ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 32) மரித்த காதலன் !

This entry is part 31 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012


மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -32)

மரித்த காதலன் !

நீ என் ஆயுள் கடந்து வாழின் நானதை வரவேற்கும் நாள்
அவ்வேண்டா மரணம் புழுதி மூடும் என் எலும்புகளை.
அதிர்ஷ்ட வசமாய் மீண்டும் ஒருதரம் உளவ முனைந்தால்
இவ்வேழ்மைக் கடூர வரிகள் மரித்த உன் காதல னுக்கு.
ஒத்துப் பார் அவற்றை அக்கால உன்னதக் கவிதை யோடு.
ஒவ்வோர் எழுத்தாளி அவற்றை மிஞ்சி எழுதி இருப்பினும்
என் காத லுக்கெனத் தனித்து வை, இனிய ஓசைக் கல்ல !
பேருவகை அடைந்தவர் தான் உன்னதம் மிஞ்சிப் படைப்பார்
இக்காதல் நினைப்பை மட்டும் தாழ்மை யோடு எனக்களி !
மரித்த காதலன் திறன்வரும் அவன் வயதாக மேம்பட்டால்
காதலை விட, அவனது அரிய பிறப்பு அளித்தி ருக்கும் !
சாதனை மிக்க மேதையர் அணியில் நடந்தி ருப்பான்,
மரித்து அவன் போனான் மற்றவர் கவியென நிரூபிப்பீர் !
நடைக்கு அவரையும், நட்புக்கு அவனையும் படிப்பேன் !

+++++++++

SONNET 32


If thou survive my well-contented day,
When that churl death my bones with dust shall cover
And shalt by fortune once more re-survey
These poor rude lines of thy deceased lover:
Compare them with the bett’ring of the time,
And though they be outstripped by every pen,
Reserve them for my love, not for their rhyme,
Exceeded by the height of happier men.
O then vouchsafe me but this loving thought,
‘Had my friend’s Muse grown with this growing age,
A dearer birth than this his love had brought
To march in ranks of better equipage:
But since he died and poets better prove,
Theirs for their style I’ll read, his for his love’.

++++++++++++++

Sonnet Summary : 32

Sonnet 32 concludes the sonnet sequence on the poet’s depression over his absence from the youth. Again the poet questions the worth of his poems, but this time his insecurity has to do with their style and not with the intensity of their subject matter, which is his love for the youth: “Reserve them for my love, not for their rhyme.” The thoughts of his friends’ and lovers’ deaths in the previous sonnet make the poet reflect on his own mortality. Envisioning what the young man will say about the sonnets years hence, the poet expects the surviving youth to read them and deem them old-fashioned, so he asks that the youth read them for the love the poet had for him rather than for their style. There is a charming modesty to the poet’s self-effacing attitude, but his tone is depressed and resentful of his unhappiness.

++++++++++++++++++++++++

Sonnet 32

(paraphrased)
——————————————————————————–

01. If you live beyond the end of my life, to which I’m resigned,

02. After that rude knave, death, buries my mortal remains,

03. And if you do happen to once more reread,

04. These inadequate, unpolished lines, by your deceased good friend,

05. Compare them to the better poetry of that later time,

06. And although they’ll be outdone by every writer worthy of the name,

07. Keep my writings for their expressions of love, not for their merit as poetry,

08. Which will be exceeded by the best work of more fortunate men,

09. Oh, then condescend to grant me only this loving thought:

10. ‘Had my deceased friend’s talent grown as he aged,

11. His love would have brought forth a more prized production than this,

12. To show alongside the writings of poets better equipped with talent

13. But since he’s dead and gone, and other poets are proven better now,

14. I’ll read their poetry for its style, but still read his, for his love.’

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 8, 2012
+++++++++++++

Series Navigationவெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா” சிறுகதைத்தொகுதிமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் – அங்கம் -2 பாகம் -7
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    kavignar ara says:

    நன்று அருமையான தளமாய் இலங்குகிறது மணிவேலுபில்ளை இம் மாதம் குமுதம் தீரா நதி யில் ராதிகா சிற்சபேசன் கனடா செறிவான கட்டுரை எழுதி உள்ளார் காண்க அவர் படம் அச்செய்தி தெளிவு குறித்து மேலும் அறிய விருப்பம் .நான் கவிஞர் ஆரா kavignarara@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *