தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையினரால் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்காணி ஆய்விருக்கை சார்பில், ஆண்டு தோறும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களுக்கு கரிகாலன் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்ன. 2010 மற்றும் 2011க்கான விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவுடன் தலை நகர் குவால லும்பூரில் நடைபெறவிருக்கிறது. இவ்விழா வரும் மார்ச் 10ஆம் நாள் காலை 9.30 மணிக்கு கிராண்ட் பசிஃபிக் விடுதியில் நடைபெறும்.
2010ஆம் ஆண்டுக்கான கரிகாலன் விருதுகள் மலேசிய எழுத்தாளர் ந.மகேஸ்வரியின் “நினைவுகளைச் சுமந்தபடி” என்னும் நூலுக்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் கமலா தேவி அரவிந்தனின் “நுவல்” என்னும் நூலுக்கும் வழங்கப்படுகின்றன.
2011ஆம் ஆண்டுக்கான கரிகாலன் விருதுகள் மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் “நீர்மேல் எழுத்து” என்னும் நூலுக்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் மா.இளங்கண்ணனின் “குருவிக்கோட்டம்” என்னும் நூலுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருமலை நேரில் வந்து வழங்குவார். முஸ்தபா அறக்கட்டளையின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்களும் பல்கலையின் அயலகத் தமிழ்க் கல்வித் துறையின் தலைவர் முனைவர் கார்த்திகேயன் அவர்களும் பேராசிரியர் உதயசூரியன் அவர்களும் முன்னிலை வகித்துச் சிறப்பிப்பார்கள்.
மலேசிய சிங்கப்பூர் இலக்கியங்களை தமிழ் உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்காகச் செய்யப்படும் தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூரின் இந்தக் கூட்டு முயற்சிக்கு தமிழ் ஆதரவாளர்கள் திரளாக வந்து ஆதரவு தரவேண்டுமென மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
- விசுவும் முதிய சாதுவும்
- எழுத்து
- அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
- அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
- இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
- ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
- தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
- அக்னிப்பிரவேசம்-23
- விஸ்வரூபம்
- செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
- குரான்சட்டமும் ஷரீஆவும்
- வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
- வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
- ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
- மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
- தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
- கோப்பெருந்தேவியின் ஊடல்
- பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
- நேர்த்திக்கடன்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
- சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
- கவிதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
- நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது