ஒரு ஆன்மாவின் அழுகுரல்..

author
0 minutes, 6 seconds Read
This entry is part 9 of 30 in the series 20 ஜனவரி 2013

 

எஸ். ஹுசைன் மௌலானா
17வயதுச் சிறுமி அவள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம் மரணதண்டனை வழங்கி சவூதி அரசாங்கம் சரிஆ சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மரணதண்டனை வழங்கி தீர்ப்புச் சொன்ன போது அவளுக்கு வயத 18 பூர்த்தியாகி இருக்கும். சவூதியின் சரிஆ( இஸ்லாமிய சரீஆ அல்ல அது) அதிகபட்சத் தண்டனையான மரணதண்டனையை வழங்கிய போது அது, ரிஸானாவின் வயதைக் கூட கருத்தில் கொள்ளவில்லை. எத்தனையோ மனித உரிமை அமைப்புக்கள் வேண்டி நின்ற போதும் அத்தனையையும் வெகு சாதாரணமாக சவூதி புறந்தள்ளியது. அவளது குடும்ப நிலவரம், அவளது அறியாமை (குழந்தைத்தனம்), றிசானா குழந்தைப் பராமரிப்புக்காகவன்றி பணிப் பெண்ணாகச் சென்றமை, வைத்திய பரிசோதனையின் முடிவு, போன்றன விசாரனையின் போது அதிக கவனத்தில் கொள்ளப்பட்டதா?போன்ற சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கின்றன. மேற்போந்த நிகழ்வை நோக்கையில் சவூதியில் நடைமுறையிலிருக்கும் சரீஆ சட்டம் என்பது குர்ஆன் சொல்லும் சரீஆ சட்டமாக ஒரு போதும் இருக்க முடியாது என்றே எண்ணத் தோணுகிறது. ஏனெனில்,’தண்டணைகளில் கொடிய தண்டனை மரணதண்டனை அதை விடவும் உச்ச தண்டனை மேன்மையுடன் மன்னித்தல்’ என்ற கோட்பாட்டைச் சொல்லும் தூய இஸ்லாத்திலிருந்து ரிஸானாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையானது முற்றிலும் புறம்பான விதத்திலும் அராஜக முறையிலும் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் தெளி வாகிறது.

அன்பே உருவான இறைவனின் பெயரால் நடாத்தி முடிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இந்த ஈனச் செயல் இஸ்லாமிய மார்க்கத்திற்கே இழுக்கை தேடித் தருவதாகும். இலங்கையிலும் மதகுருமார்கள் மத வெறியர்களாக மாறி வரும் இக்கால கட்டத்திலே இக்காட்டுமிராண்டித்தனம் நடந்து முடிந்திருக்கின்றது. அநீதிக்கு நீதிப்பூச்சிப் பூசி சவூதியின் சரிஆவின் நீதி கொலை செய்திருக்கின்றது. இறந்த குழந்தையின் பெற்றோராலும், காவல் துறையாலும் பலாத்காரமாக றிஸானாவிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் கையெழுத்தையே அவர்களுடைய சரிஆ தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளது. நீதியின் நிழலில் நிகழ்கின்ற கொடூரங்கள் இவை. குற்றவாளிகளுக்குத்தான் சவூதியின் சரிஆ பயன்படுவதாக நான் நம்பியிருந்தேன். ஆனால் அப்பாவித்தனமான, பெண் சிறுமியான நிருபராதிக்குக் கூட உங்களது சரிஆ சரியானதைச் செய்துள்ளதா என்ற கேள்வியே இன்று விஞ்சி நிற்கின்றது.
அன்பும், பண்பும் இல்லாத ஒரு பாதகியிடம் றிசானாமாட்டிக் கொண்டதுதான் அவளது மரணசாசனமாகிவிட்டது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களை மக்காவிலிருந்த மதீனாவிற்கு விரட்டிய ‘பதுயின்’ குலத்தை சேர்ந்தவளாக அந்தக் குழந்தையின் தாய் இருப்பதனால் அவளிடம் மனிதாபிமானமோ, கழிவிரக்கமோ துஞ்சித்தும் எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தின் ஏற்றத் தாழ்வுக்காக நாயாய் அலைந்து, செருப்பாய் தேய்ந்து சவூதி சென்ற பிஞ்சு உழைப்பாளி ரிசானா நபீக் மனிதாபிமானமற்ற ஒரு அரக்கியிடம் போய் மாட்டிக் கொண்டாள். இங்குள்ள சதிகாரத் தொழில் நிறுவனமொன்று இந்தப் பாதகத்தைச் செய்துள்ளது. சொந்த நாட்டைவிட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அரேபிய நாடு ஒன்றில் அறிமுகமில்லாத, மனிதாபிமானமற்ற, விலங்கு மனிதர்களுக்கு நடுவில் துணையேதுமின்றி  தெரியாத மொழியில் எவ்வாறு அவளால் உண்மையை எடுத்துச் சொல்ல முடியும்? குடும்பத்தின் எதிர்கால நலனுக்காக, தனது உடன் பிறப்புகளின் கல்வி எதிர்காலத்திற்காக, தந்தையின் வைத்தியத் தேவைக்காக அடிப்படை வசதியுடன் தாய் வாழ்வதற்கு ஒரு வீட்டுக்காகத்தானே அவள் சென்றாள். ஒரு சராசரி மனிதனின் சாதாரண ஆசைதானே இது. வாய்க்கும், வயிற்றுக்கும் ஏற்பாடு செய்வதே அந்தத் தாய் தினசரி எதிர் கொள்ளும் ஒரு சவாலாகும்.இதற்காக சவூதியின் அழியாப் பாவச்சின்னம் ‘வாள்’ அவளது கழுத்தைத் துண்டாடியது எந்த விதத்தில் நியாயம்? நீதியின் பெயரில் அநீதி நடாத்திய படுகொலை இது. இத்தகைய முடிவை மனித இனம் இனியும் விதிக்கக் கூடாது. நெஞ்சத்தை அள்ளும் இந்த நிகழ்வை அறபு நாடுகளுக்குத் தொழிலுக்காகச் செல்கின்ற பெண்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சவுதி அரேபிhல் கடந்த ஆண்டில் 69 பேர் மரணதண்டனைக்கு உள்ளானதோடு, அதற்கு முந்தை ஆண்டில் 79 பேர் மீது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.  அதில் பல வெளிநாட்டுப் பணியாளர்கள் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளதோடு, தற்போது 120 க்கு மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் மரண தண்டனைக்கு முகம் கொடுக்கம் அபாயம் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சiபின் சவுதி அரேபிய ஆய்வாளர் டினா அல் மமூன் குறிப்பிட்டுள்ளார். ‘பல வழக்கு விசாரணைகளிலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு விசாரணை எப்படி முன்னெடுக்கப்படுகிறது என்பது கூட தெரியாமலுள்ளது. இந்த விசாரணைகள் அரபு மொழியில் மாத்திரமே நடத்தப்படகிறது. எந்த மொழிபெயர்ப்பும் செய்யப்படுவதில்லை. அவர்களுக்கு தூதுவராலய உதவிகளும் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை’ என்றும் மமூன் குறிப்பிடுகிறார்.
இந்தோனேசிhவின் 27 வயதான மூடி துர்சிலாவர்திப pன்டி என்ற பெண் தனது தொழில் வழங்குனரை கொன்றதாகக் கற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ளார். இவர் மரண தண்டனையை சந்திக்கவள்ளார். சுடந்த 2010 ஆம் அண்டு மெற்படி பெண்ணை தொழில் வழங்குனர் கற்பழிக்க முற்பட்டபோதே அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார். இந்தப் பெண் சவூதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றது தொடக்கம் குறித்த தொழில் வழங்கனரின் துஸ்பிரNhகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர் மீதான வழக்கு விசாரணையில் முதல் இரு மாதங்களில் சட்ட உதவியாளரை வைத்தக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவானோர் குறிப்பிட்டுள்ளனர்.
சித்தி செய்னப் என்ற மற்றுமொரு இந்தொனேஸிய பெண் தனது பெண் தொழில் வழங்குனரை 1999 ஆம் ஆண்டில் கத்தியால் குத்திக் கொன்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளார். ஆந்தப் பெண் தனத குற்றத்தை ஒப்பக் கொண்டாலும், அவரது உளநிலை பற்றி நிர்வாகம் அவதானத்தில் எடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே போன்று 40 வயதான மற்றொரு இந்தோனேசிய பெண்ணான சதினா பின்தி ஜூமாதி அஹமட் என்ற பெண்ணும் தனது பெண் தொழில் வழங்குனரை கொன்றதாக கற்றம் சாட்டப்பட்டு கடந்த 2007 ஆம் அண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை மரண தண்டனையிலிருந்த காப்பாற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1.6 மில்லியன் பௌன் நஸ்டஈட்டை வழங்க இந்தோனேசிய அரசு தயாராகி வருகிறது. சவுதியில் மரணதண்டனைக்கு உள்ளான எமது நாட்டைச் சேர்ந்த ரிசானா நபீக் இன் சம்பவத்தை அடத்த சவுதி அரேபியா மீது சர்வதேச அளவில் கண்டனங்கள் அதிகரித்த வருகின்றமை கறிப்பிடத்தக்கதாகும்.
.
எமது நாட்டுப் பெண்கள் அராபிய தேசங்களுக்கு பணிப்பெண்களாகச் செல்வதை விட ஐரோப்பாவிற்குச் செல்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது. மனித உரிமை அமைப்புகளுடன் இந்த அரசியல்வாதிகள் இதயசுத்தியுடன் செயல்பட்டிருந்தால் அவள் என்றோ தப்பியிருப்பாள். ஆனால் இன்று அவள் எம்மிடத்திலில்லை. விதியின் விளையாட்டில் இப்படியும் ஒரு விபரீதம் இருக்கின்றதா? இது உண்மையில் விதியின் விளையாட்டல்ல. சதியின் விளையாட்டு. அந்தத்தாய் இவளை இந்தக் கோலத்தில் காணவா அவளைப் பெற்றெடுத்தாள் என்று புலம்புவதைத்தவிர எம்மால் என்னதான் செய்ய முடியும்?
பல்லுக்கு பல்லு.  கண்ணுக்கு கண். காலுக்கு கால். உயிருக்கு மறு உயிர். இவைதான் யூத மதத்தின் தத்துவ தரிசனமாகும். மொத்தத்தில்பழிக்குப்பழி வாங்க வேண்டும். இதைத்தான் அவர்களின் சரிஆவும் செய்திருக்கின்றது. அந்தச் சிறுமிக்குத் திட்டமிட்டுக் கொலை செய்த ஒரு கொலைஞனுக்கு கொடுக்கின்ற அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்கி நிறைவேற்றியிருக்கின்றது. இந்தக் காட்டுமிராண்டித்தனம் எந்த வகையிலும் நியாயமானதல்ல. இது இறைவனுக்கு எதிரான செயலாகும். தகுந்த சாட்சியங்கள் இல்லாத, வாதப்பிரதிவாதங்களற்ற, அரேபிய மொழி பேசத் தெரியாத, குற்றத்தை ஏற்க மறுத்த பெண்ணிடம் பலாத்காரத்தைப் பயன்படுத்தி ஒப்பதல் பெற்று இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைப் பார்த்து உலகமே அதிர்ந்து போயுள்ளது. எனது இதயமும் உறைந்து போயுள்ளது. யார் புரிந்தாலும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது ஒரு உண்மை முஸ்லிமின் கடமையாகும்  என்ற நல்லுணர்வுடனேயே இந்தக் கருத்துக்களைப் பகிர்நது கொள்கின்றேன்.
ராஜீவ் காந்தி அவர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்தவர்களுக்குக் கூட இன்று பாரதம் மன்னிப்பு வழங்குவது பற்றி ஆலோசிக்கின்றது. காரணம் மனித உணர்வுகளின் பரிமாணத்தை அது நன்கு புரிந்து கொண்டுள்ளது. புத்தர் பெருமான், கிருஸ்ண பகவான், மகாவீரர், கபீர்பாய், மகாத்மா காந்தி போன்ற புண்ணியவான்களை அவர்களுக்கு அன்பளித்த புண்ணிய பூமி அது. சவூதி என்பதும் நபி இப்றாகிம், நபி மூஸா, நபி ஈஸா, நபி முஹம்மத் போன்ற மாபெரும் மனிதர்களை மத்திய கிழக்கு மண்ணுக்கும் அன்பளித்திருக்கின்றது. துரதிஸ்டவசமாக அந்த மண்களை மனிதாபிமானமற்ற மன்னர்கள் ஆள்கின்றார்கள். இவர்கள் சுயநலமிக்கவர்கள். ஒழுக்கக்கேடானவர்கள். ‘சுயநலமும், ஒழுக்கக் கேடும் உள்ளவர்கள் ஆட்சிபீடம் ஏறுவதால் அரசியல் தாறுமாறுகள் நிகழ்கின்றன’ என்று குர்ஆன் கூறுகின்றது. ‘ஒரு பக்கச் சார்பற்ற, உண்மையுள்ள, அறிவு மிகுந்த, தொலைநோக்கு நிறைந்த பெருமனிதர்கள் தூக்க வேண்டிய நீதித்துறையை ஆராய்வின்றி மேம்போக்காக விசாரணை செய்பவர்கள் எடுத்த முடிவால் விளைந்த ஒரு துயர நிகழ்வாகவே இதனைக் கருத வேண்டும். இதனை நானும் ஒரு தூய இஸ்லாமியனாக இருந்து கொண்டே எழுதுகின்றேன்.
ரிஸானா நபீக் இற்கு மரணதண்டனை வழங்கப்பட்ட விதத்தை நோக்குகையில் சவூதிய அரசாங்கத்தின் சட்ட நடைமுறையில் மாபெரும் குறைபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. மனித உரிமை அமைப்பகளும் உலகம் பூராக வாழ்கின்ற மனிதாபிமானமுள்ள மக்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க ரிசானா நபீக் ஐ விடுதலை செய்ய சவூதி மன்னன் உட்பட அனைத்து உயரதிகாரிகளும் விரும்பியதாகவும் ஆனால் இறந்த குழந்தையின் தாய் விரும்பாத படியால்தான் ரிசானா நபீக் இற்கு மரண தண்டனை வழங்க நேர்ந்ததாகவும் சவூதிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்ற கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. ஆக சவூதிய மன்னனும், அதிகாரிகளும் ரிசானா குற்றமற்றவள் என்பதை உணர்ந்தமையால்தான் அவளை விடுதலை செய்ய விரும்பியிருக்கின்றார்கள். ஏனெனில் அவளின் விடுதலை பற்றிய உலக மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த சவூதிய அரசாங்கம், கடவுச்சீட்டின் படி அவள் 23 வயதுடையவள் என்ற விடயத்தையே அழுத்தமாகக் கூறியதேயன்றி அவள் நிஜமாக அந்தக் கொலையை செய்திருக்கின்றாள் என்பதற்கான ஆதாரங்களை முன் வைக்கவில்லை. மருத்துவப் பரிசோதனையின் படி கழுத்தை நெறித்தக் கொன்றமைக்கான எந்த ஆதாரமும் இவர்களால் இன்றுவரையில் முன் வைக்கப்படவில்லை. ரிசானா நபீக் தன் மரணத் தருவாயிலம் கூட ‘அல்லாஹ் மீது சத்தியமாக நான் அந்தக் குழந்தையைக் கொல்லவில்லை’ என்றே வாதிட்டாள். அவளின் வாக்கு மூலப்பிரகாரம் பலாத்காரமான முறையில் அவளிடமிருந்து பெற்றுக் கொண்ட கையெழுத்தையே இவர்கள் சட்ட ஆதாரமாக முன் வைத்தமை கவலைக்குரியது. இந்த வழக்க விசாரனையைப் பார்க்கும் போது இறந்த குழந்தையின் பெற்றொரால் குற்றம் சுமத்தப்பட்ட பெற்றோரின் குற்றச்சாட்டை சட்டத்தை ஆராய்பவர்கள் ஆராய்வுக்கெடுத்துக் கொள்ளாமல், குற்றச்சாட்டையே தீர்ப்பாக எடுத்திருக்கின்றமை புலப்படுகின்றது. வழக்குத் தொடுநர்களிடமே தீர்ப்பு வழங்கும் உரிமையைக் கொடுத்தமை மாபெரும் தவறாகவே தென்படுகிறது. ஒருவர் கொலைக் குற்றவாளி என்பது முற்று முழுதாக நிருபனமான போதும் அவருக்கு மரணதண்டனை வழங்காமல் தடுக்கும் மனிதாபிமான வழிமுறையாகத்தான் இஸ்லாமிய சரீஆ சட்டம் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பளிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கின்றது. இத்தகைய காருண்ய மார்க்கத்தினை சரிவரப் புரிந்த கொள்ளாமல், ரிசானாவை குற்றவாளியாகவே தீர்ப்பளிக்கம் பொறுப்பை குழந்தையின் கொடூர உள்ளம் படைத்த பெற்றோர்களிடம் ஒப்படைத்தமை மாபெரும் தவறாகும்.
மேலும் அவளுக்கு சிரச்சேதம் என்ற கொடிய தண்டனையை பொது மக்கள் முன்னிலையிலும், தொலைக்காட்சிகளுடாகவும் வழங்கப்பட்டதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல விளைகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. ஒரு கொலைக் குற்றவாளிக்கு பொது மக்கள் மத்தியில் வைத்து சிரச்சேதம் செய்யப்படும் போது ஏனைய மக்கள் இந்தக் கொடூர காட்சியைப் பார்த்து தண்டனைக்குப் பயந்து அவர்கள் குற்றம் புரிய மாட்டார்கள் என்ற சவுதிய அரசின் வாதம் ஏற்க முடியாதது. ஏனெனில் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக இதே விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் பலருக்கு சிரச் சேதம் மேற்கொள்ளப்பட்ட போதும் இன்னுமின்னும் குற்றவாளிகள் உருவாகிய வண்ணமே உள்ளனர். இவர்கள் புரியும் இந்தக் கோரத் தண்டனையைப் பார்த்த மக்கள் திருந்துவார்கள் என்ற கருத்து உண்மையாக இருந்தால் என்றோ சவூதியல் கொலைக்குற்றம் இல்லாதொழிந்திருக்க வேண்டும். ஆனால் உண்மை அவ்வாறாக இல்லை. மேலும் ஹஜ், உம்ரா போன்ற இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்ற சவூதிக்கு ஏனைய நாடுகளிலிருந்து ஒரு பெண் செல்வதாக இருந்தால் அவள் அனுமதிக்கப்பட்ட ஆண்களுடனேயே செல்ல வேண்டும் என்ற சரீஆ சட்டத்தின் நடைமுறையை பேணிப் பின்பற்றும் சவூதிய அசராங்கம், பணிப் பெண்கள் விடயத்தில் அவ்வாறு பார்க்காதது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதே.
அரேபிய தேசங்களில் அரசவம்சத்தினர் அம்மக்களின் கல்விக் கண்களைத் திறக்க விடாது பாமரர்களாகவே காத்து வருகின்றனர். மேலும், அரசியல் ரீதியில் பார்க்கும் போது கூட இன்று உலக முஸ்லிம்களின் ஏகோபித்த எதிரிப்பிற்கு உரிய நாடாகத் திகழும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் நெருங்கிய உறவைப் பேணும் நேச நாடாகவே சவூதி அரேபியாத் திகழ்கிறது. இதனடிப்படையிலேயே ஜோர்ஜ் புஸ் சவூதி வந்த போது சவூதி அரசாங்கத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் தண்டனைக்குட்படுத்தப்படாது ஜோர்ஜ் புஸ் உடன் அமெரிக்காவிற்கத் திருப்பியனுப்பப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. மேலும் பிரிட்டிஸ் கனடிய பிரஜையான வில்லியம் சாம்சன் பயங்கரவாத குற்றச்சாட்டக்கள் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். சவுதி சிறையில் 964 நாட்கள் கழித்த இவர் தனது பாஸ்போர்ட்தான் தனது தலையை காப்பாற்றியது என்று கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளார்.அதே போல ஓரினச் செர்க்கை காரணமாக மரணதண்டனை விதிக்கப்பட்ட மற்றொருவரும் பிறகு பத்திரமாக பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார. சவுதியில் வேலை புரியும் ஆசிய மற்றும் கருப்பின மக்கள் சமூக ரீதியாக மிகவும் கீழான வேலைகளை செய்வதாலும், அவர்கள் வரும் நாடுகளால் ராஜதந்திர ரீதியாக அழுத்தங்களை செலுத்த முடியாமல் இருப்பதுமே இதற்கக் காரணம் என்று ‘அம்னெஸ்டி’ நிறுவனத்தின் சவுதி ஆய்வாளர் டினா இல் மாமோன் உறுதிபடக் கூறுகிறார்.
இத்தகைய சவூதியின் அரசியல் போலி முகம் தெரியாத நம்மில் பலர் சவூதியை நேசத்திற்குரிய நாடாகப் பார்ப்பதில் வியப்பேதுமில்லை.
இறுதியாக! துன்ப உலகை எட்டிப் பார்க்கப் பிறந்த றிஸானா நபீக் இன்று ஒரு புரட்சி செய்திருக்கின்றார். பெண்ணிணத்தை நீதியின் முன் நிறுத்தும் உரிமை பெண்களின் கரங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற முடிவை சவூதிய அரசு இன்று எடுத்துள்ளது. அதாவது அவர்களது சரிஆ அமைப்பில் பெண்களை விசாரிக்க பெண்கள் சேர்க்கப்பட வெண்டுமென்ற முடிவை சவூதிய அரசு இன்று எடுத்துள்ளது. ஆக இது நாள் வரையில் பெண்கள் விசாரணைக்குட்படுத்தப் பட்ட விதத்தில்; சரீஆ சட்டம் பின்பற்றப்படவில்லை என்பதை சவூதிய அரசாங்கம் இன்றுதான் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் வழியில் றிஸானாவின் இந்த அவதாரம் காலத்தால் அழியாதது. பெண்ணுக்கு முன்னுரிமை இன்றுதான் அங்கு முன் மொழியப்பட்டுள்ளது. இது சவூதியப் பெண்ணிணத்திற்கு றிஸானா செய்த மாபெரும் சேவையாகும். இவளது வரலாறு எதிர்காலத்தில் பதியப்படும் என்பதில் எனக்கு வலுவான நம்பிக்கையுண்டு. செய்யாத குற்றத்திற்காக தன்னுயிரை துச்சமாக மதித்து, கையில் வாளேந்திய காட்டுமிராண்டி அரேபியக் குரூரனுக்கு துணிந்து தலை நிமிர்ந்து நின்றாயே! தாயே! நீ உண்மையிலே வரலாறு கூறுகின்ற வரலாற்றுத் தாய்தான். உனது புண்ணியத்தால் அந்த மண்ணின் பெண்கள் ஏற்றம் பெற்றுள்ளார்கள். மேலும் ஏற்றம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வலுத்துள்ளது. அதற்கு நீங்கள் வழி சமைத்துச் சென்றுள்ளீர்கள்.
மகள், ரிஸானாவின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு, அவளுடைய சிறிய கால வாழ்நாள் புரட்சியின், கிழக்கித்தியப் பெண்ணியத்தின் பெரும் காவியமாக மாற வேண்டுமெனப் பிரார்த்திப்பதோடு, அவளது குடும்பத்தின் ஆன்மாவோடு எனது ஆன்மாவும் சேர்ந்து அழுகிறது என்று கூறி விடைபெறுமுன் சான்றோருடன் சேர்ந்து நானும் அவள் நினைவுக்கு வணங்கி விடைபெறுகின்றேன் மகளே!

எஸ். ஹுசைன் மௌலானா
இலங்கை

Series Navigationஎலிசரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *