டாக்டர் ஜி.ஜான்சன்
நமது கல்லீரல் ( LIVER ) இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சல்லடை போன்று செயல்படுகிறது. சிறுகுடலிலிருந்து உரியப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கல்லீரல் அவற்றைப் பிரித்து உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றுகிறது.இதுபோன்றே நஞ்சுகளையும் உடைத்து அவற்றை கழிவுப் பொருட்களாக்கி சிறுநீரகம் வழியாக வெளியேற்றவும் உதவுகிறது.
உடலின் இரத்தம் கல்லீரல் வழியாகக் கட்டாயம் செல்ல வேண்டியுள்ளதால் அதில் பயணம் செய்யும் புற்றுநோய் செல்கள் மிக எளிதாக அங்கு தங்கி கல்லீரல் புற்றுநோயை உண்டுபண்ணி விடுகிறது.
இவ்வாறு உடலின் வேறு பகுதிகளில் உண்டான புற்றுநோய் செல்கள் இரத்தம் வழியாக கல்லீரலில் புற்றுநோயை உண்டு பண்ணுவதை இரண்டாம் நிலை புற்றுநோய் ( SECONDARY CANCER ) என்று அழைக்கப்படுகிறது.கல்லீரலில் உண்டாகும் பெரும்பாலான புற்றுநோய் இந்த ரகத்தையே சேர்ந்தது.
இதற்கு மாறாக கல்லீரலிலேயே உண்டாகும் புற்றுநோயை முதல் நிலை கல்லீரல் புற்றுநோய் ( PRIMARY LIVER CANCER ) என்று அழைக்கப்படுகின்றது.வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் புற்றுநோய்களில் இந்த ரகம் பாதிக்குமேல் அதிகமாகக் காணப்படுகின்றது.
இதற்குக் காரணம் இந் நாடுகளில் பரவலாக தொற்றும் ஹெப்பட்டைட்டிஸ் பீ வைரஸ் எனலாம்.இந்த வைரஸ் இரத்தம் மூலமாகவும், தகாத உடலுறவு மூலமாகவும்,போதைப் பித்தர்கள் ஊசியைப் பகிர்ந்து கொள்வதின் மூலமாகவும் பரவுகிறது.
இதனால் கல்லீரலில் அழற்சி ( HEPATITIS ) உண்டாகி, அதுவே நாளடைவில் புற்று நோயாக உருவெடுக்கிறது.
இன்று உலகில் 340 மில்லியன் பேர்கள் இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப் பட்டுள்ளனர்.இவர்களில் பலருக்கு இது உள்ளதே தெரியாது.
இதற்கு விழிப்புணர்வை உண்டுபண்ண ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 28ஆம் நாள் ” உலக ஹெப்பட்டைட்டிஸ் தினம் ” என்று அனுசரிக்கப் படுக்கிறது.
அதற்கு இந்த வருட சுலோகம்கூட , ” இது ஹெபட்டைட்டிஸ் .அதைத் தெரிந்துகொள்.அதை எதிர்கொள். ” ( This is Hepatitis .Know it .Confront it ) என்பதாகும்.
இத்தகைய ஆபத்தை உண்டுபண்ணும் ஹெப்பட்டைட் பீ உள்ளதா என்பதை சாதாரண இரத்த பரிசோதனையின் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
முதல் ரக கல்லீரல் புற்றுநோய் ( Primary Hepatocellular Carcinoma ) சில காரணங்களால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகியதால் ஏற்படுவதாகும்.அவை வருமாறு:
* பிறவியில் குறைபாடு – Birth Defect
* மதுவுக்கு அடிமை – Alcoholism
* நீண்ட நோய்த் தொற்று – உதாரணம் ஹெப்பட்டைட்டிஸ் வைரஸ் – Chronic Infection -Hepatitis Virus
* ஹீமோகுரோமேட்டோசிஸ் ( Haemochromatosis ) எனும் பிறவியில் உண்டாகும் நோய்.இதில் கல்லீரலின் செல்களின் அளவுக்கு அதிகமான இரும்பு சத்து தேங்கி நின்று வியாதியை உண்டுபண்ணும்.
* கல்லீரல் சுருங்கும் நோய் ( Cirrhosis ) – அதிகமாக மது அருந்தினால் கல்லீரல் சுருங்கி போகும்.பின்னர் புற்று நோய் உண்டாக வழி வகுக்கும்.
* உடல் பருமன் அதிகமானல்கூட கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகலாம்
* கொழுப்பு படிந்த கல்லீரல் ( Fatty Liver ) – இதுவும் மதுவால் உண்டாவது.
ஆகவே கல்லீரலில் புற்றுநோய் இதுபோன்ற காரணங்களால் உண்டாகிறது. நாம் தகுந்த பாதுகாப்புடன் இருப்பது நல்லது.
இரத்தப் பரிசொதனையின் மூலமாக அதற்கான எதிர்ப்பு உடலில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.அப்படி இல்லையேல் ஹெப்பட்டைட் டிஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம்.
மது பழக்க வழக்கத்தையும் குறைத்துக் கொள்ளலாம். பாதுகாப்பான பாலியல் உறவில் ஈடுபடலாம்.
உங்கள் உறவினரின் கல்லீரல் பாதிக்கப்பட்டது மதுவினால். அவ்வாறு பாதிக்கப்பட்ட கல்லீரலில் புற்று நோய் உண்டாவது இயல்பே. கல்லீரல் புற்று நோய்க்கு சிகிச்சை இல்லாத காரணத்தால் அவர் இறக்க நேர்ந்தது.
( முடிந்தது
- 1. சாகசச் செயல் வீரன்
- தீவு
- புகழ் பெற்ற ஏழைகள் -18
- ஐயனார் கோயில் குதிரை வீரன்
- மெங்கின் பயணம்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 13
- சூறாவளி ( தொடர்ச்சி )
- மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்
- இன்ப அதிர்ச்சி
- நீங்காத நினைவுகள் 13
- சதக்கா
- கஃபாவில் கேட்ட துஆ
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31
- அசல் துக்ளக் இதுதானோ?
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’
- புது ரூபாய் நோட்டு
- தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 21
- குமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -35 என்னைப் பற்றிய பாடல் – 28 (Song of Myself) எனது காதலிகள் .. !
- வணக்கம் அநிருத்
- விக்ரமாதித்யன் கவிதைகள் ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை முன் வைத்து..
- உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு
- கவிதைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -13 மூன்று அங்க நாடகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! மிகப் பெரும் புதிய வால்மீன் உற்பத்தி வளையத் தட்டு ஏற்பாடு கண்டுபிடிப்பு
- வேர் மறந்த தளிர்கள் – 23-24-25