மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
இதயமே ! உணர்ச்சி யின்றி
எதைத் தேடி வெளியே செல்கிறாய் ?
உன் இல்லத் துக்கு வா !
மறுபடியும் அங்கே வந்துவிடு !
பழைய அறை மூடிய படி
கிழிந்த கம்பளம்
விரிக்கப் பட்டுள்ளது !
முடங்கிப் போய் நீயும் தனித்துக்
கிடப்பாய் !
நாள் முழுதும் கடற் கரையில்
நீ பொறுக்கிய
கூழாம் கற்களும், பன்னிறச் சிப்பிகளும்
கூடை நிரம்பி விட்டன !
உப்பு நீர் உன் பக்கத்தில் !
வெப்பச் சூட்டினில் வெந்து
தாகம் மிஞ்சி சாகப் போனாய்,
நோய்வாய்ப் பட்டு !
சுருளும் அலைகள் குரலோ டிணையும்
அடிகாணா அகண்ட கடலில்
எனக்குத் தெரியாததை மர்ம மொழியில்
முணங்கிக் கொண்டு !
ஓய்வு கொள்ளும் இல்லத்தில்
உனக்கொரு துணைவி யின்றி
இனிய வாழ்க்கை இல்லை,
ஒழுங்காய்
வீட்டு விளக்கு ஏற்றாமல்
ஊமைப் புறக்கணிப்பில் எல்லாம்
உறங்கிப் போய் விட்டால்,
இன்னுமுன் சிந்தனைக் களஞ்சியங்கள்
இருண்ட மூலையில் முடங்கும் !
தனித்து நீ மட்டும் இருந்தால்,
துடைத்து விடு
படிந்தி ருக்கும் தூசியை !
வடித்து விடு அவற்றை ஓர்
வைரக்கல் ஆரமாய் !
ஏக்கமுடன் இனிமையாய்
உன் மார்பின் மேல்
ஏற்றிக் கொள் அதனை !
தோட்டச் செடிகள் பூக்களை
மண்மேல்
தூவித் தெளித்தது போல்
விண்வெளி விளிம்பில்
இன்னும்
வீற்றிருக்கும் விண்மீன்கள் !
+++++++++++++++++++++++++
பாட்டு : 321 1928 ஏப்ரல் 11 இல் தாகூர் 66 வயதினராய் இருந்த போது கொல்கத்தாவில் எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 28, 2013
http://jayabarathan.wordpress.
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22
- சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா
- கவிதாவின் கவிதைகள்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி
- எதிர்பாராதது
- காலம் கடத்தல்
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4
- சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- தாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !
- நீங்காத நினைவுகள் – 5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12
- கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்
- விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்
- சூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)
- நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 9.அறிவால் உலகை வியக்க வைத்த ஏழை….
- வேர் மறந்த தளிர்கள் 4-5
- அக்னிப்பிரவேசம்-36