வால்ட் விட்மன் வசனக் கவிதை -21 என்னைப் பற்றிய பாடல் – 15 (Song of Myself) நாணல் புல் கீழானதில்லை..!

This entry is part 21 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  Walt Whitman

(1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

  

வானத்தில் தோன்றிய

விண்மீன்களை விட எவ்விதத் திலும்

நாணப் புல்லானது

தாழ்ந்த தில்லை என்று

நம்புகிறேன் நான்.

சிட்டுக் குருவி முட்டை போல்

செம்மை யாய்ச் செதுக்கப் பட்டது

சிற்றெறும்பும்,

செம்மண் கல்லும் !

மரத் தவளை படைப்பில் சிறந்தது

உயிரின மேதை கட்கு !

பிளாக் பெர்ரி கனிக் கொத்து

அலங்க ரிக்கும்

சொர்க்கபுரி அரங்குகளை !

நசுங்கிக் கோணிய

பசுவின் தலை

முற்படும் வனப்பில்

சிற்பச் சிலை எதனை விடவும் !

காரணத் தோடு ஒதுக்கிப்        

பின்தள்ளி யவை

தூரத்தில் மறைந்து போயின !

மீண்டும் அழைத்துக் கொள்வேன், 

வேண்டி னால் எதனையும்.

 

 

நாணமும், வேகமும் எனக்கு

வீணாய்ப் போய் விடும்

என் முயற்சிக்கு எதிராக

அடிநில வெப்பக் கனற் பாறை

எழுப்பிடும்

பழைய எரிச் சக்தி எல்லாம்

வீணாய்ப் போகும் !

மரபிழந்து போன பூர்வ யானைகள்

புறமுது கிட்டுப்

பொடியான தம் எலும்புக்குள்

புதைந்து போயின

வீணாக !   

கடல் வற்றித் தணிந்து

பூதப் பெரும் திமிங்கலங்கள்  

கிடப்பது 

கீழே  வீணாய்ப் போகும்.

தாறு மாறாய்க் கட்டிய வீடுகள்

வானத்தோடு உடன்பாடின்றி

வீணாய் முறியும் !

கத்தி முனை மூக்குள்ள

கடல் வாத்துகள் கனடா தேசத்தின்

வடக்கு நோக்கிப் பறப்பது

வீணானது ! நானும்

ஓடுவேன் அவற்றின் பின்னால் 

கூடு நோக்கி

பிளவுள்ள குன்றில் !

 

+++++++++++++

 தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (April 24, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationவொரையால் தமிழ்க்கலாச்சார மன்றத்தின் 8 -ஆம் ஆண்டு விழா …தமிழோடு வாழ்வோம்தாகூரின் கீதப் பாமாலை – 62 தீராத ஆத்ம தாகம் .. !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *