இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
ஒரு மே மாத பகல் பொழுததனில், ஏரிக்கரை ஒன்றில் வகுமையும், வருத்தமும் சந்தித்தனர். வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டவர்கள், அமைதியான அந்த் நீரோட்டத்தின் அருகமர்ந்து உரையாடினர்.
சுகம் பூவுலகை நிறைத்திருக்கும் அந்த அற்புத அழகைப் பற்றியும், காடுகள் மற்றும் மலைகளுக்குள்ளேயான, அன்றாட வாழ்க்கையின் அதிசயம் பற்றியும், மேலும் புலரும் பொழுதிலும் மதி மயங்கும் அந்தி வேளையிலும் ஒலிக்கும் அந்த இனிய கீதங்களைப் பற்றியும் உரையாடலானது.
சுகம் மொழிந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டது துக்கம். அந்த மணித்துளியின் மந்திர வித்தையையும், அழகு நிறைந்திருக்கும் அவ்விடம் பற்றியும் அறிந்தே வைத்திருந்தது துக்கம், மேலும் மே மாதத்தின் வயல்கள் மற்றும் குன்றுகளைப் பற்றியும் சொல்லாற்றலுடனேயே உரையாடியது. பின்னர் சுகமும், துக்கமும் சேர்ந்து வெகு தூரம் உரையாடிக்கொண்டு வந்தனர். அவர்கள் அறிந்த அனைத்தையும் ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.
தற்போது ஏரியின் மறுகரையில் இரு வேட்ர்கள் கடக்கிறார்கள். அந்த நீரின் ஊடே பார்வையைச் செலுத்தியவர்களில் ஒருவன் சொன்னான் ஆச்சரியமாக “அந்த இரு நபர்கள் யாராக இருக்கும்..?” அடுத்தவனோ, “இரண்டு என்றா சொன்னாய்…? நான் ஒன்றே ஒன்றைத்தானே பார்க்கிறேன்” என்றான்.
அந்த முதலாம் வேடனவனோ, ”ஆனால் அங்கு இருவர் உள்ளனரே…” என்றான். மேலும் அந்த இரண்டாம் வேட்டைக்காரன், ’அங்கு நான் காணக்கூடியவன் ஒருவன் தான் உள்ளான். மேலும் அந்த ஏரியின் பிரதி பிம்பம் ஒன்றே ஒன்றுதான்”.என்றான்.
“இல்லை.. இல்லை, அங்கே இரண்டுதான் இருக்கிறது” என்றான் முதலாம் வேடன். ”மேலும் சலனமற்ற அந்நீரில் உள்ள பிரதிபிம்பங்கள் இருவருடையவைகள்”.
ஆனால் அந்த இரண்டாமவனோ, “நான் காண்பது ஒன்றே ஒன்றைத்தான்” என்றான் திரும்பவும். மேலும் அடுத்தவன் மீண்டும், “நான் பட்டவர்த்தமாக இரண்டைக் காண்கிறேன்” என்றான்.
மேலும் இன்றளவிலும் அந்த மற்றையவன், “என் நண்பன் சற்று குருடனாக இருக்கிறான்” எனும்போது, அடுத்தவன் இரண்டையும் காண்பதாகவேக் கூறுகிறான் ஒரு வேடன்.
The Two Hunters
Upon a day in May, Joy and Sorrow met beside a lake. They greeted one another, and they sat down near the quiet waters and conversed.
Joy spoke of the beauty which is upon the earth, and the daily wonder of life in the forest and among the hills, and of the songs heard at dawn and eventide.
And sorrow spoke, and agreed with all that Joy had said; for Sorrow knew the magic of the hour and the beauty thereof. And Sorrow was eloquent when he spoke of may in the fields and among the hills.
And Joy and Sorrow talked long together, and they agreed upon all things of which they knew.
Now there passed by on the other side of the lake two hunters. And as they looked across the water one of them said, “I wonder who are those two persons?” And the other said, “Did you say two? I see only one.”
The first hunter said, “But there are two.” And the second said, “There is only one that I can see, and the reflection in the lake is only one.”
“Nay, there are two,” said the first hunter, “and the reflection in the still water is of two persons.”
But the second man said again, “Only one do I see.” And again the other said, “But I see two so plainly.”
And even unto this day one hunter says that the other sees double; while the other says, “My friend is somewhat blind.”
– –oOo– –
- மரியாதைக்குரிய களவாணிகள்!
- முன் வினையின் பின் வினை
- அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26
- வீணையடி நான் எனக்கு…!
- வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
- பிராணன்
- சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்
- கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
- கதையே கவிதையாய்! (1) இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
- இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
- முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா
- (98) – நினைவுகளின் சுவட்டில்
- என் இரு ஆரம்ப ஆசான்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்
- வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!
- நூறு கோடி மக்கள்
- பிணம்
- இருள் மனங்கள்.
- இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்
- நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
- கங்கை சொம்பு
- ஆத்துல இன்னும் தண்ணி வரல….
- தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு
- NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்
- முள்வெளி அத்தியாயம் -22
- மானுடர்க்கென்று……..
- அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “
- பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
- மலட்டுக் கவி
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39
- கருணைத் தெய்வம் குவான் யின்
- பழமொழிகளில் ‘வெட்கம்’
- படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
- பெரியம்மா
- இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்