மார்ச் 5, 2000 இதழ்:
கவிதைகள்: காதல் என்பது பலவிதம் – பாரி பூபாலன்
மூன்றில் வேம்பு – வ.ஐ.ச.ஜெயபாலன்
ஒரு குறிப்பு: தேதிவாரியான பழைய இதழ்களுக்கான சுட்டியின் வழியே பழைய இதழ்களை வாசித்து எழுதி வருகிறேன். ஆனால் சில சமயம் பிந்தைய இதழில் குறிப்பிடப்படும் இதழ்கள் முந்தைய இதழின் வாசிப்பில் கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு 27 மார்ச் 2000 இதழில் இதாலியோ கால்வினோ பற்றிய முந்தைய கட்டுரையை கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கு முன் அப்படி ஒரு கட்டுரை இல்லை. திருவள்ளுவ்ர் சிலை பற்றிய சில விவாதங்கள் கிடைக்கவில்லை. சின்னகருப்பன் குறிப்பிடுகிறார். சில இதழ்களில் ஒரே கட்டுரை இருமுறை வந்துள்ளது. ஏதேனும் விடுபட்டிருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும். sathyanandhan.mail@gmail.com). நன்றி.
மார்ச்13,2000: பச்சை மிளகாய் கோழி- கோழிக்கறி செய்யும் சமையற் குறிப்பு ()
மார்ச் 20, 2000: கட்டுரை: திருவள்ளுவரும் திராவிட அரசியலும் : சின்னக்கருப்பன்: பெங்களூரில் திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்பு இருந்தது தொடர்பாக முந்தைய இதழ் ஒன்றில் கோபால் ராஜாராம் எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளை ஒட்டி சி.க. இதை எழுதுகிறார். கட்டுரையின் முதல் பகுதியில் திருவள்ளுவர் சிலை வைப்பதை அரசியலாக்கக் கூடாது என்று குறிப்பிடுகிறார்.கன்னடர்களின் விருப்பத்துக்கு மாறாக சிலை வைப்பது திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் இழுக்கு. இரண்டாவது பகுதியில் திருக்குறளின் அறநெறிகள் மதநூல்களுடன் ஒப்பிடக் கூடியவை. இவை எக்காலத்துக்கும் பொதுவானது என்று திருவள்ளுவர் கூறவில்லை. மிகவும் எளிய மொழி பயங்படுத்தப் பட்டிருப்பது அது எளிமையாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் விரும்பியதால். திருக்குறளின் தொன்மையை இதை வைத்துக் குறைத்து விடக் கூடாது. (www.thinnai.com/index.php?
மார்ச் 26 இதழ்: கவிதைகள்: பெண்ணாக இருந்து பார்- பி.ஜோதி, இருத்தல் – ரேகா ராகவன்
கட்டுரைகள்; சூட்டைத் தணிக்க வாரீகளா? – வெங்கடரமணன் – உலக வெப்பமயமாதலுக்குக் காரணங்கள் காடுகளை அழிப்பதும், வாகனங்கள் உண்டாக்கும் மாசும். வாகனங்களின் நச்சு வளர்ந்த நாடுகளில் மிகவும் அதிகம். வளரும் நாடுகளில் வயிற்றுப் பிழைப்புக்காகவே காடுகள் அழிக்கப் படுகின்றன. (www.thinnai.com/index.php?
செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் படிக்க வேண்டும்?- கோபால் ராஜாராம்- நாம் காவியங்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பக்திமயமாக வாசிக்கும் போது அவற்றின் சுவை தென்படாது. அண்ணா பெரியார் எல்லோரும் விமர்சன வாசிப்பின் வாயிலாக இந்தக் காவியங்களை நம்மை சமகாலத்துடன் தொடர்பு படுத்தி வாசிக்க வைத்து விட்டார்கள். அது வாசிப்புக்கு சுவையைக் கூட்டியிருக்கிறது. அறிவு பூர்வமாக அணுகி, நம்பகத் தன்மை இல்லையே என்று விலகி நிற்பதை விட கதை கேட்கும் ஆவலுடன் வாசிப்பது மிகவும் சுவையானது. (www.thinnai.com/index.php?
காந்தியை எப்படி அணுகி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்? – ஜெயமோகன் மற்றும் செ.ஜெகதீஷ் ஜெயகாந்தனுடன் செய்யும் உரையாடல். காந்தியடிகள், விவேகானந்தர் மற்றும் பாரதியார் பற்றிய தம் கருத்துக்களை ஜெயகாந்தன் பகிர்ந்து கொள்கிறார். (www.thinnai.com/index.php?
*********************
ஏப்ரல் 2,, 2000 இதழ்: கட்டுரைகள்: ‘தலித் இலக்கியம் பற்றி…’ என்னும் சுந்தர ராமசாமியின் கட்டுரை 1992ல் சிலேட் என்னும் சிற்றிதழில் வெளிவந்தது. தலித் இலக்கியம் பற்றி எனக்குத் தெளிவில்லை என்னும் அதிரடியோடு கட்டுரை துவங்குகிறது. தமிழில் மாதிரிப் படைப்புகள், முக்கியமாக நாவல் தென்படவில்லை என்கிறார் சு.ரா. தலித் எழுத்து என்னும் கோபமும் கூர்மையும் உள்ள எழுத்து கலை என்னும் வடிவத்தில் ஒரு பதிவாக வரும் போதே அது தலித் இலக்கியம் என்னும் இடத்தைப் பெறும். (www.thinnai.com/index.php?
கட்டுரை: பெண்களுக்குப் பாராளுமன்றத்தில் இட ஓதுக்கீடு தேவையா?- கோபால் ராஜாராம். தேவை என்று கட்டுரை வலியுருத்துகிறது. தலித்துகள் குரல் எப்படி பாராளுமன்றத்தில் கேட்கிறதோ அப்படியே பெண்கள் குரலும் ஒலிக்கும் என்கிறது கட்டுரை. (www.thinnai.com/index.php?
கதைகள்: முகக்களை – கு.அழகிரிசாமி
***********************
ஏப்ரல் 6 2000 இதழ்: கதைகள்: வீடு – காஞ்சனா தாமோதரன், அடி பம்பும் கால்சியா மார்க்வெல்ஸும் புல்புல்தாராவும் – இரா.முருகன்
************************
ஏப்ரல் 10 2000 இதழ்:
கதைகள்: முகக்களை – கு.அழகிரிசாமி- பகுதி 2, அல்லி -பாவண்ணன்
************************
ஏப்ரல் 17, 2000 இதழ்:
கதைகள் : முகக்களை -பகுதி 3 -கு. அழகிரிசாமி, சுதா-ஸ்டாபன்-சுந்தரராஜன்- கே.ஆர்.அய்யங்கார்.
கவிதைகள்: அருண் கோலேட்கரின் மூன்று கவிதைகள் மொழிபெயர்ப்பு- இரா.முருகன்
கட்டுரைகள்: ஜெயகாந்தனும் பெரியாரும் – மஞ்சுளா நவநீதன் -(கட்டுரையில் கடந்த மூன்று வாரங்களாக வந்த் ஜெயகாந்தன் பேட்டியில் இருந்து என்று குறிப்பிடுகிறார். நாம் காண முதல் பகுதியே கிடைத்தது. நாராயணகுருவுடன் ஒப்பிடும் போது பெரியாரிடம் அறிஞர், கலைஞர் , எழுத்தாளர் என்று ஒருவரும் இல்லை என்று ஜெயகாந்தன் கருதுகிறார். பெரியார் கலகக்காரராகவே இருந்தார். இருக்க வேண்டிய நிலை சமூகத்தில் இருந்தது என்கிறது கட்டுரை. (www.thinnai.com/index.php?
கைப்பிடியளவு கணினி: வெங்கட் ரமணன்: மடிக்கணினியின் வெவ்வேறு பயன் பாடுகளை விளக்கும் கட்டுரை. (http://www.thinnai.com/index.
உருது அகாடமி: சின்னக் கருப்பன்- தமிழ்நாட்டில் உருது அகாடமி உருவாக்கப் பட்டது வரவேற்கத்தக்கது. உருது அழகிய மொழி. அதே போல கன்னட, சமஸ்கிருத, மராத்தி, தெலுங்கு அகாடமிகளையும் உருவாக்க வேண்டும். (http://www.thinnai.com/index.
******************************
ஏப்ரல் 18 2000 இதழ்:
வெளி ரங்கராஜனின் கட்டுரை: தமிழுக்கு ஞானபீடப் பரிசு
சுஜாதா, அப்துல் ரஹ்மான், அகிலன் கண்ணன் ஆகியவர்களை சன் டிவி பேட்டி கண்டது. அவர்கள் கருத்தில் ஞானபீடப் பரிசு கிடைக்காமற் போனதற்குக் காரணம் மொழிபெயர்ப்பு நல்ல படைப்புகளுக்கு நடக்க்வில்லை என்பதும், மொழிபெயர்ப்பானவை மோசமானவை என்பதும். ஞானபீட அமைப்பு பரிந்துரைகளை வணிக எழுத்தாளர்களிடமும், மேம்போக்காக எழுதுபவர்களிடமும் கேட்கிறது. தமிழில் செறிவான எழுத்து ஒரு சிறிய வட்டதுக்குள் இயங்க வேண்டியிருக்கிறது. கேரளத்தில் 29 வயது எழுத்தாளர் தம் எழுத்தின் பலத்தில் நின்று சாகித்ய அகாடமி விருது வாங்க இயலுகிறது. (www.thinnai.com/index.php?
*********************
ஏப்ரல் 23 2000 இதழ்:
கட்டுரை: தாய்மொழிக் கல்வி மனித உரிமை மீறலாம் – சொல்கிறது உச்சநீதி மன்றம் – சின்னக் கருப்பன் – சிறுபான்மையினருக்கும், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என தாய்மொழி வழிக் கல்வியிலிரிந்து அளித்த விலக்கை உச்ச நீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டது. இது மனித உரிமை மீறலே அல்ல.
(www.thinnai.com/index.php?
கட்டுரை: மணிரத்னத்தின் அலைபாயுதே – யமுனா ராஜேந்திரன் – மௌன ராகம் மாதிரி மணிரத்னம் இன்னொரு படத்தை எடுப்பாரா என்று தெரியவில்லை. வீட்டுக்குள் நடக்கும் மத்திய தரக் குடும்ப வாழ்க்கை பற்றிய கதை கனவுமயமாக்கப் பட்டு மலையிலும் கடலிலும் இழுத்தடிக்கப்பட்டு, எளிமையை அழகை இழந்து விட்டது.
(www.thinnai.com/index.php?
கதைகள்: முகக்களை பகுதி 4 -கு.அழகிரிசாமி, ஒரு விபத்தும் சில விளைவுகளும் -கே ஆர் அய்யங்கார்
கவிதை: கடந்த காலக் கனவு: லாங்க்ஸ்டன் ஹ்யூ
***************
ஏப்ரல் 30 இதழ்:
கட்டுரை: இந்தியத் தண்ணீர் வறட்சியும், அறிவு வறட்சியும் – சின்னக் கருப்பன் – திரிபுராவில் திடீரென பழங்குடியினர் பெருமளவில் கிறித்துவர்களாக மதம் மாற்றப் பட்டுள்ளார்கள். அவர்கள் தீவிரவாத்தில் பங்கேற்க பணமும் ஆயுதங்களும் சர்ச்களிலில் வினியோகிக்கப் படுகின்றன. 1947ல் நடந்த மதக் கலவரத்தின் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்று முஸ்லீமாக மதம் மாறியவர்களை காந்தியடிகள் கண்டித்தார். அமெரிக்காவில் கிறித்துவ ஊடகங்கள் இந்தியாவில் கிறித்தர்கள் கொலை செய்யப் படுகிறார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள ஏரி குளங்கள், பெருமளவு கட்டிடம் கட்ட ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதற்குத் துணையான அரசியல்வாதிகளை ஊடகங்கள் ஏனோ கண்டுகொள்ளவே இல்லை.
(www.thinnai.com/index.php?
கட்டுரை: சாகா வரம் – ந. முருகானந்தம் – நரகத்தின் எடை நாளுக்கு நாள் கூடுகிறதா என்பதை அறிவியல் ரீதியாக ஒரு மாணவர் ஆராய்ந்துள்ளார். எல்லா மதங்கள் படியும் நரகத்துக்குப் போனவர்கள் திரும்பி வருவதே இல்லை. எனவே நரகத்தின் எடை அதிகரித்துக் கொண்டு வருவதே சாத்தியம். புதிய ஆத்மாக்கள் வர வர நரகம் குளிர்வதோ வெப்பமாவதோ நிகழும். நரகத்துக்குப் போகாமலே இருக்கும் வழி விஞ்ஞானத்தில் இல்லை. மெய்ஞானத்திலேயே இருக்கிறது. பாரதி “கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம்” என்கிறார். (www.thinnai.com/index.php?
எர்த்: யமுனா ராஜேந்திரன்: நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ள மிக நீண்ட கட்டுரை. கீதா மெஹதாவின் ‘எர்த்’ திரைப்படம் பற்றிய ஒரு விரிவான விமர்சனம் மற்றும் இந்தியப் பிரிவினையை ஒட்டி நடைபெற்ற வன்முறைகள் குறித்த சில கருத்துக்களை ய.ரா. முன்வைக்கிறார். கட்டுரை வெளியான போது ஃபயர் திரைப்படம் வெளிவந்திருந்தது. வாட்டர் திரைப்படப் படப்பிடிப்பு எதிர்ப்புகளால் தடைப் பட்டிருந்தது. வாட்டர் படத்தில் வருவது போல பிராமண விதவைகள் மொட்டையடிக்கப் பட்டுப் பின்னர் பாலியல் தொழிலுக்குத் தள்ளப் படவில்லை என்னும் பத்திரிக்கையாளர் சோ மற்றும் சினிமா இயக்குனர் மகேந்திரன் துக்ளக் இதழில் வெளியிட்ட கருத்துகளைச் சாடுகிறார். பார்ஸியான 8 வயதுப்பெண் இன்னொரு வளர்ந்த (ஹிந்து) பெண்ணுடன் லாகூர் வருகிறாள். பிரிவினையின் போது பார்ஸிக்கள் வன்முறையில் பங்கேற்கவில்லை, பாதிக்கப் படவுமில்லை. கதை இந்த எட்டு வயதுப்பெண்ணுடன் ஆயாவாக வந்த சாந்தா என்னும் இளவயதுப் பெண் பிரிவினையின் போது அடையும் பாலியல் துன்பங்களை ஒட்டி அக்கால சித்திரத்தை மிகவும் கலையாக வரைந்திருக்கிறது. ஹேராமுடன் ஒப்பிட படம் மிகவும் முற்போக்கானது. இந்தியாவில் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் ஆகியோருக்குத் தரப்பட்ட அங்கீகாரம் கீதா மெஹதாவுக்குத் தரப்படவில்லை. இடது சாரிகள் வாட்டர் பட மூலக் கதை சர்சைக்குரியது என்று அவரைத் தாக்க வலதுசாரிகள் மத அடிப்படையில் அவரை எதிர்க்கிறார்கள். எர்த் மிகவும் ஆழ்ந்த பார்வையை பிரிவினைக்கால வரலாற்றைப் பற்றி வைப்பதோடு மட்டுமல்ல, நல்ல பாத்திரப் படைப்பையும் கொண்டிருக்கிறது. (www.thinnai.com/index.php?
சேனைக்கிழங்கு: சாப்பீஸ் – சமையல் குறிப்பு ஆர். சந்திரா, சிறுகதை: ஏசுவின் பாவம் -ஐஸக் பேயல் கவிதைகள் – எது களை? & காவியம்!! (பிரமிள் நினைவில்) சி.ஜெயபாரதன்
- நீங்காத நினைவுகள் – 19
- மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
- மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு
- சிலை
- அழகிப்போட்டி
- நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’
- திண்ணையின் இலக்கியத்தடம்-4
- புகழ் பெற்ற ஏழைகள் - 28
- ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்
- அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”
- அத்தம்மா
- டௌரி தராத கௌரி கல்யாணம் …22
- பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.
- தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !
- கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்
- அவசரகாலம்
- நீண்டதொரு பயணம்
- கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
- தேடுகிறேன் உன்னை…!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1
- புண்ணிய விதைகள் – சிறுகதை
- காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
- சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை
- பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
- தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
- காதலற்ற மனங்கள்