நீங்களும்- நானும்

This entry is part 18 of 26 in the series 22 செப்டம்பர் 2013

 

                            _ முடவன் குட்டி

 

என்னைப் பற்றி

இந்த விதமாகவா

நினைக்கிறீர்கள்……?

  • அதிர்ந்தேன்.

 

உங்களின் அபிப்பிராயம் தவறு

       -முணுமுணுத்தேன்.

எப்படி உருவானது

என்னைப் பற்றிய

இந்த அபிப்பிராயம்-உங்களிடம்….?

எப்போதோ…

எதனாலோ….

சாதாரணமாக

வழுக்கி விழுந்த

எனது சொல் ஒன்றினாலா…?

             -மறுத்தேன்.

இந்த அபிப்பிராயம்

ஒன்றின் வழியாகவே

எனது

சகல

வினை-எதிர்வினைகளை

அளக்கலாகுமா….?

  -விளக்கினேன்.

என்னைப் பற்றிய

அந்த அபிப்பிராயத்தை

இன்னுமா நீங்கள்

மாற்றிக் கொள்ளவில்லை….?

       -கோபம் வெடித்தது.

.

 

அந்த அபிப்பிராயத்தை

மாற்றிக் கொள்ள மாட்டீர்களா…?.

               -மன்றாடினேன்.

 

இப்படியாய்-

நினைத்தும்….

மறுத்தும்….

விளக்கியும்….

கோபித்தும்….

மன்றாடியும்….

உங்களின் அபிப்பிராயத்தையே

சுற்றிச் சுற்றி

வாழ்ந்திருக்கிறேன்

இத்தனை காலமும்

ஒரு வேளை

என்னைப் பற்றிய

உங்களின் அபிப்பிராயம்

சரிதானோ.. என்னவோ..?

 

0000     0000      0000

Series Navigationஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றிதிண்ணையின் இலக்கியத் தடம் – 1
author

முடவன் குட்டி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *