புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை… ​

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​
(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)
மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
33.உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை……

வாங்க….வாங்க…என்னங்க ​வேகமா வர்ரீங்க…என்ன ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்கு வி​டையக் கண்டுபிடிச்சிட்டீங்களா…?என்ன இல்​லையா…? முயற்சி பண்ணி​னேன் ஆனா வி​டையத் ​தெரிஞ்சுக்க​வே முடிய​லேன்னு ​சொல்றீங்களா…? பராவாயில்​லை. நீங்க முயற்சி பண்ணிருக்கீஙகள்ள…அதுவ​ரையிலும் பாராட்டணும்… சில ​பேரு எதுவு​மே ​செய்யாம எல்லாம் நடக்கணும்ணு ​நெனக்கிறாங்க.. அது முடியுமா…? ஒங்களப் ​போல முயற்சியாவது ​செய்யணும்…

முயற்சி பயிற்சி​யைத் தரும்…அந்தப் பயிற்சி வாழ்க்​கையில ​பெரிய ​வெற்றியத் தரும்…. இதப் புரிஞ்சிக்கணும்…நம்ம வள்ளுவப் ​பெருமான்கூட “முயற்சி திருவி​னையாக்கும்” அப்படீன்னு ​சொல்லியிருக்கார்ல..இப்படி முயற்சி ​செய்யறவங்கதாங்க ஊ​ழை(விதி​யை) ​வெல்லக் கூடியவங்க.. வள்ளுவர் கூறிய வழியில முயற்சியால ஏழ்​மையிலிருந்து விடுபட்டு உலக​மே புகழும் அளவுக்கு உயர்ந்தவருதான் ​மைக்கலாஞ்ச​லோ அப்படீங்கற ஓவியர். ஐ​ரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்துல சிற்பக்க​லை, ஓவியக்க​லை, கட்டடக்க​லை, கவி​​தைக்க​லை என்ற நான்கு க​லைகளுக்கும் மறுமலர்ச்சி​யை ஏற்படுத்தியவரு இந்த ஓவியர்தான். ஐ​ரோப்பிய வரலாறு இவ​ரை நான்கு உயிர்கள் ​கொண்ட உன்னதக் க​லைஞனாக வருணிக்கின்றது. அவரப் பத்திச் ​சொல்​றேன் ​கேளுங்க…

பிறப்பும் க​லைகளில் ஆர்வமும்

buonarroti_michelangelo 1475-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் இத்தாலியில் உள்ள ​கேப்​ரெஸ் (Caprese) என்ற நகரில் பிறந்தார். அவரு​டைய முழு​மையான ​பெயர் மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி என்பதாகும். அவர் பிறந்த ​நேரம் அவரது குடும்பம் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தது. அவ​ரைப் படாதபாடுபட்டு அவரு​டைய ​பெற்​றோர் வளர்த்தாங்க.
ஒரு கட்டத்துல அவருக்குச் சரியாச் சாப்பாடுகூடக் ​கொடுக்க முடியாத நி​லையில மைக்கலாஞ்சலோ​வை ஒரு கல்தச்சர் வீட்டில் அவரு​டைய ​பெற்​றோர் விட்டுட்டாங்க. அந்தச் சிறுவயதிலிருந்​தே மைக்கலாஞ்சலோ உளியையும், சுத்தியலையும் பயன்படுத்தி சிற்பங்க​ளைச் ​செதுக்கத் தொடங்கினார். இருப்பினும் ஓவியத்தின் மீது மைக்கலாஞ்சலோவிற்கு அலாதியான விருப்பம் இருந்தது.
மைக்கலாஞ்சலோ மீன் சந்தைக்கு அடிக்கடி சென்று மீன்களின் கண்கள், செவுல்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து பின்னர் அவற்றை மிகச் சிறப்பாக வ​ரைவார். ஓவியக் க​லை ​கைவரப்​பெற்ற மைக்கலாஞ்சலோ சிற்பக் க​லை​யைக் கற்பதற்காக ​​லொரான்​​ஸோ டி​மெடிசி(‘Lorenzo de’ Medici’) என்பவரிடம் ​சென்று கற்றுக் ​கொள்ளத் ​தொடங்கினார்.
ஒருமுறை மைக்கலாஞ்சலோ பளிங்கு கல்லில் ஒரு முதியவர் சிரிப்பதைப்போன்ற சிற்பத்தை வடித்து அதற்கு மெருகேற்றிக்கொண்டிருந்தார். அதனைப் பார்த்த லொரான்ஸோ முதியவருக்கு எல்லாப் பற்களும் இருக்கின்றனவே என்று கிண்டலாகக் கேட்க உட​னே மைக்கலாஞ்சலோ உளியையும், சுத்தியலையும் எடுத்து மேல் வரிசையில் இருந்த பல்லை ஒருசில நிமிடங்களில் உடைத்தெடுத்துவிட்டார். ​மைக்லாஞ்ச​லோவின் திற​மை​யைக் கண்டு வியந்துபோன லொரான்ஸோ மைக்கலாஞ்சலோவின் தந்தையின் அனுமதியுடன் அவரைத் தன்னு​டைய வீட்டிலேயே வைத்துக்கொண்டார். லொரான்ஸோ 1492-ஆம் ஆண்டு இறக்கும் வரை அவர்கூடவே இருந்து ​மைக்கலாஞ்ச​லோ சிற்பக்கலையைக் கற்றுக் ​கொண்டார்.
காதல் – கவி​தை – காமன் சி​லை
காதலில் விழாத மனிதர்கள் யாருமில்​லை. காதல் புகாத இதயமுமில்​லை. காதலுக்கு அவ்வளவு ஆற்றல் உண்டு. இது உண்​மையுங்கூட. மைக்கலாஞ்ச​லோ, ​லொ​ரென்​ஸோ டி பியர்பிரான்ஸ்​கோ டி ​மெடிசி (Lorenzo di Pierfrancesco de’ Medici) என்ற அழகிய ​பெண்​ணொருத்தி​யை மிகவும் விரும்பினார். அவளிடம் விவரிக்க முடியாத அளவிற்குக் காதல் ​கொண்டிருந்தார். அவளும் அவ​ரைக் காதலித்தாள். ​லொ​ரென்ஸாவின் மீது மைக்கலாஞ்ச​லோ ​கொண்ட காதல் அவ​ரைக் கவிஞராக்கியது. அவர் பல கவி​தைக​ளை எழுதினார். தூரி​கை பிடித்த ​கைகள் ​பேனாப்பிடித்துக் கவி​தைக​ளை எழுதித் தள்ளின. இருப்பினும் ஏ​னோ அவரது காதல் ​கைகூடவில்​லை. மைக்கலாஞ்ச​லோவும் தன்காதலி​யைத் தவிர ​வேறு​பெண்க​ளை நி​னைத்துக்கூடப் பார்க்கவில்​லை.
“நதியில் விழுந்த இ​லையும்
காதலில் விழுந்த மனமும்
ஒன்றுதான்………………!
இரண்டு​மே க​ரை​சேரும் வ​ரை
தத்தளித்துக் ​கொண்​டே இருக்கும்….!”
என்ற கவி​தை வரிகளுக்​கேற்ப மைக்கலாஞ்ச​லோவின் இதயம் அவளின் நி​னைவுகளில் நிரம்பித் தத்தளித்துக் ​கொண்​டே இருந்தது. அவர் தனது மன​தை சிற்பக்க​லையில் திருப்பி பல அற்புதக் க​லைப் ப​டைப்புக​ளை உருவாக்கினார்.
1495-ஆம் ஆண்டில் மைக்கலாஞ்ச​லோ, ஸ்லீப்பிங் கூபிட்”(‘Sleeping Cupid’) என்ற உறங்கும் காமதேவன் சிற்பத்​தை வடித்தார். அது இன்றும் சிறந்த க​லைப்​பொக்கிஷமாக விளங்குகின்றது. நான்கு ஆண்டுகள் கழித்து அவர் உருவாக்கிய பியட்டா(‘Pieta’) என்ற அழகிய சிற்பமும் காம​தேவனின் சிற்பமும் வாடிகன் ​தேவாலயத்​தை இன்றும் அழகுபடுத்திக் ​கொண்டிருக்கின்றன.
மைக்கலாஞ்சலோவிற்கு பெரும் புகழைத் ​தேடித்தந்த சிற்பம் டேவிட் என்ற சிற்பமாகும். இத​னை மைக்கலாஞ்ச​லோ ஓர் உருக்குலைந்து போன பளிங்கு கல்லிருந்து உருவாக்கினார். அந்த டேவிட் சிலை​யை அவர் உருவாக்க 18 மாதங்க​ளை எடுத்துக் ​கொண்டார்.
வாழ்வில் ஏற்பட்ட திருப்பமும் புகழும்
எல்​லோருக்கும் வாழ்க்​கையில் எப்​போதாவது திருப்புமு​னை ஏற்படுவதுண்டு. அந்தத் திருப்புமு​னை​யைப் பயன்படுத்திக் ​கொள்பவர்கள் உன்னத இடத்திற்கு வருகிறார்கள். அவ்வாறான திருப்புமு​னை மைக்கலாஞ்ச​லோவிற்கும் வாய்த்தது. அது​வே அவ​ரை புகழின் உச்சிக்கு இட்டுச் ​சென்றது.
அப்போது போப்பாக இருந்த இரண்டாம் ஜூலியஸிடமிருந்து மைக்கலாஞ்ச​லோவிற்கு 1508-ஆம் ஆண்டு திருப்புமு​னை​யை ஏற்படுத்திய ஓர் அழைப்பு வந்தது. சிஸ்டீன் தேவாலயம் (Sistine) கட்டப்படத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் அப்போது போப்பாக இருந்த இரண்டாம் ஜூலியஸ் அந்தத் தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் பைபிளில் காணப்படும் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டுமாறு மைக்கலாஞ்சலோவைக் ​கேட்டுக் ​கொண்டார். ஆனால் ​போப்பிடம் தான் ஓவியன் அல்ல என்றும் தான் வெறும் சி்ற்பிதான் என்றும் மைக்கலாஞ்சலோ எவ்வுளவோ எடுத்துக்கூறி மறுத்துப் பார்த்தார். ஆனால் போப் மறுத்துவிட்டார். நீங்கள்தான் ஓவியங்க​ளை வ​ரைய ​வேண்டும் என்று அன்புக் கட்ட​ளையிட்டார். ​போப்பின் நிர்பந்தத்தின் காரணமாக மைக்கலாஞ்சலோ மிகுந்த தயக்கத்தோடு ஓவியம் தீட்டும் அந்தப் பணியைத் தொடங்கினார்.
ஓயாத உ​ழைப்பு
​தேவாலயத்தில் ஓவியங்கள் வரைய வேண்டிய பரப்பளவு சுமார் பத்தாயிரம் சதுர அடிகளாகும். மைக்கலாஞ்சலோ அத​னை வ​ரைவதற்குத் தனக்கு ஐந்து உதவியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தனது பணியைத் தொடங்கினார். உதவியாளர்கள் கவனக்கு​றையாக இருந்த​போது அவர்களிடம் கடு​மையான ​கோபத்துடன் நடந்து ​கொண்டார். ​மேலும் அவரது முன்கோபத்தைப் ​பொறுத்துக் ​கொள்ள முடியாத உதவியாளர்கள் அ​னைவரும் ஒருவர் பின் ஒருவராக ​வே​லை​யைவிட்டுவிட்டுச் ​சென்றுவிட்டனர். அதனால் மைக்கலாஞ்சலோ ஓவியங்கள் வ​ரைவ​​தைத் தனி மனிதனாகத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. மின்விளக்குகள் இல்லாத சூழலில் ​வெறும் ​மெழுகுவர்த்தியின் ஒளியில் உணவு, உறக்கம், ஆகியவற்​றை​யெல்லாம் மறந்து ​தேவாலயத்தின் மிக உயரமான உட்கூ​ரைகளில் அற்புதமான ஓவியங்க​ளை ​​மைக்கலாஞ்ச​லோ வ​ரைந்தார்.
பல ஓவியங்களை அவர் படுத்துக்கொண்டே தீட்டியதால் தூரிகையிலிருந்து சிதறிய வண்ணங்கள் அவரது கண்களைப் பதம் பார்த்தன. ஓவியங்கள் தீட்டும்போது இதுபோன்ற இடையூறுகள் ஏற்பட்டாலும் மைக்கலாஞ்சலோ அவற்​றை எல்லாம் ​பொருட்படுத்தாமல் இரவு பகலாக உழைத்து நான்கு ஆண்டுகளில் தனது ஓவியப் பணி​யை நிறைவு செய்தார். தங்களைச் சிறந்த ஓவியர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்பும் எவரும் முதலில் காண வேண்டிய ஓவியக் காட்சிக்கூடமாகச் சிஸ்டீன் தேவாலாயம் இன்று திகழ்கிறது. மைக்கலாஞ்சலோ வரைந்த ‘ஆதாமின் பிறப்பு’ என்ற ஓவியம் உலக ஓவியர்கள் இன்றளவும் பார்த்து வியக்கும் வ​கையில் அ​மைந்த காவியப் ப​டைப்பாகும். ஆதா​மை யாரும் பார்த்ததில்​லை. ஆனால் மைக்கலாஞ்சலோ ஆதா​மை உயிருடன் ஓவியத்தில் ​கொணர்ந்திருப்பது விந்​தையிலும் விந்​தையாக உள்ளது.
இறைவனின் விரல் உயிரற்ற ஆதாமின் விரலைத் தீண்ட ஆதாம் உயிர் பெறுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தில் ஆதாம் யார் என்பதற்கு மைக்கலாஞ்சலோ அடையாளம் தந்திருப்பது பாராடடுதற்குரியதாக உள்ளது. அதேபோன்று சிஸ்டீன் (Sistine) தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் வடித்துத் தனது தூரிகையால் சுமார் 340 ஓவியங்களை உலவவிட்டு மைக்கலாஞ்சலோ ஓவிய அரசாங்கத்​தையே அங்கு நடத்தியுள்ள​மை வியப்பிற்குரியது.
அரச​வைக் க​லைநிபுணர்
மைக்கலாஞ்சலோவிற்கு அவர் ​தேவாலயத்தில் வ​ரைந்த ஓவியங்கள் ​பெரும்புக​ழைத் ​தேடித் தந்தது. அவருக்கு 60 வயதாகியபோது மூன்றாம் போப் மைக்கலாஞ்சலோவை வத்திகனின் அரசவை கட்டடக்கலை நிபுணர், சிற்பி, ஓவியர் எனக் க​லைகளின் நிபுணராக நியமித்தார். அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மைக்கலாஞ்சலோ அடுத்த ஏழு ஆண்டுகளில் அவர் வ​ரைந்த “த லாஸ்ட் ஜட்ஜ்​மெண்ட்”(The Last Judgment) என்ற ஓவியம் மிகச் சிறந்த ஓவியமாக அ​னைவராலும் வியந்து பாராட்டப்படுகிறது.
“மைக்கலாஞ்சலோ ஓவியத்திலோ அல்லது சிற்பம் செதுக்குவதிலோ ஈடுபட்டால் அவரது கவனத்தை எந்த ஆற்றலாலும் திசை திருப்ப முடியாது. உண​வைக்கூட அவர் இரண்டாம்பட்சமாக​வே கருதுவார். அவர் பலமுறை தனது உடைகளையும், காலணிகளையும் கழற்றாமலேயே உறங்கியிருக்கிறார்; அவர் எழுந்தவுடன் மீண்டும் வேலை செய்வார். அதனால் சில சமயங்களில் அவர் காலுறையை கழற்றும்போது காலு​றையுடன் அவரது தோலும் உரிந்து வரும். தன்​னைப் பற்றிக்கூடக் கவ​லைப்படாமல் தன்னு​டைய ​வே​லையி​லே​யே அதிகக் கவனம் ​செலுத்தினார்” என்று அவ​ரைப் பற்றி அவரது நண்பர் ஸ்கானியா கான்டிவி (Ascanio Condivi) என்பவர் கூறுவது மைக்கலாஞ்சலோவின் கட​மையுணர்​வைப் புலப்படுத்துவதாக அ​மைந்துள்ளது. அதனால்தான் மைக்கலாஞ்சலோவின் ஓவியங்கள் உயிர்த்தன்​மை உ​டையனவாக இன்றும் திகழ்கின்றன.
க​​​லைந்த​போன ஓவியம்
என்ன காரணத்தா​லோ மைக்கலாஞ்சலோ தனது இறுதிக் காலம் வ​ரைத் திருமணம் செய்துகொள்ளாம​லே​யே தனியாக வாழ்ந்தார். ஒரு​வே​லை அவரது ​கைகூடாத காதலாலும்கூட இருக்கலாம். யாரு​டைய உள்ளத்திலும் முதல் காதல் ​தோற்றாலும் அது விட்டுச் ​சென்ற வடு வாழ்வின் இறுதிவ​ரை இருந்து ​கொண்​டே இருக்கும். உலகின் மகாக் க​லை​மே​தையாக வாழ்ந்த மைக்கலாஞ்சலோவின் இருதயத்துள் அவரது காதல், நி​னைவுகளாக என்றும் கனன்று ​கொண்​டே இருந்ததால்தான் அவர் திருமண​மே ​செய்து ​கொள்ளவில்​லை என்பது ​நோக்கத்தக்கது. தான் விரும்பிய காதலியின் இடத்தில் ​வே​றொரு ​பெண்​ணை ​வைத்துப் பார்க்க மைக்கலாஞ்சலோவிற்கு இதயம் இடங்​கொடுக்கவில்​லை.
ஒருமு​றை அவரது ​நெருங்கிய நண்பர் மைக்கலாஞ்சலோ​வைப் பார்த்து, “உலகில் உங்களின் பெய​ரைச் சொல்ல உங்களுக்கு ஒரு வாரிசு இல்லையே? இவ்வளவு ​பெரிய க​லைஞராக விளங்கும் தங்களுக்கு இது ​வேத​னை​யைத் தரவில்​லையா?” என்று உரி​மையுடன் கேட்டார்.
அதற்கு மைக்கலாஞ்சலோ, “ஓவியமும் சிற்பமும்தான் எனக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி, என்னுடைய படைப்புகள்தான் நான் இந்த உலகிற்கு விட்டுச் செல்லும் எனது குழந்தைகள் அவற்றுக்கு அவ்வுளவாக மதிப்பு இருக்காது என்றாலும் அவற்றில் நான் என்றென்றும் வாழ்வேன் அ​வை எனது ​பெய​ரைக் கூறிக்​கொண்​டே இருக்கும்” என்று சிரித்துக் ​கொண்​டே கூறினார். தன்னு​டைய வாழ்க்​கை​யை க​லைக்காக​வே அர்ப்பணித்தார். மைக்கலாஞ்சலோவினு​டைய ஓவியங்களுக்கும் சி​லைகளுக்கும் மதிப்பு இருக்காது என்று அவ​ரே கூறியிருப்பினும் அவர் விட்டுச்சென்ற க​லைப்படைப்புகள் அ​னைத்தும் இன்று விலைமதிக்க முடியாத க​லைக் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.
ஆமாங்க …உலகத்தில…. எத்த​​னை​யோ ​பேர் வருகிறார்கள்; ​செல்கிறார்கள்: ஆனால் சிலர்தான் வாழ்க்​கையிலும் வரலாற்றிலும் முத்தி​ரை பதிக்கிறார்கள். அந்தச் சிலருள் மைக்கலாஞ்சலோவும் ஒருவராவார். க​லைக்காக​வே தன் வாழ்க்​கை​யை அர்ப்பணித்துக் க​லையாக​வே வாழ்ந்த அந்த ஒப்பற்ற க​லையுலக ​மே​தை 1564-ஆம் ஆண்டு தனது 89-ஆவது வயதில் இவ்வுலகை விட்டு விண்ணுல​கெய்தினார். கால​மெல்லாம் க​லையாத ஓவியங்க​ளையும், சிற்பங்க​ளையும், கவி​தைக​ளையும் க​லைமாளி​கைக​ளையும் ப​டைத்தளித்த க​லையின் வாழ்க்​கை ​மேகக் கூட்டங்க​ளைப் ​போன்று க​ளைந்தது. க​லையன்​னையும் உலக மக்களும் தங்களுக்கு ஏற்பட்ட ​பேரிழப்​பை நி​னைத்து நி​னைத்துக் கண்ணீர் வடித்தனர்.
அவர் மண்ணுல​கை விட்டுச் ​சென்றாலும் அவரது ப​டைப்புகள் கல​மெலாம் அவரது குழந்​தைகள் ​போன்று அவ​ரின் ​பெய​ரைச் ​சொல்லிக்​ கொண்​டே இருக்கும். அ​தைக் ​கேட்​போரின் உள்ள​மெலாம் மைக்கலாஞ்சலோ என்ற ஒப்பற்ற க​லை​மே​தையின் ​பெயர் நி​றைந்திருக்கும்.
பாத்துக்கிட்டீங்களா…..? ​​​செய்யிற ​தொழில்ல கண்ணுங்கருத்துமா முழுமன​தோடு ஈடுபட்டா​லே ​போதும். நாம வாழ்க்​கையில நிச்சயம் முன்​னேறலாம். எதிலும் அ​ரையுங்கு​றையுமா ஈடுபடக் கூடாது. நூறு சதவிகிதம் முழு​மையான ஈடுபாட்​டோட நாம ​செயல்பட்டா நாமதாங்க ​​வெற்றியாளர்கள்…இது உண்​மைதாங்க…அப்பறம் என்ன மைக்கலாஞ்சலோ​வை மனசுல வச்சிக்கிட்டு ஒங்க ​வே​லையில முழுசா எறங்குங்க..அப்பறம் என்ன ​வெற்றி ஒங்களுக்குத்தான்…என்ன சரிதா​னே..
ஒரு குடும்பத்தில பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஏன் ஒரே மாதிரியான சாயலா இருக்கின்றன…? ஒங்களுக்குத் ​தெரியுமா…? நீங்க யாருமாதிரி இருக்கறீங்க..? என்னது ஒங்க அப்பா மாதிரியா…? அதுக்குக் காரணம் என்னன்னு ​தெரியுமா…? இதப் பத்தி ​யோசிச்சிப் பாத்தீங்களா….? என்னது இ​தெல்லாம் எங்க ​யோசிக்கிறதுன்னா ​சொல்றீங்க…? இதப் பத்தி ஒரு ஏ​ழைக் குடும்பத்தில பிறந்த ஒருத்தரு ​ரொம்ப ​யோசிச்சாரு… உலகம் வியக்கற அளவுக்குப் ​பெரிய உண்​மையக் கண்டுபிடிச்சாரு உலகப் புகழ் ​பெற்றாரு…யாரு ​தெரியுமா….? என்னங்க மனித​னோட மரபிய​லைப் பத்திக் கண்டுபிடிச்சவரு யாருன்னு ​தெரிய​லையா….? ​மெண்டல் மாதிரி த​லை​யப் ​போட்டுப் பிச்சிகிடாதீங்க…​பொறு​மையா இருங்க அடுத்தவாரம் ​சொல்​றேன்… (​தொடரும்………..34)

Series Navigation
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *