(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
போதும், போதும், போதும் !
எப்படியோ
அதிர்ச்சிக் குட்பட்டேன்
என் பின்னே நில் !
கை விலங்கிட்ட மூளையைக்
கடந்து அப்பால்,
கனவு, தூக்கம், ஏக்கம்
கலைந்திடச்
சிறிது அவகாசம் கொடு !
என்னை நானே கண்டுபிடிக்க
முடிந்தது
வழக்க மாய்த் தவறிழைத்த
பின்னே இறுதியில் !
அதன் பிறகு
என்னைக் கேலி செய்வோர்
அவமதிப் போர் தம்மை நான்
நினைப்ப தில்லை !
கண்ணீர்த் துளிச் சொட்டுகள்,
குண்டாந் தடி அடி,
சுத்தியல் அடிகள் எல்லாம்
மறந்து போவேன் !
அதன் பிறகு
சிலுவையில் என்னை அடித்ததும்,
இரத்தக் கிரீடம் சூடியதும்,
தனிக் கண்ணோட் டத்தில்
நோக்க முடிந்தது
என்னால் !
நினைவுக்கு வருகிறது
இப்போது !
கால வரம்பு மீறி
வாழ முனைந்தேன் !
பிரேதங்கள்,
பிரேதக் கல்லறை
பெருகின வரிசையாய்
என் பொறுப்பில் !
போர்ப்படை தொடர்ந்து அணிவகுத்து
முன்னேறப்
பேராற்றல் மீண்ட தெனக்கு !
உள் நாட்டிலும்
கடற் தளங்களில் புகுந்தோம் !
எல்லைக் கோடுகள்
எல்லாம்
தாண்டிச் சென்றோம் !
உலகு முழுதும் கைப்பற்ற
உடனே
கட்டளை பிறக்கும்
எனக்கு !
எமது தொப்பியில் சொருகிய பூக்கள்
ஆயிரங் காலத்து மலர்ச்சி !
குருவே !
என் வணக்கம் உமக்கு
முன்னே வந்து
தொடர்வீர்
உமது விளக்க உரைகளை !
தொடர்ந்து கேட்பீர்
உமது வினாக்களை !
+++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986] - Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/
Walt_Whitman [November 19, 2012] - http://jayabarathan.wordpress.
com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (May 28, 2013)
http://jayabarathan.wordpress.
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22
- சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா
- கவிதாவின் கவிதைகள்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி
- எதிர்பாராதது
- காலம் கடத்தல்
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4
- சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- தாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !
- நீங்காத நினைவுகள் – 5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12
- கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்
- விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்
- சூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)
- நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 9.அறிவால் உலகை வியக்க வைத்த ஏழை….
- வேர் மறந்த தளிர்கள் 4-5
- அக்னிப்பிரவேசம்-36