மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
எதைக் கேட்கப் போகிறது உனது
இதயம் முழுமை யாக ?
யாசகம் செய்யாதே வெறுங்கை யோடு !
வாசல் முன் செல்லாதே
வேசக் கண்ணீர் விழிகளுடன் !
மணிக்கற்கள் ஆரமாய்க் கிடைத்தால்
மாலை மாற்றிக் கொள்ளலாம்.
உன் பெண் தெய்வப் பீடத்தை
வீதி ஓரத்துக்
குப்பைத் தூசி வெறுந் தரையில்
வைப்பாயா ?
வைகாசி மாதத்தில் காட்டு மரங்கள்
வறட்சியில் காய்ந்து
தீப்பற்றிப் பெரும் தொல்லைகள்
நேர்ந்திடும் புயல் காற்றால் !
நிரப்பு வாயா அப்போது நீ
வரவேற்புக் கூடையில்
வாடிச் சுருங்கிய பூக்களை ?
விருந்தாளி யை வீட்டுக்குள் நீ
விளித்திட நேர்ந்து
பரிவோடு வரவேற்பு முடிந்தால்
இருட்டில் பெரு வெளிச்சம்
பரப்பிட வைக்கும்
உன் விளக்கு
பத்தாயிரம் தீப்பொறிகளைப்
பற்ற வைத்து !
+++++++++++++++++++++++++++++
பாட்டு : 324 ஜூலை 1928 இல் தாகூர் 67 வயதினராய் இருந்த போது பங்களூரில் எழுதப் பட்டு வெளியானது.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 9, 2013
http://jayabarathan.wordpress.
- கதவு
- விடுப்பு
- மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி
- புகழ் பெற்ற ஏழைகள் 15. உலகை உலுக்கி அச்சுறுத்திய ஏழை
- தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28
- நீங்காத நினைவுகள் – 10
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்
- கூரியர்
- மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….
- வேர் மறந்த தளிர்கள் – 17,18,19
- முப்பத்தாறு ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி 11 பில்லியன் மைலுக்கு அப்பால் பால்வீதி ஒளிமீன்கள் அரங்கம் புகுந்த நாசாவின் முதல் விண்வெளிக் கப்பல்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18
- சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்
- உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…
- வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்