ரிங்கிள் குமாரி – பாகிஸ்தானின் கட்டாய மதமாற்றக் கலாசாரம்

author
31
0 minutes, 29 seconds Read
This entry is part 7 of 43 in the series 17 ஜூன் 2012

மார்வி சிர்மத் 

பெண்கள் படிப்பதற்கு எதிராக ஆணை பிறப்பித்த தாலிபான் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியுடன் நின்று, பெண்கள் படிக்க உதவ வேண்டும் என்று உறுதியுடன் அறிவித்த மலாலய் யூசுப்ஜாய் என்ற பாகிஸ்தானிய பெண்ணே நாம் அனைவரும் பார்க்க விரும்பும் பாகிஸ்தானின் முகம்.  ஒரு பக்கம் பெருமையும் மறுபக்கம் மறுதலிப்புமாக நாம் ரிங்கிள் குமாரியை உதாசீனம் செய்து மலாலய் யூசுப்ஜாயை பார்க்க விரும்புகிறோம். ரிங்கிள் குமாரி 19 வயது சிந்தி இந்து பெண். இவர் கடத்தப்பட்டு கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டு நவீத் ஷா என்ற முஸ்லீமுக்கு கட்டாயமாக மணம் செய்துவைக்கப்பட்டார்.  பாகிஸ்தானின் இந்த முகத்தை காட்டுபவர்கள் பாகிஸ்தானின் துரோகிகள் என்றும் பாகிஸ்தானை வெறுப்பவர்கள் என்றும் திட்டப்படுகிறார்கள்.  நமது சமூகத்தின் அவலங்களை திருத்த முயல்வது துரோகமாக இருந்தால், நானும் அதனை பண்ண விழைகிறேன். ரிங்கிளின் கதை எல்லோருக்கும் உரத்து கூறப்பட வேண்டும். பெப்ரவரி 24 ஆம் தேதி நவீத் ஷாவாலும் இன்னும் நான்கு பேர்களாலும் கடத்தப்பட்டார். மியான் அஸ்லம், மியான் ரஃபீக், அவர்களின் தந்தை மியான் மித்து ஆகிய முஸ்லீம் இமாம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், இவர்களை பற்றி FIR பதிய போலீஸ் மறுத்தது. அந்த பெண் கோட்கி நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அந்த பெண் தான் பிறந்த குடும்பத்துடன் செல்ல விரும்புவதாக நீதிபதியிடம் சொன்னார். ஆனால் நீதிபதி அந்த பெண்ணை போலீஸ் கஸ்டடியில் சுக்கூர் பெண் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கும்படி உத்தரவிட்டார். இது பெரிய பிரச்னையானதும், பாகிஸ்தானின் ஜனாதிபதி ஜர்தாரி, கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக பத்திரிக்கை செய்தி ஒன்று விடுத்திருந்தார். பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு எதிராகவும், அவரது கட்சியின் உப தலைவருக்கு எதிராகவும் மியான் மித்து நீதிமன்றத்திலேயே எல்லோருக்கும் முன்னால் எச்சரிக்கை விடுத்தார். ரிங்கிள் அவரது பிறந்த குடும்பத்திடமே கொடுக்கப்பட்டால், மிர்பூரையே எரித்துவிடுவேன் என்று மிரட்டினார். ரிங்கிளின் தாய்வழி மாமா, ராஜ்குமார், “எதுவந்தாலும் சரி. நீதியே நிலைக்க வேண்டும்” என்று கூறினார். அந்த உறுதி,  பல வருடங்களாக ஒடுக்குமுறையிலும் அடக்குமுறையிலும் அநீதியிலுமே வாழ்ந்து வந்ததால் வந்த உறுதியாக இருக்கலாம். “பல ஆண்டுகளாக இது போன்று இந்து பெண்களை கடத்திச் செல்வதும், கட்டாயமாக மதம் மாற்றுவதும் நடந்துவருகிறது. இந்த ஒடுக்குமுறைக்கும், அநீதிக்கும் எதிராக எந்த ஒரு குரலும் இல்லை” என்று ரிங்கிள் குமாரியின் குடும்பத்து வக்கீல் அமர் லால் கூறினார்.

 

பத்திரிக்கைகளும், சிவில் சமூக உறுப்பினர்களும் ரிங்கிள் குமாரிக்கும் ஆதரவு தெரிவித்தாலும், அரசாங்கத்தின் பதில் புதிராகவே இருக்கிறது. 2007இல் இந்து கவுன்ஸில்  கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக சமர்ப்பித்த புகாரை மீண்டும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த புகாரில் ரிங்கிள் குமாரி உட்பட பலரது பெயர்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த புகாரால் தைரியம் கொண்ட ரிங்கிள் குமாரி, மார்ச் 26இல் தனது உள்ளத்தை  திறந்து தலைமை நீதிபதியிடம் பேசினார்.  அதன் பின்னர் தலைமை நீதிபதி தேசிய மற்றும் உலக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ரிங்கிள் தனது சொந்த வீட்டுக்கு போக விரும்புவதாகவும் மற்றொரு கடத்தப்பட்ட இந்து பெண்ணான லதா, முடிவெடுக்க முடியாமல் இருப்பதாகவும் கூறினார். பெண்கள் தாளமுடியாத மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதாகவும், போலீஸுடன் போக விருப்பமில்லாமல் இருப்பதாகவும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.  எனவே அவர்கள் சுதந்திரமாக எந்த ஒரு கருத்தையும் கூறுவதற்கு முன்னால், ஒரு சுதந்திரமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். ஓய்வு பெற்ற நீதிபதி மஜிதா ரஜ்வி நடத்தும் பெண்கள் பாதுகாப்பகத்துக்கு அந்த பெண்கள் போக வேண்டும் என்று ஆணையிட்டார்.  அவர் இந்த அறிவிப்பை செய்ததும், எல்லா பத்திரிக்கையாளர்களுக்கும் தொலைக்காட்சியினருக்கும் முன்பு ரிங்கிள் வீல் என்று கதறி, தான் தன் அம்மாவின் வீட்டுக்கு போக விரும்புவதாக அழுதார்.

 

தலைமை நீதிபதி அந்த பெண்ணை பாதுகாப்பகத்துக்கு அனுப்ப ஆணையிட்டதும், ரிங்கிள் நீதிமன்றத்திலேயே அழ ஆரம்பித்ததையும், கதறியதையும் , அம்மாவீட்டுக்கு போக விரும்பியதையும் KTN TV பதிவு செய்தது.  பாதுகாப்பகத்துக்கு போக மாட்டேன், நான் இங்கே நீதிமன்றத்திலேயே தூங்கப்போகிறேன் என்று கூக்குரலிட்டார்.  இந்த அமைப்பில் அவருக்கு நீதி கிடைக்காது என்றும், இந்த முஸ்லீம்பெரும்பான்மை சமூகத்தில் அவரை கட்டாயப்படுத்தி முஸ்லீமாக மாற்றுகிறார்கள் என்றும், ஒவ்வொரு முஸ்லீமும் மற்ற முஸ்லீமுக்குத்தான் உதவுகிறார் என்றும் தனக்கு யாரும் உதவவில்லை என்றும் அவர் கதறியது இதயத்தை உருக்குவதாக இருந்தது. இந்த விசாரணைக்கு முன்பு நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாகிஸ்தானில் நீதி அமைப்பின் கேவலத்தையும், நமது அமைப்புகளின் காலாவதியான ஒழுக்கத்தையும், நமது ஒட்டுமொத்த போலித்தனத்தையும், கையாலாகாத்தனத்தையும் தெள்ளென காட்டியது. நமது அரசாங்கத்தின் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் சமூகத்தின் கேவலமான பிரகிருதிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதை காட்டியது.

 

மிர்புர் மதெலோ நீதிமன்றத்தில் நடப்பதை பார்க்க இந்து சமூகம் முழுக்க முழுக்க தடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்தரப்புக்கோ எந்த விதமான தடையும் இல்லை. ரிங்கிள் குமாரியின் குடும்பத்தினர் நான்கு பேர்களே கோர்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். கோர்ட் ரூமுக்குள் இரண்டு பேரே அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் மியான் மித்துவின் ஆட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கோர்ட்டுக்குள்ளும் கோர்ட் ரூமுக்குள்ளும் குழுமியிருந்து கோஷமிட்டார்கள். பகிரங்கமாக ஆயுதங்களை காட்டிகொண்டு அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டுகொண்டிருந்த தாடிக்காரர்களை கோர்ட்டோ நீதிபதிகளோ வெளியே போகச்சொல்லவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரிங்கிள் குமாரி எப்படி போலீஸ் கஸ்டடியில் இருந்துகொண்டே , அதுவும் மியான்மித்துவின் ஆட்கள் சுற்றியிருக்கும் போதே. காதில் புளூடூத் போனை ஒட்டிகொண்டு, பத்திரிக்கையாளர்கள் பேட்டிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். மேற்குலகம் இஸ்லாமுக்கு எதிராக திட்டமிடுவதால் அது கெட்டது. ஆனால் மேற்கத்திய தொழில்நுட்பம் இஸ்லாமை பரப்ப ரொம்ப நல்லது போலிருக்கிறது!

அவரிடம் புளூ டூத் வழியாக பத்திரிக்கையாளர்களிடம் என்ன சொல்லவேண்டும் என்று சொல்லிகொடுத்துகொண்டிருந்தார்கள். இஸ்லாமை தழுவ அவரை உந்தியது எது என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு “சூரா எக்லவுஸ்” என்று பதில் தந்தார். அதாவது “ஸூரா இக்லாஸ்” என்பதை அவர் சொல்ல இரண்டு முறை  முயற்சி செய்து தோற்றார். ஸூரா இக்லாஸில் என்ன சொல்லியிருக்கிறது என்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல்  முழித்த  ரிங்கிள் குமாரியை மியான் மித்துவின் மகன் பலவந்தமாக இழுத்துச் சென்றார். ஆமாம் நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். போலீஸ் கஸ்டடி என்று சொன்னாலும், அவர் மித்துவின் ஆட்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்.  அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே ரிங்கிள் கடத்தப்பட்டு சில மணி நேரங்களுக்குள் திருமணம் செய்விக்கப்பட்டதாக கூறப்படும் நவீத் ஷாவை ரிங்கிளுக்கு தெரியவே தெரியாது என்பதையும் பத்திரிக்கையாளர்கள் அறிந்தார்கள்.  காலை 5 மணிக்கு அவர் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டார். மாலை மூன்று மணிக்கு அவர் திருமணம் செய்திருக்கிறார்.  ரிங்கிள்  இஸ்லாமையே தழுவியிருந்தாலும் இவ்வளவு வேகத்தில் “ஒரு சுதந்திரமான பெண்” ஒரு முக்கியமான முடிவை மூன்று மணி நேரங்களுக்குள் எடுக்கும்படி என்ன அவசரம் என்று பெருமை தங்கிய நீதிமன்றம் மியான் மித்துவிடம் கேட்டிருக்கலாம்.

நாம் பல முக்கியமான விஷயங்களை கேட்பதே இல்லை என்பது கேவலமானது. யார் இந்த மியான் மித்து? இந்த வழக்கில் அவருக்கென்ன அக்கறை? பர்ச்செண்டி ஷெரீப் என்ற மசூதியின் தலைவராக அவர் சில பத்திரிக்கைகளில் கூறப்படுவது உண்மையல்ல.  அவருக்கு நவீத் ஷாவுடன் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த நவீத் ஷாவுடன் தான் வீட்டை விட்டு ஓடிச்சென்று இஸ்லாமை தழுவி திருமணம் செய்துகொண்டதாக கதை!  மியான் அப்துல் காலிக் என்பவர் மியான் மித்துவின் சொந்தக்கார. இவர்தான் பர்ச்செண்டி ஷெரீப் மசூதியின் தலைவர். இவர் மியான் மித்து இஸ்லாமின் பெயரால் செய்ததை கடுமையாக கண்டனம் செய்கிறார். இன்னும் பல மசூதி தலைவர்கள் மியான் மித்து செய்ததை கண்டனம் செய்கிறார்கள். கட்டாய மதமாற்றம் மதமாற்றமே அல்ல, அது பாவம் என்றும் கூட மௌலான ஷிரானி கூறியிருக்கிறார்.

 

ஏப்ரல் 10ஆம் தேதி, மித்து தன் ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத்தில் மிகவும் விலையுயர்ந்த ஹோட்டலில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு எதிராக தீர்ப்பு அளித்தால், அவர் தீர்ப்பை மதிக்கமாட்டார் என்றும் இஸ்லாமிய ஷரியாவையே மதிப்பார் என்றும் அறிவித்தார்.  ஜனாதிபதி வேறுமாதிரி கூறியிருக்கிறாரே என்று மியான்மித்துவிடம் கேட்டபோது, “நான் ஜனாதிபதியை பார்த்துகொள்கிறேன். எனக்கு எதிராக யாரும் சவால் விட முடியாது” என்றார். மித்துவின் மிரட்டல்கள், மித்துவின் ஆட்கள் ரிங்கிளின் தாத்தா மனோஹர் லால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஆகியவற்றின் பின்னால், ஒட்டுமொத்த குடும்பமே சொந்த வீட்டையும் ஊரையும் விட்டு கிளம்பி கராச்சிக்கு சென்றார்கள்.  இன்னும் மூன்று முக்கிய இந்து தலைவர்கள் மியான் மித்து என்ற இந்த இமாமின் மிரட்டலின் கீழ் இருக்கிறார்கள்.  அமர் லால் என்ற மனித உரிமை வழக்கறிஞர், சாத் ராம் என்ற துறவி, ரிங்கிளின் தாய்மாமா ராஜ் குமார் ஆகியோரே இந்த மூவர்.

மார்ச் 18ஆம் தேதி விசாரணை முடிந்து ரிங்கிள் தனது அம்மாவின் வீட்டுக்கே போகலாம் என்று தீர்ப்பானால், ரிங்கிளின் குடும்பத்துக்கும் இந்த மூவருக்கும் என்ன நடக்கும் என்பதை சுப்ரீம் கோர்ட்டின் முன் உள்ள முக்கியமான கேள்வியாக இருக்கும். யார் இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்? ஏழை பாழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் இப்படிப்பட்ட அரசாங்க அமைப்புகளை நம்பி வாழ முடியுமா? கோட்கி கிராமத்தில் வாழும் இந்துக்களுக்கு சுப்ரீம் கோர்ட் கொடுக்கும் நீதியோ பாதுகாப்போ போதுமானதாக இருக்குமா? அது தரமுடியாது என்றால் யார் தருவார்கள்? தனது வரலாற்றில் சுப்ரீம் கோர்ட் தனது மிகப்பெரிய சவாலை இந்த வழக்கில்தான் எதிர்கொள்கிறது. 2007இல் சுதந்திரமான நீதி அமைப்புக்காக தெருவில் இறங்கி போராடிய இந்து சமூகமே இன்றைய நசுக்கப்பட்ட சமூகமாக இருக்கிறது. இந்த நீதி அமைப்பு போலீஸ் மற்றும் கீழ் கோர்ட்டுகளை கொண்டதாக இருக்கிறது. ரிங்கிள் தனது வீட்டுக்கு திரும்பி சென்றாலும், கோட்கி போலீஸ் மீதும், கீழ் கோர்ட் நீதிபதிகள் மீதும், மியான் மித்து மற்றும் அவரது மகன்கள் மீதும் சட்டப்பூர்வமான விசாரணை வேண்டும்.  ஏன் கடந்த ஆறு மாதங்களில் இந்து பெண்களை கடத்துவதும், கிறிஸ்துவ சிறுமிகளை கடத்துவதும், கட்டாய மதமாற்றமும் அதிகரித்திருக்கிறது? “எங்களை நாட்டை விட்டு துரத்த விரும்புகிறார்கள். எங்கள் சொந்த தாய்நாட்டை விட்டு துரத்த விரும்புகிறார்கள். நாங்கள் அஞ்சமாட்டோம்” என்று ரிங்கிளின் வழக்கறிஞர் அமர் லால் கூறுகிறார்.

 

பலம் பொருந்தியவர்கள் பலமற்றவர்களை நசுக்கும்போது அதற்கு அரசு அமைப்பையே உபயோகிக்கும்போது நீதித்துறையே கேலிக்கூத்தாகிவிடுகிறது. மியான் மித்து சட்டத்தை மட்டுமே கேலி செய்யவில்லை, மதிப்புக்குரிய நீதிமன்றத்தையும் துச்சமாகத்தான மதித்தார். ஆயுதம் தாங்கிய தனது ஆதரவாளர்களை கோர்ட்டுக்குள்ளேயே அனுப்பி மிரட்டியிருக்கிறார். ரிங்கிள் போலீஸ் கஸ்டடியில் இருப்பதாக சொல்லப்படும் அந்த நேரத்திலேயே தனது பிரத்யேக காரில் ரிங்கிளை கூட்டிவந்து அவருக்கு பிரஸ் மீட் வேறு ஏற்பாடு செய்கிறார். பாராளுமன்றத்தை அவமரியாதை செய்கிறார். ஜனாதிபதியையே அவமரியாதை செய்து” ஜனாதிபதியை நான் பார்த்துகொள்கிறேன்” என்கிறார். அரசாங்கத்தின் எந்த தூணாவது இந்த அவமரியாதைகளுக்கு உரித்த பதில் தருமா?

http://www.thefridaytimes.com/beta2/tft/article.php?issue=20120413&page=9

http://www.thefridaytimes.com/beta3/tft/article.php?issue=20120525&page=6

http://www.dailytimes.com.pk/default.asp?page=2012\04\19\story_19-4-2012_pg7_3
http://pakobserver.net/detailnews.asp?id=151043

http://www.youtube.com/watch?v=b3X0pU4N5jQ&feature=related

 http://www.bbc.co.uk/news/world-south-asia-17272943

 

இது சம்பந்தமாக தமிழ் தினசரி “தினத்தந்தி” தலையங்கம் எழுதியது.

அந்த தலையங்கம் இதோ.

இந்த தலையங்கத்துக்கு தமிழக இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்வினை செய்துள்ளன.

தவ்ஹீத் ஜமாத்தின் எதிர்வினை

http://vasudevanallurtntj.blogspot.com/2012/05/blog-post_5350.html

தமுமுக கட்சியின் தளத்தில் எதிர்வினை

http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=2001:2012-04-28-12-25-26&catid=42:press-reless&Itemid=160

 இது சம்பந்தமான ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி

 

Series Navigationபெட்டி மஹாத்மியம்வலியும் வன்மங்களும்
author

Similar Posts

31 Comments

  1. Avatar
    பா. ரெங்கதுரை says:

    தி.மு.க. ஆட்சியின்போது முரசொலியாகவும், அ.தி.மு.க. ஆட்சியின்போது நமது எம்.ஜி.ஆர்.ஆகவும் இயங்கும் தினத்தந்தியில் இப்படி ஒரு தலையங்கம் வெளிவந்திருப்பது ஆச்சரியம்தான். சிவந்தி ஆதித்தனின் கவனத்திலிருந்து தப்பி இத்தலையங்கம் எப்படி வெளியானது?

    1. Avatar
      Kavya says:

      தினத்தந்தியின் அண்மைக்கால மாறுதல்கள் ஒன்றை நமக்குச்சொல்கின்றன. பழைய தலைமுறை ஆட்கள் அப்பத்திரிக்கையில் தற்போது இல்லை. அவர்கள் வயது காரணமாக ஓய்வடைந்திருக்கலாம். அல்லது மரணித்திருக்கலாம். இன்று வெளிவரும் தலையங்கள் பல காரசாரமாக எழுதப்படுவதிலிருந்து இளையதலைமுறை தினத்தந்தியை ஆக்கிரமித்திருக்கிறது என்று தெரிகிறது. சுருங்கச்சொல்லின், நேற்றைய தினத்தந்தி தினமலரோடு மோதிக்கொண்டிருந்தது. இன்றைய தினத்தந்தி தினமலரோடு அணைத்தே வாழ்கிறது.

  2. Avatar
    kargil_jay says:

    1 ) இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை. இதை வெளியிடுவது திண்ணைக்கோ நம் நாட்டின் இறையாண்மைக்கோ நல்லதல்ல.
    2 ) இதன் மூலம் தெளிவாகத் தெரியும் ஒரே உண்மை ஒரு நாட்டின் தலைமை, ஆட்சியாளர், போலீஸ் எல்லாமே பெரும்பான்மை மதத்தினராக அமைந்துவிட்டால், அவர்கள் சிறுபான்மை இனத்தை கொடுமைப் படுத்தி, கற்பழித்து, ஒடுக்குவார்கள் என்பதுதான். இந்தியாவில் இவ்வாறாக பெரும்பான்மை ஹிந்துக்கள் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தி வருகின்றனர் என்பதும் தெளிவாகிறது.
    3 ) இவ்வாறான நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடக்காதபடி பார்த்துக்கொள்ள ஒரே வழி, சிறுபான்மையினருக்கு சம வாய்ப்பு கொடுத்து, பெரும்பான்மையினரின் அதிகார ஆக்கிரமிப்பைக் குறைப்பதே. அதாவது பாகிஸ்தான் போல் பெரும்பான்மையினருக்கே எல்லா அதிகாரப் பதவிகளையும் கொடுத்து நாட்டைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லாமல், இந்திய அரசு இறையாண்மையுடன் நாட்டின் பிரதம மந்திரி முதல் எல்லா அதிகாரப் பதவிகளையும், போலீஸ் முதலிய எல்லாப் பதவிகளையும் முஸ்லீம்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். எல்லா காவல்துறை பணியாளர்கள், அதிகாரிகள் எல்லாருமே முஸ்லீம்கள் ஆனால், சிறுபான்மையினருக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.

    4 ) காஷ்மீர் போன்ற நிலை ஏற்படக் காரணம், அங்கிருந்த ஹிந்துக்கள், முஸ்லீம்களாகாமல் சிறுபான்மையாக தேங்கிப் போனதே. ஆதலால் அமைதி மார்க்கமான இஸ்லாமுக்கு ஹிந்துக்கள் மாறிவிட்டால் பின்பு பாரதமே அமைதிப் பூங்காவாய்த் திகழும்.

    இந்த நான்கு விஷயங்களையும் பெரும்பான்மையினர் நினைத்துப் பார்க்கவேண்டும். அல்லது அவர்கள் பாகிஸ்தானில் நடப்பது போன்ற தீச்செயல்களுக்கு துணை நின்றவர்களாவர்.

  3. Avatar
    Kavya says:

    இந்து சமூகம் பாகிஸ்தானில் மிகச்சிறுபான்மை. அவர்களில் பலர் ராஜஸ்தானியர்கள். பாகிஸ்தான் பிரிவினையின்போது தங்கியவர்கள். சிலர் குஜராஜித்தீயர். இவர்கள் பணக்காரர்கள். இப்படிப்பட்ட கடத்தல் சம்பவங்களும் கட்டாயமதமாற்றமும் பொதுவாக‌ ராஜஸ்தானி இந்துக்களிடம்தான். காரணம், அவர்களிடம் பணபலம் இல்லை.

    விஷ்வ ஹிந்து பரிஷத் இந்தப்பிரச்சினையைக்கையிலெடுத்து, பாகிஸ்தானிய இந்து சமூகத்தை ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு வரச்செய்து குடியுரிமை வழங்கக் கோரலாம். அவர்கள் பெரும் எண்ணிக்கையில்லையாதலால் இது சாத்தியம். பங்களாதேஸ் முசுலீம்கள் இந்திய நகரங்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். எவருக்குமே குடியுரிமை கிடையாது. எல்லாமே கள்ளத்தனாமாகத்தான்.

    பாகிஸ்தானிய இந்துக்களை ஏன் நாம் இங்கே அழைத்து குடியுரிமை வழங்கக்கூடாது? இந்தச்சமூகத்தினால் பாகிஸ்தானுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே அவர்கள் விடத்தயாரகத்தான் இருப்பார்கள்.

    பாகிஸ்தான் இசுலாமிய ரெபப்ளிக். இசுலாமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதமாகும். மற்ற மத மக்கள் இரண்டாந்தரக்குடிகளே. சட்டம் அதைச் சொல்லாவிட்டாலும், அப்படித்தான் நடாத்தப்படுகிறார்கள். நிலைமையிப்படியிருக்க, எங்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று ஏன் அவலக்குரல்? வெளியேற வேண்டியதுதானே? இந்திய இந்து அமைப்புக்கள் கண்டிப்பாக குரல் கொடுக்கவேண்டும்.

    1. Avatar
      paandiyan says:

      காவ்யா சொல்வதை போல இங்குள்ள முஸ்லிம்கள் புலம்பமால் நம்பக்கு தனி நாடு கொடுத்துவிட்டார்கள் நாமும் அங்கு போய்விட வேண்டும் என்று இங்கு உள்ள முஸ்லிம்கள் பிரச்னை பண்ணாமல் கெளம்பவேண்டும் . அங்குள்ள்ள முஸ்லிம்களும், நமக்கு நாடு, ஐம்பது கொடி கொடுத்துவிட்டார்கள் நீங்கள் சிறுபான்மை என்று சொல்லாமல் இங்கு வாருங்கள் என்று அனைதுகொள்ளவேண்டும்

  4. Avatar
    Rama says:

    நிலைமையிப்படியிருக்க, எங்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று ஏன் அவலக்குரல்? வெளியேற வேண்டியதுதானே?
    Another infantile,irresponsible,ignorant suggestion. If the solution is so simple, do you think the Hindus will still hang around in Pakistan under all these hardships? How about Mr Kavya addressing the fundamental problem of forcible conversion in Islam? Obviously he does not think it is a problem.

    1. Avatar
      Kavya says:

      Why do they still cling to Pakistan, an Islamic Republic with overwhelming Islamic population guided and goaded by Islamist fundamentalists, where they cannot live in dignity as they are second class citizens? Rama may reply. Forcible conversion in Islam in an overwhelmingly Islamist country is no surprise – is my comment. Pakistan shows a false face to the world as if they give equal rights to the other religions. That it is an open and brazen lie everyone knows and hopefully Rama too.

      My short point is that whereever u go, live there only if u r given the assurance and opportunity to live in dignity. If not, earlier u quit, the better for ur value as a human being.

  5. Avatar
    தங்கமணி says:

    பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இந்தியாவுக்கு வருவதற்கு பதிலாக, இந்து அமைப்புகள் அங்குள்ள முஸ்லீம்களை இந்துக்களாக ஆக்க பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் பெரும்பான்மை இந்து நாடாகும்போது அங்கும் இந்தியா போல மதசார்பற்ற அரசாங்கம் தோன்றும்.

  6. Avatar
    Kavya says:

    வழிமொழிகிறேன். ஆயினும் இன்னொன்று ரொம்ப பலனைத்தரும். அமெரிக்காவில் ஏற்கனவே இந்து அமைப்புக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் அனைத்து வெள்ளைக்காரர்களையும் கறுப்பர்களையும் இந்துக்களாக்கிவிடவேண்டும். பாகிஸ்தான் அமெரிக்கர்களில் சொற்களைக்கேட்டுக்கொள்வதால், தம் மக்களையும் இந்துமதத்திற்கு மாறச்செய்துவிடும். நேரடியாக பாகிஸ்தானுக்குச்செலவ்தைவிட அமெரிக்கர்கள் மூலமாகச் செய்தால் நல்ல பலன்.

    பின்னர் மெதுமெதுவாக ஐரோப்பியர்கள் அனைவரையும் மாற்றலாம். அங்கு இந்து அமைப்புக்கள் செல்லத்தடையேதுமில்லை. ஹரே ராம ஹரே கிருஸ்ணா அமைப்பு ஏற்கனவே அங்கு செழிக்கிறது. பின்னர் என்ன? எல்லாம் சுபமே.

    1. Avatar
      Kavya says:

      வழிமொழியலாம். ஆனால் அஃதொரு புரியப்படாத வழிமொழியலே. என் நோக்கம் வேறு; மணியின் நோக்கம் வேறு. பாகிஸ்தானை இந்து நாடாக மாற்றம் செய்வதற்கு மணி சொல்லும் காரணம் அப்போதுதான் அஃதொரு மதச்சாரா நாடாகும் என்பதே. நான் அமெரிக்கர்களை இந்துக்களாக மாற்றம் செய்யச்சொல்லும் காரணம் அஃதொரு மதச்சார்பற்ற நாடாக வேண்டுமென்பதற்கன்று. அங்கு மதச்சார்பற்ற நிலை ஏற்கனவே உண்டு. மாற்றம் செய்யக்காரணம் இந்துமதம் அங்கு பரவவேண்டும். அனைத்து அமெரிக்கர்களும் கிருத்துவமதத்தை விட்டு நம் மதத்திற்கு வரவேண்டுமென்பதும். அப்படி அமெரிக்கா மாறிவிட்டால் பாகிஸ்தான் தன் நிலை தடுமாறி சிந்தனை செய்ய ஆரம்பிக்கும். ஏனெனில் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நட்பு வேண்டும்.

      இப்படியிருக்க எப்படி வழிமொழிந்தேன் என்கிறீர்கள் என்பது வியப்பு. மணிக்கு இன்னொரு கேள்வியும் உண்டு: இந்து மதப்பிரச்சாரம் என்கிறீர்களே அஃது எப்படியிருக்க வேண்டும்? தாலிபானிகளிடம் பண்ண முடியுமா?

      இன்னொன்றும் மணிக்கு: பாகிஸ்தானில் போய் இந்து மதப்பிரச்சாரம் என்பது, உள்ளூரில் விலைபோகாத மாட்டை வெளியூரில் விற்பதாகும். ஒரு வேளை வெற்றியடையலாம். ஆனால் உள்ளூரி ஏன் விலை போகவில்லை என்பதையும் ஆராய வேண்டும். கிருத்துவ மிசுனோர்கள் ஏமாற்றுகிறார்கள் நம் மக்களை. ரொம்ப சரி. ஆனால் இசுலாமியர்கள்? கிருத்துவ மதத்தைவிட இசுலாம் வேகமாகப்பரவுகிறது இங்கே. இன்னூம் ஒரு சில நூற்றாண்டுகளில் தமிழர்கள் அனைவர்களும் இசுலாமியர்கள் ஆவது நடக்கும் என்கிறார்கள். பார்ப்ப்னர்கள் மட்டுமே இந்துமதத்தில் இருக்கலாம். ஆனால் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலார் என்பதல்லவா தமிழர் பண்பாடு. அதன்படி அவர்களும் மாறலாம்.

      இஃதொரு சிந்தனைக்குரிய பிரச்சினை. சிந்தியுங்கள். பல கசப்பான உண்மைகளை எதிர்நோக்க வரும்.

      ராம் நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு கேள்வியை வைத்திருக்கிறேன். அதற்கு பதில் சொன்னால் போதும். உணர்ச்சிகளுக்கு இங்கிடமில்லை. உணர்ச்சிவசப்படாமல் பின்னூட்டங்களை வைத்தால் நன்றி.

  7. Avatar
    punai peyaril says:

    அதெல்லாம் வேண்டாம், இங்குள்ள முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கோ ஆப்கானிஸ்தானுக்கோ அனுப்பி விடலாம். அங்குள்ள இந்துக்களை இங்கு வர விடலாம். இந்து மதத்தைத் திட்டி விட்டு யோகா, தியானம் என்று செய்து நிம்மதி தேடலாம். ரொட்டி பன்னு கத்தி குண்டு என்று எதுவும் காட்டப்படாமலே இந்துமதத் தத்துவங்கள் பரவிகொண்டு தானிருக்கின்றன… கடவுள் இல்லை என்று மஞ்சள் துண்டு மர்மம் கண்டவரே யோகா, தியானம் இன்றி நாளைத் தொடங்குவதில்லை… உருவம் உண்டு என்று சொல்லும் சிலர், உருவம் உடைத்தால் கலங்குவதில்லை… ஆனால் உருவம் இல்லையென்பவர்கள் தான் அடையாளங்கள் கொண்டு அலைகிறார்கள்…

    1. Avatar
      Kavya says:

      யோகாவும் தியானமும் இந்துமதமல்ல். அவை எங்கும் காணப்படும்.

      இந்துமதத்தில் பல கொள்கைகள் உண்டு. எ.கா கர்ம வினை, வர்ணாஷிரதர்மம். போன்று. இவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் ஒரு இந்துவால். ஏற்றுக்கொள்ளாமலும் இந்துவாகலாம் என்பது உண்மையான இந்துக்களின் வாதமன்று. ஆயினும் இந்துமதப்பிரச்சாரகர்கள் எதுவும் சரியென்ற வழியையெடுத்தால் மதம் பரவும் என்ற் நோக்கில் செயல் படுகிறார்கள். காரணம், பிறமதங்கள் வேகமாகப்பரவுகிறதல்லவா? என் திண்ணைக்கட்டுரையைப் படிக்கவும். ஆர் இந்துக்கள் என்ற விடயத்தைப்பகடி செய்யும் கட்டுரையது.

      அர்ச்சாவதாரத்திருமேனிகளில் ஆழங்கால் பட்டவகள்தான் ஆழ்வார்கள். அவர்கள் இல்லாமல் சிரிவைணவமில்லை. அம்மதம் உருவவழிபாட்டைப்பெரிதும் போற்றுகிறது.

      அடையாளங்கள் இல்லாமல் பாமரர்களுக்குத் தெய்வவழிபாடில்லை. இசுலாமிய்ருக்கும் அப்ப்டித்தான். அவர்கள் கடவுளுக்கு உருவமில்லை சரிதான். ஆயினும் அவர்கள் அடையாளங்களை வழிபடுகிறார்கள். ஏன் மெக்கா? ஏன் மதீனா? ஏன் ஆஜ்மீர் தர்கா? இடங்கள் வேண்டும். அதனுடன் பலபல பழங்கதைகள் வேண்டும். அதனை நினைந்து நினைந்து உருகி வழிபடவேண்டும். இசுலாமியருக்கு இவையெல்லாம் அடையாளங்களாக விட்டால் அவற்றை விட்டு விடலாமே?

      உய்த்துணரும்போது ஒரு உண்மை தெளிவாகும். ஞானிகளுக்கு மதம் காட்டுவது பேரின்பம் அல்லது உயர் நிலை. மற்றவருக்கு பாமர நிலை. ஞானிகள் ஒரு சிலரே. அவர்களுக்காக நாம் திண்ணையில் சம்சாரிப்பது வெட்டி வேலையாகும்.

      புனைப்பெயரில் அடிக்கடி இப்படி பேசுகிறார். கற்ப்னையூர் வாசம். இந்துமத அத்த்ததுவங்கள் ஞானிகளுக்கு. அம்மதத்தின் ஒரு பெருங்குறையே (?) அதுதான். இருவருக்கு வெவேறான நிலை. புனைப்பெயராரோ அல்லது இங்கு எழுதும் மணிகளோ மலர்மன்னன்களோ ராம்களோ இன்னபிற இந்துக்களோ என்றுமே ஞானிகளாக முடியா.. தன்னைச் சித்தர் என நினைத்த ,சுப்பிரமணிய பாரதி கடைசி மூச்சைவிடும்போது, ‘செல்லம்மா’ என்றுதான் விட்டார். பெண்டாட்டி வேண்டும். பிள்ளைகளும் வேண்டும். எப்படி ஞானியாக முடியும்?

      அதே இந்துமதம் கிரஹஸ்தானாக வாழ்ந்து மடிவதொன்றும் ஞானிகள் நிலைக்கு கீழானதன்று என்றும் சொல்கிறது. ஒரு பூ எனக்குப்போதும் என்று கீதை சொல்வது போல.

  8. Avatar
    தங்கமணி says:

    காவ்யாவிடம் நகைச்சுவைகளுக்கு பஞ்சமில்லை.

    //ஏனெனில் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நட்பு வேண்டும்.//
    அது இன்றைக்கு. நாளைக்கு என்னவாகும்? சீனாவின் நட்பும்தான் வேண்டும். என்ன சீனாவால், பாகிஸ்தான் புத்தமதத்துக்கு போய்க்கொண்டிருக்கிறதா? இது போன்ற கிறுக்குத்தனமான எழுத்தை தானாகவே மெச்சிக்கொண்டால்தான் உண்டு.
    //பாகிஸ்தானில் போய் இந்து மதப்பிரச்சாரம் என்பது, உள்ளூரில் விலைபோகாத மாட்டை வெளியூரில் விற்பதாகும். //

    கிறிஸ்துவைகூடத்தான் யூதர்கள் ஒப்புகொள்வதில்லை. கிறிஸ்து மாங்கு மாங்கென்று சீடர்களிடம் யூதர்களின் பட்டணங்களைத்தவிர வேறெங்கும் போகவேண்டாம் என்று கேட்டுகொண்டார். ஒரு யூதரும் கிறிஸ்துவை நம்புவதில்லை. யூதர்கள் 2000 வருடமாக யூத மதத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், வெளியூரில் கிறிஸ்துவம் விலை போகவில்லையா என்ன? விற்பதற்கு திறமை இருந்தால், சவுதி அரேபியாவில் கூட மணல் விற்கலாம் என்பதற்கு கிறிஸ்துவமே சான்று.

    //மதத்தைவிட இசுலாம் வேகமாகப்பரவுகிறது //
    நீங்கள் சுவனப்பிரியனின் மறுஅவதாரம் போலிருக்கிறது

    ஹெஹ்ஹே.. அது ஒரு டுபாக்கூர். இஸ்லாமிய நாடுகளிலிருந்து பொழப்புக்காகவும் உயிருக்காக பயந்தும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போவதாலும் அங்கு இவர்கள் வழக்கம்போல நிறைய பெற்றுகொள்வதாலும் இஸ்லாம் “வேகமாக வளர்கிறது”.

    அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்த மத்திய கிழக்கு இறக்குமதிகள் கத்தோலிக்க மதத்துக்கு போவதால், கத்தோலிக்கமே வளர்கிறது.

    http://wikiislam.net/wiki/Fastest_Growing_Religion

    பாருங்கள் காவ்யா.

    இந்துமதம் 237 சதம் வளர்ந்திருக்கிறது. ஆனால், இஸ்லாம் 109 சதமே வளர்ந்திருக்கிறது..
    தண்ணீர் குடித்துகொள்ளுங்கள்.

    1. Avatar
      Kavya says:

      பாகிஸ்தானில் போய் இந்துமதப்பிரச்சாரம் பண்ணுங்கள் என்று நீங்கள் போட்ட நகைச்சுவையை இன்னொரு நகைச்சுவையால் எதிர்நோக்கினேன்: அமெரிககர்களை இந்துக்களாக்குங்கள் என்பதுதான். அதைப்புரியாமல் சீனாவைப்பற்றி எழுதுகிறீர்கள். ஐரோப்பியர்களையோ அமெரிக்கர்களையோ இந்துக்களாக்குவது என்பது செந்தில் மலையைத் தூக்குவேன் என்ற்காமெடியைப்போல என்பதுதான் நான் சொன்னது.

      போகட்டும். உங்கள் பிரச்சாரம் எப்படியிருக்கும் என்பதும் நல்ல கற்பனை. கறுப்பர்களிடம் போய் நீங்கள போன பிறவியில் செய்த கர்மவினை இப்பிறவியில் கறுப்பரானது என்றா? அல்லது போன பிறவியில் செய்த நல்ல வினை இப்பிறவியில் வெள்ளையாகப் பிறக்கவைத்தது என்று வெள்ளையர்களிடம் சொல்வதா? அல்லது அங்குள்ள மக்களை வருணங்களாக்கிப்ப்பிரிப்பதா? இவையெல்லாம் நகைச்சுவைதான்.

      இன்னும் விட்டால் தமிழ்நாட்டில் கிருத்துவரோ இசுலாமியரரோ இல்லையென்பீர்கள். அவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுள் அனைவரும் மிசுநோரிகளால் ஏமாற்றப்பட்டவர்கள் அல்ல. குறிப்பாக இசுலாமியர்கள். அவர்களிடம் போய் உங்கள் பிரச்சாரததைப்பண்ணி முதலில் மாற்றுங்கள். பின்னர் தாலிபானகளிடம் போய் பிரச்சாரம் பண்ணலாம் என்ற கருத்தைச்சொல்லவே உள்ளூரில் மாட்டை விற்காமல் வெளியூருக்குப்போகிறீர்கள் என்றேன்.

      இந்துக்களில் எண்ணிக்கை என்பது அனைத்து வகை மக்களையும் சேர்த்துத்தான். சீக்கியர்களைச்சேர்த்து எண்ணச்சொன்னார். அவர்கள் கோர்ட்டுக்குப்போய் நாங்கள் இந்துக்களல்ல என்று வெற்றிபெற்றார்கள்.

      உங்களைப்போன்ற பார்ப்பனர்கள் அனுஸ்டிக்கும் இந்துமதம் சொற்பமே. தமிழர்களிலேயே 5 விகிதத்துக்கும் கீழ்தானே வருவீர்க்ள்? பேய்ச்சியும் புலைச்சியும் மாடனும் காடனும் உங்களுக்கு ? ஆனால் அவர்களை இந்துக்கள் என்று எண்ணிக்கொள்வீர்கள். அவர்கள் அருகில் கூட போக மாட்டீர்கள். மதம் எனபது இன்று ஒரு சாக்கடை அரசியல்.

  9. Avatar
    தங்கமணி says:

    //புனைப்பெயராரோ அல்லது இங்கு எழுதும் மணிகளோ மலர்மன்னன்களோ ராம்களோ இன்னபிற இந்துக்களோ என்றுமே ஞானிகளாக முடியா//
    ரொம்ப நன்றி காவ்யா
    நல்லவேளை. நீங்கள் வரம் கொடுத்தீர்கள்
    எங்கே நான் ஞானியாக ஆகிவிடுவேனோன்னு நானே பயந்துகிடந்தேன்.
    பால் வார்த்தீர்கள்.
    ஆமாம் இதற்கும் ரிங்கிள் குமாரியை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றி (அதுவும் இந்த 21ஆம் நூற்றாண்டிலேயே) “இஸ்லாமை வளர்ப்பதற்கும்” வழக்கம்போல உங்களது இந்துமத வயிற்றெரிச்சலுக்கும் என்ன சம்பந்தம்?

    1. Avatar
      Kavya says:

      பொதுவாக எழுதப்பட்டது. ஒரு அறியாமை நீககுவது அதன் நோக்கம். இந்துமதம் இருவகை; ஞானிகளுக்கு; பாமரருக்கு என்பதுதான் அதன் கருத்து. கருத்தை எதிர்நோக்குங்கள். போதும்.

    2. Avatar
      punai peyaril says:

      எங்களை ஞானியென்று காவ்யா நினைத்தால் அவரது தர ஸ்கேல் நிலை புரியுது… அப்ப அவர் கடவுள் என்று நினைப்பதன் தரமும் புரியுது…

  10. Avatar
    தங்கமணி says:

    காவ்யா,
    இது ஒரு பாகிஸ்தானிய இந்து பெண்ணின் மீதான அடக்குமுறை. இந்த பெண் கோர்ட்டுக்கு போய் என்னை இந்துவாக்கிவிட்டார்கள் என்று அழவில்லை. என்னை முஸ்லீமாக்கி விட்டார்கள் என்று பாகிஸ்தானில் அழுதிருக்கிறார்.

    மழையை பற்றிய கட்டுரையாக இருந்தாலும் விண்வெளி பற்றிய கட்டுரையாக இருந்தாலும் இந்துமதத்தின் மீதான வயிற்றெரிச்சலை கொட்டவே பயன்படுத்துகிறீர்கள்.

    குறைந்தது இந்த பெண்ணின் துயரத்துக்கு ஒரு மரியாதை கொடுக்கவாவது இந்துமத எரிச்சலை இங்கே கொட்டவேண்டாமே?
    வேறொரு பதிவை எடுத்துகொள்ளுங்கள். நன்றாக பேசுகிறேன்.

    //உங்களைப்போன்ற பார்ப்பனர்கள் அனுஸ்டிக்கும் இந்துமதம் சொற்பமே. //
    ஒருவர் என்ன சாதி என்பதை யூகித்துத்தான் அவர்களோடு பேசுவீர்களா?உங்கள் ஜாதி என்னவாக இருந்தால் என்ன என் ஜாதி என்னவாக இருந்தால் என்ன? என் ஜாதிக்கும் ரிங்கிள் குமாரிக்கும் என்ன சம்பந்தம்?
    you are sick. get help.

    1. Avatar
      Kavya says:

      உங்கள் ஜாதி இன்னவாகவிருக்கும் எனக்குறிப்பிட்டு ப்ரவுனி போயின்ட்டைத்தேடியது தவறு. புண்பட்டால் மன்னிக்கவும். ஆனால் என்ன செய்வது தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடும் வள்ளுவரே ஜாதியைக்குறிப்பிட்டுத்தான் குறள் எழதுகிறார். மதுரை மண்ணை மிதித்தால் மதுரைக்குணம்தான் தொற்றும் எனக்கு. வீடு வாடகைக்குத் தேடினால் ஓபனாகச் சொல்கிறான்: எந்தந்த ஜாதிகளுக்கு நான் வீடு தரமாட்டேன் என்று.

      போகட்டும். அப்பெண்ணைப்பற்றிப்பேசும்போது அச்சமூகத்தில் மொத்தத்தையும் பற்றியும் பேச்சு வரத்தான் செய்யும். அதன்படி என் கருத்து அச்சமூகத்தில் மெஜாரிட்டியே அதன் சட்டங்களை வகுக்கும். அது மட்டுமா: அச்சட்டத்தை எங்கெங்கு வசதிக்குத்தக்க போட்டுதைக்கலாம் என்றும் சொல்லாமல் செய்யும்.

      மற்றவரால் ஒன்றும் செய்ய முடியாது.

      என் மடல்களின் எங்கும் தனிமனித பச்சாபிதம் கிடையாது.

  11. Avatar
    punai peyaril says:

    இந்து மதம் பார்ப்பனியர்களது என்றால் , கிறிஸ்துவம் இஸ்ரேல் மனிதர்களது…. இஸ்லாம் அரேபிரயர்களது. புத்தம் பீகாரிகளுடையது… , நமக்கு நமது என்று இருந்தால் மாடனையும் சுடலையையும், பாண்டியையும், முனிசாமியையும் அதன் வாழ்வியல் தத்துவ கோட்பாடுகளைச் சொல்லி உலகமயமாக்க வேண்டியது தானே…! யார் வேண்டாம் என்றார்கள்…?

    1. Avatar
      Kavya says:

      இந்துமதம் பார்ப்பனீய மதமென்றும் பார்ப்பனர்களானது என்றும் சொல்லவில்லை. அதில் பலபலவகை அனுஷ்டித்தல்கள் உண்டு. அவைகளுள் முக்கியமானது பிராமனீசம் ஆகும். அதில் நல்லதும் கெட்டதும் கலந்தே உண்டு. உங்கள் குழந்தைகளுக்கு உபநயனம் செய்ய ஜீயர் திருவல்லிக்கேணியில் எழுந்தருளுகிறார் அன்றோ? சங்கராச்சாரியார் தில்லி காமாட்சியம்மன் கோயிலில் உங்கள் குழந்தகளுக்கு மட்டும்தானே உபநயனம் செய்கிறார். ஆயிரக்கணக்கான தமிழ்ப்பார்ப்பனக்குடும்பங்களுக்கு வேண்டுகோள் விடப்படுகிறது: குழந்தைகளைக்கூட்டியாங்கோ!

      இதே ஜீயர், இதே சங்கராச்சாரியார் மத்தவா குழந்தைகளைக்கூட்டியாங்கோ என்று ஏன் சொல்லவில்ல? அதுதான் பிராமணீசம். அதுதான் வைதீக இந்து மதம். இதைக்கெட்டது என்று சொல்லவில்லை. இப்படி தனித்து இருக்கின்றபடியால் மற்ற மக்கள் நெருங்காவண்ணம் வைதீக இந்து மதம் இருக்கிறது என்றுதான் சொல்கிறேன். அதற்காகத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். அதனாலேயே உங்களைப்பிராமணாள் என்று அழைத்துக்கொள்கிறீர்கள். இதை கெட்டதே என்று சொன்னது நானில்லை. பாரதியார். அவர் சொன்னது மட்டுமல்லாமல், கிண்டலும் பண்ணினார். ஒரு தலித்துப்பையனைக் கூட்டி பூனூல் போட்டு உங்களுக்கு பெப்பே காட்டியது தமிழகம் வியப்புடன் பார்த்தது. உண்மைதானே? ஏன் பண்ணினார் சுவாமிகளா ?

      .கெட்டதே ஆயிரமாயிரமாண்டுகளாக எதிர்க்கப்பட்டு வந்தது. இன்னும் கூட. முக்கியமானதென்ற காரணத்தால், அஃது இருந்தால்தான் இந்து மதம் எனவும்படும் மற்றவருக்கு. பார்ப்பனருக்கு அதுமட்டுமே ஒரே இந்து மதம் (இங்கு வைணவப்பார்ப்பனரை நான் சேர்க்கவில்லை. காடனும் மாடனும் இந்துமதம் கிடையா. அவர்கள் காட்டுத்தெய்வங்கள். அல்லது கிராமத்துத் தேவதைகள். அவர்களை ஏன் உலகமயமாக்கல் செய்யக்கூடாதா என்ற கேள்வியை விட, அவர்களை ஏன் பார்ப்ப்னர்கள் வணங்கவில்லை என்ற கேள்விதான் முக்கியம். தெரிந்தால் சொல்லுங்களேன். மத்தவர்களும் வணங்கவில்லை என்று பொய் சொல்லவராதீர். மதுரையில் தேவமார்களுக்கும் தலித்துகளுக்கும் கருப்பசாமிக்காக சண்டைகள் பல நடக்கும். மதுரை வீரன் சக்கிலியன் என்று எம் ஜி ஆர் சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவன் பல தேவர்குடும்பங்களுக்கு குலதெய்வம் தெரியுமா?

      எத்தனை பார்ப்பனக்குடும்பங்களுக்கு மதுரைவீரனும், கருப்பசாமியும், பேய்ச்சியும், புலைச்சியும் குலதெய்வங்கள்?

      இப்படிப்பட்ட நீங்கள் எப்படி போய் பாகிஸ்தானில் இந்துமதப்பிரச்சாரம் பண்ண முடியும்? அவர்கள் நாங்கள் பூணூல் போடலாமா என்று கேட்பார்களே!

  12. Avatar
    suvanappiriyan says:

    திரு புனை பெயரில்!

    //இஸ்லாம் அரேபிரயர்களது.//

    தவறான வாதம். குர்ஆன் கூறுவதை கேளுங்கள்.

    ‘மனிதர்களே! இத்தூதரான முஹம்மத் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்.’
    -குர்ஆன் 4:170

    இங்கு ‘முஸ்லிம்களே’ என்று இறைவன் விளிக்கவில்லை. ‘மனிதர்களே!’ என்று உலக மக்கள் அனைவரையும் விளிக்கிறான். இது தமிழ் நாட்டிலுள்ள சுப்பனுக்கும் குப்பனுக்கும் கூட பொருந்தும்.

    1. Avatar
      punai peyaril says:

      சரி அப்படியெனில், ஒரு தாழ்த்தப்பட்டவரி மெக்கா மதீனா விற்ற்கு பாதுகாப்பு தலைமை பொறுப்பு தந்த மன்னர் குடும்பத்திற்கும் மேலாக நியமிக்கலாமே…

  13. Avatar
    தங்கமணி says:

    காவ்யாவும் சுவனப்பிரியனும் மனிதர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. உள்ளேயிருந்து ஏதோ மிருகம் ஆட்டிவைக்கிறது என்று நினைக்கிறேன்.
    இங்கே ஒரு இந்து பெண்ணின் அவலம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை முழுவதுமாக உதாசீனம் செய்துவிட்டு, சொந்த பிரச்சாரத்தையே “எழவு வீட்டிலும் தானே பிணமாக இருக்க வேண்டும்” என்பது போன்ற வெறியுடன் எழுதிகொண்டிருக்கிறார்கள்.

  14. Avatar
    தங்கமணி says:

    //எத்தனை பார்ப்பனக்குடும்பங்களுக்கு மதுரைவீரனும், கருப்பசாமியும், பேய்ச்சியும், புலைச்சியும் குலதெய்வங்கள்?//
    எனது நண்பர்களாக இருக்கும் பல திருநெல்வேலி சேர்ந்த பிராம்மண குடும்பங்களுக்கு இந்த தெய்வங்கள் குலதெய்வங்களாக இருக்கின்றன. தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
    மறுபடி சொல்லுகிறேன். இந்த உளறல் பிரச்சாரத்தை வேறொரு ஆர்ட்டிகிளில் வைத்துகொள்ளுங்கள்.
    you and suvanappiriyan are really sick. You need to get help. this is really out of my concern for your wellbeing.

  15. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //காவ்யாவும் சுவனப்பிரியனும் மனிதர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. உள்ளேயிருந்து ஏதோ மிருகம் ஆட்டிவைக்கிறது என்று நினைக்கிறேன்.//

    மனிதர்களுக்கு மேல் என்று சொல்ல வருகிறீர்களோ! அப்படி எல்லாம் இல்லை. நானும் காவ்யாவும் சாதாரண மனிதர்கள்தான்.

    ‘இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது’
    -குர்ஆன் 2:256

    ஒருவரை இஸ்லாத்தில் வலுக்கட்டாயமாக இணைப்பதை குர்ஆன் தடை செய்கிறது. நீங்கள் குறிப்பிடும் ரிங்கிள் குமாரி கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாத்துக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். மேலும் அந்த பெண்ணை வைப்பாக வைத்துக் கொள்ளாமல் திருமணம் முடித்துள்ளார்கள். பெண்ணின் அனுமதி இல்லாமல் திருமணம் என்பது இஸ்லாத்தில் செல்லாது.

    எனவே இங்கு இஸ்லாத்தை குறை கூற இயலாது. இஸ்லாத்தை தவறாக விளங்கிய அந்த முஸ்லிம்களைத்தான் குறை காண வேண்டும். இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சகோதரி ரிங்கிள் குமாரிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மத்திய அரசு தலையிட்டு அந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

  16. Avatar
    தங்கமணி says:

    இன்றைய பாகிஸ்தான் பத்திரிக்கை டான் செய்தி.
    Man arrested for forcibly converting, raping girl
    http://dawn.com/2012/08/07/man-arrested-for-forcibly-converting-raping-girl/
    HYDERABAD, Aug 6: The Sindh High Court’s Hyderabad circuit bench on Monday remanded a man in police custody after a Hindu girl rejected his claim that she had converted to Islam and married him. She, instead, accused the man of abducting her and subjecting her to rape for months.

    Justice Munib Akhtar passed the order after hearing a criminal miscellaneous application filed by Sarwar Solangi.

    Solangi’s counsel, Ghulam Hyder Shah, said that according to Solangi, who was a Hindu of Bagri community prior to his conversion, the 19-year old Hindu girl of Tandojam had accepted Islam on May 20 before Mufti Shafat Rasool Naeemi in Darul Uloom Mujaddidiya, Sahibdad Goth in Malir, Karachi and a certificate to this effect was issued by the institution.

    He said the girl signed a sworn affidavit before Justice of Peace on May 25 and her Nikkah was solemnised with him in Ghazi Dawood Brohi union council in Malir Town, Karachi.

    Her conversion annoyed her parents, said the applicant, and on June 21 her relatives Jairam, Rajoo, Nadhiya and Chainiya forcibly snatched her away from him when they were going to visit shrine of Baba Pardesi in Hyderabad.

    She was kept at an unknown place for 15 days and then shifted to her parents’ home near Chambar road in Tando Allahyar.

    The applicant had requested the court to direct police and the girl’s relatives to produce her in court on Aug 6.

    On Monday, the girl appeared in the court and rejected the Solangi’s claims. She said she had left her house on May 18 to wash clothes when Sarwar and two unidentified men kidnapped her and took her to Karachi. She was kept locked up in a room where Sarwar repeatedly subjected her to rape, she said.

    She said that she was forced to put her thumb impression on blank papers. On July 30, when Sarwar and his friends left the place and went out to buy wine she managed to escape from the place and reached her home.

    She said that she wanted to go live with her parents. The judge asked the girl’s father whether he wanted to pursue the matter further and the father replied he only wanted justice in accordance with law.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *