தாகூரின் கீதப் பாமாலை – 27
புயல் அடிப்பு
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
முகத்தி லிருந்து அகற்றிப் புயல்
பறக்க விட்டது
புடவைத் துணி நுனியை !
அந்தோ
முகத்திரையும் தங்க வில்லை,
மீண்டும் இழுத்தென்
முகத்தை மூடவும் என்னால்
முடிய வில்லை.
என் நாணம் போனது
என் தன் மானமும் போனது
எனது காப்புடை போனது
பார்த்தாய் நீ இப்போ தென்னை
அத்தகைப் புயலில் சிக்கி
எப்படி என்னை
மரண அரங்கினி லிருந்து
இழுத்து வருகிறேன் என்று ?
திடீரென வானத்தில் மினுமினுப்பு
எழுந்தது !
யாரையோ தேடிப் போவது
யாரது அங்கே ?
மின்னல் வெட்டொளி வீச்சுகள்
என் இருட்டறை உள்ளே
திடுக்கிட வைக்கும் !
பறந்து போகட்டும்
எனது சேமிப்புகள் எல்லாம்
இரவின் விண்வெளி விரிவிலே !
இந்த பயங்கரப் பேரொளியில்
என் ஆத்மா
மணி அடிக்கட்டும்
சொந்தக் குரலில்
எந்தப் பாச பந்தத்திலும்
சிக்கிக் கொள்ளாது !
+++++++++++++++++++++++++
பாட்டு : 323 தாகூர் தன் 50 ஆம் வயதில் (மார்ச் 1912) எழுதி “புயல்” என்ற தலைப்பில் ஒரு பாடலாய் வெளிவந்தது. பின்னால் அது “அரூப் ரதன்” என்னும் நாடகத்தில் சேர்க்கப் பட்டது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 14, 2012
- மரியாதைக்குரிய களவாணிகள்!
- முன் வினையின் பின் வினை
- அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26
- வீணையடி நான் எனக்கு…!
- வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
- பிராணன்
- சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்
- கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
- கதையே கவிதையாய்! (1) இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
- இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
- முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா
- (98) – நினைவுகளின் சுவட்டில்
- என் இரு ஆரம்ப ஆசான்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்
- வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!
- நூறு கோடி மக்கள்
- பிணம்
- இருள் மனங்கள்.
- இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்
- நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
- கங்கை சொம்பு
- ஆத்துல இன்னும் தண்ணி வரல….
- தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு
- NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்
- முள்வெளி அத்தியாயம் -22
- மானுடர்க்கென்று……..
- அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “
- பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
- மலட்டுக் கவி
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39
- கருணைத் தெய்வம் குவான் யின்
- பழமொழிகளில் ‘வெட்கம்’
- படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
- பெரியம்மா
- இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்