நீங்காத நினைவுகள் 14

This entry is part 18 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

Picture 017

இப்படியும் ஓர் அப்பா!

(மீள்பதிவு– சில சேர்க்கைகளுடன்)

ஜோதிர்லதா கிரிஜா

 

“அப்பாக்கள் தினம்” கடந்துசென்று விட்டது.  ஆனாலும், நல்ல அப்பாக்களையும் அம்மாக்களையும் பொறுத்த மட்டில், எல்லா நாள்களுமே பெற்றோர் தினமாய்க் கொண்டாடப்பட வேண்டிய பெருமை படைத்த நாள்கள்தானே! ‘அதென்ன நல்ல அப்பா, நல்ல அம்மா?’  என்கிறீர்களா? இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் உண்டு.  பெற்றோர்களிலும் சராசரி, சராசரிக்கும் மேல், மிக. மிக உயர்ந்தவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்தப்படக் கூடியவர்கள் உண்டு என்பதும் உண்மைதானே?

 

    எல்லாருக்கும்தான் அப்பாக்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு வாய்த்த அப்பா பெரும்பாலான பிற அப்பாக்களிடருந்து மாறுபட்டவர். விதிவிலக்கானவர்.

    நான் என் பெற்றோர்க்கு மூத்த மகள் பதிநான்கு ஆண்டுகள் “தவம்” இருந்து பெறப்பட்ட பெண்ணாம்! சொல்லுவார்கள். வத்தலக்குன்டுக்கு அருகில் உள்ள தேவதானப்பட்டியின் காமாட்சி அம்மனுக்கு வேண்டுதல் செய்துகொண்ட் பின் பிறந்தவளாம்.  அந்தக் கோவிலில் காமாட்சி அம்மன் ஒரு தொட்டிலில் ஜோதி வடிவில் ஒரு குழந்தையாய்ப் பள்ளிகொண்டிருப்பதாக நம்புகிறார்கள். கண்களைக் கட்டிக்கொண்டுதான் கூரை வேய்வார்களாம். இன்றேல் பார்வை போய்விடுமாம். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்காதீர்கள். அதனால்தான் ‘ந்ம்புகிறார்கள்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். ‘காமாட்சி’ என்பது மிகவும் புழங்கும் சாதாரணமான பெயர் என்று கருதிய என் அப்பா “ஜோதிர்லதா”, “கிரிஜா” ஆகிய இரு பெயர்களை எனக்குச் சூட்டினார். இப்பெயர்களின் இணைப்பே எனது ‘புனைபெயர்’ ஆயிற்று.

 

    எங்கள் அப்பா மற்ற அப்பாக்களினின்று எவ்வாறு மாறுபட்டவர் என்பதைப் பார்ப்போம்.  காலை ஐந்தரை மணிக்கு என்னை எழுப்பிவிட்டுவிடுவார்.  காலைக் கடன்களை முடித்த பின் என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லுவார். அங்கே, அவருடன் சேர்ந்து நானும் அவர் கற்றுக்கொடுத்திருந்த உடற்பயிற்சிகளைச் சுமார் அரை மணி நேரம் போல் செய்தாக வேண்டும். எந்தச் சால்ஜாப்பும் சொல்ல முடியாது.

 

    சாப்பாட்டு நேரம், விளையாட்டு நேரம், படிக்கும் நேரம் முதலியவற்றுக்குக் கால அட்டவணை போட்டுவைத்திருப்பார்.  அதில் கண்டுள்ள படி நான் செயல்பட்டாக வேண்டும்.  மாலை ஐந்து மணிக்கு  விளையாடப் போனால், சரியாக ஆறு மணிக்கு நான் வீடு திரும்ப வேண்டும்.  எதிர்வீட்டுச் சுவர்க் கெடியாரம் ஆறு முறை அடித்ததும் நான் கிளம்பாவிட்டால், எங்கள் வீட்டு வாசல்படியில் நின்றுகொண்டு, ‘கிரிஜாஆஆ..’ என்று பெரிதாய்க் குரல் எழுப்பிக் கூப்பிடுவார்.  நான் உடனே பாதி ஆட்டத்தில் ஓடிவிடுவேன். இதனால், ஆறு மணிக்குள் முடிக்க முடியாத ஆட்டங்களுக்கு என் தோழிகள் என்னைச்  சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நான் ஓராமாக நின்று வேடிக்கை தான் பார்க்கும்படி ஆகும். கண்டிப்பும் கறாரும் நிறந்த அப்பாவாதலால், எரிச்சலையும் ஏமாற்றத்தையும் விழுங்கியே ஆக வேண்டும். ஆத்திரம் ஆத்திரமாக வரும். (உரிய வயதில் அவரது அருமையைப் புரிந்துகொண்டது வேறு விஷயம்.)

 

    எங்கள் அப்பா ஒரு மல்லர் – அதாவது மற்போர் வல்லுநர். சிலம்பமும் ஆடுவார். ஒருமுறை எங்களூர் அக்கிரகாரத்துக்கு வந்த ஆறு “தீவட்டி”க் கொள்ளையரை எதிர்த்து ஒற்றை ஆளாய்ச் சிலம்பம் ஆடி விரட்டியடித்தவர்.  இதை அவருடைய நண்பர் ஒருவர் கூறக் கேட்டுத்தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். தாமாக எதையும் பற்றிப் பீற்றிக் கொள்ளாதவர். காடுகள், மலைகள் என்றெல்லாம் அஞ்சாமல் சுற்றுவார்.  ஒரு முறை தேக்கடியில் யானைக் கும்பலில் சிக்கி, எப்படியோ தப்பித்து வந்த பின், அது பற்றிக் கேள்விப்பட்டு அழுத எங்கள் பாட்டியிடம் அவரது கட்டாயத்தின் பேரில இனிப் போக மாட்டேன் என்று வாக்குறுதி யளித்தாராம்.

 

     ‘இந்த நாடெம் சொந்த நாடென்றேத்துவோம் அதை வாழ்த்துவோம்’ என்று அதன் ஒவ்வோர் அடியும் முடியும் வண்ணம் அவர் எழுதிய நடைப்பாட்டைத்தான் (march song) இன்றும் சாரணர்கள் பாடிவ்ருகிறார்கள்.

 

    விடுதலைப் போராட்டக் காலத்தில், அன்னீ பெசன்ட் அம்மையாருடன் கடிதப் போக்குவரத்துக் கொண்டிருந்தார். சிறந்த நாட்டுப்பற்றாளர்.  ஆனால், தாம் பெற்ற பிள்ளைகளுள் என் அப்பா மட்டுமே குடும்பப் பொறுப்பும், தம் பெற்றோர் மீது பாசமும் கொண்டிருந்தவர் என்பதால் எங்கள் பாட்டி அழுது, கெஞ்சியதன் பேரில், விடுதலைப் போராட்டத்தில் அவர் குதிக்கவில்லை. தவிர, மதுரைக் கலெக்டர் அலுவகத்தில் நல்ல வேலை கிடைத்தும், வெள்ளக்காரக் கலெக்டரின் கீழ் வேலை செய்ய விரும்பாததால் அதை ஏற்காமல், முதலில் சாரணத் தலைவராகவும், பிறகு பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்தார். நல்லொழுக்கமும் நாட்டுப்பற்றும் கொண்ட மாணவர்களை உருவாக்குவதும் தேசத்தொண்டுதானே என்று சமாதானம் செய்துகொண்டவர்.

 

    ஓர் ஆணுக்குக் கல்வி கற்பிப்பதையும் விட, ஒரு பெண்ணுக்குக் கல்வி கற்பிப்பதே அதிக முக்கியமானது என்று அடிக்கடி சொல்லுவார். ‘ஓர் ஆண் கல்வி கற்பதால் அவன் மட்டுமே பயன் அடைவான்; ஆனால் ஒரு பெண் கல்வி கற்றாலோ அவள் சார்ந்துள்ள குடும்பம் முழுவதுமே பயனடையும்’ என்பார்.  அதானாலேயே, வத்தலக்குண்டு அக்கிரகாரத்து வைதீக மனிதர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து, அப்பாவைச் சந்தித்து என் படிப்புக்கு எதிராய்க் குரல் எழுப்பியதைப் பொருட்படுத்தாமல், பள்ளிபடிப்பை என்னைத் தொடரச் செய்தவர்.  மிகக் குறைந்த அளவே கல்வியறிவு கொண்டிருந்த எங்கள் அம்மாவுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுததாராம்.  எங்கள் அம்மா பெருமையாய்ச் சொல்லுவார்.

 

    எங்கள் அப்பா எத்தகைய முற்போக்குவாதி என்பதற்கு இதோ ஒரு நிகழ்ச்சி. ஒரு முறை எங்கள் அப்பாவின் தீர்ப்புக்கு ஒரு வழக்கு வந்தது. (எங்களூர் மக்களிடையே எழும் சண்டை-சச்சரவுகளை அவர் தான் தீர்த்து வைப்பார்.)

    வழக்கு இதுதான் –

ஒரு  மார்கழி மாதத்தில்,  அவ்வாண்டு மதுரைக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் விடுமுறையில்  எங்கள் ஊருக்கு வந்திருந்தனர்.  பஜனை மடப் பிரசாதத்தை அவர்களுள் ஓர் இளைஞன் அங்கிருந்த பிராமணர் அல்லாத ஒரு முதியவர்க்கு அளிக்க முற்பட்ட போது. அவர் அதைப் பெற்றுக்கொள்ளத் தயங்கி யுள்ளார்.  காரணம், அவருக்குப் பிரசாதம் அளிப்பது வழக்கத்தில் இல்லை. அருகில் இருந்த பிராமணர்களும் அதைத் தடுத்துள்ளனர்.  ‘இதென்னப்பா புது வழக்கம்?.  பிராமணர்களுக்கு மட்டும்தான் பிரசாதம்!’ என்று அவர்கள் குறுக்கிட்டுச் சொல்ல, நியாயவாதியான இளைனன் அதை ஏற்காததால், வழக்கு என் அப்பாவிடம் வந்தது.  அப்பா சொன்னார்: “பிராமணர் அல்லாத அந்தப் பெரியவர் காலை நான்கு மணிக்கெல்லாம் மஞ்சளாற்றில் குளித்துவிட்டு, ஈர உடையுடன் அக்கிரகாரத் தெருக்களை பிராமணர்களுக்கும் முன்னால் பஜனைப் பாட்டுகள் பாடியவாறு வலம் வருகிறார்.  அதன் பின் ஐந்தரை மணி யளவில் புறப்படும் பிராமணர்களின் தெருவலத்தில் தாமும் பாடியவாறு மீண்டும் கலந்து கொள்ளுகிறார். அதன் பின் பூஜையைப் பார்க்கப் பஜனை மடத்துக்கு வருகிறார். அவர் மிக நல்ல பெரியவர்.  அவருக்குத் தான் நீங்கள் முதலில் பிரசாதம் வழங்க வேண்டும்.  அதன் பிறகே நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இந்த ஊரில் அவர் ஒருவரே உண்மையான பிராமணர்” என்று சொல்லிவிட்டார்.  இளைஞர்கள் மகிழ்ச்சியுடனும், பிற பிராமணர்கள் கசப்புடனும் திரும்பிப் போனார்கள்.

 

    அவர்கள் போன பிறகு, என் அம்மா அப்பாவைப் பிடி பிடியென்று பிடித்துக்கொண்டார்: “உங்கள் தீர்ப்பு மிகவும் சரிதான். அத்தோடு நிறுத்திக் கொள்ளமல் ‘அவர் மட்டுமே உண்மையான பிராமணர்’ என்று சொல்லி ஏன் அக்கிரகாரத்துப் பிராமணர்களை எல்லாம் பகைத்துக் கொள்ளுகிறீர்கள்? ஏற்கெனவே அவர்கள் கருத்தை மீறி கிரிஜாவைப் படிக்க வைப்பதன் மூலம் சம்பாதித்துக்கொண்ட பகைமை போதாதா?” என்ரு அவர் புலம்பியதற்கு, அப்பாவின் பதில், “அடச்சே, அசடே. சும்மா இரு. உனக்கு ஒண்ணும் தெரியாது.” என்பதுதான்.

 

    ‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல’ என்று தொடங்கி, ‘கல்வியழகே அழகாம்’ என்று முடியும் பாடலை அப்பா அடிக்கடி சொல்லுவார். .

 

திடீரென்று ஒரு நாள் – எனக்கு ஆறு வயது இருக்கும் அப்போது – ஆண்கள் அணியும பனியன் இணைந்த அரைக்கால் சட்டை வாங்கி வந்த அவர் அதை எனக்கு அணிவித்தார். அருகில் இருந்த என் அம்மா அது பற்றி வியந்து வினவிய போது, ‘மஞ்சளாற்றில் இப்போது வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நீந்தக் கற்றுக் கொள்ளச் சரியான சமயம். இவளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கப் போகிறேன்’ என்று அவர் சொன்னதும் என் அம்மா அலறியடித்துக்கொண்டு ஓடி வந்து என்னை இழுத்துக்கொண்டார்: ‘இவளுக்கு எதுக்கு நீச்சலும் இன்னொன்றும்? இவளென்ன வெள்ளைக்காரக் குட்டியா? ஏதாவது ஆகிவிட்டால்?’ என்று கூவினார். ‘ எத்தனை பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்! நான் கவனமாய்ப் பார்த்துக்கொள்ள மாட்டேனா?’ என்று அப்பா சொன்னதை ஏற்காமல் அம்மா பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். அப்பா மவுனமானார்.  அதன் பிறகு நீச்சல் என்னும் பேச்சையே அவர் எடுக்கவில்லை.

 

பள்ளிப் பருவத்தில் ஓவியத்திலும், கதை எழுதுவதிலும் நான் நாட்டம் கொண்ட போது, அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கண்டிடித்தவர்.  எனினும் படிப்பு முடிந்த பிறகு என் ஆர்வத்தில் தலையிடாதவர்.  “கண்ணன்” தொடர்கதைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு தரவிருப்பதைத் தெரிவிதது வந்திருந்த அஞ்சலட்டையைத் தாமே என்னிடம் முதலில் தரவேண்டும் என்னும் எண்ணத்துடன் வாசற்படியிலேயே என் வரவுக்காகாக இரவு ஏழரை மணி வரையில் உட்கார்ந்துகொண்டிருந்தார்.

 

இன்னா செய்தவர்க்கும் நன்னயம் செய்தவர். நியாயத்தைச் சொன்னதற்காக என் அப்பாவின் மீது சினங்கொண்டு ஒரு ரவுடி மூலம் அவரை அடித்துப் போட ஏற்பாடு செய்த ஓர் உறவினரை மன்னித்ததோடு, அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர்.  அலுவலகத்தில் கையாடல் செய்து அவர் மாட்டிக்கொண்ட போது பணததைத் தாமே கொடுத்து உதவி அவரது வேலையைக் காப்பாற்றித் தந்தவர்.

 

    என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எடுத்த வித்தியாசமான முடிவை ஏற்காமல் எனக்கு அறிவுரை வழங்கினாலும், பின்னர் என்னைப் புரிந்துகொண்டு கண் கலங்கியவாறு என் முடிவை அரை மனத்துடன் ஏற்று என்னை என் போக்கில் விட்டுவிடச் சம்மதித்தவர். மகளின் மனத்தைப் புரிந்துகொண்டும், அவள் உணர்வுகளுக்கும் நோக்கங்களுக்கும் மதிப்பளித்தும் எத்தனை அப்பாக்கள் இப்படி அவளுக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்? அத்தகையோரை விரல்விட்டு எண்ணிவிடலாம்தானே?

 

ஆங்கில மொழிப் பாடத்தில் 25 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியாமல். தொடர்ந்து தோற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவரை அவருடைய தந்தை – என் அப்பாவின் முந்தைய மாணவர் – என் அப்பாவிடம் ஒப்படைக்க, அவரது கடைசி வாய்ப்பில் 65% மதிப்பெண்பெற வைத்த திறமையான் ஆசிரியர் எங்கள். அப்பா.நம்ப முடிகிறதா? (அப்போது இத்தனை வாய்ப்புகள்தான் என்று கணக்கு உண்டு.) 25 எங்கே? 65 எங்கே? இதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளுவதற்கு ஒரு காரணம் உண்டு.  ‘இவனுக்குத்தான் படிப்பு வரும், அவனுக்கு வராது .என்ப்தெல்லாம் தப்பு’ என்று அடிக்கடி அவர் சொல்லுவார்.  சாதியின் அடிப்படையில் எதையும் அணுகாதவர். அதை அவர் மெய்ப்பிக்கவும் செய்தார் என்பதற்காகவே இந்த நினைவுகூரல்.

 

    ஒரு முறை உசிலம்பட்டிப் பள்ளி ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த அவருக்கு மாற்றல் உத்தரவு  வந்த போது அவரை விடமாட்டோம் என்று புரட்சி செய்து முரட்டுத்தனத்துக்குப் பேர் போன அப்பள்ளி மாணவர்கள் எங்கள் அப்பாவைத் தக்க்வைத்துக் கொண்டார்களாம்.. கண்டிப்பும், கறாரும் தண்டிக்கும் குணமும் கொண்ட எங்கள் அப்பாவின் மீது அப்பள்ளியின் முரட்டு மாணவர்கள் காட்டிய மரியாதை அவ்வுர்க்காரர்களை வியப்பில் ஆழ்த்திற்று என்று அப்பாவின் நன்பர் ஒருவர் கூறத் தெரிந்துகொண்டோம்.

 

    தம் இறுதி நாளில் அவர் எங்களுக்குச் சொன்ன அறிவுரை, ‘நியாயமாக ஒன்றைச் செய்யும் போது யாருக்கும் அஞ்சக் கூடாது; நாணயமாக நடக்க வேண்டும். பிறர் பொருளுக்கு ஆசைப் படக்கூடாது’ என்பவையாம்.

 

     எங்கள் அப்பா காலமானதன் பின், மூன்று மாதாங்களுக்குப் பிறகு, வீடு மாற்றும் எண்ணத்தில் அருகில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கட்டடத்தைப் பார்க்கப் போனோம். முதல் மாடிப் பகுதி காற்றோட்டமாக இருந்தது. ‘பால்கனியில் காற்று பிய்த்துக்கொண்டு அடிக்கிறது.  அப்பா இங்கே உட்கார்ந்துகொண்டு படிக்கலாம்’, என்று நான் சொன்ன (உளறிய) தும், உடனிருந்தவர்கள் அதிர்ந்து போய் என்னைப் பார்த்தார்கள். சில கணங்களுக்குப் பிறகுதான் அப்பா இல்லை என்பது நினைவில் நெருடியது. நமக்கு மிக நெருக்கமானவர்களின் மறைவு நம் உள்ளங்களில் பதிவதில்லை என்பது புரிந்தது.

 

    அவரது மறைவு பற்றி நாங்கள் கொடுத்த ஆங்கில நாளிதழ்த் தகவலைப் படித்துவிட்டு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அவரிடம் பயின்ற மாணவர்கள்  அவருடைய அருமை-பெருமைகளை நினைவு கூர்ந்து எனக்கு நீண்ட கடிதங்கள் எழுதினார்கள். அவர்கள் எல்லாருமே அவர் தங்களுக்குக் கல்வி மட்டுமே கற்பித்தவர் அல்லர், தங்களிடம் நன்னடத்தையையும் ஏற்படுத்தியவர் என்று புகழ்ந்துரைத்த போது நாங்கள் பெருமைகொண்டோம்.

ஒரு புத்தகமே எழுதுகிற அளவுக்கு அவரைப் பற்றிய ஏராளமான செய்திகள் உள்ளன. மொத்தத்தில் அவர் மக்களாய்ப் பிறந்த நாங்கள் கொடுத்துவைத்தவர்கள். நான் அவரை நினைக்காத நாளில்லை. அவரைப் பற்றிய நினைவுகள் என்றும் நீங்கா.

 

(எழுத்தாளர் உஷா தீபன் மதிப்புக்குரிய தம் தந்தை பற்றி எழுதிய கட்டுரையும் நினைவுக்கு வருகிறது.)

 

*********

.

                                                    “““““““““““““““““““““jothigirija@live.com

Series Navigationதனக்கு மிஞ்சியதே தானம்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

19 Comments

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   நான‌ மீண்டும் படித்தேன்.

   எங்குமே தன் தந்தையாரை நாத்திகர் என்று சொல்லவில்லை எழுத்தாளர்.

   பழமைவாதிகளின் தகாத செயல்களை ஆதரிக்காத புதுமைவாதியென்று மட்டுமே சொல்கிறார்.

 1. Avatar
  bharathi says:

  என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எடுத்த வித்தியாசமான முடிவை ஏற்காமல் எனக்கு அறிவுரை வழங்கினாலும், பின்னர் என்னைப் புரிந்துகொண்டு கண் கலங்கியவாறு என் முடிவை அரை மனத்துடன் ஏற்று என்னை என் போக்கில் விட்டுவிடச் சம்மதித்தவர். மகளின் மனத்தைப் புரிந்துகொண்டும், அவள் உணர்வுகளுக்கும் நோக்கங்களுக்கும் மதிப்பளித்தும் எத்தனை அப்பாக்கள் இப்படி அவளுக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்? அத்தகையோரை விரல்விட்டு எண்ணிவிடலாம்தானே?

  “Could you please tell what is that made you father to shed tears”??

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   It is not a story. It is her life. Auto-biography laced with reminiscences about other persons,,big and small.

 2. Avatar
  IIM Ganapathi Raman says:

  பிரசாதத்தை முதலில் ஒரு சமூகத்தாருக்கு மட்டும் வழங்கும் வழக்கம் இன்னும் காஞ்சிபுரத்தில் சில கோயில்களில் உண்டென்று கேள்வி.

  திருவரங்கத்தில் இன்றும் ஒரு பழக்கம் இருக்கிறது: ஒரு பிராமணரை பல்லக்கில் தூக்கிச்செல்லும் விழா…

  மடே சேனாவில் கருநாடகத்தில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பிராமணர் உண்ட எச்சில் இலையில் புரண்டெழுந்தால் தோல் நோய்களை சுப்பிரமணிய சுவாமி குணமாக்குவார் என்ற நம்பிக்கை விழா ஆண்டு தோறும் நடக்கிறதே?

  மழை விட்டாலும் தூறல் விட்ட‌பாடில்லை.

  இதையெல்லாம் தவறில்லையா என்றேழுதுங்கள். தவறல்ல சரியே என்று சாதிக்கும் கூட்டம் இன்றும் இருக்கிறதே!

  அன்று கேட்கவே வேண்டாம். அரசன் ஆடையணிந்திருக்கிறான். என்று எல்லாருமே சொல்ல (அரசனுக்குப் பயந்து) எவரோ ஒருவருக்குத்தான் அரசன் அம்மணமாகத்தான் இருக்கிறான் – The Emperor has no clothes – என்று சொல்ல தைரியம் வரும்.

  ஏன் பயந்தார்கள்? அப்படிச்சொன்னால் இப்படி ஒருவர் எழுதுவார்: My gripe? Knocking the brahmins once again!

  அல்லது அபபடிச்சொன்னவரின் இல்லாள் இப்படி கேட்பார்: //அவர் மட்டுமே உண்மையான பிராமணர்’ என்று சொல்லி ஏன் அக்கிரகாரத்துப் பிராமணர்களை எல்லாம் பகைத்துக் கொள்ளுகிறீர்கள்? //

  ஆக, உண்மை சொன்னால் பகை. பொய் சொன்னால் உறவு.

  எழுத்தாளரின் தந்தை உருவத்தால் மட்டுமன்று; மனத்தாலும் மல்லரே. திருமங்கை மன்னன் போல

 3. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் அய்………..

  திருமங்கை மன்னனைப்பற்றிச் சொல்லியுள்ளீர்கள்.

  திகிலாக இருக்கிறது. உங்கள் சிந்தனைத்துகள்களிலிருந்து உங்கள் மேதாவிலாஸம் பகரும் *சிரி* வைணவம் எங்காவது குதித்து விடப்போகிறதே என்று. சிறியேன் வைஷ்ணவன் அல்லன் எனினும் பற்பல வைஷ்ணவ ஆசார்யர்களிலிருந்து பூஜ்ய ஸ்ரீ ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமின் வரை பலரது காலக்ஷேபம் கேட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் சம்ப்ரதாயம் சார்ந்தே ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுவார்கள்.

  தாங்கள் வ்யாசம் சாராது உதிர்த்துள்ள வைஷ்ணவ சம்ப்ரதாய நிந்தை பற்றிய விசாரத்தை விசாரிக்கு முன்…… ஒரு suspense…..ஐ உடைத்து விடுங்கள்.

  நான் ப்ரகாண்ட பண்டிதர் என நினைக்கும் அன்பார்ந்த ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ (எ) காவ்யா (எ) ருத்ரா (எ) திருவாழ்மார்பன் (எ) தமிழ் என்றென்றென்ற இத்யாதி நாமாபிஷிக்த…….இன்னும் சொல்ல விட்டுப்போன அசங்க்யேய நாமாபிஷிக்த……..அதி மேதாவிலாஸத்திற்கு பாத்ரரான…….ஆனால் அறவே தர்க்கத்திற்கு ஒவ்வாத சுஷ்க தர்க்க ப்ரியரான… வ்யக்தி தான்……. தேவரீருமா என்று சொல்லவும்.

  அதே வாக்ய நடைகள்…. அதே ஆங்க்ல – தமிங்கில ப்ரயோகம்…..அதே மணிப்ரவாள த்வேஷம்……அதே ப்ராம்மண த்வேஷம்…….அதே ஆப்ரஹாமிய ப்ரேமை…….ஜபர்தஸ்தியாக நுழைக்கப்படும் ஆய்த எழுத்து……..ஆனால்…..இது வரை காணப்படாத சமாசாரம்…….. *சிரி* வைணவம். ஆனால் திகில் கிளப்பியுள்ளீர்கள்.

  பூர்வாவதாரங்கள் வாயிலாக மட்டற்ற *சிரி* வைணவ நிந்தையை வாசிக்கும் துர்பாக்யம் பெற்றேன் சிறியேன். அமரர் மலர்மன்னன் மஹாசயரோ *சிரி* வைணவ சண்டமாருதத்தைப் பார்த்து நடுநடுங்கிப் போய் இன்னும் என்னென்னல்லாம் எழுதப்படுமோ எனக்கருத்துப்பகிர்ந்தார். ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை இன்னும் எப்படியெல்லாம் இந்த அவதாரத்தில் நிந்தை செய்யப்புகுவீர்களோ என்று நினைத்தால் திகிலாக இருக்கிறது.

  அவைஷ்ணவாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரம் கந்தர்வாஸ்த்ரம் மற்றும் சார்ங்க பாணம். அஸ்த்ரப்ரயோகிக்கு தெரிந்த விஷயம் தான். ம்……….ப்ரத்யஸ்த்ரம் எடுபடும் தளத்தில் அஸ்த்ர ப்ரயோகம் செய்யப்படுமா என்றும் பார்க்கிறேன்.

  வ்யக்தி விசேஷம் பற்றிய suspense – ஐ உடையுங்கள்.

 4. Avatar
  IIM Ganapathi Raman says:

  கடைசி வரியில் திருமங்கை மன்னனைப்பற்றியதை விட்டுட்டு மத்ததையெல்லாம் படியுங்கோ. பிர்ச்சினையே இல்லை.

  1. Avatar
   paandiyan says:

   பேப்பர் இல் பேரு வாரவில்லை என்றால் கருணாநிதிக்கு தூக்கம் வராது , அது போல இணையத்தில் சில பேரு ……….!!!??!!

 5. Avatar
  Indian says:

  As usual Thinnai is being politically correct in not publishing my comments. Write in Tamil, they thunder as if I could. Funny thing is, comments written partially in English get published. The other reason being I am blunt and do not mince words. Offensive? No. True? A big yes.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   You can send me all your English messages and I shall translate them and send to Thinnai. If you r willing, I shall give you my email id. Don’t worry: I am fairly proficient in both English and Tamil. For e.g. your above message is translated and put up below:

   வழக்கம்போல, திண்ணை என் கருத்துக்களை பொது மேடை நாகரிகம் கருதி வெளியிட மறுத்திருக்கிறது. ‘எழுதினால் தமிழில் எழுதவும்” என்றெனக்கு கட்டளையிடுகிறது. இதில் உள்ள நகைமுரண் என்னவென்றால், ஆங்கிலம் கலந்த பின்னூட்டங்கள் திண்ணையில் வெளியிடப்படுகின்றன. இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும்: நான் ஒளிவுமறைவில்லாமல் வெட்டொன்று; துண்டிரண்டு எனப்பேசுபவன். இது தவறா? இல்லை. உண்மையா? அப்படித்தான் போலும் (திண்ணை தளத்தாருக்கு!)

 6. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ திருமங்கை மன்னனைப்பற்றியதை விட்டுட்டு மத்ததையெல்லாம் படியுங்கோ. பிர்ச்சினையே இல்லை.\

  thats out and out naqli accent of a poor copy cat. is it not?

  ம்………உண்மை கசக்கிறதா புளிக்கிறதா துவர்க்கிறதா என்பது பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவுக்கே வெளிச்சம்.

  ம்………ரெவரெண்டு சேவை எப்படி விதவிதமாக நடக்க இயலும் என்பது வியக்க வைக்கிறது.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   நான் எழுதியதைத்தான் உறுதிபடுத்துகிறீர்கள். அஃதாவது, இன்றும் பழமை விரும்பிகள் இறைவன் முன் தங்கள் ஜாதியினர் மற்றவர்களைவிட உயர்வானவர்கள்; அதை மனுவே சொல்லிவிட்டான் என்று நினைப்பில் வாழ்கின்றனர் என்பதுதான். 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன் வத்தலக்குண்டு அக்ரஹாரத்தில் பார்த்தது இன்றும் சாகாமல்தான் இருக்கிறது என்பது உங்களைப்போன்றோர் காட்டுகிறார்கள்.

   கிருஸ்ணகுமார்; அப்படி நீங்கள் இல்லையென்றால், நான் எழுதியதை என்னோடு ஆதரித்து ஜோதிர்லதாவின் அப்பாவுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று சொல்ல மனம் வந்திருக்குமே?

   மாறாக கதையைத் திருப்ப முனைகிறீர்கள்.

   தாங்களாகவே கற்பனையாக ஏற்படுத்திக்கொண்ட முதல் ஸ்தானத்தை மதத்தில் விட்டுக்கொடுக்க இவர்கள் தயாரில்லை. மடே சேனாவைப்போன்ற இன்னபிற சடங்குக‌ளைக்கண்டு இவர்கள் மனத்துக்குள் குதூகலிக்கின்றார்கள். ஆச்சாரியா என்ற பிராமண கருநாடக அமைச்சர் அதைச்சரியென்றார் நிருபர்களீடம். த‌. ஹிந்துவின் கட்டுரைப்பின்னூட்டத்தில் அனேக பிராமணரகள் அதைச்சரியென்றார்கள்.

   வேதனையான விடயம். இதைவிட பெருத்த வேதனையென்னவென்றால், இவர்கள் ஹிந்துத்வம் பேசுகிறார்கள்; இந்துமதத்தை விட்டு ஓடி, பிற மதவலைகளில் விழுகிறார்களே என்றொரு உருக்கமான டிராமா போடுகிறார்கள். கிருஸ்ண‌குமார் அதை நன்றாகச்செய்கிறார்.

   சுவனப்பிரியன் என்ற இசுலாமியர் சொன்னார்: “இப்படிப்பட்டவர்களால்தான் எங்கள் முன்னோர் இந்துமதத்தை விட்டு விலகினார்கள்”

   அவர் காட்டிய வரலாறு இப்படிப்பட்ட இந்துக்களைப் பார்த்துச் சிரிக்கிறது.

   1. Avatar
    paandiyan says:

    //சுவனப்பிரியன் என்ற இசுலாமியர் சொன்னார்: “இப்படிப்பட்டவர்களால்தான் எங்கள் முன்னோர் இந்துமதத்தை விட்டு விலகினார்கள்”

    //

    nice JOKE

 7. Avatar
  ஷாலி says:

  “பேப்பர் இல் பேரு வாரவில்லை என்றால் கருணாநிதிக்கு தூக்கம் வராது , அது போல இணையத்தில் சில பேரு ……….!!!??!!”

  அதானே!…எங்கே கொஞ்ச நாளாய் அண்ணனே திண்ணையில் காணோம் என்று நினைத்தேன்.வந்துட்டாக!…..இனி இணையத்தில் பாண்டி ஆட்டம் அமர்க்களமாய் இருக்கும்! பேறு நல்லா வெளங்கட்டும்…..போட்டிக்கு ஒரு பயலும் வரப்படாது.நீங்க! நன்னா ஆடுங்கோ!

 8. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  செம்பை வைத்யநாத பாகவதருக்கு ஒரு முறை தொண்டை கெட்டுப்போய் பாட முடியாது போகியது. அதன் பின் குருவாயூரப்பனிடம் வேண்டிக்கொண்டு இனிநான் சம்பாதிக்கும் அனைத்தையும் உனக்கு அர்ப்பணிக்கிறேன் என்று விண்ணப்பித்துக் கொண்டார். அப்படியே நடத்தவும் செய்தார்.

  ஒருமுறை ஒரு க்ராமத்தில் கச்சேரிக்குப் போயிருந்த போது சரியன பக்க வாத்ய ம்ருதங்க வித்வான் கிடைக்கவில்லை. இருந்தாலும் க்ராமத்தில் ஓரளவு ம்ருதங்கம் கத்துக்கொண்ட ஒரு பையனை க்ராமத்தினர் கடைசியாக ஏற்பாடு செய்தனர். கச்சேரியும் நடந்தது. பையன் சுமாராக வாசித்தான். தனி ஆவர்த்தனத்திற்கு அவர் chance கொடுக்கவில்லை.

  பையனுடைய அப்பா செம்பையிடம் கேட்டார்…..பையனுக்கு தனி ஆவர்த்தன சான்ஸ் கொடுக்கவில்லையே!!!! எப்படி வாசித்தான்?

  செம்பை அவர்கள் சொன்னார். நான் என் பாட்டு பாடினேன். அவன் அவம்பாட்டுக்குத் தானே வாசித்துக்கொண்டிருந்தான் என்றார்.

 9. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  செம்பை சொன்ன பையனின் படிக்கு தங்கள் தனி ஆவர்த்தனம்.

  வ்யாசம் சொல்லும் தலைப்பு ஒன்று நீங்கள் சம்பந்தமே இல்லாது உங்கள் தனி ஆவர்த்தனத்தை ஆரம்பித்து விடுவீர்கள்.

  உத்தரங்களில் யாராவது ஏதாவது எழுதினால் அவர் சொல்லாத விஷயத்தை அவர் சொல்லியதாக ஜபர்தஸ்தியாக நீங்களாக ஏதாவது காமா சோமா என்று எழுதி அதை மேலும் விவாதித்து நல்ல காமடி செய்கிறீர்கள் சார்.

  பூர்வாவதரங்களில் மலர்மன்னன் மஹாசயரின் வ்யாசங்களில் ஆரம்பித்த இந்த தனி ஆவர்த்தனம் தொடர்கிறது. போறாத்துக்கு மலர் மன்னன் மஹாசயருடையவோ அல்லது இங்கு என்னுடையவோ ஜாதியை தாங்கள் ஜாதிச் சான்றிதழ் பார்த்தது மாதிரி வேறு. இதில் தங்களுடைய கருத்துக்களை மட்டிலும் தாங்கள் யார் என்று ஆராயாது கருத்து மட்டிலும் பார்த்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு வேறு. எப்போதாவது consistency உடன் contrdictions இல்லாது கருத்துப் பகிர முயற்சியாவது செய்யுங்கள்.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   சபாஷ். பரலோக ராஜ்யம் ரெவரன்டு என்றெல்லாம கதை திருப்பிக்கொண்டிருந்த கிருஸ்ணகுமார், இப்போது இறங்கி வந்ததற்கு நமஸ்காரம்.

   எழுத்தாளர் தன் தந்தை ஒரு முற்போக்குவாதியென்று ஆரம்பித்து அதற்கு சில உண்மைச்சான்றுகளை முன் வைக்கிறார். அவரை எப்படி பார்க்கிறார் கிருஸ்ணகுமார்? அதாவது ‘இவர்தான் உண்மைப்பிராமணன்’ என்று ஒரு பிராமணரல்லாதவொருவரைக் காட்டுகிறார். பெண் கல்வியை 70 ஆண்டுகளுக்கு முன் தூக்கிப்பிடிக்கிறார். (நம் காலத்தில் பெண்கள் வேலைக்குப்போவதே கூடாது என்றார் சங்கரச்சாரியார்)

   இதற்கெல்லாம் கிருண்ஸகுமார் என்ன சொல்கிறார்? இது கட்டுரைக்கு மிக மிக பொருத்தம். மஹாசயர் கிருஷ்ணகுமார் வசதிக்காக கட்டுரையிலிருந்து இரு பத்திகளை போட்டுவிட்டேன். படிக்க, கருத்தைச் சொல்க.

   ////வத்தலக்குண்டு அக்கிரகாரத்து வைதீக மனிதர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து, அப்பாவைச் சந்தித்து என் படிப்புக்கு எதிராய்க் குரல் எழுப்பியதைப் பொருட்படுத்தாமல், பள்ளிபடிப்பை என்னைத் தொடரச் செய்தவர். ////

   //ஒரு மார்கழி மாதத்தில், அவ்வாண்டு மதுரைக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் விடுமுறையில் எங்கள் ஊருக்கு வந்திருந்தனர். பஜனை மடப் பிரசாதத்தை அவர்களுள் ஓர் இளைஞன் அங்கிருந்த பிராமணர் அல்லாத ஒரு முதியவர்க்கு அளிக்க முற்பட்ட போது. அவர் அதைப் பெற்றுக்கொள்ளத் தயங்கி யுள்ளார். காரணம், அவருக்குப் பிரசாதம் அளிப்பது வழக்கத்தில் இல்லை. அருகில் இருந்த பிராமணர்களும் அதைத் தடுத்துள்ளனர். ‘இதென்னப்பா புது வழக்கம்?. பிராமணர்களுக்கு மட்டும்தான் பிரசாதம்!’ என்று அவர்கள் குறுக்கிட்டுச் சொல்ல, நியாயவாதியான இளைனன் அதை ஏற்காததால், வழக்கு என் அப்பாவிடம் வந்தது. அப்பா சொன்னார்: “பிராமணர் அல்லாத அந்தப் பெரியவர் காலை நான்கு மணிக்கெல்லாம் மஞ்சளாற்றில் குளித்துவிட்டு, ஈர உடையுடன் அக்கிரகாரத் தெருக்களை பிராமணர்களுக்கும் முன்னால் பஜனைப் பாட்டுகள் பாடியவாறு வலம் வருகிறார். அதன் பின் ஐந்தரை மணி யளவில் புறப்படும் பிராமணர்களின் தெருவலத்தில் தாமும் பாடியவாறு மீண்டும் கலந்து கொள்ளுகிறார். அதன் பின் பூஜையைப் பார்க்கப் பஜனை மடத்துக்கு வருகிறார். அவர் மிக நல்ல பெரியவர். அவருக்குத் தான் நீங்கள் முதலில் பிரசாதம் வழங்க வேண்டும். அதன் பிறகே நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊரில் அவர் ஒருவரே உண்மையான பிராமணர்” என்று சொல்லிவிட்டார். இளைஞர்கள் மகிழ்ச்சியுடனும், பிற பிராமணர்கள் கசப்புடனும் திரும்பிப் போனார்கள்.

   அவர்கள் போன பிறகு, என் அம்மா அப்பாவைப் பிடி பிடியென்று பிடித்துக்கொண்டார்: “உங்கள் தீர்ப்பு மிகவும் சரிதான். அத்தோடு நிறுத்திக் கொள்ளமல் ‘அவர் மட்டுமே உண்மையான பிராமணர்’ என்று சொல்லி ஏன் அக்கிரகாரத்துப் பிராமணர்களை எல்லாம் பகைத்துக் கொள்ளுகிறீர்கள்? ஏற்கெனவே அவர்கள் கருத்தை மீறி கிரிஜாவைப் படிக்க வைப்பதன் மூலம் சம்பாதித்துக்கொண்ட பகைமை போதாதா?” என்ரு அவர் புலம்பியதற்கு, அப்பாவின் பதில், “அடச்சே, அசடே. சும்மா இரு. உனக்கு ஒண்ணும் தெரியாது.” என்பதுதான்.//

   I shall be glad if he shames me in this forum by saying:

   A Royal salute to Mr….. F/o Jythirlatha Girija, teacher in Vathalakkundu.

   How sweet the mud on my face. I shall preserve it – Come on shame me with your salute.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *