சசி சேகர்
குஜராத் முதலமைச்சர் இந்தியா டுடே கான்க்லேவ் 2013 நிகழ்ச்சியில் பேசியது, அந்த நிகழ்ச்சியிலும், இணைய உலகத்திலும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. அதனை இணைய ஒளிபரப்பு செய்தது ஒருமுறை தடங்கலுக்கு உள்ளானாலும் அந்த நிகழ்ச்சியே 20 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது என்பதும், அந்த நிகழ்ச்சிக்குள் நுழைய ஏராளமான கூட்டம் இருந்ததும், அதனால் தடங்கலானதும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துகொண்டே இருந்தார்.
நரேந்திர மோடியின் பேச்சுக்கு இருந்த எதிர்பார்ப்பு புரிந்துகொள்ளக்கூடியது. நமது ஜனநாயகத்தில் இன்னமும், முதன்மை அரசியல்கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை, பாராளுமன்றத்துக்கு வெளியே, மக்கள் முன்னால், வைக்கக்கூடிய அமைப்பு ஏதும் இதுவரை இல்லை. இப்படிப்பட்ட ஊடகங்கள் அமைக்கும் நிகழ்ச்சிகளே மேற்கத்திய நாடுகளில் நடக்கும் விவாதங்களுக்கு சற்றே அருகே வரக்கூடியவை.
டெல்லியில் காங்கிரஸை நீக்கிவிட்டு அங்கே பாஜகவை உட்கார வைக்க எந்தமாதிரியான சவால்களை எதிர்கொள்ளப்போகிறது என்பதை பற்றியும் அதனை ஒட்டி எந்த மாதிரியான செய்திகளை நரேந்திர மோடி கூறப்போகிறார் என்பது பற்றியும் விவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன. சமூக வலைத்தளங்களில்(ட்விட்டர் பேஸ்புக்) போன்றவற்றில், நரேந்திர மோடியின் பேச்சுக்கு பின்னால், இடதுசாரி மனவலி எவ்வளவு இருக்கப்போகிறது என்பது பற்றி நகைச்சுவை ஓடிகொண்டிருந்தது. நிதி சென்ட்ரல் (என்ற பாஜக ஆதரவு இணையதளத்திலும்) மோடி எந்த வகையான விஷயங்களை பேசப்போகிறார் என்பது பற்றிய அங்கத செய்தி வெளியிட்டது. மேற்குலகில், சுய அங்கதம் இப்போது வழமையாக ஆகியிருக்கிறது. அதே வழி இப்போது இந்தியாவிலும் பரவுகிறது என்பதற்கு அறிகுறியே இது.
அவரது பேச்சு முப்பது நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
மோடியின் பேச்சுக்கு முன்னால், இந்தியா டுடேயின் தலைமை ஆசிரியர் அருண் பூரீ, “மோடி” என்பது இந்திய அரசியலில் மிகவும் பேசப்படும் வார்த்தை என்று சொல்லி ஆரம்பித்து வைத்தது சுவாரஸ்யமானது.
மோடி எழுதி வைத்து படிக்காமல் சுயமாக இந்தியில் பேசினார். நேரடியாக பேச்சுக்கு செல்லாமல், ஒரு வீடியோவை காட்டி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 2008 ஒபாமா அரசியல் விளம்பரத்தை நினைவூட்டும் அந்த 12 நிமிட வீடியோ அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் செய்யப்படும் விளம்பரங்களை ஒத்து இருந்தது. தற்போது தொலைக்காட்சிகளில் இருக்கும் விவாதங்களில் திரிக்கப்படும் வழமையான செய்திகளை தாண்டி, குஜராத்தை பற்றி செய்திகளும் எண்ணிக்கைகளும் கொண்டதாக இருந்தது.
பேச்சும், வித்தியாசமான தொனியில் இருந்தது. அது அரசியல் பேச்சு அல்ல. அது பார்வையாளர்களை கிளர்ந்தெழச் செய்ய வைக்க குறி வைத்ததும் அல்ல. அது பேச்சு வழக்கிலும், இடையிடையே சில சிறுகதைகளையும் நிகழ்ச்சிகளை விவரிப்பதாகவும் இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி ஒருவர் முதன்முறையாக நடு-வலதுசாரி கொள்கைகளை விவரித்து மக்களிடம் பேசியதாக இருக்கும். நரேந்திர மோடி தான் தொடர்ந்து செல்ல இருக்கும் பாதையையும் அது எவ்வாறு தற்போதைய யூபிஏ அரசாங்கம் செல்லும் பாதைக்கு மாறுபட்டது என்பதையும் விவரித்து கூறினார். தனது கொள்கையும் வழியும் தனது கட்சியாலேயே எவ்வாறு பலமுறை கேள்விக்குள்ளாக்கப்பட்டது என்பதையும் அவர் கூறத்தவறவில்லை.
ஜனநாயகம் என்பது மக்களும் அரசாங்கமும் கொண்டுள்ள பார்ட்னர்ஷிப் என்பதும், மக்கள் தங்களது பிரச்னைகள் எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் அனுப்பும் விஷயமல்ல என்பதையும் அவர் பேசினார். அதிகார வர்க்கத்தின் மனநிலைப்பாடுகளை மாற்றுவது என்பதை பற்றியும், அதிகாரிகள் தாங்கள் சேவை செய்யும் சமூகத்தினரிடம் பொறுப்புள்ளவர்களாக இருப்பது எப்படி என்பதையும், அதற்கு நிலையான கொள்கைகளும், மக்களை மையமாக வைத்த துன்பம் தீர்க்கும் அமைப்பு ரீதியான வழிமுறைகளும் முக்கியம் என்பதையும் பேசினார்.
அரசாங்கம் வியாபாரம் செய்யும் வேலையில் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார். உரிமைகள் அடிப்படையான வியாபார சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதை பேசினார். தற்போதைய யுபிஏ அரசாங்கத்தின் NREGA என்ற அரசாங்க வேலைவாய்ப்பு திட்டத்தை எதிர்த்தும், அந்த அரசாங்கம் புதிய புதிய சட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பிரச்னைகள் தீர்த்துவிடலாம் என்று நினைப்பதையும் முதன்முதலாக ஒரு பாஜக தலைவர் எதிர்த்து பேசியதும் இதில்தான்.
”நமக்கு புதியதாக சட்டங்கள் வேண்டாம். வேண்டியதெல்லாம் செயல்கள்தான்” (We don’t need more Acts we need action) என்று சொன்னது பார்வையாளர்களுக்கு உவப்பாக இருந்தது.
மோடியின் பேச்சில் வலிமையான பகுதிகள், அவர் குப்பைகள் மேலாண்மை (waste management )பற்றி பேசியதும், சூரிய வெளிச்சம் மூலம் மின்சக்தி பற்றி பேசியதும், இந்த கருத்துக்கள் அமைப்புரீதியாக ஆக்கப்பட வேண்டும் என்பதும், அது தனிநபர் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்பதும், இவையே தொடர்ந்த சுற்றுசூழல் பாதிக்கப்படாத வளர்ச்சிக்கு உதவும் என்பதும் ஆகியவை.
இந்திய ரயில்வே தனியார் துறையாக மாற்றப்பட வேண்டும் என்றும் நரேந்திர மோடி பேசினார். இது எந்த ஒரு முக்கிய இந்திய அரசியல்வாதியும் பேசாத ஒரு விஷயமாகும். இந்தியாவின் ஆயுதங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும் என்றும், இந்தியா ஆயுத இறக்குமதியிலிருந்து ஆயுத ஏற்றுமதிக்கு மாற வேண்டும் என்றும் பேசினார். இந்திய அரசாங்கம் தொழிற்சாலைகளை நடத்தும் வேலையிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறினார். இதன் பின்னணியில், பார்வையாளர்களிடமிருந்து குஜராத் அரசாங்கம் ஏன் இன்னமும் தொழிற்சாலைகளை நடத்துகிறது என்ற கஷ்டமான கேள்வியையும் அவர் எதிர்கொள்ள நேரிட்டது.
அரசாங்கம் நடத்தும் தொழிற்சாலைகள் இருக்கும் தொழில்களை தனியார் துறையிலிருந்து போட்டி உருவாக்குவதும் முக்கியம் என்று கூறி, தனது தனிப்பட்ட கருத்துக்கும், அரசியல் தேவைக்கும் உள்ள முரண்பாட்டை பற்றி பேசினார்.
அதன் பின்னால் நடந்த கேள்வி பதில் பகுதியில், குஜராத்திலிருந்து டெல்லிக்கு வரும் தொலைவை குறிப்பிட்டு காட்டக்கூடியதாக இருந்தது. அவரது சிறப்பான பதில்கள், அவர் பிரதமராக விரும்புகிறாரா என்பதிலிருந்து டெல்லிக்கு வருவதற்கு தடை பற்றியும் பேசியதில் வந்தவை. hdi , fdi, உணவுக்குறைபாடு, 2002 கலவரம் பற்றிய டெல்லி உயர்மட்ட பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்த பதில்கள் வந்திருக்காது.
முதன்முறையாக எதிர்கட்சியிலிருந்து பிராந்திய குஜராத்திலிருந்து ஒரு முதன்மை தலைவர் டெல்லி உயர்வர்க்கத்தின் நடுவே நின்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு தேசிய தொலைக்காட்சியில் பதிலளித்திருக்கிறார்.
இதுவரை எந்த அரசியல்வாதியும் பேசாத , செல்லாத பொருளாதார திட்டக்கொள்கைகளை மக்கள் முன் வைத்திருக்கிறார் நரேந்திர மோடி.
மூலம்
வீடியோ
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 21 இரா.முருகன் – ‘மூன்றுவிரல்’
- திருக்குறளில் மனித உரிமைகள்!
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12
- கரிகாலன் விருது தேவையில்லை
- காலம்
- நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்
- எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- மூன்று அரிய பொக்கிஷங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1
- சுத்தம் தந்த சொத்து..!
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1
- மெல்ல நடக்கும் இந்தியா
- மஞ்சள் விழிகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)
- வாலிகையும் நுரையும் – (15)
- யாதுமாகி நின்றாய்….. !
- மூக்கு
- தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !
- விட்டில் பூச்சிகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -15 என்னைப் பற்றிய பாடல் – 8 (Song of Myself)
- “தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )
- புதுத் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பூதச் செர்ன் விரைவாக்கியில் உறுதியானது.
- அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48
- நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி