நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விசியங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாதத் தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா?
சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா? என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாக்காப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச்சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதும்,தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது,இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன.
மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினக்கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.இந்திய சமுதாயம் கேட்பாரற்ற சமூதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா?
தடுமாறிக் கொண்டிருக்கும்இந்திய சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும்,சமுதாயத்தலை வர்களும் சொந்த சகோதரர்களின் மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு நேசக்கரம் நீட்டக் கூடாதா?
கடந்த சில தினங்களாக மற்றுமொரு தலையாயப் பிரச்சனை ஒன்றைப் பற்றி ‘புதிய வெளிச்சம்’ என்ற பகுதியில் உண்மை விளம்பி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறையின் எதிர்காலம் குறித்தும் அத்துறை தொடர்ந்து பெருமைவாய்ந்த மலாயாப் பல்கலைக் கழகத்திலேயே தக்கவைக்கும் முயற்சியில் அரசாங்கமோ,எந்த அரசியல் கட்சிகளோ,பொது அமைப்புகளோ எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் ஏனோதானோ என்ற நிலையில் இருக்கும் பச்சத்தில் 1956 ஆம் ஆண்டில் பல சிரமங்களுக்குக்கிடையில் கோ.சாரங்கபாணி அவர்களின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்ட இத்துறையை இழந்துவிடாமல் இருக்க சமுதாயம் செய்யத்தயங்கும் நிலையில் எதிர்கால சந்ததியினரின் தேவை அறிந்து அதனைக் காக்கும் பொருட்டு கடுமையான போராட்டத்தில் தினக்குரல் இறங்கியுள்ளது.சகபத்திரிக்கைகளி ன் உதவியோடு பிரதமரை அணுகி பிச்சனைக்குத் தீர்வு காண்பது வரவேற்கத் தக்கது.எனினும்,சமுதாயத்தின் தமிழ்மொழியைக் காக்கும் பணியில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் கடப்பாடுதான் என்ன?
இந்திய ஆய்வியல் துறைக்கு அலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள் முனைவர் திலகவதி,கந்தசாமி,சபாவதி,குமரன் ,முகமது ராடுவான்,கிருஷ்ணன் மீண்டும் குமரன் ஆகியோர் பொறுப்பில் இருந்துள்ளனர்.2004/2005 ஆம் கல்வி ஆண்டில் 98 மாணவர்கள் கல்வி பயின்ற வேளையில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து 2013/2014 ஆம் கல்வி ஆண்டில் 7 மாணவர்களே கல்வி பயிலும் நிலையில் இந்திய ஆய்வியல் துறை மூடும் நிலைக்கு வரும் வரையில் துறைத்தலைவர் முனைவர் குமரன் அவர்கள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் போனது ஏன்?
அப்படி ஏதும் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருந்தால் சமுதாயத்திடம் சொல்லியிருக்கலாமே? சொல்லாமல் விட்டது ஏன்? உங்களை மலைபோல் நம்பியிருந்த சமுதாயத்திற்கு ஏமாற்றத்தைத் தந்துவிட்டீர்களே! உங்களுக்கு இந்த துறையில் வேலை இல்லையென்றாலும்,அரசாங்கத்திற் கு தாங்கள் காட்டிய விசுவாசத்திற்கு கைமாறாக வேறு துறைக்குத் தலைவராகிவிடுவார்கள்.தங்களின் கல்வித்தகுதி உங்களுக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்துவிடும்.ஆனால், தங்களின் மெத்தனப் போக்கால் எதிர்காலத்தில் பல இந்திய ஏழை மாணவர்கள் தமிழைப்பயிலும் வாய்ப்பு பறிபோயிடும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதே! அதற்கு தாங்கள் கொடுக்கும் விலைதான் என்ன?
மொழிப்பிரச்சனை என்று வரும் போது,இந்திய சமுதாயத்திற்கு காவலனாகத் திகழவேண்டிய,அமைச்சரவையில் இரு அமைச்சர்களைக் கொண்டிருக்கும் ம.இ.கா.அதன் கல்விக்குழு மற்றும் துணைக்கல்வி அமைச்சர் சி.கமலநாதன் தமிழ்மொழியின் சீரழிவைக் கைக்கட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது முறையா? இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணக்கூடாதா?
தமிழ்மொழியின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மலேசிய தேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம்,மலாயா தமிழ்ப்பள்ளி மன்றப் பொறுப்பாளர்கள்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம்,மலேசிய இந்து சங்கம்,மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்த் தொடர்புடைய பிற சங்கங்களின் இந்தியல் ஆய்வுத்துறையைக் காக்க விரைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
கையில் இருப்பதை இழந்துவிட்டு பின்னர் நமக்குள் குறைப்பட்டுக்கொள்வது அறிவுடைமையாகாது.நாடு சுதந்திரமடைந்த பின்னர்.இந்திய சமுதாயம் பல வாய்ப்புகளை இழந்துள்ளது.இப்போது, தமிழ் மொழியையும் இழப்பதன் மூலம் நமது உரிமையை விட்டுக்கொடுப்பது போலாகும்.ஆட்சியாளர்கள் மிகவும் நுட்பமான முறையில் நமது அடிச்சுவடுகளை அழித்துவருகிறார்கள்.அவற்றில் தமிழ்மொழியின் அழிப்பும் ஒன்று என்பதை உணரவேண்டும்.
நம்மிடையே இருக்கும் பலர் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று,வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கும் நபர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.தாய்த்தமிழைத் தூக்கிலிடும் தமிழ்த் துரோகிகளைத் தூக்கி எரிவோம்.தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஏழைத்தமிழர்களைக் கைக்கூப்பி வணங்குவோம்.அவர்களால்தான் மலேசியாவில் தமிழர்கள் என்ற அடைமொழியோடு அன்றும் இன்றும் பெருமையோடு வாழ்ந்து வருகிறோம்!
தாய்மொழித்தமிழை இழந்து,இன்று வருந்தும் இந்தோனேசியா,பீஜி,மொரிசியஸ் போன்று இன்னும் பல நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் அவலநிலை நமக்கு வேண்டுமா? இங்கே,சட்டம் நமக்குச் சாதகமாக இருந்து வருகிறது.இதுவரையில் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. மெத்த படித்த தமிழ்மக்களின் தமிழை ஏளனத்தோடு பார்ப்பதும், தமிழ்மொழி மீது பற்று கொண்டு அதனை வளர்க்கும் தமிழர்களை அலட்சியப்படுத்தும் போக்கினை இனியும் தொடருமானால்,தமிழை அழித்த அவப்பெயரை இந்தப் பிறப்பு அழியுமட்டும் சம்பத்தப் பட்டோர் சுமக்கவேண்டும்.
தமிழுக்காக நாம் ஒன்றுபடுவோம்.நமதுரிமையக் காக்கும் வகையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியல் ஆய்வியல் துறையை நிலை நிறுத்த அனைவரும் இன்றே செயலில் இறங்குவோம்!
- ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு
- டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 9
- தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று
- வறுமை
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………25 அசோகமித்திரன் – ‘தண்ணீர்’
- லாடம்
- பால்ய கர்ப்பங்கள்
- நீங்காத நினைவுகள் – 8
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும்
- கேத்தரீனா
- நசுங்கிய பித்தளைக்குழல்
- அகமும் புறமும்
- மரணத் தாள்
- உறவுப்பாலம்
- இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்
- வேர் மறந்த தளிர்கள் – 11,12,13
- முன்பொரு நாள் – பின்பொரு நாள்
- நா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 30 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) உன்னத நிலை அடையும் காலம்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -8
- தாகூரின் கீதப் பாமாலை – 71 என் படகோட்டியின் போக்கு .. !
- மருத்துவக் கட்டுரை டெங்கி காய்ச்சல்
- ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.
- புகழ் பெற்ற ஏழைகள் -13 ம.பொ.சி
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16