வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்

This entry is part 16 of 33 in the series 19 மே 2013

 

Walt Whitman 

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

ஏறி அமர்ந்தேன் பளு வண்டியில்

இரவில் காக்கைக் கூட்டில்

சரண் அடைந்தேன் !

ஆர்க்டிக் கடலில் நாங்கள்

பயணம் செய்தோம்.

இருந்தது அங்கே தேவைப் படும்

பெரு வெளிச்சம்.

தூயச் சூழ்வெளியில்

உடல் நீட்டி

ஓய்வெடுத்தோம்

ஒய்யார நளினக் காட்சி !

பெயர்ந்து சென்றன

பெருத்த பனிப் பாறைகள்

என்னைக் கடந்து !

அவற்றை நானும் கடந்தேன்.

 

 

வெளிப்புறக் காட்சி எத்திசையும்

வெறுமை யான வெண்பனி தான் !

தூரப் பின்புலத்தில் பனிச்சிகர

மலைத் தொடர்கள் !

உடனே அவற்றை நோக்கி

தடம் புரண்டோடும்

என் கற்பனை !

அருகில் வந்திடும் எமது

பெரும் யுத்தக் களம் !

எங்கள் போருக்கு அங்குதான்

ஈடுபடுவோம் !

பூதப் பெரும் கூடாரங் களைக்

கடப்போம்,

முடங்கிய கால்களில்

கவன மோடு !

நலிந்து போன சில நகரிலும்

நகர்ப் புறத்திலும்

புகுந்தோம் !

கவிழ்ந்த கட்டடக் கலை மாளிகை

காண்போம் பூகோளத்தில் !

 

+++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (May 14, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *