மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
அந்தி மயங்கும் ஆழ்ந்த இருட்டில்
அன்றைய தினம் நீ ஏன்
விலகிச் சென்றாய் தயங்கிக் கொண்டு ?
வாசற் கதவைக் கடக்கும் போது
ஏதோ நினைத்து முகம்
திருப்பினாய் !
உள்ளத்தில் இருந்த தென்ன ?
ஓரக் கண்ணில் காட்டி
விசித்திர மாய்ப் போனாய்
சிரித்துக் கொண்டு !
இதயம் நடுங்கி,
இங்கே அமர்ந் துள்ளேன் நான்
சிந்தித்துக் கொண்டு.
நீ இருப்பதோ
வெகு தூர உலகில் !
விண்ணிலே சீரான அணிவகுப்பில்
பறந்து போகும்
கொக்கினக் கூட்டங்கள் !
என் உடல் வேதனை அவற்றுக்குத்
துணை அளிக்கும்.
உன்னை நான் கேட்கப் போவது
ஒருமுறைதான் !
நீங்கும் போது
நீ யெனக்கு என்ன வென்று
சொல்ல வில்லை,
மழையில் மூழ்கிய
மல்லிகைப் பூக்களின் உள்ளோட்ட
நறுமணம்
நீடித்ததா வென்று !
++++++++++++++++++++++++++++++
பாட்டு : 277 1937 ஆண்டு மத்திமத்தில் தாகூர் 76 வயதினராய் இருந்த போது புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்துக்குச் சாந்தி நிகேதனத்தில் எழுதப் பட்டது.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 9 , 2013
http://jayabarathan.wordpress.com/
- நீங்காத நினைவுகள் – 19
- மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
- மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு
- சிலை
- அழகிப்போட்டி
- நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’
- திண்ணையின் இலக்கியத்தடம்-4
- புகழ் பெற்ற ஏழைகள் - 28
- ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்
- அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”
- அத்தம்மா
- டௌரி தராத கௌரி கல்யாணம் …22
- பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.
- தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !
- கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்
- அவசரகாலம்
- நீண்டதொரு பயணம்
- கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
- தேடுகிறேன் உன்னை…!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1
- புண்ணிய விதைகள் – சிறுகதை
- காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
- சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை
- பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
- தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
- காதலற்ற மனங்கள்