This entry is part 13 of 29 in the series 18 நவம்பர் 2012

 

 

விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்

விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்

விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான்

பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்

 

எமக்கென இருக்கிறது

நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று

 

– தக்ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்