னால் கோச் வெடித்திருந்த்து. எல்லோரும் ஓடிய போது, நாங்கள் மட்டும் அங்கு போய் உதவப் போனோம். அவ்வளவு தான். சில பேரை தூக்கி வண்டியில் போட்டோம். சின்ன சின்ன உதவிகள்.. அப்புறம் ரயில் எதுவும் இல்லாத்தால் டாக்ஸீ பிடித்தே வந்து விட்டோம்.. “

பயந்த பிந்தி பேசினாள்.. “ இல்லை மாலு.. எலிசா ரொம்பவே கெட்டித்து போய்விட்டாள். மாகிமிலிருந்து போர்வலி வரைக்கும் நாங்கள் வந்த போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏதோ எனக்கு பயமாயிருக்கிறது அங்கிள்.. கொஞ்சம் தூங்கி எழுந்தவுடன் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.. “

“ சாலோ பிந்தி, கீழே டாக்ஸி காத்திருக்கிறது.. அங்கிள்.. நாட் டூ வெர்ரி.. டேக் கேர்.. நாளை எலிசாவிற்கு போன் செய்கிறேன்.. “ சொன்னபடியே மாலு வேகமாய் நடந்தாள்.

டிசோசாவும், அவரது மகளும் எலிசாவிற்கு பக்கத்தில் படுத்துக்கொண்டனர். எலிசா மகள், சார்மிளா அம்மாவை மெல்ல தடவிக் கொடுத்தாள். டிசோசாவும். ஏதோதோ பேசியபடியே, கேள்வி கேட்டபடியே அவளை ஒரு சகஜ நிலைமைக்கு கொண்டு வர யத்தனித்தார்.
படுத்தபடியே டிவியை ஆன் செய்தார். ஒரு சுவறில் பதிந்த எல்சிடி டிவி ஓளிர்ந்தது. எல்லா சேனலும் அந்த நிகழ்ச்சியையே காட்டிக்கொண்டிருந்தனர்.

அதையே பார்த்துக்கொண்டிருந்த எலிசாவிற்கு குபீரென்று வாந்தி வந்தது. வேகமாய் குளியலைறை நோக்கி ஓடினாள். வாந்தி எடுத்த முடித்தவுடன் முதுகு முழுக்க வலியும், நெஞ்சில் எரிச்சலும் மிகுந்தது.

வாய் பக்கம் விரல் வைத்து காட்ட சர்மிளா நீர் கொண்டு வந்து கொடுத்தாள். குடித்தபடியே மறுபடியும் திரை பார்க்க தலை சுற்றி வந்தது. மெல்ல சாய்ந்தாள்.

டிசோசா சார்மிளாவை அடுத்த அறைக்கு போய் படிக்க சொல்லிவிட்டு தனது மனைவியை கவலையோடு அணைத்தபடி படுத்தார்.

கை யதோச்சையாக சிலுவையிட்டுக் கொண்ட்து.

*

கொஞ்ச நேரத்திற்குள் உடை மாற்ற வேண்டுமென சொல்லி, எலிசாவை அந்த ரூமிற்குள் மெல்ல கூட்டிச் சென்றேன். அதுவரை வெளியே காட்டாத நடுக்கத்தை எலிசாவின் உடம்பு இப்போது காட்டியது.

வெளியே காட்டாதே என்று அவள் உடம்பிற்கு அவள் கட்டளை இட்டிருக்க வேண்டும். வலுக்கட்டாயமாய் அவள் அதை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

நடுக்கமும், தூக்கி போடலும், உடம்பு முறுக்கலும் வெளிப்படையாகவே தெரிந்தது. எனக்கு பயம் வந்தது. அவள் படுக்கையில் சாய்ந்த படியே நடுங்கும் குரலோடு தனக்கு ஏதாவது சூடாக குடிக்க ஆர்டர் செய்யுமாறு சொன்னாள்.

“ ஹோய் எலிசா.. வாட் ஹாப்பெண்டு.. “ எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. தேவையெனில் டாக்டரை அழைக்க வேண்டும்.

“  மறுபடியும் பாம் பளாஸ்டா.. “
” எனக்கு ஒரு உதவி வேண்டும்.. ப்ளிஸ் கம்.. நியர் டு மி.. “

நான் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஒரு கையால் என் கோர்ட்டை இறுக்கி, இழுத்தபடியும், மறுகையால் பஞ்சு தலையணையை கசக்கியபடியும்,  என்னிடம் அந்த கதையை அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
அந்த காலை எப்போதும் போல காலையாகத்தான் இருந்தது.
*
டிசோசா எலிசாவின் நடுக்கம் அதிகமாவதை கண்டு பயந்தார். அவளை எழுப்ப முயன்றார்.
“ ஓ.. ஏஞ்சல்.. “ ரொம்ப கவலையாகவும், கோபமாகவும் இருக்கும் போது டிசோசா எலிசாவை அப்படித்தான் கூப்பிடுவார். தொனி மட்டுமே வேறுபட்டிருக்கும்.
குரல் கேட்டு எலிசா பார்த்தாள். இப்போதுதான் அவள் பார்வையில் பிரஞ்ஞை இருப்பது தெரிந்த்து.
வேக வேகமாய் டிசோசா கேட்டார்.. “ கமான்.. எலிசா.. ஆர் யூ ஓகே.. “ கொஞ்சம் குலுக்கல், கொஞ்சம் கட்டிப்பிடித்தல். எல்லாம் கலந்த உடல் மொழியோடு.
எலிசாவிற்கு ப்யமாயிருந்தது. தனக்குள் மறுபடியும் அந்த நடுக்கம் வந்துவிடுமோ என்று. ஏன் நடுக்கம் வந்தது என்று அவளுக்கு தெரியாமல் இல்லை. அந்த காட்சியின் பிம்பம் அவளுக்கு மறுபடியும் வந்தால் மறுபடி தனது உடல் குலுங்கும் என்கிற எல்லை அவளுக்கு தெரிந்திருந்த்து.
அது வரக்கூடாதே என்று வேண்டியபடியே தனது கணவனை அழுத்தி அணைத்தாள். குழறிய வார்த்தையோடு மேல் படர்ந்தால். சிதிறிய கண்ணிரோடு அழுத்தி அணைத்துக் கொண்டாள். டிசோசாவின் ஆஜானுபாகுவான உடல் அவளுக்கு இதம், வெப்பம், மிருது எல்லாம் தாண்டி எண்ணமற்ற இட்த்திற்கு கொண்டு சென்றது.
அங்கு அவள் பாதுகாப்பாய் இருப்பதை உணர்ந்தாள். அதை இழப்பதில் விருப்பமின்றி மேலும் அந்த உடல் தன்னோடே இருக்க வேண்டுமென பேராவாவில் இன்னும் இறுக்கிக் கொண்டாள். இறுக்கியபடியே ஒரு சுத்தி சுத்தினாள். தனது உடல் முழுவதும் இன்னொரு உடல் மீது தொங்கும் பாவனை அவளின் கொஞ்சமான ஆறுதல் கொடுத்த்து.
மெல்ல இன்னொரு பயம் எட்டிப்பார்க்க, மேலும் இறுக்கி மறுபடி புரண்டாள். என்ன்வாயிற்று என்கிற பொருள்பட டிசோசா உதிர்த்த் எந்த குரலும் அவளை அசைக்கவில்லை. இப்போது இன்னொரு உடலை தான் தாங்கும் எண்ணம் அவளின் தசை நார்களில் பரவியது. மஞ்ஞைகளில் ஊடுருவியது.
உடலுக்கு ஒன்னும் ஆகவில்லை. எதையும் இழக்கவில்லை என்று மூளையும், இதயமும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டன. அந்த எண்ணத்தை வலுப்படுத்த இறுக்கியபடியே மேல்-கீழ், கீழ்-மேல் என உருண்டபடியேயிருந்தாள்.
அவள் எந்த காட்சி வரக்கூடாதென பயந்திருந்தாளோ அதை மனம் திருப்பி திரையில் காட்டி சிரித்த்து.
ரயில் கம்பத்தின் மேலே தொங்கியபடி – கொஞ்சம் கூட கீறலின்றி வெள்ளை வளையல், கொஞ்சம் நெகிழ்ந்திருந்த பச்சை மோதிரம், கிழிந்த நரம்புகள், ரத்தம் சொட்டி முடித்திருக்கலாம், மெலிதாய் அறுந்த பல்லிவால் போல ஆடும் விரல்கள், –கண் மூடி திறக்க,  அந்த விரலே தன்னுள்ளும் தொங்குவதாய்.. அந்த விரல் நடுக்கம் பரவப் பரவ..

எலிசாவிற்கு முன் கணத்திலிருந்த உடல் இருப்பின் நிச்சயம் மறந்து மறுபடி மகா பயம் எழுந்த்து. டிசோசாவை கீழ் கிட்த்தி மேல் எழும்பினாள். அந்த நடுக்கத்தை தன்னுள்ளிருந்து வெளியே எடுத்தே ஆக வேண்டும். அந்த கை தன்னிலிருந்து வெளியே போய்த்தான் தீரவேண்டும்.

அவர் உடை கிழித்து உட்புகுந்தாள். வேகமாய் இயங்கினாள். தன்னிலிருந்து அந்தக் கையை துப்பு. கையோடு வளையலும், மோதிரமும் போகட்டும். போ.. போ.. வெளியேறு.. வெளியேறு.. நடுங்கும் விரல்கள் வேண்டாம்.. போகட்டும்.. குப்பையாய் போகட்டும்.. திரவமாய் போகட்டும். அவரின் உடலின் அது போகட்டும் எனக்கு வேண்டாம். அது அந்த விரல், சத்தம். உடம்பிலிருந்து தனியே தொங்கும் கை எனக்குள் எதற்கு..

இயங்கினாள். இயங்கி வெளியேற்றிய பிறகு விழுந்த எலிசா நிறைய நேரம் தூங்கிக்கொண்டேயிருந்தாள்.

டிசோசாவிற்கு அயர்ச்சியாயிருந்த்து. ஆச்சரியமாயிருந்த்து. அதிர்ச்சியாயிருந்த்து. கவலையாயிருந்த்து.
*
இன்று எனக்கும் தான்.

Series Navigationவலியும் வன்மங்களும்சைத்ரா செய்த தீர்மானம்
author

மணி ராமலிங்கம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *