ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்

This entry is part 28 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள்
(Shakespeare’s Sonnets : 33)

சூரிய வெளிச்சமும் முகிலும்

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -33)

சூரிய வெளிச்சமும் முகிலும்

ஒளிமிகும் உதயப் பொழுதுகள் பல பார்த்துளேன் முழுதாய்
மலைச் சிகரங்கள் ஒளிவீசும் முடிமன்னர் விழியொடு
பொன்னொளி முத்தமிடும் பச்சைப் புல்வெளி நிலங்களில்
விண்ணக மாற்ற முடன் நீரோடைகள் வழுக்கி வீழும்
விரைவில் அடிப்படை முகில்கள் நகர அனுமதி பெறும்
அழகீனச் சிதைவு தென்படும் அவன் தெய்வீக முகத்தில்
அதிகாலை மறைக்கும் அவன்முகம், பரிதியைத் துயருலகு.
பரிதியின் களவு மறைவில், மேற்கு அறியாது அவமதிப்பு !
ஒரு நாள் அதி காலை யில் ஒளி வீசுவான் என் சூரியன்
என் முகத்தில் வெற்றி யின் மகத்துவம் வெளிப்படும்
சென்றவன் ஆயினும் ஒருமணி நேரம் அவன் என்மகன்
முகில் அரங்கம் மூடி மறைக்கும் அவனை என்னிட மிருந்து
ஆயினும் குறைந்திலை என் நேசம் சிறிதும் அவன்பால்
உலகப் புதல்வர் கறை படலாம், வானச் சூரியன் கறைபடின்.

+++++++++

SONNET 33

Full many a glorious morning have I seen,
Flatter the mountain tops with sovereign eye,
Kissing with golden face the meadows green;
Gilding pale streams with heavenly alchemy:
Anon permit the basest clouds to ride,
With ugly rack on his celestial face,
And from the forlorn world his visage hide
Stealing unseen to west with this disgrace:
Even so my sun one early morn did shine,
With all triumphant splendour on my brow,
But out alack, he was but one hour mine,
The region cloud hath masked him from me now.
Yet him for this, my love no whit disdaineth,
Suns of the world may stain, when heaven’s sun staineth.

++++++++++++++

Sonnet Summary : 33

Sonnet 33 begins a new phase in the poet and youth’s estrangement from each other. (The breach well may be caused by the youth’s seduction of the poet’s mistress, which the poet addresses in later sonnets.) In any case, faith between the two men is broken during the poet’s absence.

Shifts in the poet’s attitudes toward the youth and about his own involvement in the relationship are evident in the sonnet. Whereas in Sonnet 25 the poet boasts that his faith is permanent, here he reverses himself. References to “basest clouds,” “ugly rack,” “stealing,” “disgrace,” and “stain” indicate that the friend has committed a serious moral offense. Whereas in earlier sonnets the poet worried that his verse was not good enough to convey his intense love for the young man, now he worries about whether the young man is as good as his verse conveyed. Metaphorically, the young man is like the sun, which “with golden face” warms and brightens the earth. However, the sun allows “the basest clouds” to block its rays, and the young man permits loyalties to other people to interfere with his relationship with the poet. The poet accepts that the friend has betrayed him — “But, out alack, he was but one hour mine” — but he also realizes that the burden of blame must be his own for having assumed that outward beauty corresponds to inner virtue. This last realization, that outward beauty does not correspond to inner virtue, is expressed in the sonnet’s last line: “Suns of the world may stain when heaven’s sun staineth.” In other words, “Suns of the world may stain” — perhaps a pun on “sons” or humankind — represents the young man’s moral transgression although his external, physical appearance remains unchanged. Nevertheless, the poet’s love for the young man remains unchanged.

++++++++++++++++++++++++

Sonnet 33

(Paraphrased)
——————————————————————————–

01. I have seen a great many glorious mornings

02. Beautify the peaks by beaming upon them,

03. Kissing, with golden light, the green of the meadows,

04. Gilding the watery streams with delightful magic;

05. But soon, the morning will permit the meanest clouds to ride roughshod,

06. With ugly ruin, across his heavenly face,

07. And the morning will hide his face, the sun, from the sad world,

08. Stealing the sun away unseen to the west, in his shame.

09. Even so, like that, my own Son appeared early one morning,

10. (With all jubilant splendor on my face,)

11. But he’s gone, alack, he was only briefly mine,

12. The dark overcast, on my world, has hidden him from me now.

13. Yet my love for him diminishes not a bit because he’s gone,

14. The mortal sons of this world may darken, in memory,

when heaven’s sun darkens.

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 15, 2012
+++++++++++++

Series Navigationதமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்முள்வெளி அத்தியாயம் -22
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *