அரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்

author
1
0 minutes, 33 seconds Read
This entry is part 11 of 28 in the series 5 மே 2013




* நாவல்= ஆகஸ்ட் 15


: குமரி எஸ். நீலகண்டன்


ஆகஸ்ட் 15  நாவல் : வித்தியாசமான வடிவம் . இணையதள பக்கங்கள், அவற்றின் பின்னோட்டம் என்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதில் காந்தியின் உதவியாளர் கல்யாணசுந்திரத்தின் வாழ்க்கை அனுபவங்களும் இளம் வயது சத்யாவின் சில பக்கங்களும் இந்த புது வடிவத்தில்  சொல்லப்பட்டிருக்கின்றன.கல்யாணத்தின் தீவிர அனுபவங்கள் பெரிதாய் ஆக்கிரமிக்கின்றன. சத்யாவின் அனுபவங்கள் வயது காரணமாக சற்றே மேலோட்டமானவை. இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பது கல்யாணம் மூலம் காந்திய நெறிகள் வலியுறுத்தப்படுவது, அதை இளைய தலை முறை பாடமாக எடுத்துக் கொள்வதும் ஆகும்..கல்யாணம் பற்றிய நுணுக்க்மான தகவல்கள், அரிய புகைப்படங்கள் வலு சேர்க்கின்றன். புதிய வகை  டாக்கு நாவல் இது.

ரூ 450,சாய் சூர்யா பதிப்பகம், சென்னை 05  / 9444628536

 

மூன்று திரைப்படங்கள்:

1. நினைவுகள் அழிவதில்லை.:  நிரஞ்சனாவின் மலையாள நாவல் படமாகியிருக்கிறது. பொதுவுடமை இயக்கத்திற்கு வருபவர்களுக்கு அறிமுகமாகும் ஆரம்ப நாவல்களில் ஒன்று. கேரளாவில் கையூரில் பொதுவுடமைத் தோழ்ர்கள் வாழவும் போராட்டமும் சொல்லப்பட்டிருக்கிறது.  இன்றைய இளைஞர்களின் மனப்போக்கு பற்றிய சிலபதிவுகளையும், ம்லையாளச் சூழலை தவிர்த்த போக்கும் தமிழ் ரசிகனுகு உதவுகிறது.  நாடக பாணி, டூயட் உறுத்தினாலும் ஒரு முக்கிய பதிவு. இயக்குனர்: பகவத் சிங் கண்ணன், ஒளிப்பதிவு : புது யுகம் நடராஜன். முன்னாள் பதிப்பாளர், நல்ல வாசகர்.

 

2. கவுரவம்:  கவுரவக் கொலைகள் பற்றிய விவாதம் தரும் படம். பல மேடைகளில் பொதுவுடமை, தி. க தோழர்கள் சொல்வதினை இப்படமும் சொல்கிறது. வணிகரீதியான முயற்சிதான். பிரகாஷ்ராஜ், ராதாமோகனின் அக்கறையை கூர்மையான வசனங்களில் காணலாம்,

3. பரதேசி: ரொம்ப தாமதமாய் பார்த்தேன். அழவைத்து விட்டார் பாலா என்னை.. கூடவே டாக்டர் டேனியல் ஆவியையும் . அவருக்கு இப்படி ஒரு கெட்ட அஞ்சலியா;

 

தமிழ் சென்ரியூ:

ஒரு டீ சொல்லுங்கள்;

கவினின் கோபம் ஆற்றாமை, சமூக அக்கறை வெளிப்பட்டிருக்கும் இன்னொரு தொகுதி . அதிலிருந்து சில: படைப்பாளியின் ஆதங்கமாய்..

 

1. கவிதைப் புத்தகம் கொடுத்துவிட்டு

விமர்சனத்திற்க்காகக் காத்திருந்தேன்

வெறும் காற்றுதான் வந்தது.

2. எழுத்தாளனைச் சுரண்டிப்பிழைக்கும்

பதிப்பாளனுக்கு

எங்கிருந்து வந்த்து சமூக அக்கறை

3

.பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாமல்,

நானும்

கவிதையெழுதிக் கொண்டுதானிருக்கிறேன்

4.

அடக்க விலை 17 ரூபாய்

விற்பனை விலை 100 ரூபாய்

பதிப்பாளர்= வியாபாரி

5.

சிரித்தபடி உலா வரும்

முகமூடிக் கொள்ளைக்கார்ர்கள்

பதிப்பக உரிமையாளர்கள்

6. மாதாமாதம் பத்துப் பக்கங்களுக்கு

ஆசிரியரின் கவிதைகளே அச்சேறுகின்றன

ரொம்பத் தீவிர இலக்கிய இதழ்

7.

குட் மார்னிங் சொல்லும் பெண்ணுக்கு

இருநூறு லைக்குகள்

கவனிப்பாரற்று என் கவிதைகள்

(வெளியீடு: பதியம் ,திருப்பூர் விலை ரூ 100    9942050065  )

 

ஹைகூ கவிதைகள்:

மழையின் கையெழுத்து

புதுக்கோட்டை தங்கம் மூர்த்தி அய்ந்தாம் தொகுப்பை ஹைவுக்களாக ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் கொண்டு வந்திருக்கிறார்.           கைபேசி: 94431 26025  “ மழையின் கையெழுத்து “  தமிழ் சூழல்கள், புகைப்படங்களில் ஆங்கில, வடக்கத்திய  முகங்கள் . அதிலிருந்து..

 

*  அழகாகப் பேசுகின்றன்

பறவைகள்-

உளறும் மனிதர்கள்

* மழையில் நனைய ஆசை

சட்டைப் பையில்

அவளின் கடிதம்

* பட்டாம்பூச்சி

பிடித்துக் கொடுத்தேன்

இறக்கை முளைத்தது மகளுக்கு.

 

ஒரு கடிதம்;

” சாயம் புரண்ட திரா “ பற்றி ( சாயத்திரை மலையாள மொழிபெயர்ப்பு )I

I   was able to lay my hands on your Tamil Novel “ Chayampurandaa Thira “ through its Malayalam translation. A very good novel depicting the life of people surrounding baniyan companies. The narration is very fine . The characters Bhakthavatsalam, Samiyappan, Nagan and Chettiar will remain indelible in the minds of readers. It is a telling point  that the novel never get dull for want of prominent women characters.  The smooth and flawless translation   of Stanley has made the reading easy and pleasant. ( SR Gopinatha menon, Retd P S to Member Company Law Board, Palakad, Kerala ):

Published by Cintha, Thiruvananthapuram

 

* Subrabharathimanian   (  subrabharathi@gmail.com )

Series Navigation“ 13 ”நிழல்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *