மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
பொன்விழா இலக்கியப் போட்டிகள்
(செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி, துணைச் செயலாளர்.)
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இலக்கியப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்து மலேசியர்களும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ளலாம்.
தமிழ் நேசன் இதழுடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி
சிறுகதைகள் மலேசியத் சூழலைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே வேறு எந்தப் போட்டிக்கும் அனுப்பப்பட்ட கதைகளாகவோ, பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளாகவோ இருக்கக்கூடாது. ஏ4 தாள் அளவில் கணினிப் பிரதியாக 6 முதல் 8 பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதை இருக்க வேண்டும். சிறுகதை இலக்கியத்திற்குரிய கலைத்தன்மையும், கட்டுக்கோப்பையும் சிறுகதைப் படைப்பு கொண்டிருத்தல் வேண்டும்.
முதற்பரிசு : ரி.ம. 3,000.00
இரண்டாம் பரிசு : ரி.ம. 2,000.00
மூன்றாம் பரிசு : ரி.ம. 1,000.00
ஆறுதல் பரிசுகள் (5) : ரி.ம. 500.00
அனுப்ப வேண்டிய முகவரி:
- சிறுகதைப் போட்டி (தமிழ் நேசன்)
TAMIL NESAN,
23, JALAN SBC
TAMAN SRI BATU CAVES
68100 BATU CAVES, SELANGOR
மலேசிய நண்பன் நாளிதழுடன் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி
மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கருத்தின் அடிப்படையில் கட்டுரைகள் அமைய வேண்டும். (பொருளாதாரம், கல்வி, மொழி, கலை, பண்பாடு). கட்டுரை 6 முதல் 8 பக்கங்களுக்கு மேற்போகாமல் கணினிப் பிரதியாக ஏ4 தாள் அளவில் இருக்க வேண்டும். கட்டுரைகள் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கேற்ப கருத்துச் செறிவோடும் போதிய விளக்கங்களோடும் தக்க சான்றுகளோடும் இருத்தல் வேண்டும்.
முதற்பரிசு : ரி.ம. 3,000.00
இரண்டாம் பரிசு : ரி.ம. 2,000.00
மூன்றாம் பரிசு : ரி.ம. 1,000.00
ஆறுதல் பரிசுகள் (5) : ரி.ம. 500.00
அனுப்பவேண்டிய முகவரி:
- கட்டுரைப்போட்டி (மலேசிய நண்பன்)
MALAYSIA NANBAN
544-3 BATU COMPLEX
51200 KUALA LUMPUR
தினக் குரல் நாளிதழுடன் இணைந்து நடத்தும் மரபுக்கவிதைப் போட்டி
மரபுக்கவிதை மொத்தம் 8 முதல் 10 கண்ணிகளுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும். பாடுபொருள் மலேசிய இந்தியர்களின் வாழ்வியலைப் பற்றியதாக இருக்க வேண்டும். கவிதை எந்தப் பாவினத்திலும் இருக்கலாம்.
முதல் பரிசு : ரி.ம. 2,000.00
இரண்டாம் பரிசு : ரி.ம. 1,000.00
மூன்றாம் பரிசு : ரி.ம. 750.00
ஆறுதல் பரிசு (5) : ரி.ம. 250.00
அனுப்பவேண்டிய முகவரி:
- மரபுக்கவிதை (தினக்குரல்)
THINAKURAL
11 JALAN MURAI 2
BATU COMPLEX
51200 KUALA LUMPUR
மக்கள் ஓசை நாளிதழுடன் இணைந்து நடத்தும் புதுக்கவிதைப் போட்டி
புதுக்கவிதையில் பாடுபொருள் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். கணினிப் பிரதியாக 30 முதல் 50 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்துச் செறிவும் அடர்த்தியும் படைப்பில் இருத்தல் வேண்டும்.
முதல் பரிசு : ரி.ம. 2,000.00
இரண்டாம் பரிசு : ரி.ம. 1,000.00
மூன்றாம் பரிசு : ரி.ம. 750.00
ஆறுதல் பரிசு (5) : ரி.ம. 250.00
அனுப்பவேண்டிய முகவரி:
- புதுக்கவிதை (மக்கள் ஓசை)
MAKKAL OSAI
NO 19, JALAN MURAI DUA,
BATU COMPLEX,
OFF JALAN IPOH
51200 KUALA LUMPUR
பொது விதிமுறைகள்
-
சிறுகதை, கட்டுரை, புதுக்கவிதை ஆகிய போட்டிகளுக்கான படைப்புகள் கணினியில் எழுத்துரு 12 அளவில் (font 12) தட்டச்சு செய்திருக்க வேண்டும். மரபுக்கவிதை மட்டும் கையெழுத்திலும் எழுதப்படலாம்.
-
படைப்பாளர் தனித்தாளில் தம் பெயர், முழு முகவரி (மலாய்), கைப்பேசி/தொலைபேசி எண்ணையும் எழுதி, அடையாள அட்டை நகலோடு இணைக்க வேண்டும்.
-
முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைத் தவிர்த்து ஆறுதல் பரிசுக்குரிய படைப்புகள் நீதிபதிகள் நிர்ணயம் செய்யும் தரத்திற்கு இருந்தால் மட்டுமே வழங்கப்படும்.
-
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதித் தேதி: 10.09.2012. அதற்குப் பின்வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
-
போட்டிகளில் வெற்றி பெறும் படைப்புகள் பொன்விழா மலரில் இடம் பெறும்.
-
பரிசளிப்பு விழா, பொன் விழா கொண்டாட்டத்தின் போது நடைபெறும்.
போட்டிகளில் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள்
- தமிழ் ஸ்டுடியோவில் அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணல்
- நினைவுகளின் சுவட்டில் – 97
- முள்வெளி அத்தியாயம் -21
- அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..
- மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது
- இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மு.வ. நூற்றாண்டு விழா
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இலக்கியகம் ஏற்பாட்டில் சிறுவர்/இளையோர் சிறுகதைகள் பரிசளிப்பு விழா
- தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 26 உறக்கத்தில் தவறிய காட்சி !
- பாற்சிப்பிகள்
- பி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”
- அற்புதமான ஓர் சுய முன்னேற்ற புத்தகம் – Who moved my Cheese
- வாழ நினைத்தால் வாழலாம்!
- பொன் மாலைப்பொழுது
- தியாக தீபம் – அன்னை இந்திரா (1917 – 1984)
- அரவான்
- சதாசிவம் மதன் “உயிரோவியம்” கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- அவர் நாண நன்னயம்
- எம்.சி. சபருள்ளா “வியர்த்தொழுகும் மழைப்பொழுது” கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-13)
- 12 பியும் எகிறும் பி பி யும்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 25
- ஆர். மாதேஷின் “ மிரட்டல் “
- 2012 ஆகஸ்டு செவ்வாயில் இறங்கிய நாசாவின் தளவூர்தி இயங்கத் துவங்கியது
- மரமும், நானும், விட்டுப் போன உரையாடல்களும்
- மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012
- வெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா” சிறுகதைத்தொகுதி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 32) மரித்த காதலன் !
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் – அங்கம் -2 பாகம் -7
- அமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்
- பாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?
- பஞ்சதந்திரம் தொடர் 56
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு