அற்புதமான ஓர் சுய முன்னேற்ற புத்தகம் – Who moved my Cheese

This entry is part 14 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

Who moved my Cheese- மிக சிறிய ஆனால் செறிவான புத்தகம்.

கதை வடிவில் சுய முன்னேற்ற கருத்துகள் சொல்கிறது இந்த புத்தகம். இதனை எழுதியவர் ஸ்பென்சர் ஜான்சன்

கல்லூரி படிப்பை முடித்து சில வருடங்கள் கழித்து சில நண்பர்கள் சந்திக்கிறார்கள். யார் யார் எந்த நிலையில் உள்ளனர் என்று பேசி கொள்கின்றனர். இதை சொல்லி விட்டு நேரே ஒரு கதைக்குள் நுழைகிறார் ஆசிரியர்.

நான்கு குட்டி எலிகள் ஒரு இடத்தில் உள்ள Cheese-ஐ மகிழ்வுடன் உண்டு வருகின்றன. இவை நான்கின் குணாதிசயமும் விரிவாய் சொல்லப்படுகிறது. எலிகளுக்கு என்று வெவ்வேறு பெயர்கள் சொல்கிறார்கள். இந்த பெயர்கள் அந்நியமாய் இருப்பதால் நாம் என்று எடுத்து கொள்வோம். இதில் A மற்றும் B சற்று புத்திசாலி மற்றும் சுறுப்பான எலிகள். C மற்றும் D சற்று சோம்பேறி எலிகள்.

C மற்றும் D எப்போதும் சீஸ் கிடைக்கும் என உறுதியாய் நம்புகின்றன. ஆனால் A -யும் B-யும் சீஸ் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது என உற்று கவனிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் சீஸ் ஸ்டேஷனில், சீஸ் கிடைப்பது குறைகிறது. இதனால் A , B அந்த சீஸ் ஸ்டேஷனை விட்டு வேறு சீஸ் ஸ்டேஷன் தேடி அலைந்து, சற்று சிரமத்துக்கு பின் ஒரு நல்ல சீஸ் ஸ்டேஷன் சென்று சேர்ந்து விடுகின்றன.

C -யும் D -யும் எந்த கவலையும் இன்றி இருக்கும் சீஸ் சாப்பிட்டு வருகின்றன. அங்கு சீஸ் கொஞ்சம் கொஞ்சமாய் காலி ஆனது பற்றி கூட அவர்களுக்கு மிக தாமதாமாய் தான் தெரிகிறது. ஒரு நேரத்தில் சுத்தமாய் சீஸ் தீர்ந்து விடுகிறது. அதன் பின்னும் C & D அந்த இடத்துக்கு தினம் வந்து பார்த்து செல்கின்றன.

ஒரு நிலையில் இங்கு சீஸ் கிடைக்காது என D இங்கிருந்து வேறு இடம் தேடி போகலாம் என்கிறது. ஆனால் C ” நமக்கு வயதாகி விட்டது. இனி வேறு இடம் தேடி போக முடியாது. நாம் என்ன தப்பு செய்தோம்? நமக்கு கொஞ்ச நாளில் இங்கேயே சீஸ் கிடைக்கும்” என்கிறது.

வேறு வழியின்றி C ஐ விட்டு விட்டு D அங்கிருந்து வேறு இடம் தேடி செல்கிறது. மிக சிரமத்க்கு பின் நல்ல சீஸ் ஸ்டேஷன் ஒன்றை பார்க்கிறது. அங்கு தான் அதன் பழைய நண்பர்கள் A மற்றும் B உள்ளனர். கொஞ்ச நாளில் C யும் கூட இந்த சீஸ் ஸ்டேஷனை தேடி வர கூடும் என்று D நினைப்பதுடன் குட்டி கதை முடிகிறது.

பின் நண்பர்கள் இந்த கதை குறித்து பேசி கொள்கிறார்கள். இந்த கதையில் தான் எந்த பாத்திரத்தை ஒத்து போகிறேன்; கதையில் சொன்னது போன்ற சம்பவம் தனக்கு என்ன நடந்தது, தான் அப்போது எப்படி நடந்து கொண்டேன் என பேசுகிறார்கள். மிக சுவாரஸ்யமான இந்த உரையாடலுடன் கதை நிறைவடைகிறது

கதை சொல்கிற முக்கிய விஷயம் : உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கூர்ந்து கவனியுங்கள் ! மாறுதலுக்கு தயாராகுங்கள் .. என்பதே.

கதையை படிக்கும் அவரவருக்கும் அவரவர் அப்போது சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு எதோ ஒரு இடத்தில் கிட்ட வாய்ப்புகள் அதிகம்.

நான் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அப்போதைய பிரச்னையை மனதின் பின்புலத்தில் வைத்து கொண்டு படிப்பேன். நிறைய புது விஷயமும் தீர்வும் கிடைக்கும்.

புத்தகத்தில் சொல்லப்பட்ட சில அழகிய வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு:

நீங்கள் மாறா விடில், அழிந்து தான் போவீர்கள் (If you do not change, you can become extinct).

சில நேரம் வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறி விடும். பின் அவை முன்பு போல் இருக்கவே இருக்காது. வாழ்க்கை இப்படி தான் இருக்கும் ! நகர்ந்து சென்று கொண்டே இருக்கும் வாழ்க்கை ! அதனுடன் சேர்ந்து நாமும் நகரத்தான் வேண்டும் ! (Sometimes things change and they are never the same again. That’s life ! Life moves on ! And so should we !)

உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கவனித்தபடியே இருங்கள். அப்போது தான் பிரச்னை ஆரம்பிக்கும் போதே நீங்கள் சீக்கிரம் உணர முடியும்

சிறு மாறுதல்களை சீக்கிரம் உணர்வது பெரிய மாற்றங்களுக்கு உங்களை தயார் படுத்தி விடும் ( Noticing small changes early helps you adapt to the Bigger changes that are to come)

மாறுதல்களை சந்தோஷமாக அனுபவியுங்கள். புது அனுபவம் மற்றும் சவால்களுக்கு தயங்காதீர்கள் ( Enjoy the change ! Savor the Adventure and Enjoy the taste of New cheese!)
*****
நான் இதுவரை படிததவற்றில் ஒரு மிக சிறந்த புத்தகம் என்றும், ஒவ்வொரு மனிதரும் தவற விடாமல் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் நிச்சயம் பரிந்துரைப்பேன் !

புத்தகம் இணையத்திலேயே PDF மற்றும் PPT வடிவில் இலவசமாக கிடைக்கிறது.தேடிப் பார்த்து அவசியம் வாசியுங்கள் இந்த அரிய புத்தகத்தை !

Series Navigationபி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”வாழ நினைத்தால் வாழலாம்!
author

மோகன் குமார்

Similar Posts

2 Comments

  1. Avatar
    K R Mani says:

    அப்பா, ஒரு புத்தகம் இத்தனை வருடம் கழித்து உயிரோடு இருப்பது ஆச்சரியம் தருகிறது. இதன் முழு மொழியாக்கத்தை நான் ஏற்கனவே திண்ணையில் பிரசுரித்திருக்கிறேன். தேடிப்பார்த்தால் கிடைக்கலாம்..

    இல்லையென்றால் இந்த லிங்கில் அது கிடைக்கும்
    http://www.krmani.com/2010/11/who-moved-my-cheese-out.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *