கோவை இலக்கியச் சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில் இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. ஜுன் மாத நிகழ்வு நரசிம்மலுநாயுடு நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்த்து..
கோவையில் இதழியலின் முன்னோடியாக இருந்தவர் நரசிம்மலுநாயுடு. பயண இலக்கியங்களில் முத்திரை பதித்தவர். அரிய நூல்களைப் பதிப்பித்தவர்.எண்ணிக்கையில் அவர் பதிப்பித்தவை நூற்றுக்கு மேல் இருக்கும். கோவை கிழாரின் நூல்கள் வெளிவர உத்வேகமாக இருந்தவர்.கோவையின் சிறுவாணி குடிநீரின் மூலத்தைக்கண்டு பிடித்து அது கோவை நகர மக்களுக்குக் கிடைக்க்க மூலமாக இருந்தவர். கலாநிதி என்ற பெயரிலான முதல் அச்சுக்கூடம், ஆங்கிலேயருடன் சேர்ந்து அவரை இயக்குனராகக் கொண்ட முதல் மில் ஆகியவை கோவையில் நிறுவப்பட்டிருக்கிறது.அவரால் கட்டப்பட்ட டவுன்ஹால் அருகில் இருக்கும் விக்டோரியாவின் நினைவான விக்டோரியா ஹால் அந்தக் காலக் கட்டிடக்கலைக்கு அத்தாட்சியாக விளங்குவது. முதல் பொது நூலகத்தை ஆரம்பித்திருக்கிறார். அவர் பெயரிலான அப்பள்ளியில் இருமுறை சாகித்யா அகாதமி பரிசு பெற்ற புவியரசு, நாவலாசிரியர் சி.ஆர். ரவீந்திரன், கவிஞர் இரணியன் போன்றோர் பணி புரிந்திருக்கிறார்கள். பள்ளி வளாக வகுப்பறை ஒன்று இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு களமாக இருந்தது.
பிர்தொஸ் இராஜகுமாரனின், “ போன்சாய் மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பை ( உயிர் எழுத்துப் பதிப்பகம் வெளியீடு ) ஜி.தேவி விமர்சனம் செய்தார். தேவி அவர்கள் பெண்தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றிய பல்வேறு ஆய்வுகளையும் களப்பணியையும் நடத்தியவர். மாதர் சங்க பொறுப்புகளில் வழி நடத்திக் கொண்டிருப்பவர். பிர்தொஸ் ராஜகுமாரனின் கதைகள் முஸ்லீம் சமூகத்தின் மூடுண்ட பகுதிகளை வெளிச்சமிடுகின்றன.முஸ்லீம் குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை கொண்டு கேள்விகளை எழுப்புகின்றன. பென்களின் மனமுறிவு சாதாரணமாகும் சூழல்களை முன் நிறுத்துகின்றன். இலக்கிய வாதிகளின் போலி முகங்களை அடையாளம் காட்டுகின்றன். முஸ்லீம் சமூக மத நிர்வாகிகளின் ஊழலை அம்பலப்படுத்துகின்றன. அவை பற்றிய அபிப்பிராயங்களில் அவர் முகம் தட்டுப்படுகிறது. முஸ்லீம் சமூகம் பற்றிய நுணுக்கமான பதிவுகளை அவர் அச்சமூகத்தில் இருப்பதால் வெளிப்படுத்த அவருக்கான வாய்ப்புகளை இன்னும் விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
பொன்.இளவேனில் சுப்ரபாரதிமணியனின் “ மந்திரச்சிமிழ்’” கவிதைத் தொகுப்பை ( காவ்யா பதிப்பகம் சென்னை வெளியீடு ) விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டார். சாதாரணத் தொழிலாளிகளின் வாழ்நிலையும், பெண்கள் மீதான கரிசனமும், சுற்றுலா குறிப்பு அனுபவங்களும், சுற்றுச்சூழல் பதிவுகளும் இடம்பெற்றிருப்பதை கவிதைகளை எடுத்து வாசித்துக் காட்டினார்.
7 நாவல்கள், குறுநாவல்கள் , கட்டுரைத்தொகுப்புகள் , திரைப்படக்கட்டுரைத் தொகுப்புகள், பயண அனுபவ நூல்கள்,நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என 35 நூல்கள் வெளிவந்துள்ளன. இது அவரின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.இதற்கு முன் அவரின் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்ததில்லை..ஆரம்பத்தில் கவிதைப்படைப்புகளின் மூலம் படைப்புலகிற்கு வந்தவர்.
சமூகமும் அதன் செயல்பாடுகளும் ஏற்படுத்தும் மன அவஸ்தைகளின் வெளிப்பாடாகவும், இருப்பின் சிதைவையும், வெளி உலகத்தின் நிர்ப்பந்தங்களையும், அவற்றின் எதிர்வினையாகவும் இக்கவிதைகளைக் கொள்ளலாம். இக்கவிதைகள் எளிமையானச் சொற்களுடனும், படிமங்களின் பாரத்தாலும், அனுபவங்களின் திரட்சையாலும் மூச்சுத்திணற வைக்கின்றன. காட்சிகளின் விவரிப்பும், படைப்பாக்க ரசவாத்தின் சூட்சுமமும் பெரும் வெளியாய் விரிகின்றன.அடிமைத்தளத்திலிருந்து வெளீயாகும் முனகல்கள் விடுதலைக்கான அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. கதறலும், காதலும், அன்பின் வலிமையும், சுதந்திரமாய் பறத்தலும் என்று விரிகின்றன. அவரின் புனைகதைகளின் அம்சங்களை இவற்றிலும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தாலும் அதன் கச்சாப்பொருட்களிலிருந்து அவரால் விலக்கிக் கொள்ள முடியாதபடி இக்கவிதைகளின் மறுவாசிப்பு அமைந்துள்ளது. கவிதை மூலம் மொழி சார்ந்த பயிற்சி, புதிய பிரக்ஞைக்கான தளம், அனுபவப் பகிர்வு, தொடரும் வாசகனின் நுண்ணியப் பார்வைக்கான சவால் என்று இக்கவிதைகளை சுப்ரபாரதிமணியன் இத்தொகுப்பை வடிவமைத்துள்ளார்.
சுப்ரபாரதிமணியனின் சமீபத்திய , எட்டாவது நாவலான “ நீர்த்துளி “
( உயிர்மை பதிப்பக வெளியீடு, சென்னை) பற்றிய விமர்சன உரையாக தஞ்சை நெருஞ்சி இலக்கிய அமைப்பைச் சார்ந்த எழுத்தாளரும், கடற்குதிரை பதிப்பக நிர்வாகியுமான முத்தமிழ் விரும்பி பேச்சை அமைத்திருந்தார். பிதொஸ்ராஜகுமாரன் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருக்கவேண்டிய முஸ்லீம் சமூகம் பற்றிய பதிவுகளை நீர்த்துளி நாவலின் சிக்கந்தர், லியாகத் அலி பாத்திரங்கள் பிரதிபலித்திருக்கின்றன.திருப்பூரைச் சார்ந்த உதிரி மனிதர்களின் வாழ்நிலையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்என்றார்.
உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்திதுளி நாவலின் மையப் பாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன. நீதிமன்றத்தீர்ப்பை ஒட்டி திருப்பூர் சாயப்பட்டறைகளின் மூடலுக்கு பின் தொழில் நகரம் சந்திக்கும் பிரச்சினைகள் விளிம்பு நிலை பனியன் கம்பனி தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சொல்லப்பட்டிருக்கிறது.சாயத்திரை நாவல் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டு விட்ட ஒரு தொழில் நகரம் ஒரு விதப்பூச்சுடன் மினுங்குவதை காட்டியவர். இந்த நாவலில் சுற்றுச்சூழல் பாதிப்பு மனித உரிமைப்பிரச்சினையாகி சாயப்பட்டறைகள் மூடப்படுதலையும் அதனால் அவதியுறும் தொழிலாளர்கள் பற்றியும் சக மனிதர்களின் அனுபவங்கள் வழியே விவரிக்கிறது, இடம்பெயர்ந்து வந்து வாழும் மக்களின் பிரச்சினைகளை கூர்ந்து கவனிக்கிறது. தனித்து வாழும் உதிரி மக்களின் வாழ்க்கை சமகால அரசியலுடன் பேசப்படுகிறது. பலமான உரையாடல் தளங்கள்..சிறு சிறு தொன்மங்களின் மீட்சிகள், முஸ்லீம் சமூக வாழ்க்கை. குற்றவுணர்வுடன் சமீப நிகழ்வுகளைப் பார்க்கும் கிறிஸ்துவ இளைஞன். சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சமூக நிர்பந்தங்களால் நிலை குலைந்து போகும் இருவர். இவர்களின் வாழ்க்கை திருப்பூரின் இன்னொரு முகமாக விரிந்திருக்கிறது.
கோவை ஞானி நீர்த்துளி பற்றி பேசினார். திருப்பூர் என்ற வணிக நகரம் தன் இயல்புகளை இழந்து சிதைவுகளின் படிமமாகி வருவதை சுப்ரபாரதிமணியன் சாயத்திரை., பிணங்களின் முகங்கள், தேனீர் இடைவேளை, ஓடும் நதி, சமையலறைக்கலயங்கள் நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார். திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை க்லைவடிவங்களாக்கியுள்ளார்.இச்சிதைவு தவிர்க்க இய்லாதது. மனிதத்தை நிராகரிக்கும் எந்த சமூகமும் இச்சிதைவை சந்தித்தே தீரும், அதை எழுத்தில் கொண்டு வருவதில் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்றார்.
இளஞ்சேரலின் கட்டுரை கோவையில் சுரேஷ் குமார் இந்திரஜித்தைக் கொண்டு “ அருவி” அமைப்பு நடத்திய “ புனைவின் மொழி “ என்ற தலைப்பிலான நிகழ்வு பற்றிய சுவாரஸ்மானக் கட்டுரையாக அமைந்திருந்த்து. பிதொஸ்ராஜகுமாரன் ஏற்புரையில் முஸ்லிம் சமூகம் பற்றிய ஒளிவு மறைவற்ற பதிவுகளுக்கு தன் குடும்பம் ஊக்குவிப்பதால் இன்னும் தீவிரமாக இயங்க வழி பிறந்திருகிறது என்றார். சுப்ரபாரதிமணியன் தன் ஏற்புரையில் “ நீர்த்துளி “ நாவலின் பின்புலம் பற்ரி விரிவாகப் பேசினார்.உலக்மயமாக்கலில் இடம்பெயரும் மக்களின் புகலிடமாக திருப்பூர் உள்ளது.அதில் ஒற்றைப் பெற்றோரின் பங்கும் அவர்களின் பாலியல் சுதந்திரமும் உளவியல் சிக்கல்களுக்குக் கொண்டு செல்கிறது. கலாச்சார கட்டுடைப்பு என்பது பல தளங்களில் நிகழ்ந்தாலும் அது குற்ற உணர்வின் மேலிடலாக இருக்கிறது. தொழிற்சங்க உணர்வை இழந்த நவீன தொழிலாளி கொத்தடிமையாக இருக்கிறான். சமூகத்திலிருந்து அந்நியப்பட்ட அவன் சமூகப்பாதுகாப்பற்ற மனிதனாக அகதியாகத் திரிகிறான். சாயப்பட்டறைளின் மூடும் நீதிமன்ற தீர்ப்பு பொருளாதார சிக்கல்லளூடே அவனை மன நோயாளியாகுவதை சுலபமாகப் பார்க்க முடிகிறது. இச்சூழலில் இணைந்து வாழ ஆசைப்படும் திருமண முறிவில் இருக்கும் ஒரு பெண், திருமணமாகாத் ஒரு ஆணுடன் இணைந்து வாழ்தலை சட்டம் அனுமதித்தாலும் சமூகம் பார்க்கும் பார்வையின் கோணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறது. ஊடாக சுற்றுசுழல் குறித்த இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் மனித உரிமைப்பிரச்சினையாக வடிவெடுத்திருக்கின்றன என்றார்.
விவாதங்களில் யுகமாயினி சித்தன், நாவலாசிரியர் மா.நடராசன், பொதிகைச் சித்தர், கலை இலக்கியப் பெருமன்றம் பா.ரமணி , சிறுதுளி ஜெயராமன் உட்பட பலர் பங்கு பெற்றனர்.
செய்தி: சாமக்கோடாங்கி ரவி
————————————————————————————————————————————————-
- அம்மா என்றால்….
- காக்க…. காக்க….
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2
- நினைவுகளின் சுவட்டில் (92)
- ’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’
- ‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்
- வாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)
- அம்மாவாகும்வரை……!
- எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?
- கோவை இலக்கியச் சந்திப்பு
- நிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்
- ‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்
- முள்வெளி அத்தியாயம் -16
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)
- உகுயுர் இனக் கதைகள் (சீனா)
- கள்ளக்காதல்
- தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்
- மோட்டுவளை
- சேட்டைக்காரக் கறுப்புப் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
- நேற்றைய நினைவுகள் கதை தான்
- தீவிரவாதம் ஆக்கிரமித்த முஸ்லீம் மனம்
- கங்குல்(நாவல்)
- சிரியாவில் என்ன நடக்கிறது?
- ராஜமௌலியின் “ நான் ஈ “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- அறிவிருந்தும் கல்லூரியில் சேரமுடியாதவர்களுக்கு….
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1
- கவிதைகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !)
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு
- குறிஞ்சிப் பாடல்
- புள்ளியில் விரியும் வானம்
- சுப்புமணியும் சீஜிலும்
- பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்