தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !

This entry is part 11 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

கேளாமல் எதுவும் கிடைக்கப்

போவ தில்லை !

புறக்கணித்த  பிறகு

அருகில் வருவதும் உண்டு !

பகற் பொழுதில்

நானிழந்த புதையலை,

இரவின்

காரிருளில் நான்

கண்டு பிடித்ததும் உண்டு !

கண்ணுக்குத் தெரியாது,

கை தொடவும் முடியாது !

உறங்காது விழித்திரு

உன் ஆத்மாவை திறந்து வைத்து !

அதன் தூதுச் செய்தி

தாரகை களில்  எப்போதும்

தங்கி இருக்கும் !

 

பொழுது புலர்ந்த வுடன் அது

பூக்களாய் மலர்ந்து விடும் !

அதன் பொருட்டு நான் வடித்த

கண்ணீர்த் துளிகளால்,

வீணை மீட்டும் கலைமகள்

வீற்றிருக்கும்

தாமரை இதழ்கள் நடுங்கும் !

எந்தன் பாடல்களில் சில சமயம்

மந்திர சக்தி பொங்கி  அது

மலர்ந்து விரியும் !

மௌனப் புன்னகையுடன்  

கலைமகள்  விழிகளில் மின்னிடும்

கனிவுச் சுடர் ஒளியாய் !  

 

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 261   1933 அக்டோபரில் தாகூர்  72 வயதினராய்  இருந்த போது  சாந்திநிகேதனத்தில் எழுதப்பட்டது.  பிறகு ஒரு மாதம் சென்று ஒரு பாட்டு நாடகத்தில்  சேர்க்கப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 6, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஅறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14தீவு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *