விழலுக்கு நீர் இறைக்கும் அரசு இயந்திரம்
அரசியல் நடவடிக்கைகள், அறிவிப்புகள் இவையே அரசியல்வாதிகளின் தினசரிப் பணி . ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இவை ஒன்றும் மாறி விடப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் போது அரசின் முடிவுகள், பட்ஜெட் அறிவிப்பு போன்ற முக்கிய நடவடிக்கைகளில் சமூக நலனில் தமது அக்கறையை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் நிதியை ஒதுக்கும் போது அரசியல் நடவடிக்கையாக மக்களின் நன் மதிப்பைப் பெறும் மிகப் பெரிய ஆயுதமாக அது பயன்படுத்தப் படுகிறது. வருட முடிவில் எத்தனை சதவீதம் செலவானது என்பது வேறு விஷயம்.
2012-13 பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான பகுதியில் மத்திய அரசு துவக்க உள்ள 3000 பள்ளிகள், சர்வ சிஷா அபியான் என்னும் அனைவருக்கும் கல்விக்கான திட்டம் போன்றவை வழக்கமானவை. வித்தியாசமான இரண்டு ஒதுக்கீடுகள் கல்வித் துறையிலும், மூன்றாவதாக சமூக நலத் துறையின் ஒதுக்கிட்டையும் கீழே காண்கிறோம்.
Education:
Ragiv Gandhi Scheme for empowerment of adolosent girls : 750 crores
National Skill Development : 1000 crores
Social Welfare:
Upgradation of Merit of ST Students : 823.78 crores
மேற்கண்ட மூன்றும் மத்திய அரசின் துறையின் நேரடிச் செலவீனங்களின் வழியே மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. அதாவது மனித வள மேம்பாட்டு அடிப்படையில் முன்வைக்கப் பட்டுள்ள இந்த வகைத் திட்டங்களுக்கு மத்திய அரசின் துறை சார்ந்த அலுவலர் யாரும் நேரடியாக மக்களைச் சென்று ஒரு மாணவர் அல்லது மாணவியின் திறன் மேம்பாட்டிற்கோ, கல்வி மேம்பாட்டிற்கோ களப் பணி செய்வது நடை முறை சாத்தியமில்லாதது.
எனவே இந்த நிதியெல்லாம் களப்பணி செய்து வரும் (அதற்கான அத்தாட்சியுடன் வரும்) தன்னார்வ நிறுவனங்களால் (NGOs) பெற்றுக் கொள்ளப் படுகின்றன. பல மாணவர், குறிப்பாக கிராமப்புற மாணவர் பயன்பெற வேண்டி அறிவிக்கப் படும் இந்தத் திட்டத்தின் ஷரத்துக்கள் தெரிந்த தன்னார்வ நிறுவனம் இதற்கான சன்மானத்தை தான் கணக்குக் காட்டும் மாணவர் அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ள இயலும்.
பயன் பெற்ற மாணவரிடமும், சன்மானம் பெற்ற தன்னார்வ அமைப்பிடமும் விவரம் சேகரித்து யாராவது ஆய்வுப் பணி செய்திருக்கிறார்களா? அல்லது மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பு அதிகாரிகள் பங்கிடப் பட்ட சன்மானம் முறையாக செலவிடப் பட்டு இலக்காகக் கொண்ட சமூக நலன் தொடர்பான பணி நடந்ததா என்று விசாரிக்கிறார்களா ? என்னும் கேள்விகளுக்கு விடையில்லை. முறையான கட்டிடம், கணிப்பொறி வசதிகள், பயிற்சி ஆசிரியர் எதுவுமே இல்லாமல் கடிதப் படிவம் (letter pad) மட்டுமே வைத்துக் கொண்டு பெயரளவு விளம்பரம் செய்து, ஒரு பெயர் பலகையை முகப்பில் மாட்டி, ஓரிரு தலித் மாணவர், சொற்பமாக ஏனைய சிலர் என்னும் அடிப்படையில் எண்ணிக்கையில் குறைவான சிலருக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்து பலர் படித்த மாதிரி சன்மானம் பெறும் நடைமுறை சர்வ சாதாரணமாக நிலவுகிறது. தன்னார்வ நிறுவனங்களின் பின்னணி, பண பலம், நடவடிக்கைகள், அரசாங்கத்தில் செல்வாக்கு, அவர்கள் கைப் பற்றும் அரசு நிதி இவை பற்றி மிகப் பெரிய நூலே எழுதலாம். நிறையவே முறைகேடுகளும், அத்து மீறல்களும் நிகழும் புலம் அது.
கிராமப் புறத்தின் இன்றைய நிலை ஒன்றே நிரூபணம். ஆயிரக்கணக்கான கோடிகளை விழுங்கிய தன்னார்வ நிறுவங்களின் பங்களிப்பு என்ன என்னும் கேள்விக்கு விடையாக.
இப்படி மக்களின் வரிப்பணம் விழலுக்கு இறைத்த நீராகிறது. இன்னொரு பக்கம், வசதி இருக்கிறதோ இல்லையோ கணிப் பொறித் திறன் அல்லது கல்வி சம்பந்தப் பட்ட தனியார் பயிற்சிக்கென தலித் பெற்றோர் ஏனையர் என பெற்றோர் நிறையவே செல்வு செய்கின்றனர்.
ஓரளவு, அல்லது நல்ல கட்டமைப்பு வசதி, கணிப்பொறி எல்லாம் இருக்கும் பல தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் குக்கிராமங்களில் செயற் படுவது நிதர்சனம். இந்தக் கல்லூரிகளுக்கு பேருந்துகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வந்து போவதைத் தவிர, அந்த கிராமத்துக்கும் இந்தக் கல்லூரிகளுக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. தன்னார்வு நிறுவங்களுக்க்ப் பதில் இந்தக் கல்லூரிகளே களப்பணி செய்யவும், அல்லது தன்னார்வ நிறுவனங்களுக்குத் தமது கட்டமைப்பு வசதிகளைக் கொடுக்கவும் அரசு வழி செய்தால் கண்டிப்பாக நெல்லுக்கும் கொஞ்சம் நீர் பாயும்.
கல்வி உரிமை (Right to Education) நிஜமாகவே நனவாக வேண்டுமென்றால் தனது (சுமாரான) கட்டுப்பாட்டில் இயங்கும் தனியார் கல்வி நிறுவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தோர் எண்ணிக்கையை மேம்படுத்துவது, கிராமப்புற மாணவருக்கு தொழில் சம்பந்தப்பட்ட திறன் மேம்பாடு ஆகிய இலக்குகளைக் கொடுக்க வேண்டும். இலக்கை எட்டினால் சன்மானமும் கொடுக்கலாம். எட்டாவிட்டால் அபராதம். இந்த முனைப்பை வெளிப்படுத்தும் அரசுக்கு அது அரசியல் ஆதாயத்தையும் கண்டிப்பாகக் கொடுக்கும்.
பணம் கொடுத்து, மது பாட்டில் கொடுத்து ஓட்டுக்களைப் பெறும் வாய்ப்புப் பறி போகும் என்பதால் அனைவருக்கும் கல்வி என்பதில் அரசியல்வாதி நல்ல நோக்கத்துடன் ஈடுபாடு காட்ட வாய்ப்பில்லை.
——————————————-
- உன் காலடி வானம்
- பரிணாமம் (சிறுகதை)
- ஒரு புதையலைத் தேடி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23
- நினைவுகளின் சுவட்டில் (95)
- மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்
- காற்றின்மரணம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5
- கசந்த….லட்டு….!
- சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.
- இசை என்ற இன்ப வெள்ளம்
- தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- கவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36
- அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-
- ஜிக்கி
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
- கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)
- முள்வெளி அத்தியாயம் -19
- நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)
- தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது
- பஞ்சதந்திரம் தொடர் 54
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு
- பொறுப்பு – சிறுகதை
- நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு
- தரிசனம்
- கனலில் பூத்த கவிதை!
- தசரதன் இறக்கவில்லை!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி
- சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?
- கொடுக்கப்பட பலி
- வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
- அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி