பாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?

author
2
0 minutes, 15 seconds Read
This entry is part 34 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

 

ரிச்சர்ட் லாண்டெஸ்

கலாச்சாரத்துக்கும், தேசங்களின் வளமைக்குமான தொடர்பு பற்றி  மிட் ராம்னி சரியாகத்தான் சொன்னார்.

இஸ்ரேலிய பொருளாதார வளர்ச்சிக்கான கலாச்சார பரிணாமங்களை பற்றி மிட் ராம்னி ஜெருசலத்தில் பேசியது ஒரு புயலை கிளப்பியுள்ளது. பாலஸ்தீன கலாச்சாரத்தை விமர்சித்ததாக சரியாக புரிந்துகொண்ட பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் சாய்ப் எரிகட் (Palestinian spokesman Saeb Erekat), மிட் ராம்னியை ஒரு இனவெறுப்பாளர் (racist) எனவும், பாலஸ்தீனத்து பொருளாதார பிரச்னைகளுக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பே காரணம் என்றும் கூறினார். எரிகட் அவர்களது எதிர்வினை மிட் ராம்னி அவர்களை ஒரு சமாதான இடைதூதராக இருக்கமுடியாத நிலைக்கு தள்ளிவிட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிகழ்வு மத்திய கிழக்கு அரசியலைப் பற்றி எவ்வளவு சொல்கிறதோ அதே போல அமெரிக்க ஜனாதிபதி தேர்தலைப் பற்றியும் சொல்கிறது.

 

தன்னுடைய சிறிய உரையில், ராம்னி இரண்டுபுத்தகங்களை மேற்கோள் காட்டினார். ஒன்று ஆய்வாளர் ஜாரெட் டயமண்ட் அவர்களது “Guns, Germs and Steel,” என்ற புத்தகம். இரண்டாவது பொருளாதாரவியல் அறிஞர் டேவிட் லாண்டஸ் அவர்கள் எழுதிய ”தேசங்களின் வளமையும் ஏழ்மையும்” என்ற புத்தகம்( “The Wealth and Poverty of Nations,” David Landes). (டேவிட் லாண்டஸ் என்னுடைய தந்தை). மற்ற சமூகவியல் அறிவியல் துறைகளைப் போலவே, பொருளாதாரவியலிலும், பொருளாதார வளர்ச்சி என்பது, நோய்த்தடுப்பு சக்தி, அடிப்படை மூலங்களை பெற்றிருத்தல் போன்ற இயற்கையான வாய்ப்புகளிலிருந்து வருகிறதா அல்லது கலாச்சார வாய்ப்புகளிலிருந்து வருகிறதா என்று விவாதிக்கிறார்கள்.  பேராசிரியர் ஜாரெட் டயமண்ட் அவர்கள், சமூகத்தின் இயற்கையான வாய்ப்புக்களிலிருந்தே சமூகங்கள் வளர்ச்சி பெறுகின்றன என்று கருதுகிறார். சென்ற வாரம், நியூயார்க் டைம்ஸ் இதழில் கலாச்சாரமும் இயற்கை வாய்ப்புக்களும் இணைந்தே வளமைக்கு காரணமாகின்றன என்று எழுதினார். பேராசிரியர் டாண்டெஸ் அவர்களை தன்னோடு இணைத்துகொள்ளவும் முயன்றார்.

ஆனால்,  (இரண்டு புத்தகங்களுமே ஆராயாத) இஸ்ரேலும், (லாண்டஸ் அவர்களது புத்தகம் ஆராய்ந்த) அரபு உலகமும் கலாச்சார கூறுகளே பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதும் போதுமானதுமானது என்று விளக்குகிறது. ஒட்டோமான் பேரரசில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதியாக இருந்த இஸ்ரேலில் எந்த விதமான இயற்கை வளங்களும் இல்லை. தனது கலாச்சாரத்தின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த நாடுகளின் உச்சிக்கு சென்றிருக்கிறது. மாறாக, அரபு நாடுகளோ, ஒரு குறிப்பிட்ட கலாச்சார மன நிலையின் தேவையை சுட்டிக்காட்டுகின்றன. மிகவும் தேவைக்கு அதிகமான பெட்ரோ டாலர்களின் பெருக்கம் இருந்தாலும்,  உலகத்திலேயே மிகவும் குறைவான உற்பத்தி திறன் கொண்ட பொருளாதாரங்களில் ஒன்றாகவே  அரபு நாடுகள்  இருக்கின்றன.

அமெரிக்கர்கள் பொதுவாகவே எல்லோரும் தங்களது கலாச்சார அணுகுமுறைகளையே கொண்டிருக்கிறார்கள் என்று அனுமானிக்கிறார்கள். அதாவது எல்லோருமே, தங்களுக்கு சாதகமான, இருபக்கமுமே வெற்றிகொண்டதாக, சுதந்திர நட்புறவுகளுக்கு ஆசைப்படுகிறார்கள் என்று கருதுகிறார்கள். எல்லோருமே சிறந்த உற்பத்திக்கு உயர்ந்த மரியாதை அளிக்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.  “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதன் ஆழத்தில் இருக்கும் திறமைக்கு ஏற்ற மரியாதையை எல்லோரும் ஏற்றுகொள்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். எல்லோரும் விமர்சனத்தை வரவேற்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். எல்லொரும்  அறிவுஜீவி முதலீட்டை (intellectual capital) மதிக்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.  துணிந்து செயலில் இறங்குவதை போற்றுகிறார்கள் என்று நினைக்கிறார்கள், வெளிப்படையாக இருப்பதையும், புதிய கருவிகளையும் வழிமுறைகளையும் கண்டுபிடிப்பதை எல்லோரும் விரும்புகிறார்கள் என்று கருதுகிறார்கள்.  அப்படிப்பட்ட விழுமியங்களின் மீது கட்டப்பட்ட அமைப்புகளின் துணையுடன், – பணம் எடுத்துகொள்ளும் கலாச்சாரத்துக்கு மாறாக பணத்தை உருவாக்கும் கலாச்சாரத்தை  கொண்ட ஒரு சமூகம் எந்த விதமான அடிப்படை மூலங்களை நிலப் பரப்பு  கொடுத்தாலும் அதனை உபயோகித்து வளமடையும்.

ஆனால், அதற்கு மாறான கலாச்சாரங்கள் இருக்கின்றன. இங்கே சுயாதீனமான உழைப்புக்கு மாறாக கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பே சாதகமானதாக கருதப்படுகிறது. இங்கே “ஆளு அல்லது ஆளப்படு” என்பதே சமூக அரசியல் பொருளாதார வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இங்கே உனக்கும் கிடையாது எனக்கும் கிடையாது என்ற zero-sum கொள்கையே முன்னிருத்தப்படுகிறது. இந்த கலாச்சாரங்களில் அறிவுஜீவி திறந்த விமர்சனமும், கட்டுப்படுத்தப்படாத புதிய கருத்துக்களை பேசுவதும் செயலூக்கம் கொள்வதும் துரோகம் என்று ஒருவித சந்தேகத்துடன் தான் பார்க்கப்படுகிறது. மனப்பாடம் செய்வதும், அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்காத மரியாதையும் இங்கே வலியுறுத்தப்படுகிறது. மாபியாக்களுக்கு கொடுக்கும் பணமே இங்கே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகிறது. போலீஸ் அல்ல. இந்த மாபியாவுக்கு கொடுக்கும் பணம் பொருளாதாரத்தை வீழ்த்தினாலும் அது முக்கியமானதாக இருக்காது. பொது விமர்சனம் இங்கே கடுமையான எதிர்ப்பை கொண்டுவருகிறது. இந்த சமூகங்களில்,  சக்தி வாய்ந்தவர்கள்,  பணத்தை எடுப்பதன் மூலமே பணக்காரர்களாக ஆகிறார்கள். பணத்தை உருவாக்குதன் மூலமாக அல்ல.

மேற்கண்ட குணாம்சங்களை கொண்ட நாடுகளுக்கு,  அரபு உலக நாடுகளை விட சிறப்பான எடுத்துக்காட்டை கொடுத்துவிட முடியாது. 2002 ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அரபு அறிவுஜீவிகள் அறிக்கை  இந்த விஷயங்களை சுட்டிக் காட்டுகிறது. “தேசங்களின் வளமையும் ஏழ்மையும்” புத்தகம் சுட்டிக்காட்டுவது போல, அரபு கலாச்சாரம் இந்த பிரச்னைகளை தீவிரமடைய வைத்து, பெண்கள் மீது தீவிர-பொறாமையும்,  பெண்வெறுப்பும் மறுபுறம், பூட்டிவைக்கப்பட்ட பெண்களும், செல்லம் கொடுத்து கெடுக்க வைக்கப்பட்ட ஆண்களுமாக வெளிப்படுகிறது.

 

பெட்ரோ டாலர்கள் பெருமளவு இருந்தாலும், அரபு நாடுகளின் பொருளாதார அடிப்படை கோளாறைச் சரி செய்ய முடியவில்லை. எல்லோரும் பயன் பெறும் வண்னம் பொருளாதார வளர்ச்சி இல்லாமல், ஊழல் மிக்கதாய் இவை உள்ளன. அதிகார வர்க்கமும், அரசு வர்க்கமும், யாருக்கும் பதில் சொல்லத் தேவை இல்லாத திமிருடன் எதேச்சாதிகார ஆட்சி புரிகின்றனர். எண்ணெய் வளம் பெற்ற லிப்யா, ஈராக் நாடுகளும், எண்ணெய் வளமற்ற எண்ணெய் வளமற்ற சிரியா, எகிப்கு நாடுகளும் பொருளாதார அமைப்பு ஒன்றே போல் கொண்டுள்ளன. எதேச்சாதிகாரக் கலாசாரம் மாறுதலைத் தடை செய்கிறது. மக்கள் பெரும் துன்பத்தில் இருந்தாலும், மேல்தட்டு ஆட்கள் பெரும் வசதியுடன் உலா வருகிறார்கள்.

 

ஆனால் பாலஸ்தீனக் கலாசாரம் இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது பலவிதத்தில் முன்னேறிய ஒன்று. காரணம் ஜியோனிஸ்ட் யூதர்கள் யுத்தமின்றி, பாலஸ்தீனம் இஸ்ரேலில் காலூன்றி எல்லோரையும் அரவனைத்துச் செல்ல விரும்பியது தான்.19ம் நூற்றாண்டிலிருந்தே யூதர்கள் அருகாமையில் கிருன்க சமூகங்கள் செழித்தன. உதாரணம் – ஜெருசலேம், தெல் அவிவ், கெப்ரான். யூதர்கள் அருகாமை இல்லாத நாசரெத், நப்லுஸ், காசா பகுதிகள் பின்னடைவு அடைந்தன. இஸ்ரேலியர்கள் அருகாமையில் இருந்த பகுதிகளில் பாலஸ்தீனர்களின் கல்வியும் வளமையும் பெருகிற்று. 19080-களில் மேற்குக்கரை உலகின் வெகுவேகமாக வளர்ந்து வந்த நிலப் பகுதிகளில் ஒன்றாய் இருந்தது.

யூதர்களின் பொருளாதாரத் தலைமையும், வழிகாட்டலும் அரபு தலைவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. பிரிட்டிஷ் பீல் கமிஷன் முன்பு இந்தத் தலைவர்கள் கூறினார்கள். யூதர்கள் எங்கள் நாட்டை வளம் பெற்றதாய் மாற்றி அமைத்ததாய்ச் சொல்கிறீர்கள். எங்களுக்கு அது தேவையில்லை. அவர்கள் வெளியேற வேண்டும். நாங்கள் ஏழ்மையில் வீழ்ந்தாலும் பரவாயில்லை.”

இப்படிப் பட்ட தலைவர்கள் தான் பாலஸ்தீனர்களையும், இஸ்ரேலியர்கலையும் பயங்கரவாதத்திற்கு இட்டுச் சென்றவர்கள். ராம்னியை இனவாதி என்று குற்றம் சாட்டுகிறவர்கள் இந்தக் கலாசாரத்தினைச் சேர்ந்தவர்கள். பாலஸ்தீன வளர்ச்சியின்மையை சுய விமர்சனம் செய்யாமல் இஸ்ரெலைக் குற்றம் சாட்டியே அரசியல் செய்பவர்கள்.தம்முடைய மக்களையே மரணத்திற்கு இட்டுச் செல்லும் கலாசாரத்தைப் பேணிக் காப்பவர்கள்.

பாலஸ்தீனத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிலர் உண்டு. யாசர் அராஃபத் 2000ல் இஸ்ரெலின் சமாதான ஒப்பந்தத்தை நிராகரித்தபோது இவர்கள் அழுதார்கள்.

 

Mr. Landes, a medieval historian at Boston University, is author of “Heaven on Earth” (Oxford University Press, 2011). He blogs at theaugeanstables.com.

 

Series Navigationஅமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்பஞ்சதந்திரம் தொடர் 56
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    தங்கமணி says:

    //ஆனால், அதற்கு மாறான கலாச்சாரங்கள் இருக்கின்றன. இங்கே சுயாதீனமான உழைப்புக்கு மாறாக கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பே சாதகமானதாக கருதப்படுகிறது. இங்கே “ஆளு அல்லது ஆளப்படு” என்பதே சமூக அரசியல் பொருளாதார வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இங்கே உனக்கும் கிடையாது எனக்கும் கிடையாது என்ற zero-sum கொள்கையே முன்னிருத்தப்படுகிறது. இந்த கலாச்சாரங்களில் அறிவுஜீவி திறந்த விமர்சனமும், கட்டுப்படுத்தப்படாத புதிய கருத்துக்களை பேசுவதும் செயலூக்கம் கொள்வதும் துரோகம் என்று ஒருவித சந்தேகத்துடன் தான் பார்க்கப்படுகிறது. மனப்பாடம் செய்வதும், அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்காத மரியாதையும் இங்கே வலியுறுத்தப்படுகிறது. மாபியாக்களுக்கு கொடுக்கும் பணமே இங்கே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகிறது. போலீஸ் அல்ல. இந்த மாபியாவுக்கு கொடுக்கும் பணம் பொருளாதாரத்தை வீழ்த்தினாலும் அது முக்கியமானதாக இருக்காது. பொது விமர்சனம் இங்கே கடுமையான எதிர்ப்பை கொண்டுவருகிறது. இந்த சமூகங்களில், சக்தி வாய்ந்தவர்கள், பணத்தை எடுப்பதன் மூலமே பணக்காரர்களாக ஆகிறார்கள். பணத்தை உருவாக்குதன் மூலமாக அல்ல.//
    இந்தியாவிலும் இந்த குணாம்சங்கள் உண்டு.

  2. Avatar
    dharmaraj.A says:

    The culture of a country can develope the economy through arts and intellectual achievements only when others are not so cultured.But natural wealths like fertile lands,minerals,gas,water etc are the real wealth of the country.So, when the natural wealths are handled by the cultured society, the country will be prosperous.Corruption will lead to setback.Mere crying is not”real interest”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *