யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா

This entry is part 15 of 23 in the series 16 ஜூன் 2013

IMG_0717aIMG_0560a

தலைநகரில் பல நாடகங்களையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்த யதார்த்தா தற்போது ஒரு அறக்கட்டளையாகப் பதிவு பெற்றுள்ளது.  புதிதாக நிறுவப்பட்ட யதார்த்தா அறக்கட்டளையின் சார்பில் ‘யமுனா சூத்ரா’ என்ற நாட்டிய விழா, இந்தியா ஹாபிடாட் சென்டரின் ஆதரவுடன் கடந்த ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் இந்தியா ஹாபிடாட் சென்டரின் ‘ஸ்டெயின் கலையரங்கில் நடைபெற்றது.

4 ஜூன் 2013 அன்று சுப்ரியா நாயக் ‘யமுனா’ என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார். வாய்ப்பாட்டு- பிரசாந்த் பெஹரா, மர்தலா- சுரேந்திர மஹாராணா, புல்லாங்குழல்- விஜயகுமார் மற்றும் சிதார். ரெயிஸ் அஹ்மத் கான் ஆகிய கலைஞர்கள் இசைக்குழுவில் பங்கேற்றனர். யமுனை நதியின் பல்வேறு முகங்கள், யமுனை நதிக்கரையில் கண்ணன் மற்றும் கோபியர்களை மையமாக வைத்த நிகழ்ச்சிகளை நாட்டிய வடிவில் வழங்கினார்.

IMG_0053a

இதனைத் தொடர்ந்து பரதநாட்டிய குரு  ஜஸ்டின் மெக்கார்த்தி வடிவமைத்த  தியாகராஜ சுவாமிகளின் ‘நௌக சரிதம்’ நாட்டிய நாடகம் நடைபெற்றது.  லோகேஷ் பாரத்வாஜ், பாரதி பென்னேஸ்வரன், அபிநயா பென்னேஸ்வரன், மதுஸ்ரீ தத்தா, கத்ரினா மோக்ரே, வீணா குமார், அஷ்வதி மனோகரன், விருந்தா, ஆண்ட்ரியா, விஷ்ணுப்ரியா ஆகிய கலைஞர்கள் இந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்றனர்.   சுதா ரகுராமன் பாட்டு, ரகுராமன் புல்லாங்குழல், எம்.வி.சந்திரசேகர் மிருதங்கம் மற்றும் திவான் சந்த் தம்புரா என்று இசைக்கலைஞர்களும் இசைப் பங்களித்தனர்.  பாகவத புராணத்தின் அடிப்படையில் தியாகராஜ சுவாமிகள்   21 கிருதிகளைக் கொண்டு 13 ராகங்களில் அமைத்த  நாட்டிய நாடகமாகும்.  கண்ணனும் கோபியரும் யமுனை நதிக்கரையில் படகினை ஓட்டும் வைபவமும் கோபியர் சம்சார நதியைக் கடந்து இறையருளை எட்டும் வைபவத்தை மிகவும் சுவாரசியமாக கலைநயத்துடன் விளக்கும் நாட்டிய நாடகம் இது.

ஜூன் 4ம் தேதி குரு ஜஸ்டின் மெக்கார்த்தி யமுனை நதி குறித்த பாடலைக் கொண்டு தனி நடனம் வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை நெளக சரிதம் நாட்டிய நாடகத்தை கலைஞர்கள் வழங்கினார்கள்.

யதார்த்தாவின் இந்த ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழாவில்  வெளிநாடு மற்றும் இந்தியாவின் கலை ரசிகர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

மிக விரைவில் யதார்த்தா அறக்கட்டளையின் சார்பாக நாடக விழா, இசை விழா, திரைப்பட விழாக்கள் மற்றும் இந்தியக் கலை வடிவங்கள் குறித்த கருத்தரங்கங்களும் ஏற்பாடு செய்யப்படும் என்று அதன் நிறுவனர் யதார்த்தா பென்னேஸ்வரன் தெரிவித்தார்.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *