முனைவர் ந.பாஸ்கரன்
புதினப்படைப்பு என்பது ஓர் அரிய முயற்சியின் வெளிப்பாடு . இன்றைய தமிழ் இலக்கியப்படைப்புகளில் மிகச்சிறந்தவையாக மிகச்சிலவே என்பதைவிட மிகச்சிலவாகவே புதினங்கள் வெளிவருகின்றன.அவற்றுள்ளும் வாசகனை வளைத்துப்போடும் வேலையை விரல்விட்டு எண்ணும் புதினங்களே செய்கின்றன. கவிதை எழுதும் படைப்பாளர்களின் எண்ணிக்கையைவிட கதை எழுதும் படைப்பாளர்களின் எண்ணிக்கை தமிழ்ச்சூழலில் மிகக்குறைந்த அளவில் காணப்படுகிறது. இந்த அளவு கொஞ்சம் மகிழ்ச்சியையும் அளிக்கத்தான் செய்கிறது. மிகச்சிலவாக உள்ள புதினப்படைப்பாளர்களிலும் பலர் வாசகர்களை நோக்கி எழுத்துமலையை உருவாக்கிவிட்டேன் வலிமைபடைத்தவர்கள் அதன் மீது ஏறி வாருங்கள் என்று கூறுவது படைப்புப்பயங்கரவாதிகளின் குரலாகவே ஒலிக்கின்றது. இவர்களுக்கிடையே வாசகனை விரல் பிடித்து படைப்புப்பாதையில் அழைத்துச் செல்லும் படைப்பாண்மை வளவ . துரையனிடம் காணப்படுகிறது.கட்டுரைஇ கவிதை சிறுகதை புதினம் என்ற பல ஆளுமை பெற்றவராக விளங்குவதும் அவருடைய தனிச்சிறப்பாக உள்ளது.
சிறுகதைஇ குறும்புதினமஇ; புதினம் என்பனவற்றின் அளவு சார்ந்த அளவுகோல் எது என்பதை அந்தந்த வகைமையின் கதைக்கருவளமையேத் தீர்மானித்துக்கொள்கிற செய்தியாக உள்ளது. அவ்வகையில் ‘வளவ துரையனின் சின்னசாமியின் கதை’ என்ற இப்படைப்பு ‘புதினம்’ என்பதற்கானக் கதைக்கரு வளமையைக்கொண்டு இயங்குகிறது. புதினத்தின் நடைஇ கதைப்பின்னல்இ பாத்திரப்படைப்புஇ உவமை என்ற அனைத்து அம்சங்களும் வாசிப்பு சோம்பலை ஏற்படுத்தாமல் கதைச் சித்திரிப்புகள் ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வாசகனைக் கடத்திக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணியாக “நடை” உள்ளது எனலாம். ஓரளவிற்குச் சிற்சில இடங்கள் மு.வ. வின் நடை பாணியில் தென்பட்டாலும் வளவ துரையனின் படைப்புகளில் இப்படைப்பில்தான் அவருக்கான கதைநடைக்குரியத் தனித்துவம் அவரிடம் வசப்பட்டுள்ளதை ஊகிக்க முடிகிறது. எவ்வித வாசிப்புச் சிரமத்தையும் ஏற்படுத்தாமல் எளிமைஇ யதார்த்தம் என்பன இழையோடிய நதியின் நகர்வாய் இதில் புனையப்பட்டுள்ளப் புதின நடை இப்புதினச் சிறப்புக்கு வலிமை சேர்த்துள்ளது. கதைகளுக்குள் ஊடாட வேண்டிய தொடர் உணர்வும் எதிர்பார்ப்பும் வாசிப்பு இயக்கத்திற்கு உயிர்ப்பு கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.
புதினத்தின் கதைக்கருத்தேர்ச்சி மிக முக்கியமானதொரு பங்களிப்பை அதன் வெற்றிக்கு ஆற்றுகின்றது. அவ்வகையில் சின்னசாமிகதையின் கதைக்கரு முதன்மைபெறுகிறது. நட்பின் உன்னதத்தைக் குடும்ப அமைப்புஇ சாதிஇ அரசியல்இ கல்வி மொழி என்ற பல உளிகொண்டு செதுக்கியுள்ளார் வளவ துரையன். மாதவன் ஒ சுகுணாஇ முருகன் ஒ சரசுஇ சின்னசாமி ஒ நிர்மலாஇ அன்பழகன் ஒ சரசுஇ மதியழகன் ஒ பொன்னுமணி போன்ற இணையர்களின்; வழி விளக்கும் சித்திரிப்புகள் வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களையும் தீர்வுகளையும் எடுத்துரைக்கின்றன. மாதவன்இ முருகனஇ; சின்னசாமி என்ற மூவரும் கதையின் முதன்மை நாயகர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்களை முதன்மை பெற்றவர்களாகவேக் கதைப்போக்கின் சித்திரிப்பு காட்டுகிறது. நவீனத் தளத்திற்கு ஏற்ப இப்புதினத்தில் இடம் பெறக்கூடிய கடவுளர்களின் பேச்சில் அம்மனிடம் பெருமாளஇ; மூவரில் கதையின் கதாநாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்வார்கள் என்று சொல்வதாகக் கதாசிரியர் வளவ துரையனே அமைத்துக் காட்டுகிறார்;.நவீனப் படைப்புகளில் இது போன்ற கதையாடல்கள் இடம் பெறும.;இ இல்லையென்றால் இப்படிப்பட்ட கதையாடல்கள் இடம் பெற்றால்தான் அது நவீனம் என்பதும் ஈண்டு முக்கியமானதாகிறது.மேலுமஇ; வளவ துரையனின் பாத்திரப்படைப்பாளுமைத் திறனையும் ஈண்டு கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. சின்னசாமிஇ சிலப்பதிகாரத்தின் நாயகனான கோவலனைப்போலவே தடுமாறும் உள்ளத்தைப் பெற்றுள்ளான். மாதவிச்சேரல் இல்லை என்றாலும் கண்ணகியின் மனத்துயரை தனது மனையாளுக்குத் தரக்கூடியவனாக இருக்கின்றான். கடைசி வரையிலான அவனது தடுமாற்றமே சின்னசாமியின் கதையாக இந்நூல் அமைவதற்குக் காரணமாகிறது.
சாதியக்கருத்துகளை ஊடறுத்துச் செல்லும் இடங்களில் எல்லாம் வளவ துரையனின் எழுதுகோல் எச்சரிக்கையுடன் நகர்ந்துள்ளதை உணர முடிகிறது. ஐயர்இ வன்னியர் இசெட்டியார்இ கவுண்டர்இ முதலியாரஇ; தலித் என பல சாதியக் குழுக்களை முன் வைத்து செய்யப்பட்டுள்ளக் கதைப்பின்னல் சில வினாக்குறிகளை அறுவடை செய்து பல ஆச்சரியக்குறிகளைக் கதைக்களங்களில் நடவு செய்துள்ளது. குறிப்பாக ஐயர் – தலித் என்ற இரு சாதிகளின் சாதீய முரண் மற்றும் சமூக வாழ்வியல் முரண் ஆகியனபற்றிய சில ஆய்வுகளைக் கதைச்சித்தரிப்பு சில இடங்களில் மேற்கொண்டுள்ளதை அறியமுடிகிறது.
ஐயர் சாதியில் உள்ள சிலர் இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களின் வாழ்வியல் நெறிமுறைகளை நெகிழ்த்தும் நீக்கியும் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். அப்படி மாற்றமுற்று வாழ்கின்றவர்கள் தாங்கள் அடைந்துள்ள இலகுநிலையால் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர்த்தவர்களாய் வாழ்வதுடன் மனிதநேயம் மிகுந்தவர்களாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும். மாதவனின் குடும்பம் இதற்கு சான்றாக உள்ளது. மாதவனின் தாய் தன் பிள்ளையுடன் சின்னசாமி முருகன் என்ற இருவரையும் வேறு சாதியினர் என்றுகூட எண்ணாமல் அவர்களையும் தன் பிள்ளையைப்போலவே பாவித்து மூவரையும் ஒன்றாக அமரவைத்து சாப்பாடு பரிமாறுகிறார்.ஆனால் ஐயர் சாதியில் உள்ள பலர் தங்களின் பார்ப்பனீயத்துவத்தை விட்டு வெளிவருவதற்கு என்றைக்கும் முன்வராதவர்களாகவே உள்ளனர். இதனை இப்புதினத்தில் வரும் பஞ்சாபி என்ற பாத்திரத்தின் வழி வளவ துரையன் வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாபி தன்னைத்தேடி வரும் அனைவரையும் அவர்களின் இயற்பெயர் சொல்லி அழைக்கமாட்டார். மாறாக அவர்களின் சாதியைச்சொல்லியே அழைப்பார். அந்த அளவிற்கு அவரிடம் சாதீய வெறி மேலோங்கி நிற்கிறது. மேலே குறிப்பிட்ட சின்னசாமியும் முருகனும் அவரின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அவர்களை “என்ன செட்டியாரும் வன்னியரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்?” என்று வினவி வரவேற்பார் மேலும்இ அவர்களுக்கு அருந்துவதற்கு கொடுத்த மோரக்; குவளையை அவரது மனைவி அவர்களுக்கு முன்னாலேயே தண்ணீரைத்தெளித்து எடுப்பாள். இதைப்பார்த்து அதிர்ச்சியுற்ற முருகன் அவரிடமே அதைப்பற்றி கேட்பான். அதற்கு தங்கள் வீட்டு பழக்கமே இது தான் அதோடு ‘வேற சாதிக்காரங்க குடிச்சா தீட்டு பட்டுவிடுமில்லையா?’ என்று இயல்பாகவேக் கூறுவார் பஞ்சாபி. மற்றுமொரு பொழுதில் உள்ளாட்சித்தேர்தல் வரும் அதுசமயம் பஞ்சாபி தேர்தலில் நின்று போட்டியிடுவதற்குப் பல வழிகளை மேற்கொள்கிறார் அதிலொன்று மாதவனைத் தன்பக்கம் இழுப்பது. அதற்காக அவன் வீட்டிற்குச்சென்று ‘நம்ம சாதிக்காரர் ஒருத்தர் நின்னு ஜெயிக்கணும்;;;: அடுத்தவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது’ என்று சாதியத்தின் வழி வலை விரிக்கின்றார். இதன்வழி பிராமனீயத்திலிருந்துப் பிறழாத பிராமணர்கள் பிறர் மனம் நோவுவதைப்பற்றிக் கவலை கொள்ளமாட்டார்கள் என்பதை உணரமுடிகிறது. பிராமணர்களுக்குள்ளேயே பிராமணீயத்தைப் போற்றாதவர்களும் உண்டுஇ எக்காலத்திலும் எவருக்காகவும் பிராமணீயத்திலிருந்து சற்றும் பிறழாதவர்களும் உண்டு என்ற கதைச்சித்திரிப்புகளின் வழி ஐயர் சாதிக்குள்ளேயே இருதுருவநிலை உள்ளது என்பதை புதினம் வெளிப்படுத்துகிறது.
இதுபோலவேஇதலித் சாதியிலும் இச்சூழல் நிலவுவதை புதினம் காட்டுகிறது. அன்பழகன் அரசுப்பள்ளி ஆசிரியர்.அவரது மனைவி சரசு பால்வாடியில் ஆயாப்பணி. அன்பழகனின் தம்பி மதியழகன் ஒரு பட்டதாரி. தான் பிறந்த தலித் சமூகத்திற்கு தன்னால் முடிந்த அளவிற்கு தொண்டுசெய்து முன்னேற்ற வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவர். அரசாங்கம் கொடுத்த பல சலுகைகளால் தானும் தனது அண்ணனும் கல்வி கற்க முடிந்தது என்பதையும் அதற்கு கைமாறாகத் தமது சமூகத்திற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதையும் எண்ணுபவன். அதுபோலஇ தனது சமூகத்துக்குள்ளேயேத் திருமண உறவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணுகின்றவன். ஆனால்இ அவரது அண்ணனும் அண்ணியும் தம்பிஅன்பழகனின் சிந்தனைக்கு எதிராக இருக்கின்றனர். கிடைத்த சலுகைகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு மேலே செல்ல வேண்டுமேயொழிய ஏணியைப்பற்றியும் அது ஊன்றியிருக்கும் இடத்தைப்பற்றியும் எண்ணக்கூடாது என்ற அண்ணனின் குரல் தலித்துகளுக்குள்ளேயே இருந்துகொண்டு ஆனால் தலீத் முன்னேற்றத்தை விரும்பாத மாற்றுக்குரலாக இருப்பதையும் புதினம் பதிவுசெய்கிறது.
இவ்வாறுஇ சாதிகளுக்குள்ளே இருக்கின்ற முரண்கள் உடையும்வரை அல்லது சாதிகளுக்குள்ளே இருக்கின்ற இறுக்கங்கள் தளரும் வரை சாதியக்கட்டுமானங்களில் மாற்றம் விளைவதற்கானச் சாத்தியங்கள் இல்லை என்பதைப் புதினம் தனது உரத்த குரலில் பதிவு செய்கிறது. உயர்சாதிகளின் மற்றுமொரு இயக்கத்தையும் வளவ துரையன் பதிவு செய்துள்ளார்;. அதாவதுஇ பிராமணமயமாக்கலின் போக்குஇ இது ஆதிக்க சாதிகளின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு கீழ்நிலையில் உள்ள சாதியினரில் சிலர் மேல் சாதியினரின் அடையாள விரும்பிகளாக மாறுவதனாலும் சாதியம் தன்னைக் காலந்தோறும் கட்டமைத்துக்கொண்டே வருகிறது. இதனைஇ இப்புதினம் முருகனின் குரலில்இ
‘சாமிஇசவுதார் குளம் போராட்டத்தின்போது அம்பேத்கார் என்னா சொன்னார் தெரியுமுங்களா? ‘பிராமணியச்சிந்தனை இல்லாத பிராமணரை வரவேற்பேன்இ பிராமணியச்சிந்தனையோடு வரும் பிராமணரல்லாதவரை நிராகரிப்பேன்’”
என்ற அம்பேத்காரின் கருத்தைப் பதிவு செய்துள்ளது. இத்தகையக் கருத்துகளால் அந்தந்த சாதிகளுக்குள்ளேயே உடைக்கப்படவேண்டிய அல்லது உடைபடாத கருத்துருக்கள் படிந்து கிடப்பதை படைப்பாளர் வெளிக்கொண்டு வருகிறார். ‘அப்பன் வெட்டியக்கிணறு என்பதற்காக உப்புத்தண்ணீரையாக் குடிக்க முடியும்?’ என்ற பாரதியின் கூற்றுக்கு ஏற்ப மூத்தத் தலைமுறையிலிருந்து முழுமையாக மாறி அல்லது முந்தைய தலைமுறையிலிருந்து ஏற்க வேண்டியதை ஏற்று: எரிக்க வேண்டியதை எரித்து ஒரு புதுயுகம் உதயமாவது உறுதி என்பதை இப்புதினம் மாதவன்இ முருகன்இ சின்னதுரைஇ மணிகண்டன் மற்றும் காவல்துறை ஆய்வர் ச.அருள்செல்வன் போன்ற பாத்திரங்கள் வழி வெளிப்படுத்தியுள்ளது.
நவீன இலக்கியத்தின் தன்மைகளில் ஒன்றாக வளவ துரையன் கோயில்கொண்டிருக்கும் கடவுளர்கள் நள்ளிரவில் கோயிலை விட்டு வெளியில் புறப்பட்டுவந்து ஓர் இடத்தில் சந்தித்துப்பேசிக் கொள்வதாக அமைத்துக்காட்டுகிறார்;. அப்பொழுது அவர்கள் புதினத்தோடு தொடர்புடைய நாட்டுநடப்புகள் அரசியல் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதாசிரியரைப் பற்றி என்று பற்பலத் தளங்களுக்குரிய செய்திகளைப் பேசிக்கொள்கின்றனர.; அவ்வூரில் உள்ள கோயில் தெய்வங்களான ஐயனார்இ அம்மன்இ பெருமாள்இ சிவபெருமான் மேற்படி செய்திகளோடு கிண்டலும் கேலியும் செய்து கொண்டு பேசிக்கொள்கின்றனர்.அதுசமயம் சாதி குறித்து ஓர் உரையாடல் அம்மனுக்கும் பெருமாளுக்கும் இடையில் நிகழ்கின்றது. அப்பொழுது பெருமாள் இ “ஜாதிக்காகக் கோயில் இருக்கக் கூடாது. கோயில்ல ஜாதியைத் தவிர்க்க முடியாது.” என்று பேசுகிறார்.உலகெலாம் உணர்ந்தவன் ஓதுவதை ஏற்க வேண்டியுள்ளது.இத்தகைய கடவுளர்களின் உரையாடலை மூன்று இடங்களில் ஆசிரியர் அமைத்துக்காட்டுகிறார். நிலத்தில் நிகழும் யானைப்போரினைக் குன்றின் மீது நின்று கொண்டு பார்க்கும் பார்வையாளராக இப்பகுதிகளை வாசகர்களுக்கு வளவ துரையன் காட்டுகிறார். ஓர் அங்கதத்தொனியுடன் கடவுளர்களின் உரையாடல்களைக் கட்டமைத்துள்ளார். இது வாசகனின் வாசிப்புத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அமைக்கப்பட்டுளது எனலாம்.
புதினக்கதைக்கும் வாசிப்புக்கும் துணைசெய்யும் வகையில் இதில் அமைந்துள்ள மற்றுமொரு அம்சம் ஆசிரியரால் கையாளப்பட்டிருக்கும் உவமைகள் ஆகும்.பொதுவாக புதினத்தின் சிறப்புக்கு உவமைஇ உருவகம்இ கற்பனைஇ இயற்கைவர்ணனை போன்ற இலக்கிய செய்நேர்த்திகள் தேவைப்பட்டாலும் இவற்றையெல்லாம் தவிர்த்து நவீனம் நடைபோடத் துணிந்துள்ளது. இருப்பினும்இ உவமைநயம் என்பது எத்தன்மைக்கும் எக்காலத்துக்கும் தவிர்க்கமுடியாததாகி விட்டது.சின்னசாமி கதையில் வளவ துரையனின் உவமைகள் எளிமையுடன் இயல்புத்தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. இதற்கு.இ
“முருகன் நாவல் போல…சின்னசாமி சிறுகதை தொகுப்பு போல”
“ அரைகுறை படிப்புள்ள பேச்சாளர் போல…”
“புரியாத கவிதையைப் படிப்பது போல…”
“பல் போன பொக்கைவாய்க் கிழவிப்போல…”
“குளத்துநீரில் உள்ள தாமரைஇலை எறும்பு போல…”
என்பனவற்றை சான்றாகக் காணமுடிகிறது.
படைப்பாளர் வளவ.துரையனின் மற்றுமொரு அம்சம் அவர் புதினத்தில் ஆளுமை செய்திருக்கும் அவரின் மொழித்தூய்மை ஆகும். இயல்பாகவேத் தமிழ்மொழியின் மீது அளப்பரிய ஆர்வமும் பற்றும் கொண்டவர்.அன்றாடவாழ்வில் அனைவரிடமும் பிற மொழிக்கலப்பின்றிப் பேசும் தன்மை கொண்டவர்.அவரது இல்லத்தின் முகப்பில் உள்ள அவரின் பெயர்ப் பலகைக்குப் பக்கத்திலேயே ஒரு கரும்பலகையை தொங்கவிட்டு அதில் ‘நாளும் ஒரு திருக்குறள’; என்று ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை எழுதித் தெருவில் செல்பவர்கள் வாசித்துச் செல்லும்படி வைத்திருக்கிறார். திராவிடக்கழகத் தலைவர்களின் மேடைப்பேச்சால் ஈர்க்கப்பட்டு பேரறிஞர்அண்ணா தொடங்கி அனைத்து தமிழுணர்வுப் பேச்சாளர்களின் பேச்சுகளையும் கேட்டுள்ளார். அதன் அடையாளமாக அவர் வீட்டின் வரவேற்பறையை ஈ.வெ.ரா.பெரியார்இ அறிஞர்அண்ணாஇ கவியரசுகண்ணதாசன் போன்றோரின் புகைப்படங்களால் அலங்கரித்து வைத்துள்ளார். இப்புதினத்தில் மாதவன்வீடு, மதியழகன்வீடு, முருகன்வீடு போன்றவற்றைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் அவர்கள் வீட்டில் மாட்டப்பட்டுள்ள பல தலைவர்களின் புகைப்படங்களைக் குறிப்பிடுவார். அவரவர்களின் உணர்வு வெளிப்பாடகவே அவரவர்கள் வீடுகளில் மாட்டப்பட்டுள்ளப் புகைப்படங்கள் இருக்கும் என்பதனைக் காட்டுவார். மேலுமஇ;அவர் பங்கேற்றுள்ள ஆயிரங்கணக்கான மேடைப்பேச்சுகள் (பட்டிமன்றம்இ கவியரங்கம்இ வழக்காடுமன்றமஇ; ஆனமீகப்பேச்சுகள்இவானொலி உரைகள்) எல்லாவற்றிலும் பிறமொழிச்சொற்கள் கலவாத நடையிலேயே பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அதன் அடிப்படையிலேயே இப்புதின நடையையும் அமைத்துள்ளார். இன்றைய படைப்புலகில் தமிழன் பிறமொழிக்கலப்பின்றித் தமிழில் எழுதுகின்றான் என்பதற்கு இத்தனை முகாந்திரங்களைக் கூறி நியாயப்படுத்துவது இன்றைய அவலமாக அமைந்துவிட்டது. வளவ துரையனின் மொழித்தூய்மை அவருக்கே உரித்தானத் தனிச்சிறப்பு.அதிலும், வரிந்து கட்டிக்கொண்டு எச்சொல்லையும் அவர் இழுத்து வந்ததில்லை எல்லாச் சொற்களும் இயல்பாக வந்தவையே ஆகும்.
இப்புதினத்தின் முதன்மைப்பாத்திரங்களுள் ஒன்றாக விளங்கும் மாதவன் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றான்.அதன் காரணமாகவே அவனது குடும்பம் மற்றும் அவனது நண்பர்கள் என்று அனைவரும் தமிழில் தூய்மையைக் காப்பாற்றுகின்றனர்.இவர்களிடம் உரையாடும் காவல்துறை ஆய்வாளர் கூடத் தமிழிலேயேப் பேசுவதாக அமைத்துக்காட்டுகிறார்.மேலும், இதில் அமைக்கப்பட்டுள்ள கடவுளர்களின் சந்திப்பில்கூட மொழித்தூய்மை தொடர்பான கருத்துகளை ஆசிரியர் அமைத்துக்காட்டுகிறார். நிலையம்,சரக்குந்து,தேநீர்,ஒலிப்பேழை முதலான சொற்கள் கொஞ்சம் தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் கதைப்போக்கில் பொருள் எளிமையாகப் புரிகின்றது. இன்றைய படைப்புகளில் அதுவும் நவீனப்படைப்பாளர்களில் மொழித்தூய்மையைப் பாதுகாப்பவர்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். எல்லா விதமானச் சிறப்புநிலைகளிலும் வளவ துரையன் பாராட்டுக்குரிய இடத்திலேயே நிற்கிறார். தமிழப்புதின இலக்கிய உலகத்திற்கு சின்னசாமியின் கதை ஒரு சிறந்த வரவாக அமையும் என்று உறுதியாக நம்பலாம்.
வாழ்த்துகளுடன்…. முனைவர் ந. பாஸ்கரன்,
உதவிப்பேராசிரியர,;
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்-607 401.
2013,நவம்பரில் இக்கட்டுரை வளவ துரையன் சின்னசாமியின் கதை நாவலில் அணிந்துரையாக வெளிவந்துள்ளது.
- 100- ஆவது கவனக மற்றும் நினைவாற்றல் கலை நிகழ்ச்சி
- படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் – மாணவர் சேர்க்கை.
- இலங்கை
- சூரியனைச் சுற்றி உரசி வந்த வால்மீன் ஐசான் [Sun-Grazing Comet Ison ] அக்கினிப் பிழம்பில் சிக்கிச் சிதைந்து ஆவியானது
- ஒரு விஞ்ஞான இஸ்லாமியர், மூன்று மெஞ்ஞான இந்துக்கள், ஒரு மெஞ்ஞான் கிறிஸ்துவர் & மேற்கு தொடர்ச்சி மலை.
- எளிமையும் எதார்த்தமும் கலந்த வளவ துரையனின் “சின்னசாமியின் கதை”
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! -27
- மஹாகவிதை இலக்கிய இதழ் நடத்தும் பாரதி விழா
- கிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்
- ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்
- தாகூரின் கீதப் பாமாலை – 91 என் ஆத்ம சமர்ப்பணம்.. !
- புகழ் பெற்ற ஏழைகள் – 35
- நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடல் – பகுதி 3
- திண்ணையின் இலக்கியத் தடம் -11
- குப்பு
- ரகசியம் பேசுதல் – ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை
- பிராயசித்தம்
- கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 11 காண்டவ வனம்
- பம்ப்
- La Vie en Rose (பிரான்ஸ், இயக்குநர் – ஒலிவியர் டஹன்)
- ‘ என் மோனாலிசா….’
- கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
- சீதாயணம் நாடகம் -9 படக்கதை -9
- ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 51 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) அடிமைச் சந்தைகள்
- ஜெயமோகனின் “வெண்கடல்” – வாழ்வின் வெளிச்சங்கள்
- புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்
- மருமகளின் மர்மம்-5
- தமனித் தடிப்பு – Atherosclerosis