தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்

This entry is part 3 of 26 in the series 30 டிசம்பர் 2012



மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன் வீணைக்குள் இனிய கானங்கள்
முன்பே ஒளிந்திருந்தன !
பூக்கள்  கொட்டிக் கிடக்கிறது
என் கூடையில்.
அதே வசந்தகாலத் தென்றல் அடித்து
அன்றைய தினத்தில்
நம்மிருவரையும்
ஆட வைத்தது ஒருங்கே  !
அந்த நாளில் எவரும் அறிய மாட்டார்
எந்த இன்னிசை அலைகள்
இந்த வானை நிரப்பிய தென்று !
உந்தன் மெல்லிசைப் படகு
வந்தது என் கடலோரம்
எனது பூ மலர்ச்சி வண்ணத்தில் !

உன் பாட்டுக் கேற்ற தாளத்தில்
என் கானம்
ஒத்திருந்ததாய் நான் நினைத்தேன்
அப்போது !
என் ஆத்மாவில் பூ மலர்ச்சி இயக்கம்
என்றென்றும் தவறாது
எப்போதும் நிகழ்ந்து வருகிறது !
இன்னும்  எனது கானங்கள்
காற்றில் மிதந்து போயின !
பூக்கள் வாடிப் போயின கூடையில்
பொழுது சாயும் வேளையில் !
இப்புதிய வசந்த காலத்தின்
இனிய விளை யாட்டில்,
அந்தோ
ஏதோ ஒரு தவறு
ஏற்பட்டு விட்டது எங்கோ !

+++++++++++++++++++++++++

பாட்டு : 244  தாகூர்  61 வயதினராய் போர்பந்தர் கத்தியாவாரில் இருந்த போது  1923 ஏப்ரல் 6 இல்  எழுதிப் பின்னர்  சாந்திநிகேதன ப் பதிப்பிதழில் வெளியிடப் பட்டது.
+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  December 26, 2012

Series Navigationஉன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3ஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *