வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !

This entry is part 21 of 31 in the series 13 அக்டோபர் 2013

 

 Walt Whitman

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

 

ஆத்மாவின் மெய்யான கீதத்தைப்

பாடுகிறேன்,

அங்கிங்கு எனாதபடி எங்கோ

ஓரிடத்தில் !

புதுமை மீளும் இயற்கையின்

மகத்து வத்தில் !

விலங்குகளின் இனத்தில் !

என் கவிதை அவர்க் களிக்கும்

அறிவிப்பில் !

எலுமிச்சை, ஆப்பிள் பழங்களின்

நறுமணத்தில் !

பறவை ஜோடிகளில் !

காட்டு மரக்கட்டை ஈரடிப்பில் !

அலை அடிப்பின் அடுக்கு

மடிப்புகளில் !

கரைகளைத் தகர்த்து

ஏறிடும்

சூறாவளிப் பேரலைகளில் !

  

மந்திரம் ஜெபிப்பேன்

அவற்றைப் பற்றிப் பாடிக் கொண்டு !

நேசத் தொடர்பு முயற்சி

பேசும் மெதுவான குரலில் !

உடல் முறிவு, இவற்றில்

எதிர்பார்ப்பது தான் !

பூரண உடம்பைக் காட்டு வதற்கு

வரவேற்பு

பக்கத்திலே உள்ளது !

குளிப்பவன் அமணமாய் நீந்துவான்

நீச்சல் தடாகத்தில் !

நீரில் அசைவற்றுக் கிடக்கிறான்

முதுகுப் புறம் மிதந்து !

 

பெண்ணுருவம் ஒன்றென்னை

நெருங்குது  !

ஆழ்ந்த கவனம் அதனில் !

உடற்சதை மோகத்தில் ஏங்கித்

தவிக்குது உடம்பு !

தெய்வீக அட்டவணை :

எனக்கு அல்லது உனக்கு !

அல்லது

தயாரிப் பாளிக்கு !

முகம், உடல் அங்கங்கள்,

மாதர் தலை முதல்

பாதம் வரையில்

உடற் கவர்ச்சி தூண்டுபவை

எவை என்றோர்

ஆரம்ப அட்டவணை தயாரிப்பேன்

அவற்றுக் கெல்லாம் !

 

++++++++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

6.      http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (October 10, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationதேடுகிறேன் உன்னை…!~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *