அந்தரங்கம் புனிதமானது

This entry is part 40 of 43 in the series 17 ஜூன் 2012

இன்று நாம் பல புரட்சிகளைக் கண்டுள்ளோம். விவசாயப் புரட்சி, விஞ்ஞான புரட்சி, தொழிற் புரட்சி, கடைசியில், கைக்குள் உலகையே கொண்டு வரும் கனணி புரட்சியிலும் புகுந்து விட்டோம்.

ஆனாலும், உறவு, பாசம், குடும்பம், கணவன் – மனைவி பந்தம்-பாசமெல்லாம் நம் மண்ணின் பெருமையென சொல்லிக்கொண்டுதான் திரிகின்றோம்.

ஆனால், இன்றைய இளம் தலைமுறையின் ஆண்- பெண் உறவு முறைகளில், மேலை நாட்டு கலாச்சார மோகம் கண்டுள்ளதாக தெரிகின்றது.

இதுவரை, நாம் ஆண்- பெண் உடலுறவை, திருமணத்திற்கு பின் தான், அதில் ஒரு சடங்கை வைத்து, புனிதமான உறவாக , ஒரு கலாச்சாரமே, இந்தியாவில் மலர்ந்துள்ளது.

அதனால் தான், போன நூற்றாண்டுவரை, இங்கு எய்ட்ஸ் தலைக்காட்டவில்லை. மேலை நாட்டு, தகாத கலாச்சாரத்தால், இன்று உலகெங்கும் , அது த்லைவிரித்தாடுகின்றது.

ஆண்- பெண் உடலுறவுக் கொள்ள , 18 வயது முடிந்த நிலை, எய்த வேண்டுமென, 2011 ல், ஒரு சட்டம், இந்திய அரசால் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனை சட்ட வல்லுனர்களும், வரவேற்றுள்ளனர். ஆனால், இளம் தலைமுறயினர், இதனை எதிர்த்துதான் குரல் கொடுக்கின்றனர்.

18 வயது முடியும் முன்னர், ஆணோ- பெண்ணோ உடலுறவு கொண்டால், அது சட்டத்தால், தண்டிக்கத் தக்கது என்று சட்டமும் உள்ளது.

இளசுகளின் பார்வையில்,” இந்த சட்டம், மிகவும் கொடுரமானது. இளைஞர்க ளின் சுதந்தரத்தை நசுக்க வந்துள்ளதாக, ஒரு இளசு கூறுகின்றது.”

இன்னொரு பட்டாளம்,” இதையெல்லாம், நாங்க பெரிசா மதிக்கிறது கிடையாது. வயசு போன், இனபம் வருமா ? “என்ற கேள்வியை நம்மை நோக்கி போடுகின்றது.

13 வயதிலேயே , பழுக்கின்ற இளம் பெண்களும் உண்டு. இதனை ஒரு, சோதனையாகத்தான் செய்து பார்க்க வேண்டும் என்று, ஒரு முற்போக்கு சிந்தனை கூறுகின்றது.

16 வயதிலேயே, பருவ நாடகம் தொடங்கி விடுவதாக, ஒரு கல்லூரி கும்பல் கூறுகின்றது. எங்களுக்கு, செக்ஸ் பற்றிய அறிவை, இந்த நாகரீகம் கற்றுத் தருகின்றது. பின், நாங்க ஏன் பயப்பட வேண்டுமென, ஒரு மேநாட்டு குரல் கேட்கின்றது.

டாக்டர் வினோத் செப்பி கூறுகையில்,” 15 வயதிற்குள், ஏற்படுகின்ற ஒருவித உடல் தேடலைத்தான், இந்த இளசுகள், செக்ஸ் என்று, நினைத்து, அதில் ஈடுபடுகின்றனர். ஆனால், அது ஒரு விபரீத விளையாட்டுத் தான். அந்த வயதில், ஒரு பெண் கர்ப்பம் அடைய மாட்டாள் என முட்டாள்த்தானமாக நினைத்து, அந்த பெண்ணின் உடல் கூற்றையே சிதைத்து விடுகின்றனர்.”

ஆனால், 18 வயதிற்கு பின் வைத்துக்கொள்ளும், உறவுதான், விஞ்ஞானரீதியானது என்கின்றார் அந்த டாக்டர்.

சமூக வியலாளர்கள் பார்வையில், இந்த இளசுகளின் மனசு கேட்டு போகின்ற காரணங்களில் முக்கிய மானது, இன்றையா மீடியாக்கள் தான், இரவு விடுதிகளின் ஆட்டம்- பாட்டம். பெற்றோர்களது கண்டிப்பு தவறுதலால், இந்த சமுதாயம் கெட்டு சுண்ணாம்பு ஆகின்றது.

செக்ஸ் பாடத் திட்டத்தை, பள்ளி பருவத்திலேயே சேர்க்க வேண்டும் என வாததிற்கு கூறினாலும், நம்மால் அது நடைமுறைக்கு கொண்டு வரமுடியுமா ? நமது கலாச்சாரம் அதற்கு இடம் கொடுக்காது. நமது கோவில் கோபுரங்களே, பெரிய கலாச்சாலையாக் தான், திகழ்கின்றது.

இன்னும் கொஞ்சம் படித்த மேல் தட்டு இளசுகள் டேடிங் அது- இது என்று
இளமையை, கொச்சைப் படுத்தி விடுகின்றது.

கொஞ்சம், நமது கவனத்தை, உலக நாடுகளின் (செக்ஸ்), உறவு முறைகளின்
சட்டங்களைப் பார்த்தால், தலை சுற்றுகின்றது.
பிரேசில், சைனா,ஜெர்மனி, இத்தாலி,போர்சுகல்,கொலம்பியா போன்ற நாடுகளில்,13 வயது, செக்ஸ் உறவிற்கு பச்சைகொடி காட்டுகின்றது.

பிரான்சு,டென்மார்க்,சுவீடன்,செக்,தாய்லாந்து,உருகுவே போன்ற நாடுகளில்,
14 வ்யது போதுமானது.

பிரிட்டன், கனடா,நேபால், நார்வே, ருஷ்யா, சுவிஷ் , இஸ்ரேல், சில குறிப்பிட் ட அமெரிக்க பிராந்தியங்கள் 15 வயதை அளவு கோலாக கொள்கின்றது.

ஐயர்லாண்டு, இன்னும் சில அமெரிக்க மகாணங்கள் 16 வயதில் பாலியல் உறவில் ஈடுபடலாம் என்று கூறுகின்றது.

SEX RELATIONSHIP -வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இது ஒரு, பிற்போக்கு தனமான விக்டோரிய காலத்து சிந்தனயென பெண்ணியல் வாதிகள் கூறுகின்றனர்.

ஒரு பெண்ணிற்கு படிப்பறிவு, வேலை செய்ய திறன் , பொருளாதார சுதந்திரம் இருந்தாலே போதும், அவள், இந்த கற்பு, தகாத உறவுகளை பற்றியெல்லாம் கவலைப் பட தேவையில்லை. அவள், அனுபவிக்க வேண்டிய வயதில், செக்ஸ் பற்றி அறிந்துக் கொள்வதும், அதனை புரிந்துக் கொள்வதும் தவறில்லை யென வாதிடுகின்றனர்.

இந்தியாவில் வாழும் பல மலைச்சாதிகளிடேயே, பால்ய விவாகம், பாலியல் உறவு கொள்ளுதல் தவறாக பாவிப்பதில்லை யென வாதிடுகின்றனர்.

இஸ்லாமிய நாடுகளில், திருமணம் ஆன பிறகு தான், ஆனோ,பெண்ணோ
குடும்ப உறவில் ஈடுபடலாமென சட்டமே உள்ளது.அதற்கு முந்திய உறவுகள் கடுமையான தண்டனைக்குள்ளாகும்.

பால்ய விவாகம், கந்தர்வ விவாகம், சுப விவாகம் என்ற இந்த முறைகளில்,
ஒரு ஆணும்- பெண்ணும் சேர்ந்து, உறவுக்கொண்டு, ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான சமுகத்தைத்தான் ஏற்படுத்தும். அந்த உறவுகள், எச்.ஐ.வி.,எய்ட்ஸ் போன்ற தீரா பாலியல் வியாதிகளை கொண்டுவராது.

பெண் ஆணிற்கு போக பொருளா ? என்ற குரல் கேட்கின்றது. அதே கேள்வியை திருப்பி போட்டால், ஆண் என்ன , பெண்ணிற்கு போகப்பொருளா? என்ற எதிர் குரலும் வந்து விட்டது.

கோவில் சிற்பங்களைப் பார்த்து, நமது முன்னோர்கள், காம வெறியர்களாக திரியவில்லை. காமத்தை, திருமணத்திற்கு பின் தான், சிலர் கொக்கோ
புத்தகத்தையே பார்த்திருப்பார்கள். ஆனாலும், ஒரு ஆரோக்கியமான சமூகம்தான் உருவானது. இன்றைய இளசுகள், அந்த காலத்து பெரியவர்களின் குழந்தைகள் தானே ! இன்று மட்டும், எப்படி ஒரு எய்ட்ஸ் சமூகம் உருவானது. இது, கலாச்சார கலப்படம். ஒரு கலவையான சமுகச்சூழல்.

இங்கும், ஒரு பெண்ணிய வாதியின், கோபக்குரல் கேட்கின்றது. கோவில் சிற்பங்களிலும், பெண்ணை, போகப்பொருளாகத்தான் வைத்துள்ளனர்.

சரி,

இன்றைய நிலை என்ன ? ஆணும்- பெண்ணும் சமநிகர் தானே ?
ஏன், பின் இப்படி ஒரு தாறுமாறான சமூகம் உருவாகின்றது.

இதற்கு யார் பொறுப்பு. ? சமூகச் சூழலா ? மேல் நாட்டு நாகரீகமா ?
இந்திய பண்பாடு, கலாசாரம் எங்கே போனது ?

நாம், பாதி மிருகம்- பாதி மனிதன் நிலையிலிருந்து, மனிதனை நோக்கிய பயணத்தில்தான், ஈடுபடவேண்டும். மீண்டும், மிருக நிலைக்கே அல்ல;

பெர்னாடசா, கனவுக் கண்டது, மனிதன், சூப்பர் மனிதனாக வேண்டும்.
ஆனால். இனறைய நிலை என்ன!

மேக்ஸ் முல்லர்,” இந்த உலகின் மிகசிறந்த கலாச்சாரம், இயற்கை வளம், பண்பாடு, நாகரீகம், இந்தியாவில் மட்டுமே காணமுடியுமென என்றார்.”

அதெல்லாம், வெறும் கனவாய், பழங்கதையாய் போய்விடுமா?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

============================================

Series Navigationதிருக்குறளில் அறம்- ஒரு ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்புபுத்திசாலிகள் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    Matram says:

    எழுத இடம் கிடைத்தால் எத வேண்டுமானாலும் எழுதுவதா? ஊருக்கு ஊரு தேவதாசி இருந்தது இப்பவா? பழைய காலத்திலா? பால்ய விவாகம் இப்ப இருக்கா? கோவிலில் காம சிற்பங்கள் எதற்கு பூஜை பண்ணவா? .. இப்ப உள்ள சமூக சூழலில் 15 வயசில எல்லா விடயமும் தெரிந்து விடுகிறது. அப்புறம் அவுங்க என்ன பண்ணுவாங்க… பாலியல் கல்வி கொடுத்து அடுத்த தலைமுறையை ஆரோக்கியமான சூழலுக்கு கொண்டு செல்ல வேண்டும்..அதை விட்டிட்டு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *